Date uploaded in London – – 8 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxxPART 8
111. Mucuna pruriens (L.) DC.
111.முசுனா ப்ரூரியன்ஸ்
உத்தரபிரதேச மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மருந்து .
XXXX
112. Tamarindus indica L.
டாமரின்டஸ் இண்டிகா/ புளிய மரம்
மஹாராஷ்டிரா ஜல்காவன் வட்டார மக்கள் பா ம்புக்கடிக்கு புளிய மர பொடியை உபயோகிக்கின்றனர். (இல்லையா விதையா என்று சொல்லப்படவில்லை).
பொடியைத் தேனில் குழைத்து ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடுகின்றனர்.
XXXX
113. Uraria picta (Jacq.) Desv. ex DC.
113. யூராரியா பிக்ட்டா
மேற்கு வங்க புரூலியா வட்டார பழங்குடி மக்கள் இலையின் மசியலை ஒரு நாளைக்கு 2 முறை வீதம் தருகிறார்கள் .அவர்கள் இந்த மூலிகையை மஹாதேவ ஜடா அல்லது ஈஸ்வர ஜடா என்று அழைக்கின்றனர்.
Malayalam: Muvila • Marathi: Pitvan, Prisniparni, Ranganja • Oriya: Isworojota • Sanskrit: Andhriparni, Chitraparni, Sinhapuchchi • Tamil: Sittirappaladai, Chittirappalatai • Telugu: Kolkuponna
சித்திர பாலாடை
(தமிழில் சித்திர பாலாடை என்றால் வேறு தாவரத்தைக் காட்டுகிறா ர்கள் . இப்படி பெயர்க்க குழப்பம் நிறைய மூலிகை விஷயத்தில் இருப்பதால் கவனம் தேவை )
XXXX
F32. Family: Gentianaceae
114. Enicostemma axillare (Lam.) Raynal.
குடும்பம்- ஜென்டியானேசி

114.எனிகாஸ்டெம்மா ஆக்சிலாரி / வெள்ளறுகு
கன்யாகுமரி ஜில்லா மக்கள் தவற மசியலை பாம்புக்கடித்த இடத்தில் வைத்துக் காட்டுகிறார்கள்
XXXXX
F33. Family: Hypoxidaceae
115. Curculigo orchioides Gaertn.
குடும்பம் ஹைபோக்சிடேசி
கார்குலீகோ ஆர்க்கியோ ஐடெஸ்
வங்கதேச , உத்தர பிரதேச மக்கள் தண்டு அல்லது வேரைப் பயன்படுத்துகின்றனர்.
XXXX
F34. Family: Lamiaceae
116. Anisomeles malabarica R. Br. பேய் விரட்டி, பெருந்தும்பை , பேய்மிரட்டி
குடும்பம் லாமியேசி
116.அனிசோமேலிஸ் மலபாரிகா
கன்யாகுமரி, சேலம் ஜில்லா குமரகிரி மக்கள் இலை மசியலையோ சாற்றையோ பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர்.
XXXXX
117. Clerodendrum serratum (L.) Moon
க்ளியோடென்ரம் செர்ராடம்
மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் இலையை எண்ணெய் அல்லது வெண்ணெயில் கொதிக்கவைத்து களிம்பு செய்து தடவுகின்றனர்.
XXXX
118. Hyptis suaveolens (L.) Poit.
ஹிப்டிஸ் சுவாவியோலென்ஸ்
உத்தர பிரதேச மக்கள் வன துளசி என்ற பெயரில் இந்த மூலிகையைப் பயன்படுத்துகின்றனர்.
XXXX
119. Leucas aspera (Willd.) Link
லூகஸ் ஆஸ்பெரா
ஆடு மாடுகளைப் பாம்பு கடித்தால் கர்நாடக சிருங்கேரி ஒரிஸ்ஸா, ஆந்திர மக்கள் மிளகு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து இலை மசியலை ஆடு மாடுகளின் மூக்கில் துப்புகின்றனர். கட்டே தும்பே என்று கன்னடத்தில் பெயர்.
XXXX
120. Leucas capitata Desf.
லூகஸ் கேபிடேடா
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.
XXXX
121. Leucas cephalotes (Roth) Spreng.
லூகஸ் செபலோடஸ்
உத்தராஞ்சலில் இமயமலை வட்டார மக்களும், உத்தரபிரதேச மக்களும் தாவரத்தை கஷாயம் வைத்து பயன்படுத்துகிறார்கள்
XXXX
122. Leucas linifolia (Roth) Spreng.
லூகஸ் லீனிபோலியா
அசாம் சிவசாகர் வட்டார மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.
XXXX
123. Ocimum adscendens Willd.
ஆசிமம் அட்ஜெண்டென்ஸ்
மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் மக்கள் இந்த மூலிகையின் வேர், பட்டை ஆகியவற்றைக் கஷாயம் வாய்த்து பால், வெண்ணெயுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள் .
ஆசிமம் என்பது துளசி வகைச் செடியாகும்
XXXX

124. Ocimum basilicum L.
ஆசிமம் பெசிலிகம்
காளி துளசி என்ற பெயரில் உத்தர பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்.
XXXX
125. Plectranthus rugosus Wall. ex Benth.
பிளெக்ட்ராந்தஸ் ருகோஸஸ்
காஷ்மீர் மக்கள் இலையின் சாற்றை வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கின்றனர்.
TO BE CONTINUED……………………………
TAGS- பாம்புக் கடி, 200 மூலிகை மருந்துகள் , Part 8, snake bites, cure, herbs