முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-32 (Post No.13,241)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,241

Date uploaded in London – –   14 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 32

xxxx

354.படைகளுக்கு

தகரை என்னும் சிறிய தாவரத்தின் சமூலத்தைக் கொண்டுவந்து சிதைத்து அத்துடன் கொஞ்சம்  கற்பூரம் சாம்பிராணி இவைகள் சேர்த்து குழித்தயிலமிறக்கி படர் தாமரை இடுப்புக் கடுவன் முதலிய படைகளுக்குத் தடவினால் உதிர்ந்துவிடும்.

XXXX

குழந்தை வியாதிக்கு

தழுதாழை என்னும் மூலிகை தனியாயாவது – செருப்படை – கற்பூரவள்ளி – கைம்மாறு வெற்றிலை இவை சமன் சேர்த்து பிட்டவித்துப் பிழி ந்த ரசத்தில்  கார மாத்திரை- லிங்க மாத்திரை – பேதி மாத்திரை-  இதுகளில் ஏதேனும் இழைத்து வார்த்தால் மாந்தங்கள் முதலிய குழந்தை வியாதிகள் தீரும்

XXXX

இந்திரகோப  உபயோகம்

தம்பலப் பூச்சி என்னும் இந்திரகோபப் பூச்சியை உலர்த்திப் பொடித்துத் தேனில் இழைத்து ஒரு வாரம் தின்றால் பெரும்பாடு வியாதியை நிவர்த்தியாக்கும்

XXXX

இதுவுமது

தம்பலப்  பூச்சியைப் பொடித்து மூல ரினத்தின் மேல் தூவிவந்தால் மூலம் ஆறிப்போகும் .

இதுவுமது

தம்பலப்  பூச்சியை சிகப்பு பட்டுத்துணியில் முடித்து கட்டியிருந்தால் தீராத சுர ம் தீரும்

XXXX

இதுவுமது

தம்பலப்  பூச்சியை உயிருடன் பிடித்து  நல்ல வெல்லத்தில் வைத்து உருண்டை செய்து வாயிற்போட்டு விழுங்கவேண் டியது . இப்படி ஒரு வருஷத்திற்கு  ஒரு வாரம் தினம் விழுங்கி வந்தால்  மறு வருஷம் வரையில் தாது விருத்தியதிகரிக்கும்.

XXXX

தாது புஷ்டிக்கு

தண்ணிவிட்டான்கிழங்கை இடித்துப் பாலில் போட்டுக் காய்ச்சி யுண்டுவந்தால் தாது புஷ்டியுண்டாகும் ; சிலநாள் விடாமல் சாப்பிடவும்.

XXXX

இதுவுமது

தண்ணிவிட்டான்கிழங்கை பாலில் உபயோகித்துவந்தால் விந்து கட்டுப்படும் . சுக்கில பிரமியம் – நீர் எரிவு-காந்தல் – கரப்பான் — இவை தீரும்.

XXXX

சூலை சொறி சிரங்குக்கு

தலைச் சுருளி என்னும் மூலிகையை பாலில் உண்டு வந்தால் அரவுக்கடி முதலிய பழைய விஷம்

சூலை சொறி  சிரங்கு  தீரும். தேகத்தில் பலமுண்டாகும் .

XXXX

பல்லு நோய்க்கு

தக்காளி அல்லது மணித்தக்காளி சமூலம் கொண்டுவந்து கிஷாயம் வைத்து நாலு க்கொரு பங்காய் இறக்கி வாய் கொப்பளித்து வந்தால் , பல்லு நோய்- உண்ணா க்கு வளர்ச்சி  தொண்டை நோய் இவை தீரும்.

XXXX

பொடியிருமலுக்கு

தவசுமுருங்கை சமூலம் சூரணம் செய்து சமன் சக்கரை கூட்டி வேளைக்கு திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் குழைத்து தின்று  வரவும் . பொடியிருமல்  கபம் கோழை  தொந்த ரோகம் தீரும்

XXX

தா

வாயில் நீர் ஒழுக்கலுக்கு

தாணிக்காயை சுட்டு சூரணம் செய்து சமனிடை சக்கரை கூட்டி நித்தம் ஒரு விராகநிடையெடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால்  வாயில் அதிக நீர் ஒழுக்கல்  கட்டுப்படும்; கண் குளிர்ச்சியுண்டாகும் .

To be continued……………………..

Tags- தம்பலப் பூச்சி , இந்திர கோபம், தகரை, தழுதாழை ,தவசுமுருங்கை ,முனிசாமி , ,மூலிகை அதிசயங்கள் 32

Leave a comment

Leave a comment