முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—13 (Post No.13,056)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,056

Date uploaded in London – –   2 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 120  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 13

xxxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்–13

121. வயிற்றுக்கு கிருமிக்கு

எலிச்செவியம், முருங்கை வேர், திரிபலை  இவை நறுக்கி கிஷயமிட்டு ஒரு சங்கு அளவு கொடுக்க புழுக்கள் நிவர்த்தியாகும்.

XXXXX

XXXX

122. நீர் எரிவுக்கு

எலுமிச்சம்பழச்சாறும் நல்லெண்ணெயையும் சமன் கலந்து  ஒரு பலமிருக்கும்படி  சாப்பிட்டால் எரிவு தீரும் .

XXXX

XXXX

123. இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு

எருமைப் பாலிரண்டு படியில் பொன்னாங்கண்ணி வேர்  எலுமிச்சங்காய் அறைத்துப்போட்டு நன்றாய்க் காய்ச்சி புரை குத்திக் கடைந்து வெண்ணெய் எடுத்து அந்த வெண்ணையை அதிகாலை மூன்று நாள் சாப்பிடவும்; அந்த மோரை தாக சாந்தி செய்து வரவும் ; மேற்படி வியாதி  தீரும்.

XXXX

124. சர்வ சிரங்குக்கும்

எலியாமணக்கு சமூலத்தை பழச்சாற்றில் அறைத்து வேப்பெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி எல்லாவித சிரங்குக்கும்  தடவி வர ஆறிப்போகும்.

XXXX

125.நீரொழுக்கிற்கு

எள்ளுப்புண்ணாக்கும் கோவையிலையும் சரியிடை கூட்டி அறைக்காரம் சேர்த்தது புரட்டி ஒரு கொத்து கொடுத்துவரவும் . இப்படி மூன்று நாள் கொடுக்க சாந்தியாகும்.

XXXX

126. இரத்த மூலத்திற்கு

எருக்கன் கிழங்கும் புழுங்கலரிசியும் சரியிடை உளுந்து

கால் பங்கு கூட்டி அறைத்து புளிக்க வைத்து தோசை சுட்டுக்கொடுக்க இரத்த மூலம் தீரும்; இப்படி மூன்று நாள் அல்லது 5 நாள் கொடுக்கவும்.

XXXXX

127. காமாலைக்கு

எருமைச் சாணிப்பால் எருமைத் தயிர் இரண்டும் கலந்து சீரகம் வெங்கா…ம்  சமன் சேர்த்து  மேற்படி தயிர்விட்டு அறைத்து எருமைப்பாலில் கலக்கிக் கொடுக்கவும்; இப்படி 5- 7  வேளை கொடுக்க சாந்தியாகும்.

XXXX

128. கல் அடைப்புக்கு

எருக்கன் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றிலை பாக்குடன் வைத்து தின்னவும். இப்படி 2 அல்லது 3 வேளை தின்னவும் ; கல்லடைப்பு தீரும்.

XXXX

129. உண்ணாக்கு வளர்த்திக்கு

எவாச்சாரம் கல் சுண்ணாம்பும் சமநிடை எடுத்து  எலுமிச்சம்பழச் சாற்றில் அறைத்து  பயரளவு எடுத்து உள் நாக்கில் தடவவும். குணமாகும்.

XXXX

130. இருதய வலிக்கு

எலுமிச்சம் பழம் 5 பிழிந்துகொண்டு  அகில் குலாப்புத் தூள் சந்தனத்தூள் ஜாதிக்காய்த் தூள் வகைக்கு ஒரு ரூபாயிடை காவிக்கல் ஒரு  விராகநிடை  கூட்டிக் கலக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ரூபாயிடை புசித்துவரவும். இருதய காபரா நெஞ்சத் துடிப்பு இதுகள் நீங்கும்

XXXX

— SUBHAM—

TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 13, எலுமிச்சம் பழம், எருக்கன் பூ

S.Nagarajan Article Index : FEBRUARY  2024 (Post No.13,055)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.055

Date uploaded in London – — 2 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

SNR Article Index : FEBRUARY  2024

FEBRUARY  2024 

1-2-2024 12975 ராம நாம மஹிமை – 7                                 2-2-2024 12978 மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி! 3-2-2024 12981 SNR Article Index : JANUARY  2024.                                                             4-2-2024 12983 மயிலுக்கும் அரசனுக்கும் சிலேடை! – மஹாபாரத ரகசியம் 5-2-2024 12985 கர்ம ரகசியம்! – 5 இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள்    – ரமணீயம், நிராபாதம், துர்த்தர்சம்!                                                                              6-2-2024 12988 மப்புலோ ஏமுண்டி, நா மனசுலோ ஏமுண்டி?             7-2-2024 12991 ஶ்ரீ ராமருக்கு வெற்றி!

