Date uploaded in London – – 15 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam
எனது மார்ச்-ஏப்ரல் 2024 இந்திய விஜயத்தின் போது கேரள மாநிலத்தின் தலைநகர் திருவநந்தபுரத்துக்கும் அருகிலுள்ள கோவலம் கடற்கரைக்கும் சென்றேன்.
ஏப்ரல் 5ம் தேதி (2024) அரை நாள் ஒய்வு கிடைத்தது. உடனே என்னுடைய பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாலஸ் மியூசியத்துக்கு காரை எடுத்துக் கொண்டு ஓடினேன். பாலஸ் மியூசியத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
புத்தன் மாளிகா–Puthen Maalika (New Palace) –அல்லது குதிர மாளிகா–Kuthira Maalika (Horse Palace) –என்பது முதல் பகுதி; அருகிலேயே மார்த்தாண்டவர்மா சித்ராலயம் இருக்கிறது. முதல் மியூசியத்தில் புகைப்படம் எடுக்கலாம். ஆனால் 70 ரூபாய் டிக்கெட்டுக்கு மேலாக 500 ரூபாய் கட்ட வேண்டும். நான் 500 ரூபாய் கட்டி முடிந்த மட்டும் புகைப்படங்கள் எடுத்தேன். திருவாங்கூர் சுவாதித்திருநாள் மஹாராஜா கட்டிய காட்சியகம் இது .இந்த மாளிகையில் மரத்தால் ஆன குதிரைகள் கூரையைத் தாங்கி நிற்பதால் குதிரை அரண்மனை என்ற பெயர் ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பப்பட்டதால் புத்தன் அரண்மனை என்ற பெயர் ஒட்டிக்கொண்டது
கோவிலுக்கு அருகிலேயே இவை உள்ளன . மாலை 5 மணிக்கு மூட்டி விடுகிறார்கள்
xxxx
கேரளத்தில் மூன்று அரசாட்சிகள் இருந்தன; திருவாங்கூர், கொச்சி, மலபார் என்ற மூன்று பகுதிகளை மன்னர்கள் ஆண்டுவந்தனர்
மார்த்தாண்ட வர்மா சித்திராலயத்தில் திருவாங்கூர் ராஜ வம்ச வரலாறு இருக்கிறது . அங்கு அருமையான, அபூர்வமான புகைப்படங்கள் இருக்கின்றன. ஒரு படத்தில் நாட்டின் மூன்று பிரதமர்கள் இருக்கிறார்கள் ; ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி . சின்னப்பையனாக ராஜீவ் காந்தி. ; இதில் சிறப்பு என்னவென்றால் திருமதி இந்திரா காந்தி அழகாக கொண்டை போட்டுகொண்டு அதைச் சுற்றி தமிப் பெண்கள் போல மல்லிகைப்பூ சரத்தைச் சூடியுள்ளார் .
இன்னொரு படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி , சதாசிவம் ஆகியோர் மிக இளம் வயதில் காட்சி தருகின்றனர். அதை மட்டும் நைசாக படம் எடுத்தேன்.
இந்த சித்திராலயத்திலுள்ள அரசர் படங்கள் குதிரை மாளிகையில் இருப்பதால் அவைகளை முன்னரே படம் எடுத்திருந்தேன்.
இங்கு எங்களுக்கு ‘கைடா’க வந்தவர் இது அரச குமாரியின் பள்ளிக்கட்டு என்று ஒரு திருமண போட்டோவைக் காட்டினார் ; பள்ளிக்கட்டு சபரி மலைக்கு என்ற வீரமணி பாட்டைக் கேட்டிருந்த எனக்கு வியப்பு மேலிட்டது ; பள்ளிக்கட்டு என்றால் அரசகுமாரியின் திருமணம் அல்லது ஒரு கிராமத்தை உருவாக்குதல் என்று மலையாளத்தில் பொருளாம்.
