Acorus calamus- VASAMBU in Tamil
Date uploaded in London – – 21 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
உலகம் முழுதும் பாம்புக் கடியால் இறக்கும் மனிதர்கள் பல்லாயிரம் பேர் என்றாலும் இந்தியாவில்தான் அதிகம் பேர் பாம்புக்கு கடி விஷத்தால் இறக்கின்றனர். ஆண்டு தோறும் 11,000 பேர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் கடிபடும் மனிதர்கள் எண்ணிக்கை 81,000; அத்தனை பேரும் இறப்பதில்லை; ஏனெனில் பெரும்பாலோர் விஷமில்லாத பாம்புகளால்தான் கடிக்கப் படுகின்றனர். ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் , பாம்புக் கடியை முக்கியமாக எடுத்துக்கொண்டு பல சிகிச்சை முறைகளை எழுதியுள்ளன . சரக சம்ஹிதை என்னும் சம்ஸ்க்ருத நூலில்தான் அதிக விஷயங்கள் கிடைக்கின்றன. சரகர் 24 சிகிச்சை முறைகளைக் கூறுகிறார்
பாம்புக்கடி சிகிச்சை முறைகளைக் கூறும் ஏனைய நூல்கள் -சுஸ்ருத சம்ஹிதை, அஷ்டாங்க சம்கிரக , அஷ்டாங்க ஹ்ருதய .
வாக் பட்டர் எழுதிய அஷ்டாங்க சம்க்ரஹ நூலில் பாம்புகளை திவ்ய, பெளம என்ற இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். வாசுகி, தக்ஷ என்பனவெல்லாம் திவ்ய/ தெய்வீக பாம்பு வகைகள் .
பெளம பாம்பு வகைகளை சுஸ்ருதர் மேலும் ஐந்து துணை/ உப வகைகளாகப் பிரிக்கிறார் ; நவீன காலத்தில் இரண்டே பிரிவுகள்தான்- விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் .
ஆயுர்வேதத்தில் எட்டு அங்கங்கள் (பிரிவுகள் ) உண்டு. அதில் அகத் தந்திரம் என்ற பகுதி பாம்பு, தேள், பூச்சிகள் விஷக்கடி பற்றி விளம்புகின்றது.
xxxx
உலகத்தில் 3150 பாம்பு வகைகள் இருக்கின்றன. இவைகளில் 600 மட்டுமே விஷப்பாம்புகள் . இந்தியாவில் 216 பாம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் 60 மட்டுமே விஷத் தன்மை கொண்டவை. உலகம் முழுதும் ஆண்டு தோறும் பாம்பு கடித்ததனால் இறப்பவர்கள் எண்ணிக்கை 1,25,000. இந்த புள்ளி விவரங்களை உலக சுகாதார ஸ்தாபனம் தொகுத்து, இந்தப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது . பெரிய நகரங்களில் பாம்புக்கடிக்கு சிகிச்சை தரும் நவீன மருந்துகள் கிடைக்கின்றன. ஆயினும் பாம்புக்கடி நிகழ்வதோ கிராமப்புறங்களில்தான்.
இந்தியா , நேபாளம் , இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மூலிகைகள் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் சுமார் 70 மூலிகைகள் அறிவியல் ரீதியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன
மூலிகை மருந்துகள் சிகிச்சை தருவதோடு, கடிபட்ட மக்களுக்கு மனத் தெம்பையும் நம்பிக்கையையும் உண்டாக்குகின்றன. ஏனெனில் கடித்த பாம்பு விஷப் பாம்பா இல்லையா என்று அறியாமல் பீதியாலும் பயத்தாலும் பலரும் திகைத்து கண்டபடி செயல்படுகின்றனர் . முறையான வைத்தியர்கள் இருந்தால், முதலில் விஷம் உடலில் பரவாமல் தடுக்க துணிக்கட்டு போடுகின்றனர். பின்னர் விஷத்தை உறிஞ்சி எடுக்க பல்வேறு முறைகளைக் கையாளுவர் .
இந்தக் கட்டுரையில் உலகம் முழுதும் பயன்படும் விஷக்கடி மூலிகைகளின் பட்டியலைக் காண்போம்.
xxxxxx
நாயுருவி
Angiosperms பூக்கும் தாவரங்கள்
குடும்பம் – அகாந்தேசி ; தாவரத்தின் பெயர் அகாந்தஸ் இலிசிபோலியஸ்
1. Family: Acanthaceae 1. Acanthus ilicifolius L.
தமிழில் கழி முள்ளி ; பிச்சாவரம் பகுதிகளில் விளைகிறது. ; ஒரிஸ்ஸாவில் இதை ஹரகாஞ்ச என்பர்
பிச்சாவரம் மக்கள் இந்த தாவரத்தின் பழங்களை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்து கட்டுகின்றனர்
xxxx
ஆடாதோடா வசிகா
2. Adhatoda vasica Nees (Justicia adhatoda L.)
பாகிஸ்தானில் இதை கொல் யார் சாக் என்கிறார்கள் .
