Date uploaded in London – – 24 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மேலும் 30 கருட புராண பொன்மொழிகள் ஏப்ரல் 2024 காலண்டர்
பண்டிகை நாட்கள் –ஏப்ரல் 9- தெலுங்கு புத்தாண்டு, 11- ரம்ஜான், 14- தமிழ்ப் புத்தாண்டு, 17- ஸ்ரீ ராம நவமி, ஷீரடி பாபா பிறந்த நாள், 21- மஹாவீர் ஜெயந்தி, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், 22- மதுரையில் தேர் திருவிழா , 23- சித்ரா பெளர்ணமி, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
அமாவாசை – 8 (அமெரிக்கா முதலிய நாடுகளில் சூரிய கிரகணம்)
பெளர்ணமி – 23
ஏகாதசி விரத நாட்கள் – 5, 19
முகூர்த்த நாட்கள்- 4, 5, 15, 21, 22, 26
மற்றவர்களின் மனைவியைத் தாயாக நினைப்பவனும், மற்றவர்களின் செல்வத்தைக் களிமண் கட்டியாக நினைப்பவனும், எல்லா உயிரினங்களையும் தன்னைப்போல நினைப்பவனும், புத்திசாலியானவன். 1.111.12.
xxxx
ஏப்ரல் 2 செவ்வாய்க் கிழமை
ஒருவன் கற்ற கல்வி குறையவே குறையாது ; ஒரு கிணற்றில் எடுக்கப்பட்ட நீர் எப்படி மீண்டும் மீண்டும் ஊறுமோ அவ்வாறே கல்வியும் மற்றவர்களுக்கு கொடுக்கக் கொடுக்க அதிகரிக்கும் . 1.113.33
xxxx
ஏப்ரல் 3 புதன் கிழமை
எப்படி ஒரு படகினைப் புயல் காற்று இழுத்துச் செல்லுமோ அப்படி ஒருவனை அவன் செய்த வினைப்பயன் இழுத்துச் செல்லும் ; அவன் வெளிநாட்டிலிருந்தாலும் எந்த இடத்தில் வினையை அனுபவிக்கவேண்டுமோ அந்த இடத்துக்கு இழுத்துவரும் 1.113.30.
xxxx
ஏப்ரல் 4 வியாழக் கிழமை
பின்வரும் ஐந்தும் ஒருவனைத் தூய்மையாக்கும்: சத்தியம், நல்ல எண்ணம், புலனடக்கம், உயிர்களிடத்தில் கருணை, தண்ணீர் 1.113.37.
xxxx
ஏப்ரல் 5 வெள்ளிக் கிழமை
விதிப்படியே ஒருவனுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கிறது. கர்ம வினைப்படியே அவன் ஒரு இடத்துக்குச் செல்கிறான்.அதன்படி இன்பமோ துன்பமோ நேரிடுகிறது 1.113.49.
xxxx
ஏப்ரல் 6 சனிக் கிழமை
சுத்தமான உணவே சிறந்தது; சுத்தமற்ற உணவை உட்கொண்டால் மண் அல்லது நீர் அல்லது தூய்மைப்படுத்தும் எந்தப் பொருளும் அவனைத் தூய்மைப் படுத்தாது 1.113.36.
xxxx
ஏப்ரல் 7 ஞாயிற்றுக் கிழமை
ஒருவன் இறக்கும் தருணம் வராவிடில் 100 அம்புகள் துளைத்தாலும் அவன் உயிருடன் இருப்பான் ; இறுதிக்காலம் வந்து விட்டாலோ தர்ப்பைப்புல் குத்தினாலும் மரணம் வரக் கூடும் 1.113.48.
xxxx
ஏப்ரல் 8 திங்கட் கிழமை
யாத்திரையில் பலன் கிடைக்க மனதும் கைகால்களும் சுத்தமாக இருக்க வேண்டும் . அப்படிப்பட்டவர்களுக்கு கல்வியும், தவமும், புகழும் கிட்டும் -1.113.40.
xxxx
ஏப்ரல் 9 செவ்வாய்க் கிழமை
சத்தியத்தைக் கடைப்பிடிப்பது யாகங்களைவிடச் சிறந்தது; நேர்மையும் தூய்மையும் சொர்க்கத்தின் கதவுகள் –1.113.38.
