
சைஸிஜியம் க்யூமினி / நாவல் மரம், நவாப்பழ மரம்
Date uploaded in London – – 13 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Part 10
F40. Family: Menispermaceae
141. Cissampelos pareira L.
குடும்பம் – மெனி ஸ்பெர்மேசி
சிஸ்ஸம்பெலோஸ் பரெய்ரா
வட்டத்திருப்பி, பொன்முசுட்டை
தமிழ்நாட்டில் விழுப்புரம் வட்டாரம், மற்றும் ராஜஸ் தான் , மேற்குவங்கம், பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மாளிகை இது வேரை இடித்துப்பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கிறார்கள் .
xxxx
142. Parabaena sagittata Miers
142.பாரபீனா சஜிட்டாடா
நிகோபார் தீவு மக்கள் இதன் இலையை தேங்காயெண்ணெயில் பொறித்து காயத்தின் மீது தடவுகிறார்கள் .
xxxx
143. Stephania hernandiifolia (Willd.) Walp.
ஸ்டெபானியா ஹெரென்டிபோலியா
வங்க தேசத்தில் சிட்டகாங் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை .
xxxxxx

144. Tinospora cordifolia (Willd.) Miers
டினோஸ்போரா கார்டி போலியா /சீந்தில் கொடி / Seenthil Kodi.
அமிர்தவல்லி /அம்ருதம் என்ற பெயரில் சேர்வராயன் கல்ராயன் மக்களும், மத்திய பிரதேச, உத்தர பிரதேச மக்களும் இதன் தண்டை சாறு பிழிந்து பயன்படுத்துவர். பில் பழங்குடி மக்கள் இதன் வேரினை கழுத்தில் சுற்றிக்கொள்கிறார்கள்.
xxxx

F41. Family: Moraceae
145. Artocarpus hirsutus Lam.
குடும்பம் – மோரேசி
ஆர்டோகார்பஸ் ஹிஸ்ருடஸ் /அயனி (மரம்)
மேற்குத் தொடர்ச்சி மலை மலண்ட் வட்டாரமக்கள் பட்டையை தேங்காயெண்ணெயுடன் பயன்படுத்துகிறார்கள் .
அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதனுடைய பழமானது சிறிய பலா பழத்தைப் ஒத்திருக்கும். இது நேராக வளரும் தன்மையுடையது. இது கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது.
.xxxx
.146. Ficus hirta Vahl
பைகஸ் ஹிர்ட்டா
வங்க தேச மக்கள் இதன் வேர் மற்றும் பழங்களை நசுக்கி பாம்பு கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.
xxxx
147. Ficus prostrata (Wall. ex Miq.) Miq.
பைகஸ் ப்ரோஸ்ட்ரேட்டா
மேற்கு மிஜோரம் மக்கள் வேரின் சாற்றைப் பயன்படுத்தி பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
xxxx
148. Ficus racemosa L.
148.பைகஸ் ரேசிமோசா
மத்தியப் பிரதேச மக்கள் இதன் விதைகளை பயன்படுத்துகிறார்கள் இதன் கஷாயத்தை மூக்கில் விட்டு விஷத்தை வாந்தி எடுக்க வைக்கிறார்கள். ராஜஸ்தான் உதய்ப்பூர் மக்கள் பட்டையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைக்கிறார்கள்.
xxxxx
F42. Family: Moringaceae
149. Moringa oleifera Lam.
குடும்பம் – மோரிங்கேசி
149.மொரிங்கா ஒலிபெரா
அஸ்ஸாம் மக்கள் வேரினை மசித்துப் பயன்படுத்துகிறார்கள்
xxxx
F43. Family: Myrtaceae
150. Syzygium cumini (L.) Skeels
குடும்பம்- மிர்ட்டேசி
சைஸிஜியம் க்யூமினி / நாவல் மரம், நவாப்பழ மரம்
ஒரிஸ்ஸா மக்கள் மரப்பட்டையை மசித்து உபயோகிக்கிறார்கள் .
xxxx
F44. Family: Nyctaginaceae
151. Boerhaavia diffusa L.
குடும்பம் – நிக்ட்டா ஜினேசி
போராவியா டிப்யுஸா
ஒரிஸ்ஸா, மத்திய பிரதேச, உத்தர பிரதிசெம்மா மக்கள் செடியை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைக்கின்றனர்
xxxx
152. Boerhaavia repens L.
போராவியா ரெபென்ஸ்
அஸ்ஸாம் மக்கள் இதன் வேரை உபயோகிக்கிறார்கள்
xxxx
F45. Family: Onagraceae
153. Ludwigia adscendens (L.) H. Hara
குடும்பம்- ஓனக்ரேஸி (Water Primrose)
லுட் விகா அட் சென்டென்ஸ்/ நீர்த்தண்டு கீரை, சதுப்பு மல்லிகை
கன்யாகுமரி வட்டார மக்கள் செடியை நசுக்கி பாம்புக்கடித்த இடங்களில் அப்புகின்றனர்.
xxxx
F46. Family: Orchidaceae
154. Eulophia nuda Lindl.
குடும்பம் – ஆர்க்கிடேசி
யூலோபியா நூடா
மத்திய பிரதேச சித்திர கூட மக்கள் வேரின் சாற்றினைப் பயன்படுத்துகிறார்கள்
xxxx
F47. Family: Orobanchaceae
155. Lindenbergia muraria (Roxburg ex D. Don) Brühl
குடும்பம்- ஒரோ பஞ்சேஸி
155.லிண்டேன்பேர்ஜியா முராரியா
ராஜஸ்தான் மாநில ஆள் வார் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.
xxxx
F48. Family: Oxalidaceae
156. Biophytum candolleanum Wight
குடும்பம்- ஆக்சாலிடேசி
பயோ பைடம் சண்டோல்லேனம்
நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் வேறு நான்கு மூலிகைகளுடன் இதையும் சேர்த்தது நீரில் காய்ச்சி 14 நாட்களுக்கு குடிக்கச் சொல்கிறார்கள்

xxxxx
157. Oxalis corniculata L.
157. Oxalis corniculata L.
ஆக் சாலிஸ் கார்னிகுலேடா
மேகாலயா மற்றும் பாகிஸ்தான் பழங்குடி மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள் .
xxxxx
158. Oxalis debilis var. corymbosa (DC.) Lour.
ஆக்சாலிஸ் டெபிளிஸ்
உத்தர பிரதேச மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.
xxxxx
F49. Family: Papaveraceae
159. Argemone mexicana L.
குடும்பம் பாபாவேரேசி
ஆர்ஜிமோன் மெக்சிகானா
ராஜஸ்தான் ஆள்வார் வட்டார மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்
xxxxx
F50. Family: Phyllanthaceae
160. Antidesma alexiteria L.
குடும்பம்- பில்லாந்தேசி
160.ஆன்டி டெஸ்மா அலெக்சிடேரியா
நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள்
இலங்கையில் “Heen embilla – හීන් ඇඹිල්ල”; கேரளத்தில் Thathalamaram என்று பெயர்கள்.
To be continued…………………………………………..
பாம்புக் கடி, 200 மூலிகை மருந்துகள் , Part 10, நாவல் மரம்,