WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.200
Date uploaded in London – — 3 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 2
ச. நாகராஜன்
சேஃப் தயாரிப்பு
1901-ல் கோத்ரெஜ் பாதுகாப்பான ‘சேஃப்’ (SAFE) பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.
அப்போது சான்ஃபிரான்ஸிஸ்கோவில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது. அனைத்து சேஃப்களும் அழிந்து போயின.
இதைக் கவனத்தில் கொண்ட கோத்ரெஜ் அருமையான ஒரு சேஃபை வடிவமைத்தார்.
இந்த அனைத்திலும் அவருக்கு உதவி செய்தது அவரது சகோதரரான பிரோஜ் ஷா.
தொழிலில் நன்கு புதிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 1910-இல் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். புதிய உத்திகளைப் பார்த்தறிந்தார்.
.கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்
ஒருநாள் அவருக்கு மெர்வான்ஜியிடம் தான் வாங்கிய கடன் தொகை 3000 ரூபாய் ஞாபத்திற்கு வரவே ஓடோடிச் சென்று அவரிடம் தொகையைத் திருப்பித் தந்தார். நோய்வாய் படுக்கையில் இருந்த அவர் அதை வாங்க மறுத்தார். ஆனால், ‘ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.
‘எது வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்று வாக்களித்தார் கோத்ரெஜ்.
எனது உறவினாரான பாய்ஸிற்கு ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்பதே அவர் கேட்ட உதவி.
நெகிழ்ந்து போன கோத்ரெஜ். அவ்ரை எனது நிறுவனத்தில் கூட்டாளியாகவே ஆக்குகிறேன் என்றார்.
அப்படித் தோன்றியது தான கோத்ரெஜ் .அண்ட் பாய்ஸ் (GODREJ & BOYCE) கம்பெனி.
ஆனால் சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்திலிருந்து விலகி விட்டார் பாய்ஸ். என்றாலும் பெயர் தொடர்ந்தது.
சோப் தயாரிப்பு
1928 மே முதல் நாள் தனது நிறுவனத்தை தனது தம்பி பெயருக்கு மாற்றினார் கோத்ரெஜ். நேராக நாசிக்கிற்குச் சென்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டார்.
ஆனால் இயல்பான அவரது “எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆர்வம்” அவரை உந்த அவர் சோப் தயாரிப்பதில் ஈடுபட்டார். சோப்பை மிருகக் கொழுப்பின்றி சைவ முறையில் தயாரிப்பதே அவர் எண்ணம். தாவர எண்ணெய்களை வைத்து மிருகக் கொழுப்புகளைத் தவிர்த்து அவர் தயாரித்த சோப்புகள் பிரபலமாயின. நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த சோப்பை நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் அன்னிபெஸண்ட் அம்மையாரும் பெரிதும் போற்றி வரவேற்றனர்.
இந்திய விடுதலை இயக்கம் கோத்ரெஜை ஈர்க்கவே அவர் தாதாபாய் நௌரோஜியின் உரையால் ஈர்க்கப்பட்டார். நம் நாடு எதிலும் தனித்து சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே அவரது கருத்து.
ஆனால் சுதேசித் தயார்ப்புகள் நிச்சயமாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வளியுறுத்தினார்.
சாதாரண 215 சதுர அடி ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட் கோத்ரெஜ்.
நிறுவனம் இன்று 28000 பணியாளர்களைக் கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 5.7 பில்லியன் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டுள்ளது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)
எலிஸபத் மகாராணியாரே ஒரு முறை கோத்ரெஜ் தயாரிப்புகளைப் பகிரங்கமாகப் போற்றிப் புகழ்ந்தார்.
மறைவு
1936-ல் கோத்ரெஜ் மறைந்தார்.
ஆதி கோத்ரெஜ்
இன்று இந்த நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர் ஆதி கோத்ரெஜ்.
அவருக்கு வயது 82 (பிறப்பு 3-4-1942)
இப்போது இந்த நிறுவனம் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து இந்தியாவின் பெருமையை உலககெங்கும் பறை சாற்றி வருகிறது.
சமீபத்தில் விண்ணில் பறந்த சாடலைட்டில் விகாஸ் எஞ்ஜினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது கோத்ரெஜ் நிறுவனம்
வீட்டில் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உலகில் பெரும்பகுதியில் வசிக்கும் நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு கோத்ரெஜ்
தயாரிப்பைப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.
இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் – சிந்தால் சோப், ஹிட், குட் க்னைட்,, நூபுர் ஹென்னா, ஹேர் கேர், காட்ரஜ் பர்னீச்சர், காட்ரஜ் கட்டும் வீடுகள், சிசிடிவி, ரெப்ரிஜரேட்டர், குளிர்சாதனப்பெட்டிகள், எலக்ட்ரிக் ஓவன்,- மிக மிக நீண்ட கோத்ரெஜ் தொழில்துறையின் பட்டியல் தொடரும்.
வெற்றிக்கான தாரக மந்திரம்
கோத்ரெஜ் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?
மிக சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் அது விளக்கப்படுகிறது.
ENTERPRISE AND ETHICS
– THE TWO PILLARS OF THE EMPIRE!
வணிகம் – நன்னெறி நடைமுறைகளுடன்
சாம்ராஜ்யத்தின் இரு தூண்கள்!
***