Date uploaded in London – – 14 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நான் இரசாயனவியல், பெளதீக இயல், தாவர இயல், பிராணியியல் படித்து பி.எஸ் சி பட்டமும் பின்னர் இரண்டு சப்ஜெக்டுகளில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றவன். ஆகையால் தத்துப் பித்து என்று உளறமாட்டேன் . உலக மஹா மேதை ஆல்பர்ட் ஐன்டைனுக்குத் தெரியாத விஷயங்கள் இந்துக்களுக்குத் தெரிந்திருந்தது ; ஆயினும் கிரேக்கர், சகரர், ஹூனர், மங்கோலியர், முஸ்லீம், கிறிஸ்தவர் படை யெடுப்புகளால் நமது அறிவியல் பொக்கிஷங்கள் அழிந்து விட்டன . அவை முன்னர் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் மட்டுமே இப்போது உள்ளன . ஒரு காலத்தில் நாஸா (The National Aeronautics and Space Administration = NASA ) போன்ற அமைப்புகள் இதைக் கண்டுபிடிக்கையில் நாங்கள் அன்றே இதைச் சொன்னோம் என்று பெருமை பேசலாம்.
one stone= Einstein
Apart from being a famous last name, einstein in German literally means ‘one stone’. The word is composed of ein which means one and stein which means stone or rock. The word is pronounced /aynshtayn/ .
ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் இவர் பெயர் ஒரு கல் ; ஐந் = 1, ஸ்டைன் = கல்/ ஸ்டோன் ) என்ன சொன்னார்? ஒளியின் வேகம்தான் இந்த பிரபஞ்சத்தில் அதிக வேகம் உடையது ; ஒளி ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் செல்லும் Light from a stationary source travels at 300,000 km/sec (186,000 miles/sec). ஆனால் இந்த வேகத்தை மனிதர்கள் நெருங்கவே முடியாது ; ஏனெனில் அதற்கு பிரம்மாண்டமான சக்தி தேவை; அப்படிப்பட்ட சக்தியை உண்டாக்க பிரம்மாண்டமான சக்திக் கேந்திரம் தேவை ; அதை நம்மால் உருவாக்க முடியாது
ஆனால் மஹாபாரதம் , ரேவதி நட்சத்திரக் கதை , நம்மாழ்வார் பாடல் முதலியன இந்துக்களின் வெளி உலக யாத்திரை பற்றித் தெளிவாக உரைக்கின்றன ஒரே நாளில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் சொர்க்கலோகம் சென்று, இறந்து போன 10 பிராமணக் குழந்தைகைகளை மீட்டு வந்ததை நம்மாழ்வார் பாசுரம் எடுத்துரைக்கிறது . இறந்து போன குழந்தைகளை சுந்தரரும் சம்பந்தரும் மீட்டு வந்ததை தேவாரம் பாடுகிறது (இது பற்றி தனித்தனிக் கட்டுரைகளை முன்னரே எழுதிவிட்டதால் மீண்டும் சொல்லப் போவதில்லை )
வால்மீகி ராமாயணத்தில் THOUGHT POWERED SPACE SHUTTLE எண்ணத்தால் இயக்கும் ஸ்பேஸ் ஷட்டில் பற்றிக் காண்கிறோம் ; ஒரே நாளில் இலங்கையிலிருந்து ராமன் அயோத்தி செல்கிறார். மேலும் அந்த விண்கலம் எத்தனை பேர் ஏறினாலும் அதற்குத்தக்க விரிவடைகிறது . அதே போல அனுமனும் ஒரே நாளில் இலங்கையிலிருந்து இமயமலைக்குச் சென்று சஞ்சீவி மூலிகையைக் கொணர்ந்ததையும் காண்கிறோம்.
இவ்வாறு விரைவில் செல்ல, சில குளிகைகளை உலகம் புகழும் மந்திரவாதி நாகார்ஜுனா 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யோக ரத்ன மாலா நூலில் செப்பிய விஷயங்களைக் காண்போம் .
xxxx
இடுப்பில் கரிசலாங்கண்ணி (Bhringaraja (Eclipta alba) Karisilankanni ) மூலிகை, பொன் வண்டு, காக்க ஜங்கா சரபுங்கா , ஏல பலூக்கா மூலிகையைச் சுற்றிக்கொண்டு ஒரு மனிதன் காற்றினும் கடுகிச் செல்லலாம் .
xxxx
மதன பலா, சரபுங்கா , பூர்ஜ பத்ராவின் பட்டை ஒரே கலர் உடைய பசுவின் பாலில் பொடித்து காலில் பூசிக் கொள்ளவும; அ ப்படிச் செய்யும் மனிதன் களைப்பே தெரியாமல் ஒரே நாளில் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்ய முடியும் .
XXXX
கிர்கலச , நக்தமாலை எலும்புகளை எடுத்து தம்பலப்பூச்சி, மயில் ரத்தத்தில் கலந்து ஒரு மாத்திரை செய்யவும்; அதை ஒரு சிறிய தங்கத்தினால் ஆன சின்னப் பெட்டியில் வைக்கவும்; அதை வாயில் அடக்கிக்கொண்டால் ஒரு மனிதன் ஒரே நாளில் 350 யோஜனை தூரம் செல்லலாம்.
ஒரு யோஜனை= எட்டு மைல்கள்
கிர்கலச = பச்சோந்தி; நக்தமாலா = Pongamia glabra தாவரம்
XXXX
வனலோசன, கரிசிலாங்கண்ணி வேர் ஆகியவற்றை ஆட்டு வெண்ணெயில் பொடித்து, காலில் பூசிக்கொண்டால் அந்த மனிதன் நினைத்த தூரம் செல்லலாம்.
அனுமன் இலங்கைக்குச் சென்றதும், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர இமய மலை சென்றதும் இப்படித்தான் போலும்!
குபேரனுடைய புஷ்பக விமானத்தை ராவணன் பறித்தான்.அதை ராவணன் மரணத்துக்குப் பின்னர் ராமன் பெற்றார்.அது நினைத்த மாத்திரத்தில் ஒரே நாளில் 4000 மைல் பயணம் செய்து ராமர் அணியை நந்திக் கிராமத்தில் இறக்கியது.
இவைகளை எல்லாம் படிக்கையில் அக்காலத்தில் விண்வெளிப் பயணம் சகஜம் என்றே தோன்றுகிறது.
XXXX
ஒரு துளை அல்லது உள்ளீடுள்ள குழாயில், உயிருள்ள தேனீக்களை அடைக்கவும்; அதை வானில் தூக்கி எறிந்தால் அது கீழே
விழாமல் பறந்து கொண்டே இருக்கும் !
இது போல மேலும் பல அதிசயங்களையும் தீ உண்டாக்கும் அதிசயங்களையும் நாகார்ஜுனா பகர்கிறார்
–சுபம் —
TAGS–வானில் பறக்க, ஐன்ஸ்டைன் , தொ லை தூரம் செல்ல