8-2-2024 12993 புத்தக அறிமுகம் 131 செப்பு மொழி 500 +                                                    9-2-2024 12995    பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1 மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.

10-2-2024 12997 பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2 மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.

11-2-2024 12999 சிவ பக்தி!

12-2-2024 13001 17 வருடங்களில் 17 அறிவுரைகள்! – ஹெல்த்கேர்  பிப்ரவரி.                         2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                       13-2-202413004  பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என்று அழைப்பதில்  

  என்ன தவறு?                                                                                           14-2-2024 13007 தயையின் மஹிமை!                                     15-2-2024 13010 புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன்

              எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி –                  பாகம் 2                                                                                          16-2-2024 13012 தம் மாரோ தம்; மிட் ஜாயே கம்!                         

 17-2-2024 13014 ஹோண்டா : தோல்விகளால்                                துவளாதீர்கள் -1         மாலைமலர் 14-2-2024இல்   

                                  வெளியாகியுள்ள கட்டுரை.                                                                  18-2-2024 13016 ஹோண்டா : தோல்விகளால்

                                     துவளாதீர்கள் –       மாலைமலர் 14-2-2024இல்

                                     வெளியாகியுள்ள கட்டுரை                                                                    19-2-2024 13019 திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள நவகிரகங்கள் – கலைக்களஞ்சியம் :புத்தக அறிமுகம்                                                                                                                                         20-2-2024 13022 புத்தக அறிமுகம்   திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள நவீன ஞான மொழிகள் பாகம் – 1    

21-2-2024  13025 சிதம்பரத் தலத்தின்   மஹிமை                                                                                                                                                                            

22-3-2024 13028 ஜரா சாம்னே தோ ஆவோ சலியே!                                            23-2-2024  13030 – ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! –1    21-2-2024 மாலைமலர் இதழில்   வெளியாகியுள்ள கட்டுரை.          24-2-204 13033 ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! –2      21-2-2024 மாலைமலர் இதழில்   வெளியாகியுள்ள கட்டுரை.                 25-2-2024 13036 அறிவியல் புதிர்கள்!                               26-2-2024 13039 கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!                                                27-2-2024 13043 கர்ம ரகசியம்! – 6 ஐந்து வித நரகங்கள்!                                                28-2-2024 13046 கர்ம ரகசியம்! – 7 சுபஅசுப கர்மங்கள்அவற்றின் \  பலன்கள்!                                                                                                                                    29-2-2024 13050 ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன்    செயல்படுங்கள்! – 1  28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 —–subham—-

தேனீக்கள் தேவி பிரமராம்பா -2 (Post No.13,054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,054

Date uploaded in London – –   1 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கட்டுரையின் முதல் பகுதியில் ஆந்திரத்திலுள்ள ஸ்ரீ சைலம் கோவில் பிரமராம்பாவையும் மேற்கு வங்கத்தில் ஜலப்பைக்குரி அருகிலுள்ள பிரமராம்பாவையும் தரிசித்தோம்.

மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம் :

இந்து மதத்தில் மன்மதனைப் பற்றி புராணங்களும் காளிதாசனும் என்ன சொல்கின்றனரோ அதையே தமிழ்ப் புலவர்களும் செப்பினர். மன்மதனுக்கு கரும்பு வில். தேனீக்களான நாண்; அவன் ஐந்து மலர் அம்புகளை விட்டால் யாரும் காதல் வசப்படுவர். அவனுக்கும் மனைவி ரதி தேவிக்கும் கிளி வாகனம் ; இந்தச் சிலைகளை பல கோவில்களில் காணலாம். இதிலும் மலரும் தேனீயும் முக்கிய இடத்தைப் பெறுகிறது .

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபுதனத்தில் வாழ்ந்த இளவரசி மீராபாய்  , தமிழ்நாட்டு ஆண்டாள் போலவே கிருஷ்ணன் மீது அபார பக்தி கொண்டவள் ; அவள் பல பாடல்களில் தன்னை தேனீயாகவே உருவகித்துப் பாடியிருக்கிறாள் ; இறைவன் திருவடியில் கிடக்கும் தாமரைப்பூக்களில் உறையும் தேனீ போல இருங்கள் என்கிறார். மீரா பஜனை பாடாத  பஜனைகள் இல்லை; ஹிந்துஸ்தானி இன்னிசைக் கச்சேரிகள் இல்லை .