XXXX
ஏப்ரல் 10 புதன் கிழமை
மித்ரம் = நண்பன் என்ற சொல் துன்பத்தில் ஆறுதல் தரும்; பயத்திலிருந்து விடுவிக்கும்; அணைப்பினையும் நம்பிக்கையையும் பொழியும்; யார் இந்த அற்புதமான சொல்லை உருவாக்கினாரோ !!-1.114.2.
xxxx
ஏப்ரல் 11 வியாழக் கிழமை
அவரவர்களுக்கு பூர்வ ஜன்ம கர்ம வினைப்படி உரிய காலத்தில் பலன் கிடைக்கிறது. இதில் அழுவதற்கோ கூச்சல் போடவோ என்ன இருக்கிறது? பழங்களையும் பூக்களையும் முன்கூட்டி பலன் தரச் செய்ய இயலுமா? 1.113.50.
xxxx
ஏப்ரல் 12 வெள்ளிக் கிழமை
கருமி கையிலுள்ள பணத்தால் என்ன பலன்? முரட்டு சுபாவமுள்ளவனுக்கு கல்வித் தகுதியால் என்ன பலன்? நல்ல குணமும் வீரமும் இல்லாதவனுக்கு அழகினால் என்ன பலன்? கஷ்டம் வரும்போது ஓடிவிடும் நண்பனால் என்ன பலன்? 1.109.6.
XXXXxxxx
ஏப்ரல் 13 சனிக் கிழமை
தீயோர் வாழும் இடமானது நரகத்தைவிட மோசமானது ; உடனே வெளியேறவேண்டும்; ஏனெனில் நரகத்தில் இருந்தால் பாவம் முழுவதும் தீரும்; தீயோரிடையே வாழ்வது மேலும் பாவம் உண்டாக்கும் 1.109.3..
XXXX
ஏப்ரல் 14 ஞாயிற்றுக் கிழமை
ஏமாற்றும் குணமுள்ள நண்பனையும் கருமித்தனமான அரசனையும், தொல்லைகள் நிரம்பிய வீட்டினையும் , தீயோர் நிரம்பிய நாட்டினையும் விட்டு வெளியேறத் தயங்கக் கூடாது 1.109.5.
XXXX
ஏப்ரல் 15 திங்கட் கிழமை
ஆயிரம் பசுக்களிடையே ஒரு கன்று தன்னுடைய தாயை நோக்கி எப்படி ஓடிவருகிறதோ அதுபோல ஒருவனுடைய பூர்வ ஜென்ம வினை அவனை நோக்கி ஓடிவரும். கர்ம வினையை அனுபவித்தே ஆக வேண்டும்; இப்போது செய்யும் நல்வினை, தீவினையும் உங்களைத் தொடர்ந்து வரும் 1.113.53-56.
xxxx
ஏப்ரல் 16 செவ்வாய்க் கிழமை
கீழ்மக்கள் மற்றவர்களின் குறைகளை மட்டுமே காண்பார்கள் . கடுகளவு குறை இருந்தாலும் அதைப் பார்ப்பார்கள்; வில்வப்பழ அளவுக்குள்ள அவர்களுடைய குறைகளை கண்டும் காணாதது போல பாசாங்கு செய்வார்கள்1.113.57
xxxx
ஏப்ரல் 17 புதன் கிழமை
வெறுப்பும் காம உணர்வும் உள்ளவர்களுக்கு எங்குமே இன்பம் கிடைக்காது ; அறிவார்ந்த ஞானம் உள்ளவர்களுக்கு நித்யானந்தமே 1.113.58
xxxx
ஏப்ரல் 18 வியாழக் கிழமை
பற்றும் பாசமும் துன்பத்திற்கு கரணம்; ஏனெனில் அதைத் தொடர்ந்து அச்சமும் வரும்; ஆகையால் பற்றினை விட்டால் ஆனந்தம் கிட்டும் 1.113.59.
xxxx
ஏப்ரல் 19 வெள்ளிக் கிழமை
இன்ப துன்பத்திற்குக் காரணம் நமது உடல்தான்; உயிரும் உடலும் இணைந்தே இருக்கும் 1.113.60.
xxxx
ஏப்ரல் 20 சனிக் கிழமை
இன்பத்தையும் துன்பத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்; நம்முடையது பிறர் கையில் போவது துன்பம்; நம்மிடம் மிச்சம் இருப்பது இன்பம்.1.113.61.
xxxx
ஏப்ரல் 21 ஞாயிற்றுக் கிழமை
இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் வருகிறது ; துன்பத்தைத் தொடர்ந்து இன்பம் வருகிறது; மனித வாழ்வில் இது சக்கரம்போல சுழன்றுகொண்டே இருக்கும் 1.113.62.
xxxx
ஏப்ரல் 22 திங்கட் கிழமை
சென்றது இனி மீளாது; போனது போனதுதான்; வரப்போவதோ தொலைவில் இருக்கிறது; ஆகையால் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பவனே துன்பமற்றவன் 1.113.63.
xxxx
ஏப்ரல் 23 செவ்வாய்க் கிழமை
பிறக்கும்போதே எவரும் நன்பணுமில்லை; எதிரியுமில்லை ;நம்பும் பகைமையும் சில செயல்களால் ஏற்பட்டதே 1.114.1.
