
Date uploaded in London – – 8 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மூத்திர சிகிச்சை/ Urine Therapy
இந்தியப் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் 99 வரை வாழ்ந்தார். அவர் தினமும் தன்னுடைய சிறு நீரைப் பருகியதை பட்டவர்த்தனமாக சொல்லியதோடு மருந்து வாங்க முடியாத பல லட்சக் கணக்கான மக்களுக்கு சிறுநீர் மருத்துவம் சிறந்த மருந்து என்றும் சொன்னார். உடனே உலகமெங்கும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.
உலகின் பல பகுதிகளிலும் மக்கள் தன்னுடைய சிறுநீரை குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்துவதும் வெளியானது . புற்றுநோய் கண்ட இரண்டு பெண்மணிகள் தன்னுடைய சிறுநீரைக் குடித்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும் மருத்துவ சஞ்சிகைகளில் உள்ளது.
ஆயுர்வேத நூல்களிலும் இது இருக்கிறது. ஆனால் அவை காலத்தால் பிற்பட்ட சம்ஸ்க்ருத நூல்கள் . சிறுநீரை அமுரி என்றும் சிவாம்பு (சிவனுடைய நீர்) என்றும் சொல்லுவார்கள் . சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திருமூலரும் சிறுநீர் மருத்துவத்தை புகழ்ந்து பாடியிருப்பது இது உண்மைதான் என்று காட்டுகிறது
1971ம் ஆண்டில் நிலவுக்குச் செல்லும் மனிதர்களுக்காக மனித சிறுநீரை விரிவாக ஆராய்ந்ததில் அதன் ரசாயனத் தண்மை தெரிந்தது.அதில் விஷம் எதுவும் இல்லை. ஆயினும் அதிக அளவு உள்ளே செல்லக்கூடாது என்பது தெளிவு.
சிறுநீரில் முதலில் வரும் நீரை விட்டுவிட்டு மத்தியில்/ நடுவில் வெளியேறும் நீரை மிகச் சிறிதளவு குடிக்கலாம் என்று திருமூலரும் சொல்கிறார். இதனால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம். நரை, திரை, மூப்பு வருவதற்கும் தடை போடலாம். மொரார்ஜி தேசாய் தினமும் யூரின் (Urine) குடித்து, 99 வயது வரை நோய் நொடியின்றி வாழ்ந்தது இதற்குச் சான்று பகரும்.
முதலில் திருமந்திரம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பின்னர் திருமூலர் பாடல்களையும் அவற்றின் விளக்கத்தையும் காண்போம் .
இந்துக்கள் பசுமாட்டின் மூத்திரத்தை ஒரு கையில் ஏந்தி குடிப்பதைக் காணலாம். அரேபியா பாலைவனங்களில் மக்கள் ஒட்டக மூத்திரத்தையும் பாட்டில்களில் அடைத்து விலைக்கு விற்கின்றனர். அமெரிக்கப் பழங்குடி மக்களில் ஒரு சாரார் தினமும் மூத்திரத்தில் குளிப்பதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளனர் . ஆகவே மூத்திரம் என்றவுடன் அருவருப்பு வேண்டாம். முடிந்தால் குடியுங்கள்.
திருமூலர் அருமையான உவமையுடன் துவங்குகிறார். கடல் நீர் உப்பு நீர் கடலுக்குப் பக்கத்தில் எவ்வளவோ (திருச்செந்தூர் நாழிக்கிணறு) நன்னீர் ஊற்றுகள் உள்ளன.. இது போலத்தான் சிறுநீரும் என்கிறார் மூலர். அதாவது சிறுநீர் உப்புக்கரிக்கும்; ஆயினும் அதில் அமுத நீர் உள்ளது. கடலுக்குப் பக்கத்தில் ஊற்று தோண்டி நல்ல நீர் எடுப்பது போல இதை எடுத்துக் குடியுங்கள் என்கிறார்.
அவர் மேலும் சொல்கிறார்; ஒரு நாளைக்கு ஒருமுறை சரியான விதத்தில் உட்கொண்டால், வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது.
இதை ஓராண்டு உட்கொண்டால் உடம்பில் தேஜஸ் /ஆன்மீக ஒளி பிரகாசிக்கும். தீங்கு எதுவும் வராது; பிராணாயாமப் (சுவாச) பயிற்சிகள் சித்தியாகும். பிராணவாகரத்தில் மனது ஒருமுகப்படும். மேனியோ பொன்மேனியாகும் ஒருநாளைக்கு 100 மிளகு அளவு மட்டுமே பருக வேண்டும். வியாதி என்பதே வராது .
மருந்தே என்ற தேவையே எழாது.
இதைத் தலையில் தேய்த்துக்கொண்டால் நரைதிரை நீங்கும். கரு மயிர் தலைக்கும். விஷயம் தெரியாதவர்கள் சீ சீ மூத்திரம் என்பர்.
நடுவில் வரும் சிறுநீரிக் குடிப்போர் சாகா வரம் பெறுவார். உடலிலுள்ள சுருக்கங்களும் நரைத்த முடியும் நீங்கும்.
ஓ, நீண்ட குருந்தால் உடைய அழகிய பெண்ணே ! ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் !!
இந்த சிறுநீரில் மஞ்சள் , மிளகு, வேம்பு, நெல்லிக்கனி சேர்த்து பயன்படுத்து. கூந்தல் கரு கரு என்று வளரும்; பள பள என்று பிரகாசிக்கும்
இது சக்தி மருந்து.சொர்க்கலோக டானிக்;சிலருக்கு இது தெரியும். இதன் மஹிமையை வார்த்தைகளில் வருணிக்க மு டியாது

