முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 29 (Post.13,214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,214

Date uploaded in London – –   7 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 29

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 29

310. கன்ன  வீக்கத்திற்கு


சிற்றகத்தியிலையும் வசம்பும் அரிசியும் ஒரேயளவாயெடுத்து அரைத்து பூசினால் கன்ன  வீக்கம் தீரும்.

சிற்றகத்தி (மஞ்சள் செம்பை, கறுஞ்செம்பை) – SESBANIA SESBAN

XXXX

மேகசிரங்குக்கு

சிறு செருப்படை சாறு பிழிந்துயும் ஈருள்ளியும் இடித்து ஆறு தபா வடிகட்டி சாப்பிட பேதியாகும். மேய்ச்ச்சிரங்கு முதலானவை நிவர்த்தியாகும்

XXXX

கண் ரோகமுடையவருக்கு

காலில் தேய்க்க தைலம்

சின்னியிலைச்சாறு — நல்லெண்ணெய்- வகைக்குப் படிகால்  நம்பிக்கிழங்கு விராகனிடை (கால்) இதை பொடித்து மேற்படி எண்ணெய்யில் அரைத்து யாவும் ஒன்ராய்ட் கலந்து வைத்துக்கொண்டு காலில் பாதத்தில் தேய்த்து  வந்தால் கண்ணிலுள்ள சகல ரோக மும்  நிவர்த்தியாகும் .

XXXX

குளுமை தீர

சித்தாமுட்டியை துண்டுத்துண்டாய் நறுக்கி பசும்பாலில் போட்டுக் காய்ச்சி இறுத்துப் பாலைச் சாப்பிட்டு வருவதால் சீதளம் – குளுமை – வாயு தீரும். தீ பனமுண்டாகும் .

சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி (Sida cordifolia

XXXX

தொந்தரோகம் தீர

சிவ கரந்தையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து சரியிடை சீனி கூட்டி திருகடிப் பிரமாணம் இரு போதும் மண்டலக் கணக்காய தின்று வந்தால் தொந்தரோகம்  யாவத்தும் தீரும். அரோசகம் – இருமல் – மந்தம்- மாந்தம் – வாந்தி – இவை தீரும். பசியுண்டாக்கும்; அழகு கொடுக்கும், தேகம் பரிமளமுண்டாக்கும் , விந்து காட்டும், சஞ்சீவியென்று பெயர்.

XXXX

விஷந்தீர

சிறியா நங்கையிலையைத் தின்னும்படி அப்பியாசப்படுத்தினவர்களுக்கு தேள் கடித்தால் ஏராது .

மற்ற எந்த விஷத்தாலும் பிராண பயமில்லை . ஆயாசம் தணியும் மேனி அழகுண்டாகும் நேத்திரம் பிரகாசிக்கும் .

FOLLOWING IS FROM WIKIPEDIA

சிறியா நங்கை (Andrographis alata)

கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் சிறியதாக இருப்பதால், சிறியா நங்கை என பெயர் பெறுகிறது. இலைகள் பெரியதாக இருப்பதால், மற்றொரு தாவரம் பெரியா நங்கை (Andrographis lineata ) எனப் பெயர் பெறுகிறது. குருதியின் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.

சித்தர் பாடல்

சிறியாநங்கைத் தழையைச் சேவித்த பேரைப்

பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்

டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்

திங்கள் முக மாதே தெளி

XXXX

நீர் கட்ட

சிறுகட்டுக்கொடி யிலைய  அதிகாலையில் எழுந்து ஒரு பிடியெடுத்து வாய்கொண்டமட்டும் மென்றுதின்றால் , நீர் ஓழு க்கு- நீர்தாரைகிருச்சினம்  வெள்ளை இவை தீரும்

XXXX

பிரமியத்திற்கு 

சிவந்த கொட்டைக் கரந்தை — ஈருள்ளி வகைக்கு ஒருபிடியெடுத்துஇடித்து சாறு பிழிந்து அதற்கு சரியிடை நல்லெண்ணெய் கலந்துகொடுக்க நிவர்த்தியாகும்.

XXXX

பித்த வாய்வுக்கு

சிவதை வேர் – திரிகடுகு சரியிடை கொண்டு சூரணித்து சக்கரை சமன் கலந்து திருகடியளவு இருவேளையும் தின்று வந்தால் நிவர்த்தியாகும்..

XXXXX

இரத்த பித்தத்திற்கு

சிறுகீரை வேரை பச்சரிசி கழுவிய நீரின் மட்டி விட்டு  விட்டு  அரைத்து தேனில் குழப்பிக்கொடுக்கத் தீரும்.

XXXX

சகல வாதத்திற்கும்

சித்திர மூலம் – மிளகருணை – நொச்சி- இவைகளின் வேர் பட்டை வகைக்கு 5 பலம் எடுத்து இடித்து சூரணித்து திருகடியளவு குளுந்த தண்ணீரில் கொடுக்கத்  தீரும்

XXXX

விஷ சுரத்திற்கு கஷாயம்

சிறுவழுதலை – சீந்தில்- தாமரை வளையம் — கோணக்கிழங்கு — சுக்கு இவை வகைக்கு ஒரு பலம் எடுத்து சிதைத்து  2 படி தண்ணீர் விட்டு கால் படியாக வடித்து மூன்று வேளைக்கு கொடுக்க  நிவர்த்தியாகும்

XXXX

அதிசார சுரத்திற்கு

சித்தாமுட்டி வேர் — வில்வக்   காய் – சீந்தில் தண்டு — நில வேம்பு — சுக்கு — கோரைக் கிழங்கு — கஞ்சா விரை — வகைக்கு பலம் கால் — நாலு க்கொரு பங்காய்  கிஷாயம் காய்ச்சிக்கொடுக்க தீரும்.

XXXX

325. கண்ணில் வியாதி வராதிருக்க

சித்தாமண க்கின் வேரை  அரைத்து பசும்பாலில் காய்ச்சிக் கலக்கி புரை குத்திக் கடைந்து வெண்ணை எடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது. கண் குளிர்ச்சியாக இருக்கும் .

தொடரும் ………………………

Tags-

முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்- 29, சித்தாமுட்டி, சிறுவழுதலை, சிறியா நங்கை

Leave a comment

Leave a comment