
Post No. 13,230
Date uploaded in London – – 11 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 31
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 31
xxxx
சூ
340. சுகவிரோசனம்
சூரத்து நிலாவிரையை இடித்து வஸ்திரகாயம் செய்து அதற்கு சரியிடை சுக்கு- அதிமதுரம்- ரோஜாமொக்கு- விளக்கெண்ணெயில் வறுத்த பிஞ்சு கடுக்காய்- இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து ,- சேர்த்து அரைப்பங்கு சீனி சேர்த்து புட்டியில் வைத்துக்கொண்டு– அரை ரூபாய் எடை எடுத்து வெந்நீரில் கலக்கியுண்டு வந்தால் மலக்கட்டு நீங்கும்- இரண்டொரு விசை விரோசனம் ஆகும் .
XXXXX
வெட்பந்தணிய
சூரியகாந்தியை அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சூடு-உஷ்ணம் – இவைகளைத் தணிக்கும் .
சூரிய காந்தி- சந்திர காந்தி
இவைகளின் குணம்
சந்திராகாந்திக்குத் தழலெரிச்சல் நீர்க்கடுப்பும்
உந்திவலியாவு மொடுங்குங் காண் — சந்திவரும்
பாரியவாதம் பருகு நீரேற்றமும் போம்
சூரிய காந்திக்குச் சொல்

XXXX
செ
சீழ் மூலக் கிஷாயம்
செந்நாயுருவி ஒருபிடி கற்றாஞ் சோறு ஒருபிடி சக்கரை இவைகளை கால் படி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இருவேளையுமாக பத்து நாளருந்தி வர சாந்தியாகும் .
XXXX
நீரடைப்புக்கு சாந்தி
செம்பசளை — அதாவது செகப்புப் பசளையை பச்சைப் பயறு கூட்டி கிரமமாய் சமைத்து உண்டால் நீர்க்கட்டு உடையும் அரோசகம் தீரும் .
XXXX
இரத்த வெள்ளை பிரமியத்திற்கு
செம்பரத்தம் பூவை புளிப்புத் தயிர் விட்டரைத்து தயிரில் கலக்கி மிதமாயுண்டுவந்தால் இரத்த வெள்ளை பிரமியம் பெரும்பாடு இவை தீரும் .XXXX
கண் குளிர்ச்சிக்கு
செண்பகப் பூவை வேண்டியவரையில் பசும்பாலில் போட்டுக்காய்ச்சியுண்டுவந்தால் மேகம் போம் .அஸ்திசுரம் வாதம்பித்தம் இவை தீரும். கண் குளிர்ச்சியுண்டாம் . தாது கட்டும். போகம் மிகுதியுண்டாம் .
XXXX
கீல்வலி காசத்திற்கு
செந்தொட்டி வேரை பால் விட்டரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் கபம் கரப்பன் கீல்வலி சுரம் சுவாசகாசம் வாதம் போகும் . பெண்கள் உண்டுவந்தால் கட்டுப்பட்ட சூதகத்தை உடைக்கும்.
XXXX
திரிதோஷ சாந்தி
செந்தாழப்பூவை பாலில் அரைத்து உபயோகித்தாலும் சூரணித்து சீனி கூட்டியுண்டுவந்தாலும் கபம் காசம் நீரேற்றம் சகல தோஷமும் தலை நோயும் தீரும்.
XXXX
348. குறை நோய்களுக்கு
செவ்வல்லிக் கொடியை சூரணித்து சமனிடை திரிகடுகு சூரணம் கூட்டி யாவுக்கும் அரைப்பங்கு சீனி கூட்டி திருகடியளவு உண்டுவந்தால் கரப்பான் குட்ட உற்பத்தி குறை நோய் மூலரோகம் இவை தீரும்.

XXXX
கட்டிகள் உடைய
செகப்புக் கீரைத் தண்டு, அதாவது செங்கீரைத்தண்டுயிலையை அரைத்து கட்டிகள் பருவுகளுக்குத் தடவி வந்தால் பழுத்து உடையும்
XXXX
தேகக் குளிர்ச்சிக்கு
செகப்புக் கற்றாழைச் சோற்றை ஏ ழுதரம் சுத்தி செய்து சீனி கூட்டி பிசைந்து உண்டு வந்தாலும் சிலாகித்து கல்நார் முதலிய பற்பங்கள் கூட்டி யுண்டுவந்தாலும் கூடிய சீக்கிரத்தில் உடம்பு குளிர்ச்சியுண்டாகும் . வெட்டை சூடு தணியும்.
XXXXX
அழல் தணிய
செங்கழுநீர்க் கிழங்கை சூரணித்தாவது அரைத்துப் பாலில் கலக்கியுண்டாவது உண்டுவந்தால் காசம் – ஸ்த்ரீகளால் வந்த தேக அழல் -திரிதோஷம் – பித்தாதிக்கம் – இவை தீரும்- கண் குளிர்ச்சியுண்டாகும் .
XXXX
அசாத்திய நோய்க்குத் தைலம்

செம்முள்ளி வேண்டியவரை கொண்டுவந்து சிதைத்துப்போட்டு எ ட்டுக்கொரு பங்காய் கிஷாயம் வைத்து சரியிடை நல்லெ ண்ணெய் விட்டு தாழை விழுது ஏலம் – கருஞ் சீரகம் – கார்க்கோலரிசி – வகைக்கு கொஞ்சம் எடுத்துக் பால் விட்டரைத்து கலக்கி தைல பதமாய்க் காய்ச்சி முழுகி வந்தால் க்ஷயம் – ஈளை மந்தார காசம் அண்டவாதம் இவை தீரும்.
XXXXX
353. கரப்பான் ரிணங்களுக்கு
செங்கத்தாரி அல்லது செஞ்சூரை மூலத்தைப் பாலில் அரைத்து பாலிற் கொள்ள கிரந்தி – செவ்வாப்புக்கட்டி – செங்கரப்பா ன் – கருங்கரப்பான் — கொள்ளிக் கரப்பான்- கரப்பான்- பல விஷங்களும் தீரும் .
இதுவுமது
செங்கத்தாரிப் பட்டையை அரைத்து உடம்பில் பூச மேற்படி வியாதிகள் யாவும் தீரும்.
XXXX
TAGS-
முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள், part-31,