கைகேயி எறும்புப் பெண்! கம்பன் சொல்லும் அதிசயக் கதை!! இந்து மதத்தில் எறும்பு – 2 (Post No.13,182)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,182

Date uploaded in London – –   27 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

எறும்பு பற்றிய சுவையான இந்து மதக் கதைகளில் கம்பன் சொல்லும் கதைதான் மிகவும் சுவையானது ; பழைய கட்டுரையைத் திருப்பித் தந்துள்ளேன் .

அதற்கு முன்பாக சங்க இலக்கியத்தில், தமிழ்ப் பழ மொழிகளில் எறும்பினைக் காண்போம்.

சங்க இலக்கியத்தில் எறும்புகள்

அகம். 377-3; (339)குறு -12-1; புறம் – 173-7;பதிற்று  – 30-38

xxxx

கோடை நீடலின், வாடு புலத்து உக்க

சிறு புல் உணவு, நெறி பட மறுகி,

நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த

வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்

பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,–அகநானூறு 377

நீண்ட பயணம் மேற்கொண்ட தமிழ்க் காதலனின் புலம்பல்; எறும்புகள் அழகாக ஊர்ந்து செல்கின்றன. கோடைகாலத்தில் புல் லிருந்து விழுந்த அரிசியைச் சேகரித்துச் செல்கின்றன.

xxxx

இருதலைக்  கொள்ளி இதை நின்று வருந்தி,–அகநானூறு 369

இரண்டு புறமும் எரியும் கொள்ளிக் கட்டையில் இடையே நின்று தவிக்கும் மனநிலையில் தவிக்கிறேன் .

xxxxx

எறும்பி அளையின் குறும் பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறி,

கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்–குறுந்தொகை 12

எறும்புப்புற்று போல் பாறைகளும் அதிலுள்ள ஓட்டைகள் நீர்ச்சுனைகள் போலவும் இருக்கின்றன.

xxxx

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

……….

பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,                   5

முட்டை கொண்டு வன் புலம் சேரும்

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,

சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்– புறநானூறு 173

ஒரு தமிழ் டாக்டர் இருக்கிறார்; அவர் பசி என்னும் நோய்க்கு மறுத்து தருகிறார்; அவர் பண்ணன் என்னும் பசிப்பிணி மருத்துவர்; அவரது வீட்டிலிருந்து சிறுவர்கள் சொருகி கவளத்துட ன் செல்லுவது எறும்புகள் முட்டை கொண்டு திட்டை ஏறுவது போல காட்சி தருகின்றது ; அப்படியானால் மழை  வரும்

XXX

பதிற்றுப்பத்தில் 30-38  நள்ளிரவில் கடவுளருக்கு எரியும் செந்நிறச் சோற்று உருண்டை கீழே விழும் காட்சியும் அந்தச் சிதறிய சோ ற்றுப் பருக்கைகளை பேய்களும் எறும்புகளும் கூட அண்டாத காட்சியும் வருணிக்கப்படுகிறது.

XXXX

நீதிநெறி விளக்கம் 37 (குமரகுருபரர்)

வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற்

றூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்

டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால்

ஆருங் கிளையோ டயின்று.        37

யானையானது தனக்குப் பாகன் ஊட்டும் உணவுக் கவளத்தைத் தன் வாயில் போடும்போது ஒரு சிறுபகுதி தப்பிக் கீழே விழந்தால் அதற்காக யானை வருந்துவதில்லை. மாறாகத் தப்பி விழுந்த சோற்றுப் பருக்கைகள் கோடிக்கணக்கான எறும்புகள் உண்டு வாழும் உணவாக அது அமையும். அப்படி செல்வந்தர்களும்  தன் செல்வத்தின்  ஒரு பகுதியைத் தன் உறவினர்கள் அனுபவிக்கும்  படிச் செய்ய வேண்டும். 