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
லண்டன் வந்த பிறகு, 1935ம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் புரட்டிப் பார்த்தேன்; அண்மையில் வெளியான கிரியா தமிழ் அகராதியிலும் பார்த்தேன் ; பள்ளிக்கட்டு என்ற சொல்லே இல்லை ; இன்று வரை பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் புரியவில்லை . மலையாளச் சொல் என்பதால் நம்மவர்கள் விட்டு விட்டாலும் சபரிமலைக்கும் பள்ளிக்கட்டுக்கும் என்ன தொடர்பு? தெரிந்தால் சொல்லுங்கள்
இதோ குதிரை மாளிகையின் சிறப்புகள்
அரசவைக் கூடம் , மாளிகை முழுதும் மரத்தால் ஆனது. மேற்கூரைகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன . அவை அனைத்தும் தஞ்சாவூர் தச்சர்கள் (தர்மலிங்கம்??) கைவண்ணம் என்று உடன் வந்த ‘கைடு’ கூறினார் .ஜன்னல்கள் என்று நாம் சொல்லும் சாளரங்கள், மழை நீர் புகாத வண்ணம் , க்கா ற்று மட்டும் உள்ளே வரும் வகையில் அற்புதமாக முழுக்க முழுக்க மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன
இங்கு அருமையான பளிங்குச் சிலைகளும் , பஞ்சலோக விக்கிரகங்களும் இருக்கின்றன. மன்னருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த சீன, ஜப்பானிய ஜாடிகள், கோப்பைகள் பல வண்ணங்களில் மிளிர்கின்றன. தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், , பீங்கான் பாத்திரங்கள் உள்ளன Rain Drum ரெயின் ட்ரம் என்னும் டமாரம் இருக்கிறது.
ரெய்ன் ட்ரம் Rain Drum என்றால் மழை டமாரம்; இதில் தவளை உருவங்கள் இருக்கும். இவைகள் மீது மழைத்துளிகள் விழும்போது தவளை எழுப்பும் ஒலி கேட்குமாம். இன்னும் ஒரு விளக்கம் இவைகளை வைத்தால் காலா காலத்தில் பருவ மழை பெய்யுமாம் ; தென் கிழக்காசிய நாடுகளில் இவைகளைக் காணலாம்.
இந்த மழை டமாரங்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இப்போது புத்தமதக் கோவில்களிலும், அ ரண்மனைகளிலும் காணப்பட்டாலும் இவைகளுக்கும் புத்த மதத்தனுக்கும் தொடர்பில்லை. இவை வியட்நாமில் தோன்றி மற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவின. கரன் டமாரங்கள் , தவளை டமாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
பர்மிய கரண் இன மக்கள் இவைகளை வயல்களில் தொங்கா விடுகின்றனர்; இதனால் பயிர்களை பூச்சிகளை அளிக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். கிரஹப் பிரவேசத்தில் வீட்டில் ஒலித்தால் சுப மங்களம் ஏற்படுமாம். வறட்சிக்கு காலத்தில் இவைகளை முழக்கினால் மழை வரும் என்பதும் பர்மியர்களின் நம்பிக்கை.
டமாரத்தின் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருக்கும்; அதிலிருந்து 8, 12, 16 என்ற இரட்டைப்படை எண்களில் கிரணங்கள் புறப்படும். டமா ரத்தில் தவளைகளுக்குப் பதிலாக வேறு பிராணிகள், தாவரங்கள் ஆகியனவும் பொறிக்கப்பட்டிருக்கும்
கதகளி நடனம் மலையாள பூமிக்கே உரித்தான நடன வகை. அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வண்ணம், தலை முடி, கவசம் உண்டு. ஒரு அறை .முழுவதும் கதகளி நாட்டிய கதாபாத்திரங்களின் முழு உருவ சிலைகள் இருக்கின்றன .
படங்களை முதலில் காண்போம்:
-TO BE CONTINUED…………………
TAGS- திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள், Place Museum, Rare pictures-1, Thiruvananthapuram