இதே போல கோபிகளின் தலைவி ராதாராணியும் கண்ணன் மீது அபார காதல் கொண்டவள்; அது தெய்வீக காதல் ; தோல் மீதான காதல் அல்ல  என்று சுவாமி விவேகானந்தர் உரைகளில் விளக்கியுள்ளார். மேலும் கோபிகளின் சேலைகளை கிருஷ்ணன் ஒளித்துவைத்த செய்தி 2000  ஆண்டு பழமையான சங்க இலக்கியத்திலும் உள்ளது . தொழுனை என்னும் யமுனை நதி   பற்றி சங்க நூல்களும் சிலப்பதிகாரமும் பாடுகிறது . அவ்வளவு பழமையான ராதா ராணியும் தேனீ மூலம் செய்தி அனுப்புகிறாள் காதலன் கண்ணனுக்கு . அது மட்டுமல்ல ஏ தேனீயே! நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே. உன் மீசையில் ஓட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம் நீ எத்தனை மலர்களை மேய்ந்திருக்கிறாய் என்பதை காட்டுகிறது. கண்ணனும் அப்படித்தான் போலும்; வெவ்வேறு மலர்களை / பெண்களை நாடுகிறான் போலும் என்று பாடுகிறாள் ; இதுவும் சங்க இலக்கியத்தில் உள்ளது ; ஆண்களை மலர் மேயும் வண்டுகள் என்று நற்றிணைப் புலவர் சாடுகிறார் .

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்

தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்

கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!         5

நீயே பெரு நலத்தையே; அவனே,

நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,

தண் கமழ் புது மலர் ஊதும்

வண்டு” என மொழிப; ”மகன்” என்னாரே.

—-மதுரை மருதன் இளநாகனார் பாடல், நற்றிணை 290

அவன் (காதலன்),

நீர் நிறைந்த பொய்கையில்

அன்றாடம் மலரும் புது மலர்களை

ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன்

என்று கூறுகின்றனர்.

அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை.”

xxxx

ஆதி சங்கரரும் நாராயண தீர்த்தரும்

சில நூறு ஆண்டுகளுக்கு  முன்னர் வாழ்ந்த நாராயண தீர்த்தர் (1700 CE) என்ற மஹான் பாடிய க்ஷேமம் குரு கோபால என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது. இதைக் கேட்டாலே வீட்டில் சகல செளபாக்கியமும், நித்திய க்ஷேமமும் உண்டாகும் என்பது நம் பிக்கை.  அவரும் அப்பாடலில் இறைவனின் பாத கமலம் என்னும்  தாமரையில் மொய்க்கும் தேனீயாக இருக்க வேண்டும் என்று பாடுகிறார் :-

“க்ஷேமம் குரு கோபால-

க்ஷேமம் குரு கோபால.. ஸந்ததம் மம

க்ஷேமம் குரு கோபால

காமம் தவ பாத……………….கமலப்ரமரீபவது

ஸ்ரீமந்மம மானஸ………… மதுஸூதன

………………

பாத கமல- பாத தாமரைகள்

ப்ரமரீ பவது – தேனீயாக வேண்டும்

xxxx 

ஆதி சங்கரரின் செளந்தரிய லஹரி

செளந்தர்யா லஹரி 6

धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाः

वसन्तः सामन्तो मलयमरु-दायोधन-रथः ।

तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपां

अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते-6

த⁴னு꞉ பௌஷ்பம்ʼ மௌர்வீ மது⁴கரமயீ பஞ்ச விஶிகா²꞉

வஸந்த꞉ ஸாமந்தோ மலயமருதா³யோத⁴னரத²꞉ .

ததா²ப்யேக꞉ ஸர்வம்ʼ ஹிமகி³ரிஸுதே காமபி க்ருʼபாம்

அபாங்கா³த்தே லப்³த்⁴வா ஜக³தி³த³-மனங்கோ³ விஜயதே .. 6..

******

भ्रुवौ भुग्ने किञ्चिद्भुवन-भय-भङ्गव्यसनिनि

त्वदीये नेत्राभ्यां मधुकर-रुचिभ्यां धृतगुणम् ।

धनु र्मन्ये सव्येतरकर गृहीतं रतिपतेः

प्रकोष्टे मुष्टौ च स्थगयते निगूढान्तर-मुमे-47

ப்⁴ருவௌ பு⁴க்³னே கிஞ்சித்³பு⁴வனப⁴யப⁴ங்க³வ்யஸனினி

த்வதீ³யே நேத்ராப்⁴யாம்ʼ மது⁴கரருசிப்⁴யாம்ʼ த்⁴ருʼதகு³ணம் .