I THINK AMURI BECAME URINE IN ENGLISH.
திருமந்திரம்
அமுரிதாரணை – சிறுநீர் சிகிச்சை
845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
AMURI DHARANA = URINE THERAPY
845: Effect of Urine Therapy in Yoga
The urinary liquid within the body
Is unto a picot of small well;
Dipped into sea vast
If that is fed once a day
In way appropriate,
Life will know distress none;
Well may you seek it.
பொருள் : சிறுநீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம்.
846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
846: Goodly Effects of Amuri Dharana
If this divine water clear is inside taken
The body glows in a year;
No harm befalls it;
Prana control will realised be;
The mind will center in Letter “A” (Pranava)
And will uplifted be
And the body into gold will turned be.
A IN TAMIL IS NUMBER 8; SOME PEOPLE TAKE IT AS PRANAVA –OM
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது ; எட்டு ஆண்டுகளில் மனம் மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் – அமுரி.
847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
847: Consume 100–Pepper Measure (drops) a Day
Drink of this divine-water
A hundred pepper measure
No medicine beyond this, know men;
But rub it clear on crest of head
Your greying vanishes away
And fresh black hair shoots forth.
பொருள் : உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த ரோமம் கறுப்பாகும் நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.
848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.

848: Only the Ignorant Dissuade the Practice
The water on the banks of body
Is unto a mirage on the sea
Away, Away, from it-thus they say
The men who know not truth;
They who can drink the midstream
Rid of foam and wave
That arises first and last,
Will immortal be;
And all greying and wrinkling disappears.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம்.
849. அளக நன்னுத லாய்! ஓர் அதிசயம்!
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
849: Effect of Mixing Ingredients
Oh! damsel of flowing tresses and slender forehead!
Hear you a miracle this!
In this Water hidden in the body
Mix pepper, amla, turmeric, and neem
Soft will your body be;
And dark thine hair on head.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு அதிசயம்!! இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும்.
XXXXXX

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
850: Greatness of Amuri Dharana
He the Nandi called it: the Hero’s recipe, Heaven’s exlixir, and Sakti’s potion
Some know it as the Medicament Primus
It is specific that is of radiant light
Hard to describe to world at large.
XXXXX
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது.
—SUBHAM—
TAGS- மூத்திரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 5, மூத்திர சிகிச்சை, Urine Therapy, சிறுநீர், அருந்தலாமா, அமுரி, சிவ நீர்