XXXX

எறும்புகள் பற்றி மனு தர்ம சாஸ்திரம்

கருட புராண ஸ்லோகம் ஒன்றில் தர்மம், தேன்கூடு, வளர்பிறைச் சந் திரன் , எறும்புப் புற்று  ஆகியன வளர்ந்துகொண்டே வரும் என்கிறது ; அதற்கு முன்பாகவே 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மனு நீதி நூல் அதைச் சொல்லிவிட்டது

Manu 4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது

धर्मं शनैः सञ्चिनुयाद् वल्मीकमिव पुत्तिकाः ।

परलोकसहायार्थं सर्वभूतान्यपीडयन् ॥ २३८ ॥

dharmaṃ śanaiḥ sañcinuyād valmīkamiva puttikāḥ |

paralokasahāyārthaṃ sarvabhūtānyapīḍayan || 4-238 || மனு

கறையான்கள் / வெள்ளை எறும்புகள் எப்படி மெதுவாக எறும்புப் புற்றினை (பாம்புப் புற்று) வளர்க்கிறதோ அதுபோல மனிதர்களும் சொர்க்கலோக வாழ்வுக்கு ஆன்மீக பலத்தை , எவருக்கும் தொல்லையின்றி; சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும் ( தவம் செய்யவேண்டும்)– (Manu Smriti 4-238).

XXXX

எறும்புகள் பற்றி மஹாபாரதம்

பூமிக்கடியிலிருந்து தங்கம் கொண்டுவரும் எறும்புகள் பற்றி மஹாபாரதம் சொன்னதை 2600 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெரோடோட்டஸ் என்ற கிரேக்கரும் உலகெங்கும் பரப்பினார்

Pipīlika (पिपीलिक).—An ant .Pipilikam- A kind of gold (said to be collected by ants); तद् वै पिपीलिकं नाम उद्धृतं यत् पिपीलकैः । जातरूपं द्रोणमेयमहार्षुः पुञ्जशो नृपाः (tad vai pipīlikaṃ nāma uddhṛtaṃ yat pipīlakaiḥ | jātarūpaṃ droṇameyamahārṣuḥ puñjaśo nṛpāḥ) || Mahābhārata (Bombay) 2.52.4.

XXXX

வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதா என்ற நூலில் எறும்புப் புற்றுகள் மூலம் நிலத்தடி நீரைக் கண்டுபிடிப்பது எப்படி என்று நிறைய ஸ்லோககங்களைத் தந்துள்ளார். எந்த மரம் இருந்தால் எந்த திசையில் கிணறு தோண்டலாம் என்றும் 30, 40 ஸ்லோகங்களில் சொல்கிறார். இந்துக்கள் இயற்கையை எந்த அ ளவுக்குப் பயன்படுத்தினார்கள், ஆராய்ந்தார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.

XXXX

ராமாயணத்தில் எறும்பின் கதையும் கைகேயி வம்சமும் (Post No.9738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9738

Date uploaded in London – –15 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்ப ராமாயணத்தின் அயோத்யா கண்டத்தில் ஒரு சுவையான கதை வருகிறது. கோடிப்  பேரில் ஒருவருக்கு மட்டும் பிராணிகள் பேசுவதைக் கேட்கும் அபூர்வ சக்தி இருக்கும். இந்து மத நூல்களில் விக்ரமாதித்தன், கழற்றறிவார் , ஆனாய  நாயனார் ஆகியோர் இவ்வாறு அபூர்வ சக்தி படைத்தவர்கள்  வால்மீகி ராமாயணத்தில் கைகேயியின் தந்தை அசுவபதிக்கும்  இந்த சக்தி இருந்ததாக செய்திகள் உள . கம்பரும் நமக்கு போகிற போக்கில் ஒரே வரியில் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபஞ்சத்தில் 4 விதமான ஒலிகள் உண்டு என்றும் அவற்றில் மனிதன் கேட்கும் ஒலி ஒன்று மட்டும்தான் என்றும் ஒரு அற்புதத் தகவலை உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் தீர்க்க தமஸ் (RV1-164) என்ற அந்தகக்  கவிராயர் நமக்கு அளிக்கிறார். ஆக நாம் கேட்க முடியாத ஒலிகளில் ஒன்று பிராணிகளின் ஒலி – பாஷை என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இதோ கம்பன் சொல்லும் கதை

