பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள்- 3 (Post No.13,170)

சர்பகந்தா

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,170

Date uploaded in London – –   23 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART 3

33. Rauvolfia serpentina (L.) Benth. ex Kurz

33.சர்பகந்தா (rauvolfia serpentina; பாம்புக்களா / பாம்பு கலாசிவன் அமல் பொடி) ரவூல்பியா சர்பென்டினா

2400 ஆண்டுகளுக்கு முன்னரே சரகர் சொன்ன இந்த மருந்தை இன்று வெள்ளைக்காரர்கள் இருதய நோய்க்கு மருந்தாக விற்று வருகின்றனர். 18ம் நூற்றாண்டில்  இந்த ரகசியத்தை இந்துக்களிடமிருந்து ஐரோப்பியர்கள் கற்றார்கள்

ஸர்ப்ப , நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள்  சர்ப்பென்ட, ஸ்நேக் என்று ஆங்கிலத்தில் உருமாறின .

இந்தியா முழுதும் இந்தத் தாவரத்தின் இல்லை, தண்டு, வேர் ஆகியவற்றைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் பாலில் அரைத்து களிம்பை காயங்களில் சப்புவது ஒரு முறை; கிழங்கு வேரின் கஷா யத்தை குடிக்கக் கொடுப்பது இன்னும் ஒரு சிகிச்சை முறை . வேரினை நசுக்கி பாம்பு கடித்த இடங்களில் காட்டுவதும் உண்டு

Rauwolfia alkaloids work by controlling nerve impulses along certain nerve pathways. As a result, they act on the heart and blood vessels to lower blood pressure.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் , இருதய நோய்களுக்கு மருந்தாகவும் ரவூல்பியா செடியிலுள்ள ரசாயனப் பொருட்கள் பயன்படுகின்றன.

XXXX

34. Rauvolfia tetraphylla L. ரவூல்பியா டெட்ராபில்லா

ஓரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் பாதாள கருடி என்ற பெயரில் இந்தச் செடியின் வேரின் பசையை உபயோகிக்கின்றனர் . சர்ப்பகந்தா மூலிகையின் வகையைச் சேர்ந்தது இது.

XXXX

35. Rhazya stricta Decne. ரைஸியா ஸ்ட்ரிக்ட்டா

பாகிஸ்தானில் இதை பயன்படுத்துகின்றனர் .சைன்வர் என்பது வட்டார மொழிச் சொல்

XXXX

நந்தியாவட்டை

36. Tabernaemontana divaricata (L.) R. Br. ex Roem. & Schult.

டேபர்னோமோன்டனா டைவேரிக்காடா /  நந்தியாவட்டை

நந்தி பட்டலு என்று கர்நாடக மக்கள் இதை அழைக்கின்றனர். வேரினை நசுக்கி மோரில் கலந்து கொடுக்கின்றனர்

Common name: Crape jasmine, Moonbeam, Carnation of India • Hindi: Chandni चांदनी , Tagar तगर, Tagari तगरी • Kannada: ನಂದಿಬಟ್ಟಲು Nandi battalu,ನಂಜುಬಟ್ಟಲು Nanju battalu, ನಂದ್ಯಾವರ್ತ Nandyaavarta, ತಗರ Tagara • Mizo: Par-arsi, Kelte-bengbeh Battalu • Tamil: நந்தியாவட்டை Nandiar vattai • Gujarati: Sagar • Marathi: Ananta, Tagar • Sanskrit: नन्द्यावर्त Nandyaavarta

XXXX

37. Tylophora indica (Burm. f.) Merr.

டி/டை லோபோரா இண்டிகா / நஞ்சறுப்பான் / ஆஸ்த்மாகொடி , பாலைக் கீரை (ASCLEPIDACEAE)  குடும்பம்  ஆஸ்க்ளிபிடேசி

