நெல் உவமையும் பயிர் உருவகமும்  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-10 (Post.13,238)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,238

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நெல் முதலிய பயிர்களை பயன்படுத்தி என்ன செய்திகளைத் தருகிறார் என்று காண்போம்.

பயிர் உருவகம்

Kundalini Yoga

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே

In the Triangular Field,

Are the Ploughs Three;

Yoke the bulls tight with rope;

Drive the ploughshare deep

They who held not their tongue,

Ploughed not in the Center

Closing their legs together,

They plough the waste in vain.

இதில் பிராணாயாமப் பயிற்சி மூலம் முன்னேற்றம் காணுவதை விளக்குகிறார். மூவணை ஏர் = இடகலை, பிங்களை , சுழுமுனை என்னும் மூன்று நாடி களுக்குரிய வாயு;

முக்காணி=மூலாதாரத்திலுள்ள முக்கோணம்; தறி = வீணாத்தண்டு ; அணிகோலி = வாயுவை முறையாகச் செலுத்தி; நாவணை கோலி = நாவால் அணைபோட்டு; நடுவிற் செறு = யோக வயல் ;

முறையாக யோகம்/ மூச்சுப் பயிற்சி செய்வோர்  மூச்சினை முறையாக வழிப்படுத்தி ஆறு பகைளை வெல்வர் ; அதைச் செய்யாதோர் பிறப்பு இறப்பு என்னும் விலங்குகளை காலில் மாட்டிக்கொண்டு பிறவி நிலத்தை உழுது மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்  இங்கு பயிர் செய்தலை உருவகமாகப் பயன்படுத்தியுள்ளார்.

xxxxxxx

பனை மரம் , 7 கடல்


ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு பனை
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே

 Kundalini Yoga

Six are the streets

In their junction are juicy palm trees four;

With ladder difficult to climb,

I ascended the palm’s heights;

And there I saw the seas seven.

ஆறு தெரு= உடம்பிலுள்ள 6 ஆதாரங்கள் ; அகப்பட்ட சந்தி= மூலாதாரம்; சாறுபடுவன= இனிமை தருவன; நான்கு பனை = 4 இதழ்களையுடைய ப னை போன்ற மலர்;  ஏணி = சுழுமுனை; கடல் ஏழ் = 7 பிறப்பு.

மூலாதாரத்தில் தேன் போல இனிமை தரும் 4 பனைகள் உள்ளன. நாம் காணும் ஏணியால் அடைய முடியாது. ஆனால் சுழுமுனை மூலம் அடையலாம்.அதன் மூலம் அடைந்தபோது இறைவனைக் கண்டேன்; ஏழு பிறவியிலிருந்து மீண்டேன் .

xxxxx

நெல் உவமை 

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி

உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்

தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி

இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து

புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன

பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்

உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

They Care Not for Soul’s Well-Being

They borrow grain;

They pound it hard,

Feed the base (senses),

And nourish the body;

Thus they wander

Their lives to live;

But in the valley broad

A prey to raging flames

The body finally lies;

This they realize not.

xxxxxxx

In days of yore, the Sages Four

Sought the Holy One in Kailas;

There, under the wild banyan tree

The Supreme One His teachings imparted;

They are of evil speech

Who think not of Him;

Ready to march to the burial heap

They stand in wait.

நெல்லைக் கடன் வாங்கி சோறு சமைத்து உண்டு உடம்பை வள ர்க்கின்றனர்; அதுவோ முடிவு காலத்தில் தகனம் செய்யப்படும்; இதை அறிந்தும் உடம்புதான் உயிர் என்று எண்ணித் திரிகின்றனர். அதுவே கரும்பு என்று எண்ணுகின்றனர்.

முன்னொரு காலத்தில் ஆல மரத்துக்கு அடியில் தட்சிணாமூர்த்தியிடம் நால்வர் மெய்ப்பொருளைக் கேட்டறிந்தனர் அதை உணராதோர் பழி மொழிகள் பேசி காலம்தள்ளி இறுதி நாளுக்காக காத்திருக்கின்றனர்.

xxxx


ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

If you in ardour pursue

The search for power to acquire Kaya Siddhi,

You shall flourish far and wide

Like a seed of paddy planted

In a million, million fields;

Do you therefore meditate single-minded

On the mantra that conquers Fate.

ஒரு நெல் விதை, பல்லாயிரம் நெல் விதைகளைத்தருகிறது .அதுபோல காயசித்தி பெற விரும்புவோருக்கு பலன் கிடைக்க வேண்டுமானால் , விதியை வெல்லும் மந்திரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு தியானிக்கவேண்டும் .

xxxxx

வில்வமும் தருப்பையும்

மீது சொரிந்திடும் வெண்ணீறுஞ் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத வதகத்தான் மஞ்சனஞ் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலஞ் செய்யுமே.

Then pour the ashes white and powdered incense,

Shower flowers diverse, Kusha grass and Bilva leaves,

Sprinkle water holy,

And raise a platform three feet by three.

சமாதிக் கிரியை என்ற தலைப்பின் கீழ் திருமூலர் இதைச் சொல்கிறார்; சிவபெருமானை நீரால் அபிஷேகம் செய்யுங்கள் திருநீறு , மணம் மிகுந்த பொடிகள், தருப்பை, வில்வத்தால் அர்ச்சியுங்கள்; இப்படி வழிபாடு செய்ய, மூன்று மூன்று தேவை ;மூன்று காலம்- காலை மதியம், மாலை.மூன்று கருவி- உள்ளம், உரை, உடல்; மூன்று பணி – அன்பு, அறிவு, ஆற்றல்;

xxxx

நெருஞ்சி முள் உருவகம்

The Renunciate Shall Walk in the Straight Path

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்

நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்

நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு

நெறியின் நெருஞ்சில் முள் பாய கிலாவே.

உரை

(ப. இ.) அன்புநெறியாகிய இல்லறமும் அதன் முதிர்வாம் அருள் நெறியாகிய துறவறமும் இருகால்போல் அகம் புறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நெறியாகும். அந்நெறியினைப் படைத்தவன் சிவனே. அந்நெறி நில்லாது தீநெறி நிற்பார் துன்புற்று அந் நெறிக்கு வருமாறு செய்ய நெருஞ்சில் முள் போன்ற துன்ப நெறிகளையும் படைத்தளித்தனன். மெய்ந் நெறிக்கண் வழுவாது ஒழுகவல்லார்க்குப் பிறவித்துன்ப முதலிய எத்துன்பங்களும் எய்தா. அத்துன்பங்கள் நெருஞ்சிலாக உருவகப்படுத்தப்பட்டன.

(அ. சி.) நெறி – வழி. இம் மந்திரம் அறவழியிற் செல்லாதவர்களைத் துன்பம் சுடும் என்பதை உவமான முகத்தால் உணரவைத்தது.

He laid the path, and planted the thorns along;

When you from the path deviate

The thorns of temptation shall prick you;

They that deviate not,

Them the thorns prick not.

—subham—-

Tags- நெருஞ்சில் முள் உருவகம், பயிர் உருவகம் ,நெல் உவமை,  வில்வம், தரப்பை, 4 பனை மரம் , 7 கடல்

Leave a comment

Leave a comment