த⁴னுர்மன்யே ஸவ்யேதரகரக்³ருʼஹீதம்ʼ ரதிபதே꞉

ப்ரகோஷ்டே² முஷ்டௌ ச ஸ்த²க³யதி நிகூ³டா⁴ந்தரமுமே .. 47..

மதுகர = தேனீ

Xxxx

மஹாபாரதத்தில் தேனீ / வண்டு

மஹாபாரதத்தில், கர்ணன் பொய் சொல்லி பிராமண பரசுராமரிடம் வில்வித்தை கற்கப்போன கதை எல்லோருக்கும் தெரியும் (இந்தப் பரசுராமர் வேறு ; ராமாயண பரசுராமர் வேறு). கர்ணன் மடி மீது குருநாதர் உறங்கும் பொழுது ஒரு வண்டு /தேனீ , கர்ணனின் தொடையில் உட்கார்ந்து குடைய, ரத்தம் வெளியேறியது ; ரத்தத்தால் உடல் நனைந்த பரசுராமர் எழுந்து நீ பிராமணனாக இருந்தால் அலறி ஒடியிருப்பாய்; உண்மையைச் சொல்; யார் நீ? என்று அதட்டிக் கேட்க கர்ணன் பிராமணன் இல்லை க்ஷத்திரியன் என்பதை ஒப்புக்கொண்டான்  இங்கும் அறுகால் பறவை  முக்கியம் பெறுவதோடு கதையின் போக்கையே மாற்றும் ஒரு அம்சமாகத் திகழ்கிறது .

xxxxx

இந்தியா ஒரே நாடு ; இமயம் முதல் குமரிவரை அவர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் ; இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியது காளிதாசனும் ஆதி சங்கரரும், கம்பரும்தான் ; வெள்ளைக்காரன் இல்லை என்பதற்கு தேனீ ஆராய்ச்சி மிகவும் உதவுகிறது

வடக்கு தெற்கு  ஆகிய இரு திசைப்  புலவர்களும் தேனீயை அறுகாலி  என்றே அழைத்தனர் .

இரு மொழிப்புலவர்களும் யானையின் மதத்தைச் சுற்றி வரும் வண்டுகள், தேனீக்கள் செய்யும் ரீங்காரம் இசைபோல தொனிக்கிறது என்று பாடியுள்ளனர் .

மேலும் மன்மதன் பற்றியும் ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர் .

தேனீக்களிடம் பேசுவது தூது அனுப்புவது ஆகியவற்றிலும் ஒரே நடை முறையைப் பின்பற்றியுள்ளனர் .

To be continued……………………………………………

Tags- தேனீ, மஹாபாரதத்தில், ஆதி சங்கரர் நாராயண தீர்த்தர், கர்ணன், ராதாராணி, மீராபாய்

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2 (Post No.13,053)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.053

Date uploaded in London – — 1 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2

ச. நாகராஜன் 

1960ல் எடுக்கப்பட்ட சைக்கோ படத்தின் முடிவை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த நாவலின் பிரதிகள் முழுவதையும் இவர் வாங்கி விட்டார். அத்தோடு படம் ஆரம்பித்த பின்னர் யாரும் தியேட்டருக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். அதை தியேட்டர் உரிமையாளர்களும் அப்படியே கடைப்பிடித்தனர். 109 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் இவருக்கு 320 லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. இவரது தயாரிப்பு செலவு எட்டுலட்சத்து ஏழாயிரம் டாலர்கள்.

குளியலறைக் காட்சி 78 காமராக்களை வைத்து 45 வினாடிகளில் 52 “கட்’ களுடன் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜேனட் லீயின் கண் பார்வையை மட்டும் 26 முறை படமாக்கினார் ஹிட்ச்காக்!

இதில் நடிப்பவர்கள் எந்தக் காட்சியைப் பற்றியும் முடிவைப் பற்றியும் யாருக்கும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழியையும் எடுக்கச் சொன்னார் ஹிட்ச்காக். அத்தோடு தொலைக்காட்சியில் தனக்காகப் பணியாற்றிய குழுவினரையே படம் பிடிக்க அழைத்தார்.

