
Date uploaded in London – – 15 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமந்திரத்தில் வரும் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியை இன்று நிறைவு செய்வோம். தொடர்ந்து பிராணிகள் பற்றிய அதிசயச் செய்திகளைக் காண்போம்
திருமந்திரத்தில் திருக்குறளின் தாக்கத்தை நிறைய பாடல்களில் காண முடியும். அதைத் தனியே காண்போம்
இப்போது தினை, பனை இரண்டையும் காண்போம் ; தினை, பனை என்றவுடன் திருவள்ளுவர்தான் நம் நினைவுக்கு வரும்.தினையை 4 இடங்களிலும் பனையை 3 இடங்களிலும் திருக்குறளில் காணலாம் .
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
திணைத்துணை நன்றி செயினும்-தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்-அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார் என்று பரி மேல் அழகர் உரை சொல்லுவார்.
xxxxx

திருமந்திரத்தில் தினை
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்
தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.
(ப. இ.) பேரன்புவாய்ந்த மெய்யடியார்கள் காதலுடன் தன்னை நினைப்பார்களானால் அங்ஙனம் நினைப்பவரைச் சிவபெருமானும் திருவருளால் நினைந்தருள்வன். புருவநடுவாகிய சுனையின்கண் திருவாணையாக விளங்கும் அறிவுப் பேரொளியானை நெஞ்சத்தாமரையினிடத்து விளைந்து மலரும் உள்ளொளியாக வுறையும் சிவபெருமானைத் தினையைப் பிளந்தாலொத்த சிறுமையராயுள்ளாரும் திருவைந்தெழுத்தினையே எண்ணி அவ்வெண்ணத்தால் உறுதி எய்தியவுள்ளத்தின்கண் நினைப்பாராயின் அவ்வுள்ளம் உரனுடைய வுள்ளமாகும்.
xxxx
உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி
மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திட லாமே.
(ப. இ.) திருவருளம்மை உயிர்கள் உய்தற்பொருட்டு, அகத்துப்போல் புறத்தும் திருக்கோவில் கொண்டெழுந்தருளியுள்ளாள். அத் திருக்கோவில் தோறும் முறைமுறையாகச் சென்று மணம் கமழ்கின்ற பூச்சூடியுள்ள அம்மையை நாடொறும் கும்பிட்டு ‘நமசிவய’ என்னும் தமிழ்மந்திரம் மறவாநினைவுடன் ஓதிக்கொண்டிருக்கும் மெய்யடியார்கட்குத் தூமாயையின் கண்ணுள்ள ஏனைய அத்தன், அருளோன், ஆண்டான், ஆசான் ஆகிய நான்குமெய்களின்கண் உறையும் இறைவன் திருவருளும் தினைப்பொழுதினுள் எளிதின் எய்தும்.
xxxxx
_(6936992546).jpg)
திருமந்திரத்தில் பனை
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து போல
நினையாத வர்க்கில்லை நின் இன்பந்தானே..
இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர்.நம்முள்ளேயே அறிவாய் இயங்கும் இறைவனை எம்பெருமானை உணர்ந்தவர்கள் அன்பும் கருணையுமாக இருப்பார்கள்.தம் உள்ளத்தில் அப்பெருமான் எழுந்தருளியிருப்தை உணர்ந்திருப்பவர் அன்புடையவராக இருப்பர்.
நம்முள்ளேயே கொட்டிக் கிடக்கும் இறையின் கருணையை உணர முடியாமல், அதை வெளியே தேடுவது அறிவுடமை ஆகாது. பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப்பற்றி நினையாமல் உணவுக்காக கிழிறங்கி வரும்.