வன்மா யாக்கை கேசி வரத்தால் , என்றான் உயிரை

முன் மாய் விப்பத் துனிந்தாளேனும்  கூனி மொழியால் ,

தன் மாமகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி

என்மாமகனைக்  கான் ஏகு என்றாள் ; எறும்பின் கதையாள்

நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள் –எறும்பின் சரித்திரத்தைக் கொண்டவளின் மகளாகிய கைகேயி வஞ்சனையால் ,

கூனியால் தூண்டப்பட்டுத் தன் வரத்தாலே என் உயிரை வாங்கத் துணிந்துள்ளாள். மேலும் தன்னுடைய பெருமை மிக்க மகனும் தானுமாக இவ்வுலகினைப் பெற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் என்னுடைய உயர்ந்த  மூத்த மகனையும் காட்டிற்குச் செல்க என்றாள்  என்று கைகேயியின் கொடுமையை கோசாலையிடம் கூறி, தசரதன் வருந்தினான்.

இங்கே ‘எறும்பின் கதையாள்’ என்ற 2 சொற்களின் பின்னால் ஒரு கதை உளது

அது என்ன கதை?

கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி. அவன் கேகய நாட்டின் மன்னன்.அவனுக்கு ஈ , எறும்பு போன்ற உயிர் இனங்கள் பேசும் மொழி தெரியும். இதை அவனுக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்தார். ஒரு முறை மனைவியுடன் படுக்கையில் படுத்திருந்த போது அஸ்வபதி. திடீரென வெடிச் சிரிப்பு சிரித்தான். மனைவிக்குக்     கோபமும் சந்தேகமும் வந்தது. “ஓய் , என்ன என்னைக் கிண்டல் செய்கிறீர்களா? எதற்காக எம்மைப் பார்த்து இளித்தீர் ?” என்று வினவினாள். அஸ்வபதி சொன்னார்:- “அன்பே, ஆருயிரே, உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை. நம் படுக்கையின் கீழே போன இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருந்ததைக் கேட்டுச் சிரித்தேன்”  என்றார்.

ஐயா நீவீர் ‘டூப்’ (பொய்) அடிக்கிறீர். அப்படியானால் எறும்புகள் என்ன பேசின என்பதை எமக்கும் செப்பும். பின்னர் உம்  மீதுள்ள ஐயப்பாடு அகலும் என்று புகன்றார்   .

அஸ்வபதி சொன்னார்:- அம்மே; சினம் தணிக !ஐயம் அகல! எனக்கு உயிரின மொழி கற்பித்த முனிவர், அவற்றின் பாஷையை எவருக்கும் நீர் புகலக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அப்படிச் சொன்னால், மரணம் சம்பவிக்கும்; நான் உயிர் வாழ முடியாது என்றான்.

அவளோ அட, நீர் செத்தால் செத்துத் தொலையும் ; எனக்கு எறும்பின் குறும்புப் பேச்சைப்  பகரும் என்றாள். மறு  நாள் முனிவர் அனுமதி பெற்று உரைக்கிறேன் என்றான். முனிவரோ அத்தகைய  கொடியாள் நாட்டில் இருப்பது நல்லதல்ல அவளை நாடு கடத்து என்றார் .

முனிவரின் சொற்படி மனைவியை நாடு கடத்தி விட்டு அஸ்வபதியும் இனிதே அரசாண்டான். அந்தத் தாய்க்குப் பிறந்தவள்தானே கைகேயி! அவள் குணமும் அப்படியே; கணவன் செத்தாலும் ராமன் காட்டுக்குப் போகவே வேண்டும் என்று எண்ணுகிறாள்! என்னும் பொருள் தொனிக்க தசரதன் ஒரு சொல்லைப் போட்டான். அந்தச் சொல்தான் எறும்பின் கதையாள் .

ராமாயணத்தில்தான் எவ்வளவு உண்மைகள்! இதில் மரபணு இயல் என்னும் (Genetics) ஜெனெடிக்ஸ், பிராணிகளின் பாஷை  (Language of Animals) முதலிய அரிய விஷயங்களும் வந்து விட்டன.

தாயைப் போல (பெண்) பிள்ளை!!

