Date uploaded in London – – 14 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 218 வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 22
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21
கி
219.அந்திமாலைக்கு
கிருஷ்ண துளசி இலையைக் கசக்கி சாறு பிழிந்து நேத்திரத்தில் இரண்டு துளி விடவும். இப்படி காலையில் ஒரே வேளையாக மூன்று நாள் விடவும்; சாந்தியாகும்
XXXX
வாந்தி விக்கலுக்கு
கிராம்பு, சீரகம், ஏலம் வெதுப்பி மயிலிறகு சுட்ட சாம்பல் சமன் சேர்த்து பொடித்து தேனில் குழைத்து கொடுத்து வரத் தீரும் .
XXXX
காது எழுர்ச்சிக்கு
கிளு கிளுப்பை வேரை அரைத்து நல்லெண்ணெய் வீட்டுக் காய்ச்சி காதில் விட்டு பஞ்சடைக்கவும்; இரண்டு மூன்று வேளையில் தீரும்.
XXXX
உதிரக் கிராணிக்கு
கிராம்பை பாலில் அரைத்துக் கலக்கி யுட்கொண்டு வந்தால் பித்த கோபம் அதிசாரம் உதிரக் கிராணி ஆசன கடுப்பு இவை தீரும்
XXXX
தலை வலிக்கு
கிச்சிலிக் கிழங்கைப் பொடித்து நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி தலை முழுகி வந்தால் தலை வலி சீதளம் இவை பிரியும். திரேகம் வாசனை வீசும் .
XXXX
மேக சாந்தி
கிட்டிக் கிழங்கை வெவித்தாவது பச்சையாகவே உலர்த்தி சூரணித்து அரைப்பங்கு சக்கரை கூட்டியாவது விடாமல் 40 நாள் இருவேளையும் தின்று வந்தால் உடம்பு இறுகும் ; மேகம் சாந்தியாகும் கபத்தை அறுக்கும் தீபனம் உண்டாக்கும் .
XXXX
கரப்பான் கிரந்திக்கு
கிரந்தி நாயகமெனும் மூலிகையை பாலில் அரைத்து காலை ஒரு வேளையாக உண்டு வந்தாலும், எண்ணெய் பாகங்களுடன் மேற்படி சாற்றைச் சேர்த்து காய்ச்சி யுண்டாலும் கருங்கிரந்தி, செங்கிரந்தி, கரப்பான், உஷ்ணம் சீதம் இவைகள் தீரும்
XXXX
சுர சாந்தி
கிளியூரல் பட்டையை ஒன்றிரண்டாயிடித்து எட்டுக்கொரு பங்காய் ஆக்கி வடித்து உண்டால் சுரம் சாந்தியாகும் .
XXXX
பொது
கிளுவை வேரையும் சமூலத்தையும் அநேக வியாதிகளுக்கெல்லாம் வைத்தியர் உபயோகிப்பதுண்டு
XXXX
கீ
சோகைக்கு
கீழாநெல்லி சமூலத்தை பாலில் அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சோகை காமாலை பாண்டு உடல்வெளுப்பு வாத பித்த கிறிச்சினம் இவை தீரும் . இரத்தம் உபரியாகும் ; கண் குளிரும் .
XXXX
சாம்பல் தின்கிற குழந்தைகட்கு
கீழாநெல்லி வேர் விராகநிடை 1 கடுக்காய் தோல் விராகநிடை 2 மிளகு விராகநிடை 3 புளித்த மோரில் அரைத்துக் கலக்கி மூன்று நாள் வார்க்க சாம்பல் மண் இவை தின்னாது .
XXXX
புறவீச்சு தீர
கீழாநெல்லிச் சாறு கிலு கிலுப்பைச் சாறு தேன் முலைப்பால் வகைக்கு பலம் அரை வெள்ளுள்ளி காந்தம் சுக்கு வகைக்கு விராகநிடை இவைகளை அரைத்து யாவும் ஒன்றா ய்க் கலந்து கொடுக்க நிவர்த்தியாகும் .
XXXX
இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு
கீழா நெல்லி சமூலம் ஒரு பிடி சீரகம் ஒரு விராகநிடை இவை அரைத்து எருமைத் தயிரில் கலக்கிக் கொடுக்கவும் .இப்படி மூன்று நாள் கொடுக்கத் தீரும்.
XXXX
பித்த சோகை வீக்கத்திற்கு
கீழா நெல்லி மூன்று பங்கும் ஈருள்ளி ஒரு பங்கும் சீர்த்திடித்து சாறு பிழிந்து கால் படி வீதம் மூன்று நாள் கொடுக்க நிவர்த்தியாகும்
XXXX
–subham—
Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 22, மேக சாந்தி , தலை வலி, அந்திமாலை,