தன்னுள்ளே இருக்கும் ஈசனை உணராமல், ஞானத்தை வெளியில் தேடி, வாழ்வை வீணடிக்கிறார்கள். அதுபோல சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனை பற்றி நினைவேயில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.
xxxx
ஆலைக் கரும்பும் சோலைத் தண்ணீரும்
ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.—2919
வெல்லக்கட்டியும்,அமுதமான் பாலும் போன்று இனிமையானது அன்னையின் திருவருள் . மயிற் பீலியில் எவ்வளவு வண்ணங்கள உளவோ அவ்வளவு வடிவங்களை எடுப்பவள் நம் அன்னை. . அவளுடைய அருள் பெற்றோருக்கு ஒரு குறையுமில்லை.
XXXXX
உள்ளங்கை நெல்லிக்கனி
மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே-2949
உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தமிழ்ப் பழமொழி. இதைப் பயன்படுத்தி திருமூலர் நமக்கு ஒரு செய்தியை அளிக்கிறார். சிவ பெருமானை நாடுவோர்க்கு அவன் உள்ளங்கை நெல்லிக்கனி போல அகப்படுவான். தூயநெறி யுடன் வாழும் தேவற்கு அவன் அப்பன். அவனை நானும் தொழுதேன்.அவனுக்கே அடிமையானேன்.
(நெல்லிக்கனி பற்றி இன்னும் ஒரு பொருளும் சொல்லலாம். அதைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும். அதுபோல சிவனும் இனிமை தருவான் ).
xxxxx
கரும்பும் தேனும்
கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.—- 2935
(ப. இ.) கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சரக்குநிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முளையும் கிழங்கும்போன்று தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ்வின்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக் கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டுகொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.
Bodily Pleasures Ceased to Interest
In this body of pleasures
Unto sugarcane and honey mixed,
Sprouted the Fragrance of Siva Bliss;
In eagerness my heart sought it
And I visioned the Void;
Then did the cane taste bitter
And honey sour.
XXXX
(அ. சி.) கரும்பும் தேனும் – உண்டலும் உறங்கலும்.; அரும்பும் கந்தமும் – தோன்றுதலும் நிலைத்தலும்.; வெளியுறக் கண்டபின்- நன்றாய் அனுபவித்த பின். கரும். . . . . . . . புளித்ததே – உண்டலும் உறங்கலும் ஒழிந்தன.
xxxxx
புளியம்பழம்
அளிஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளிஉறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளிஉறு வித்துச் சிவகதி காட்டி
ஒளிஉற வைத்துஎன்னை உய்யஉண் டாளே-1040
புளி தன் இளமையில் தோலை விட்டுவிடாமல் ஒட்ட ஒட்டப் பற்றிக்கொண்டிருக்கிறது; பக்குவமாகிப் பழுக்கும்போது, தோலைத் தோடாக்கிப் பற்றை விட்டுப் பற்றிக்கொண்டிருக்கிறது. உயிரும் அப்படித்தான். பழுக்கும்வரை ஒட்ட ஒட்டப் பற்றிக்கொள்கிறது. பழுத்தபிறகு பற்றுவிட்டுப் பற்றி இருக்கிறது. புளியங்காயாகத் தோலைப் பற்றிக்கொண்டு இருந்தவரையில் பேசாமல் இருந்தவர்கள், புளியம்பழமாகித் தோடு விட்டபிறகு, புளியை எடுத்து உண்ணத் தலைப்படுகிறார்கள். பழுத்துப் பற்றுவிட்ட உயிரை இறைமை தன்னோடு சேர்த்துக்கொள்ளும்.
xxxxx
ஆத்தியும் மூங்கிலும்
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரண் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 2876
- அடி, முடி அமைந்த ஆத்தி மரம். அதன் தலைமுடி போல் தோன்றும் மூங்கில் மரம். அது இருக்கும் ஆற்றில் 25 சங்குகள் (தத்துவங்கள்)
xxxxx
எள்ளும் தங்கமும்
திலமத்தனையே சிவஞானிக் கீந்தால்
திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோக மும் தரும்
நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற்றே பரபோகமும் குன்றுமே 484
எள் அளவு பொன் சிவ ஞானிக்குத் தந்தால் அவர் முத்தி, சித்தி, பரபோகம் முதலானவற்றைத் தருவார்
உலக அளவு பொன்னை மூடர்க்குத் தந்தால் அவர்கள் நம்மிடம் இருக்கும் வலிமையையும், பரபோகத்தையும் குன்றச் செய்வர்
xxxx
2858. இலையில்லை பூவுண் டினவண் டிங்கில்லை
தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலருண்டு சூடுந்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.