நூலைப்  போல சேலை!!

xxxx

தமிழ்ப் பழ மொழிகளில்

தமிழ்ப் பழ மொழிகளில் எறும்பினைக் காணலாம்; தமிழ் மக்களுக்கு இருந்த வானிலை பற்றிய அறிவினையும் எடுத்துக்காட்டுகிறது

எறும்பு ஊர கல்லுந் தேயும்.

(அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல; முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை விளக்கும் பழ மொழி இது)

xxxx

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் ‘

(வானிலை அறிவு.)

xxxx

எறும்பு முதல்  யானை வரை

(எல்லா உயிரினங்களும் இறைவன் படைப்பே )

யானை முதலா எறும்பீறாய- திருவாசகம் 4-11

xxxx

ஈ எறும்பு கூட நுழைய முடியாது

(அதி பயங்கர பாதுகாப்பு )

xxxx

இருதலைக்  கொள்ளி எறும்பு போல

(வழி தெரியாமல் தவிக்கும் நிலை )

இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து  — திருவாசகம் 6-33

xxxx

நெய்க்குடந்தன்னை எறும்பெனவே -திருவாசகம் 6-96

xxxx

எறும்பிடை நாங்க்கூழ் எனப் புலனால் திருவாசகம் 6-97

(அதிக துன்பம்; எல்லா திசைகளிலிருந்தும் தாக்குதல்)

xxxx

பிராமணனும் நாய் தின்னும் புலையனும்

இந்து மதத்தின் உயர்ந்த நிலையில் ஒரு பிராமணன், ஒரு எறும்பு, ஒரு யானை,  நாயை அடித்துத் தின்னும் புலையன் (இது கீதை ஸ்லோகத்தில் உள்ள வரி) ஆகிய அனைவரும் சமமே..நம்முடைய தத்துவங்கள் மிகவும் உன்னதமானவை . அத்தைய உயர்ந்த லட்சியத்தை இன்று நாம் கைவிட்டதால் இன்று சகிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுவிட்டது இந்த மதம் மனிதர்களிடையே மட்டும் சகோதரத்துவத்தைப் போதிக்கவில்லை. உயிர் வாழும் எல்லாம் ஓரினம் என்று போதிக்கிறது — காந்திஜி ; ஹரிஜன் பத்திரிகையில்  (Harijan 28-3-1936)

xxxx

தமிழ் அகராதியில்

எறும்பு என்பதற்கான வேத கால ஸம்ஸ்க்ருதச் சொல் – பிபீலிகா; இதை தமிழ் அகராதிகளிலும் காணலாம் :

Pipīlikā (பிபீலிகா) noun See பிபீலிகை. ((சங்கத்தகராதி) தமிழ்சொல்லகராதி) [pipiligai. ((sangathagarathi) thamizhsollagarathi)]

Xxxx

Pipīlikācantāṉam (பிபீலிகாசந்தானம்) [pipīlikā-cantāṉam] noun < pipīlikā +. Continuity, as of a line of ants; எறும்புகள் தொடர்ந்தூர்வதுபோன்ற தொடர்ச்சி. [erumbugal thodarnthurvathuponra thodarchi.] (மணிமேகலை [manimegalai] 30, 38, கீழ்க்குறிப்பு. [kizhkkurippu.])

Xxxx

Pipīlikāniyāyam (பிபீலிகாநியாயம்) [pipīlikā-niyāyam] noun < pipīlikā +. Nyāya illustrating the principle of judging things correctly like ants; எறும்பு போல முறைப்பட எண்ணித் தவறாதுதுணியும் நெறி. [erumbu pola muraippada ennith thavarathuthuniyum neri.] (W.)

xxxx

இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு! (Post No.4387)

உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை

உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி

எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற

கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

–நாலாம் திருமுறை

பொருள்

தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.

அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என்  உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

xxxx

கல்லுக்குள் தேரைபெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்?

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:— 1119; தேதி:—- 20 ஜூன் 2014

 ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:

பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன் ) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?

பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

 பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!

(கதைச் சுருக்கம் முதல் கட்டுரையிலேயே உள்ளது)

–சுபம்–

Tags- எறும்பு,கைகேயி, பழமொழிகளில், அகராதியில், சங்கத் தமிழில்,பாடல்

Leave a comment

Leave a comment