XXXX
ஏப்ரல் 24 புதன் கிழமை
ஒரு ஆமை தனது உறுப்புகளை எப்படி ஓட்டிற்குள் பாதுகாக்கிறதோ அவ்வாறு
உன்னுடைய பலவீனத்தை மற்றவர்கள் அறியமுடியாதபடி பாதுகாத்துக்கொள் –1.114.15.
xxxx
ஏப்ரல் 25 வியாழக் கிழமை
ஹரி என்ற இரண்டு எழுத்துக்களை எவன் ஒருவன் ஒரு முறையாவது உச்சரிக்கிறானோ , அவன் முக்திக்கான பாதையில் அடிவைத்துவிட்டான் என்று பொருள் – 1.114.3.
XXXX
ஏப்ரல் 26 வெள்ளிக் கிழமை
தாயை விட , மனைவியை விட , சகோதரர்களை விட , புதல்வர்களை விட , ஆப்த நண்பனிடத்தில் மனிதன் நம்பிக்கை வைக்கிறான் –1.114.4.
XXXX
ஏப்ரல் 27 சனிக் கிழமை
உங்கள் நண்பனிடத்தில் நிலைத்த நட்பு நீடிக்க வேண்டு மானால் அவனுடன் சூதாடாதீர்கள் ; அவனுடன் பண விஷயத்தில் ஈடுபடாதீர்கள் (முதலீடு, கடன்), அவன் மனைவியை அவன் இல்லாதபோது சந்திக்காதீர்கள் –1.114.5.
XXXX
ஏப்ரல் 28 ஞாயிற்றுக் கிழமை
தனிமையான இடத்தில் ஒரு மனிதன் தன்னுடைய தாயார் அல்லது சகோதரி அல்லது புதல்வியுடன் அமரக்கூடாது ; படித்த அறிஞனையும் கூட காமப்பிசாசு ஒரு நொடியில் அ ழித்துவிடும்; பாமரன்படும்பாட்டை சொல்லவும் வேண்டுமா?-1.114.6.
xxxx
ஏப்ரல் 29 திங்கட் கிழமை
மன்மதனின் லீலைகள் அளப்பரியது — அபாயமும் மரணமும் தண்டனைகளாலும் களும் நிறைந்த இடத்திற்கு ஒருவனை அழைத்துச் சென்றுவிடுவான் (மனைவியை விட்டு மரணத்தைக் கொடுக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போவான்)–1.114.7.
xxxx
ஏப்ரல் 30 செவ்வாய்க் கிழமை
யுக முடிவில் வீசும் ஆலங்கட்டி மழைக் காற்றின் வேகத்தைக் கண்டுபிடிப்பது எளிது; பந்தயத்தில் ஓடும் குதிரையின் வேகத்தைக்கூட கண்டுபிடித்துவிடலாம்; சமுத்திரத்தின் ஆழத்தைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால் அன்பில்லாத ஒருவரின் இதயத்தின் ஆழத்தை அளக்கவே முடியாது -1.114.8.
BONUS QUOTES
இரவு நேரத்தில் பறவைகள் ஓய்வெடுக்க மரங்களுக்கு வருகின்றன ; காலையில் அவை வெவ்வேறு திசைகளில் பறந்து செல்கின்றன ; இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?-1.113.45. (வாழ்க்கையும் அப்படித்தான்)
xxxxx
ஒரு பெண்ணின் கற்பு எ துவரை நீடிக்கும் தெரியுமா? சந்தர்ப்பம் கிடைக்காத வரை, தனிமை கிடைக்காதவரை, மற்ற ஆண்கள் அணுகாதவரைய மட்டுமே நீடிக்கும் 1.114.9.
—subham—
Tags- மேலும் 30, கருட புராண, பொன்மொழிகள், ஏப்ரல் 2024 காலண்டர்