1963இல் எடுக்கப்பட்ட தி பேர்ட் படத்திற்கு 3000 நிஜப் பறவைகளும் இன்னும் இரண்டு லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் மெகானிக் பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.

பறவைகள் காமராவைப் பார்த்து வர வேண்டும் என்பதற்காக ஒரு இறைச்சித் துண்டு காமராவின் லென்ஸ்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பறவைகள் தாக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் பார்ப்பவர் கதிகலக்கம் அடைவது இயல்பே. இதில் கதாநாயகியாக நடித்தவர் டிப்பி ஹெட்ரன். 119 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஹெட்ரனைப் பறவைகள் தாக்கும் காட்சி மட்டும் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் நடித்த அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – அந்த ஷாக்கிலிருந்து விடுபட!

லண்டனில் பேர்ட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிய ரசிகர்கள் அலறி விட்டார்கள் – தாங்கள் திரைப்படத்தில் பார்த்து விட்டு வந்த பறவைகள் நிஜமாகவே அலறும் சத்தத்தைக் கேட்டு! ஆம், வெளியே யாருக்கும் தெரியாதபடி மரக்கிளைகளில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் பறவைகள் அலறும் ஒலி ஒலிபரப்பப்பட்டது!

இசையை ஹிட்ச்காக் பயன்படுத்திய விதம் அனைவராலும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்தது. ஒரு காட்சி முடியும்போது அடுத்த காட்சி ஆரம்பிக்கும் சில விநாடிகளில் அவர் இசையைப் பயன்படுத்திய விதம் அனைவரையும் வியப்படைய வைத்தது!

இப்படி ஹிட்ச்காக்கைப் பற்றிய ஏராளமான செய்திகள் உண்டு.

முக்கியமான காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த இணையதள யுகத்தில் இந்த மூன்று நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ( நிச்சயம் பார்க்கப்பட வேண்டியவை டு கேட்ச் எ தீஃப் – கார் ரேஸ், சைக்கோ -குளியலறைக் காட்சி, தி பேர்ட்  – பறவைகள் தாக்கும் ஃபைனல் அட்டாக் காட்சி)

அவரை வருத்திய ஒரே விஷயம்

தனது உடலைப் பற்றி அவர் வெகுவாக அதிருப்தி கொண்டிருந்தார். அப்படி ஒரு பருமன்! வாழ்நாள் முழுவதும் அவரை வருந்தச் செய்த விஷயம் இது தான்!

மறைவு

1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் ஹிட்ச்காக சிறுநீரகக் கோளாறால் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. அவரது உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி பசிபிக் மகா சமுத்திரத்தில் தூவப்பட்டது.

அறுபது ஆண்டுகளில் அவர் எடுத்த படங்கள் 50.

46 முறை அகாடமி விருதுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒரு முறை கூட அவர் அந்த விருதைப் பெறவில்லை.

என்றாலும் கூட லட்சோபலட்சம் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் இடம் அந்த விருதை விடப் பெரியதே!

2018இல் அமெரிக்க நேஷனல் பிலிம் பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படங்களில் அவரது எட்டுப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

அவருக்கு க்னைட் விருது 1980இல் அவர் மறைவதற்கு நான்கு மாதங்கள் முன்பாக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.

வெற்றிக்குக் காரணம்

ஏராளமான நகைச்சுவை கலந்த பொன்மொழிகளை அவர் உதிர்த்துள்ளார். அவற்றில் அவர் கண்ட அனுபவ உண்மைகள் பொதிந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு இரண்டு இதோ:

ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள். 1. ஸ்க்ரிப்ட் 2. ஸ்கிரிப்ட் 3.ஸ்கிரிப்ட் (கதையின் எழுத்து வடிவம்)

ஒரு படத்தின் நீளம் பார்ப்பவர் டாய்லெட்டுக்குப் போக வேண்டும் என்ற தாக்குப் பிடிக்கும் நேரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும்.

தனது வெற்றிக்கான காரணத்தைப் பற்றி அவரே கூறி இருக்கிறார் இப்படி:

தர்க்கத்தை விட முக்கியமானது கற்பனை வளம்.

இமாஜினேஷன் (IMAGINATION) என்ற இதே காரணத்தை தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறிய இன்னொருவர் – உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

நகல் எடுப்பவரை லட்சோபலட்சம் மக்களின் மனதில் ஏற்றி வைத்த  கற்பனை வளம் வெற்றிக்கு வழி காட்டும் அஸ்திவாரம் அல்லவா!

***