கர்நாடக பிடார் வட்டார மக்கள் இதை ஆடுமுட்டாத பல்லி (வள்ளி) என்பார்கள். பாம்பு கடித்தவரின் மூத்திரத்தில் இதன் இலைகளை நசுக்கி மூக்கு வழியாக ஓரிரண்டு துளி களை விடுகிறார்கள்

Tamil  -Naippalai, Nancaruppan, Nangilaippiraptai, Nangilaippirattai, Paalaaikeerai, Paalai Keerai,

XXXX

38. Willughbeia edulis Roxb.

வில்லுக்பெய்யா  எடுலிஸ்

வங்க தேச சக்மா பழங்குடி மக்கள் இதை சூரஜ் முகி என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் .

XXXX

F8. Family: Araceae 

39. Arisaema jacquemontii Blume

F8. Family: Araceae  குடும்பம் ஏரேசி

அரிசேமா ஜாக்மொன்டிலி

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் கார்வால் இமயமலைப் பகுதி மக்கள் இதன் பழத்தை கஷாயம் வைத்துக் கொடுக்கின்றனர் ; கப்ரியா அல்லது சபேரி மவுசி என்பது வட்டாரப் பெயர்.

XXXX

 40. Arisaema tortuosum (Wall.) Schott

அரிசேமா டார்ச்சுவோசம்

கார்வால் இமயமலை மக்கள் இதன் கிழங்கை நசுக்கி காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டுகின்றனர்

இதை சம்பூஸ் , பாக் முங்க்ரி என்று சொல்கிறார்கள் .

XXXX

41. Sauromatum venosum (Aiton) Kunth

செளரோமேட்டம்  வெனோசம் .பாகிஸ்தான் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்

XXXX

F9. Family: Arecaceae 

42. Nypa fruticans Wurmb

குடும்பம்- அரிகாசியே ;நீபா பிரக்டியன்ஸ்

ஒரிஸ்ஸா மக்கள் இதை நீபா என்ற பெயரில் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

XXXX

F10. Family: Aristolochiaceae 

43. Aristolochia bracteata Retz.

குடும்பம்- அரிஸ்டோலோகியேசி

அரிஷ்டலோகியா ப்ராக்டியேடா

தமிழ் நாட்டில் சேலம் வட்டார மக்கள் , ஆடு தின்னா பாலை ,ஆடுதீண்டாப்பாளை என்னும் இந்தச் செடியின் இலையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகின்றனர். 

44. Aristolochia indica L.

அரிஷ்டலோகியா இண்டிகா மாம்பாஞ்சான் /பெருமருந்து/ ஈச்சுரமூலி

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் பரவலாகப் பயன்படுத்தும் மூலிகை இது

Common name: Indian Birthwort, Duck flower • Assamese: অৰ্ক মূল arka mula, ঈশ্বৰী মুল iswari mul • Bengali: ঈশ্বরমূল isvaramula • Gujarati: ઈશ્વરમૂળ iswarmul, નાની નોળવેલ nani nolvel, સાપસૂન sapsun • Hindi: ईशरमूल isharmul, विषापहा vishapaha • Kannada: ಗೋಪಾಲಪುಟ್ಟಿ ತೊಟ್ಟಲು gopalapatti toppalu, ಈಶ್ವರ ಬಳ್ಳಿ ishvara balli, ಈಶ್ವರ ಬೇರು ishvara beru • Konkani: ಸಾಪ್ಸಿಕಡ್ಡೂಲ sapsikaddula, सापुर sapur • Malayalam: ഈശ്വരമൂലി eeswaramooli, കടലിവേഗം kadalivegam, കരളവേകം karalavekam, കരളേകം karalekam • Marathi: सापसण sapsan, सापसंद sapasanda • Nepali: इसहरमूल Isaharamool, इश्वरी Ishwaree • Odia: ଇଶରମୂଳ isharamula, ଇଷୁ ishu, ସୁଗନ୍ଧା sugandha • Sanskrit: अर्कमूला arkamula, ईश्वरी isvari, रुद्रजटा rudrajata, सुनन्दा sunanda, विषापहा vishapaha • Tamil: ஈச்சுரமூலி ishvara-muli, மாம்பாஞ்சான் mampancan, பெருமருந்து peru-maruntu • Telugu: ఈశ్వరవేరు ishvara-veru, దూలగోవిల dulagovila • Tibetan: na ku li dri z im po • Tulu: ಇಸರಬೇರು isaraberu, ಇಸ್ವರ ಬಳ್ಳು iswara ballu