(ப. இ.) இலையாகிய இறைநூற் பயிற்சி யில்லை. பூவாகிய நோக்கமுண்டு. நோக்கம் – பிரவிருத்தி. வண்டின் கூட்டம் என்று சொல்லப்படுகிற தொண்ணூற்றாறு (2139) மெய்களின் ஆராய்வு இங்கில்லை. தலையாகிய பயிற்சிப் பயனாம் பேறு இல்லை. வேராகிய காரணப் பயிற்சியுண்டு. தாளாகிய முயற்சியில்லை. பூங்கொத்தாகிய புலப்பொருட்சுவைச் சேர்க்கை இங்கில்லை. ஆனால் உடலூழாம் கொய்யும் மலருண்டு. அம் மலர் உடலூழாகக் கழிதலின் அம் மலரினைச் சூடும் தலையாகிய ஆருயிர் முனைப்பு இங்கில்லை. அம் முனைப்பு கிளைத்துத் தோன்றுதலுமின்று. புலர்தல் – தோன்றுதல். நான்முகன் தலைகிள்ளப்பட்டதென்பது முனைப்பதற்றப்பட்டதென்னு மெய்ம்மையினை ஈண்டுன்னுக.
(அ. சி.) இலை – நூற்பயிற்சி. பூ – பிரவிருத்தி. வண்டு – தத்துவ ஆராய்ச்சி. தலை – சாத்தியம். வேர் – சாதகம். தான் – சாதக முயற்சி. பூவின் குலை – சவை முதலிய விசயக் கூட்டம். கொய்யும் மலர் – சுகதுக்க அனுபவம். கொய்யும் தலை – ஆன்ம அனுபவம். கிளை – சீவபோதம்.
(33)
2859. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறன்றே.
(ப. இ.) திருவடிப் பேறாகிய அக்கரைக்கண் சீர்மிகு சிறப்பினனாகிய சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற் பொருட்டு நெறி நூலும் துறை நூலும் (தமிழ் வேதாகமங்கள்) ஆக்கவிக்கத் திருவுள்ளங்கொண்டருளினன். அதன்பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகச் செல்வராய் வீற்றிருந்தருளினன். நூலும் தோற்றுவித்தருளினன். அக் குறிப்பே ஆல் + அமர் + அம் = ஆலமரம் கண்டு என ஓதப்பட்டது. உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்துணர்ந்து அப்பொழுதே தோன்றும் அருளாளர் நக்கர். நக்கர் – தோன்றுபவர். அவர் சிவபெருமானாவர். அவரைத் திருமுறை வாயிலாக வழிபட்டு அடியார் நடுவே யிருக்கும் பயன் கொள்வார் மிக்கவராவர். ஐவகைத்துன்பமாவன: தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. இவை காரியத்தைக் காரணமாக மொழியப்பெற்றன. இவ்ஐவகைத் துன்பத்தினுக்கே தக்கவராய் அவற்றுள் ஆழ்ந்து கண்டதே கண்டு கொண்டதே கொண்டு செல்வார் பிறப்புச் சூழலில் தாழ்ந்து கிடக்கும். முறையினராவர்.
(அ. சி.) அக்கணம் நின்றதோர் – ஆன்மாவிற் பொருந்தியதோர். ஆலமரம் கண்டு – ஆல் அமர் அம் கண்டு – சிவத்தைக் கண்டு. நக்கண – வெளிப்படையாக. நடுவே – நடுநிலையுடன். அஞ்சு துயரம் – அஞ்சு துன்பம்: (அவித்தை, அஸ்மிதை, இராகம், துவேஷம், அபினிவேசம..
xxxxx
—subham—
Tags- தினையும் பனையும் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-11, திருமந்திரம்