Kuppaimeni Herb
Date uploaded in London – – 16 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 23
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—23
கு
233. எலி கடிக்கு
குளப்பாயிலையை ஆவின் பாலில் அரைத்து உண்டு வந்தால் எலி கடி விஷம் கரப்பான் உடல் சுரப்பு கால் சுரப்பு சர்வ விஷ வீக்கம் இதுகள் தீரும்.
xxxx
செங்கருப்பான் கருங்கரப்பானுக்கு
குண்டலாத்தி என்று வழங்கும் சங்க ன் வேரை பசும்பாலில் அரைத்து அருந்தி வந்தால் தழுதணை சொரி தேமல் கிரந்தி செங்கருப்பான் கருங்கரப்பான் சிறு சிரங்கு பெருஞ் சிரங்கு யாவும் தீரும்.
xxxx
காதில் ஈப்புகுந்தால்
குப்பை மேனி இலையில் கொஞ்சம் நீர் தெளித்துகே கசக்கி காதில் இரண்டு மூன்று துளி சாறு பிழிந்தால் ஈ செத்து விழுந்து விடும்
இதுவுமது
குப்பை மேனிச் சாறு ம் கோலியவரைச் சாறு ம் சமனாய்க் கலந்து காதில் பிழிந்தால் ஈ சாகும்
xxxx
சிரா பீனிசத்திற்கு
குப்பை மேனி ஆடு தீண்டாப்பாளை அளிஞ்சிமுஞ்சி இவைகளின் சாறு வகைக்கு அரைப் படி நல்லெண்ணெய் படி 2 இவைகளைக் கலக்கி அடுப்பேற்றி மெழுகுபதமாய்க் காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால் சி ராப் பீனிசம் தீரும் .
xxxx
உட்குத்து புற வீச்சும் தீர
குப்பைமேனி சிறுபுள்ளடி பொன்னாவாரை இவைகள் ஓரளவாயெடுத்து வே ப்பம் இலையில் உப்பு போட்டு இடித்துப்பிழிந்த சாறு விட்டு அரைத்து ஒருவேளைக்கு புன்னைக்காயளவு ஒருநாளைக்கு மூன்று தபா கொடுக்க நிவர்த்தியாகும் .
xxxx
குடல் வாதத்திற்கு
குரி ஞ்சானிலையை பிட்டவிழ்த்துப் பிழிந்த சாறு அரைக்கால் படி சுக்கு மிளகுஉள்ளி, கடுகு வெந்தியம் வகைக்கு விராகநிடை 1 வெதுப்பிப் பொடித்துப் போட்டு கலக்கி மூன்று நாள் கொடுக்க சாந்தியாகும் .
xxxx xxxx
பல ரோகந்தீர
குங்குமப் பூவை அரைக்கால் விராகநிடை எடுத்து பால் விட்டரைத்து அரைக்கால் படி பசும்பாலில்கலந்து குடித்து வந்தால் அண்டவாதம் உச்சிவலி கண்ணிலுண்டாகும் பூ கபம் கால் வலி சூலை தாகம் மேக ஜலம் விந்து நஷ்டம் ஜலதோஷம் சுரம் செவி நோய் பித்தம் மதுமேகம் இவரை தீரும் .பெண்களின் கர்ப்ப வலி ….திரரோகம் இவைகள் தீரும். நீடித்து சாப்பிட வேண்டியது .
xxxx xxxx
பேதி கட்ட
குடசப் பாலை மரத்தின் பட்டையை பாலில் அரைத்துக் காலையில் குடித்து வந்தால் பேதியைக் காட்டும். நீரிழிவு வாதம் இவை நிவர்த்தியாகும் .
xxxx
பொடி சிரங்கு
குடியாட்டுப் பூண்டென்னும் கொல்லை பல்லியைக் கொண்டுவந்து கொஞ்சசம் கெந்தகம் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் பொ டி சிரங்கு மாறும்.
xxxx
தினவு தீர
குதிரைக் குளம்பு என்னும் நிலக்கடம்புயிலை கொண்டுவந்து மிதமாயெடுத்து பாலில் அரைத்துக் கொடுத்தால் குதிரை நடை வாய்வு ஜென்னி தினவு தீரும். இதைக் கிஷாயம் மூலியமாவும் உபயோகிக்க வேண்டும் .
xxxx
243. கண் மயக்கம் தீர
குதிரைவாலிப்பூ ண்டு கொண்டுவந்து பாலில் அரைத்து அருந்திவந்தால் கண் மயக்கம் ஈளை கடுப்பு கழிச்சல் காசம் இவை சாந்தியாகும்
xxxx
பல வியாதிகள் தீர
குரிஞ்சான் கட்டையை சூரணித்துக் கரைகூட்டி திருக்கடிப்பிரமாண ம் எடுத்து தின்று வரவும். இப்படி நீடித்து தின்று வருவதால் தேகத்திலுள்ள காணா வியாதிகள் யாவும் தீரும்; நல்ல வலிவையுண்டாக்கும் .
xxxx
245. வாந்தியாக
குரிஞ்சான் வேரை அல்லது உலர்ந்தயிலையை போட்டி செய்து சுமார் 30 கிறையின் வரையில் உள்ளுக்கு க் கொடுத்து சுடு தண்ணீர் மிகுதியாய்க் குடித்தால் நன்றாய் வாந்தியாகும் .
xxxx
எச்சரிக்கை
சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் புழங்கும் சில சொற்கள் விஷயம் தெரியாதோரை திசை திருப்பிவிடும் குதிரைக்குளம்பு , கொல்லை பல்லி என்பன மூலிகைகளின் பெயர்கள்; மூலிகை அறிவு இல்லாதவர்கள் நிஜ குதிரை , நிஜ பல்லியைக் கொண்டுவந்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். அந்தக் காலத்தில் எல்லோரும் வைத்தியம் பார்த்துவிடக்கூடாது , விஷயம் அறிந்தவர்களே வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதற்காக பல சங்கேதச் சொற்களைப் பயன்படுத்துவார்கள்; சில மூலிகைகள் எப்படி உருவத்தில் தோன்றுகிறதோ அதை வைத்தும் பெயர்கள் உண்டாகும். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் இப்படி சொல் வழக்கு உண்டு ஆங்கிலத்தில் ஒரு மரத்துக்கு குரங்கு மரம் MONKEY TREE என்ற பெயருண்டு. ஆனால் அதற்கும் குரங்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
— subham—
Tags- குப்பைமேனி, குரிஞ்சான், குதிரைக் குளம்பு, குங்குமப் பூ, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 23