XXXX

45. Aristolochia krisagathra Sivar. & Pradeep

அரிஷ்டலோகியா க்ரிஷகத்ரா / ஆகாச கருடன்

நெல்லை ஜில்லா மலைவாழ் மக்கள் இதன் கிழங்கு, இலைகளை சாறாகப் பிழிந்து மேற்கண்ட மாப்பாஞ்சான் கிழங்குடன் 40 நாட்களுக்கு காயப்பட்ட இடத்தில் வித்துக் கட்டுவார்கள் . வேறு சில பாம்புக்கடி மூலிகைகளையும் சேர்ப்பர் .

XXXX

46. Aristolochia tagala Cham.

அரிஷ்டலோகியா தகலா

 வாங்க தேச சிட்டகாங் மலைப்பகுதி மக்கள் வேரைப் பசையாக்கி பாம்பு கடித்த இடத்தில் கட்டுகின்றனர் ; இலையைச் சாறுபிழிந்து குடிக்க வைக்கின்றனர்

xxxxx

 F11. Family: Asparagaceae 

47. Asparagus racemosus Willd.

F11. Family: Asparagaceae குடும்பம் – ஆஸ்பரகேசி

47. Asparagus racemosus Willd.  ஆஸ்பராகஸ் ரேஸிமோசஸ்

கர்நாடக  மக்கள் இதை ஹலவு மக்கள பேரு என்றும் பஹுமூல என்றும் சொல்லுவர் செடியின் இலையைச் சாறு பிழிந்து பாம்பு கடித்த இடங்களில் தடவுகின்றனர் .

Following is from Wikipedia:

சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம்.

இது தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களைக் கொண்டது ஆகும். இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.

xxxx

48. Muscari commutatum Guss.

48. Muscari commutatum Guss.முஸ்கரி கம்யூடேட்டம்

மணிப்பூர் மாநில மக்கள் இலையின் சாற்றை  பாம்புக்கடி மருந்தாக உபயோ கிக்கிறார்கள் .

xxxx

49. Sansevieria roxburghiana Schult. f.

Sansevieria roxburghiana Schult. f.சான்ஸவியெரியா ராக்ஸ்பர்கியானா

ஆந்திரப்பிரதேச கோண்ட்  இன பழங்குடி மக்கள் இலையையும் வேரையும் நசுக்கிப் பசையாக்கி பாம்பு கடித்த இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று தடவை வீதம் மூன்று நாட்களுக்கு அப்புகிறார்கள். அவர்கள் இதை தும்பரசு ஓஸோ என்கிறார்கள் Dumparasu ossoh

Tamil: Marul-kalang மருள் , English: Bowsring hemp, Telugu: Ishaura-koda-udr

Malayalam: Hatukapel, Kannada: Heggurutike, Marathi: Murhari, Hindi: Murahri : Murva

Sanskrit: Muruva

xxxx

50. Sansevieria trifasciata Prain

சான்ஸவியெரியா ட்ரை பாசியேட்டா

வங்க தேச மக்கள் இலை தாவரம் முழுவதையும் பாம்புக்கடிக்கு மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

TO BE CONTINUED……………………..

TAGS- பாம்புக் கடி  ,  200 மூலிகை மருந்துகள் 3, Herbs, Snake bites, Part 3

Leave a comment

Leave a comment