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. இதை மலபார் நட் என்றும் அழைப்பர்
xxxx
3. Andrographis paniculata (Burm. f.) Wall. ex Nees
ஆண்ட்ரோ கிராபிஸ் பணிக்குலேட்டா
அருணாசல பிரதேச மக்கள் இதை ஹிரோடா என்கிறார்கள்
இதை மத்திய இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் வேறு சில மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர் .விட்டுணுக்கிராந்தி ஈச்சுரமூலி ishvara-muli, மாம்பாஞ்சான் mampancan, பெருமருந்து peru-maruntu •என்னும் அரிஷ்டலோகியா இன்டிகாவுடன் பயன்படுத்துகிறார்கள் . இலைகளைப் பொடித்து உண்ண வைக்கிறார்கள்; மத்திய இந்தியாவில் பொடிகள் சேர்த்து அரைத்து களிம்பை கடித்த இடங்களில் வைத்துக் கட்டுகிறார்கள் சர்ப்பகந்தி, கருடக்கொடி மூலிகைகளையும் சேர்த்துக் கொள்ளுவர்
xxxx
பார்லேரியா கிறிஸ்டாடா
4. Barleria cristata L.
Vernacular names: Tadrelu, Bansa siyah (Margallah Hills National Park, Islamabad, Pakistan)
பாகிஸ்தானில் அதிகம் உபயோகிக்கின்றனர்
xxxx
5. Elytraria acaulis (L. f.) Lindau
எலித்ராரிய அகாலிஸ்
மத்திய பிரதேச சித்திரகூட மக்கள் இதை சஹஸ்மூரிய என்று சொல்கிறார்கள் பழங்குடி மக்கள் இந்த தாவரத்தின் வேரை மிளகுடன் சேர்த்து அரைத்து பசையாக்கி கடிபட்ட காயங்களில் வைத்துக் கட்டுகின்றனர் .
Vernacular name: Sahasmuria (Chitrakoot, Madhya Pradesh, India)
xxxxx
6. Lepidagathis cristata Willd.
லெபிடாகதிஸ் க்ரிஸ்டாடா
Vernacular name: Siyarbethca (Chitrakoot, Madhya Pradesh, India)
மத்தயப் பிரதேச சித்திர கூடம் பழங்குடி மக்கள் இதை மயில்துத்தம் என்னும் காப்பர் சல்பேட்டுடன் இலையின் ரசத்தைக் கொடுக்கின்றனர். இதை மூர்ச்சை தெளிவிக்க பயன்படுத்துகிறார்கள்.
xxxxx
7. Peristrophe paniculata (Forssk.) Brummitt
பெரிஸ்ட்ரோப் பணிக்குலேடா
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் ஜில்லா மக்கள் செடி முழுதையும் மசித்து சோற்றுடன் உண்ணுகிறார்கள்
This plant (common name: Atrilal) அத்ரிலால் என்பது வட்டார பெயர்
xxxxx
8. Thunbergia grandiflora Roxb.
துன்பெர்ஜியா க்ராண்டிப்லோரா
To treat snakebites, this plant is used with other plants by the Karbi tribes of Assam, India (Teron, 2005).
அஸ்ஸாமின் கரீபி இன மக்கள் இதைப் பாம்புக்கடி சிகிச்சையில் உபயோகிக்கின்றனர்
xxxx
9.குடும்பம் — அகோரேசி / வசம்பு
F2. Family: Acoraceae 9. Acorus calamus L.
Vernacular name: Skha waja (Buner, NWFP, Pakistan)
வசம்பு (Acorus calamus, Sweet Flag அல்லது Calamus) .இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
பாகிஸ்தான், மற்றும் இந்தியாவில் கோண்ட் மற்றும் கோர்க்கு இன மக்கள் வசம்பை பயன்படுத்துகின்றனர்
xxxx
10.குடும்பம் – அமராந்தேசி / நாயுருவி
F3. Family: Amaranthaceae 10. Achyranthes aspera L.
அகிரான்தஸ் ஆஸ்பெரா
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் முழுதும் இந்தத் தாவரம் எதாவது ஒருவகையில் பயன்படுத்தப்படுகிறது
Inflorescence and seed paste is applied on the wounds by the rural people of Kanyakumari district, Tamil Nadu, India (Jeeva et al., 2006a).
கன்யாகுமரி மாவட்ட மக்கள் பூங்கொத்து, விதைகள் முதலியவற்றால் பசைபோல களிம்பு செய்து பாம்பு கடித்த இடங்களில் அப்புகின்றனர்
தொடரும்
—-subham—
Tags– பாம்புக்கடி, சிகிச்சை, 200 மூலிகைகள், சரக சம்ஹிதை, வாக்பட்டர் , அஷ்டாங்க சம்க்ரஹ