
அந்தோசபலஸ் கடம்பா / கடம்பு
Date uploaded in London – – 16 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
161. Cleistanthus collinus (Roxb.) Benth. ex Hook. f.
161.க்ளைஸ்தான்தஸ் காலினஸ்
ஒரிஸ்ஸா மக்கள் பாம்புக் கடித்த இடங்களில் சாற்றைத் தடவுகின்றனர்.
xxxxx
F51. Family: Piperaceae /குடும்பம்-பைபரேசி
162. Piper nigrum L.
162.பைபர் நைக்ரம் /மிளகு
உத்தராஞ்சல் மக்கள் நெய்யில் மிளகைப் பொறித்து பாம்பால் கடிபட்ட ஆடு மாடுகளுக்கு கொடுக்கின்றனர்.இதே போல கரு மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் சூடான ஒரு கோலை வைத்து சூடு போடுகின்றனர்.

xxxxx
குடும்பம்-பிளான்டஜெனேசி
F52. Family: Plantaginaceae
163.பாகோபா மொன்னியெரி
163. Bacopa monnieri (L.) Edwall
வடகிழக்கு இந்திய மக்கள் தாவரத்தை நசுக்கி கடிபட்ட இடத்தில் வைக்கிறார்கள்.மத்திய பிரதேச மக்கள் செடி முழுதையும் உபயோகித்து கஷாயம் வைத்துக் கொடுக்கிறார்கள் .
xxxx
F53. Family: Plumbaginaceae
164. Plumbago zeylanica L.
குடும்பம்– பிளம்பாஜினேசி
பிளம்பாகோ சைலானிகா
திரிபுரா மக்கள் பயன்படுத்தும் மருந்து இது.
xxxx
F54. Family: Poaceae
165. Cynodon dactylon (L.) Pers.
குடும்பம்- போயேசி
சைனோடன் டாக்டைலியான்
இந்திய சதுப்பு நிலக்காடுகளில் வசிக்கும் மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.
xxxx
166. Eleusine indica (L.) Gaertn.
166.எலியூசின் இண்டிகா
மேற்கு வங்க முண்டா இந மக்கள் வேறை மசித்து இஞ்சி, மிளகுடன் பாதியை தேனுடன் உள்ளுக்கு கொடுக்கின்றனர். மீதி பாதியை பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர் .
XXXX
167. Oplismenus compositus (L.) P. Beauv.
167.ஆப்ளிஸ்மெனுஸ் காம்போசிடஸ்
நிகோபார் தீவு மக்கள் பாம்பு கடித்த இடத்தில் இந்த தாவரத்தின் புகை விழும்படி எரிக்கிறார்கள்
XXXXX
F55. Family: Polygonaceae
168. Persicaria chinensis (L.) H. Gross
குடும்பம்- பாலிகோனேசி
பெர்ஸிகாரியா க்ரோஸ்
வங்க தேச சக்மா இன மக்கள், பாம்பு கடித்தால் இந்த தாவரத்தின் இலையின் சாற்றைக் குடிக்கிறார்கள்.
XXXXX
169. Polygonum perfoliatum (L.) L.
169.பாலிகோணம் பெர்போலியாட்டம்
மணிப்பூர் மக்கள் விதையின் பொடியை பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.
xxxxx
F56. Family: Ranunculaceae
170. Aconitum heterophyllum Wall. ex Royle
குடும்பம் – ரணன் குலேசி
அகோனிடம் ஹெடெரோபில்லம்
சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் வட்டார மக்கள் இதைப் கிழங்கைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .
xxxx

F57. Family: Rubiaceae
171. Anthocephalus cadamba (Roxb.) Miq.
குடும்பம் – ரூபியேசி
அந்தோசபலஸ் கடம்பா / கடம்பு
உத்தர பிரதேசத்தில் இதை பாம்புக்கடி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
xxxxx
172. Anthocephalus chinensis (Lam.) Rich. ex Walp.
அந்தோசெபலஸ் சினென்சிஸ்
வங்க தேசத்தில் மரத்தின் இலையையும் பட்டையையும் பாம்பு கடித்தால் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள்.
xxxx
173. Chasalia curviflora var. ophioxyloides (Wall.) Deb & Krishna
சசாலியா கர்வி ப்ளோரா
வங்க தேச சக்மா பழங்குடி மக்கள் இதன் இலைகளை மசித்து பாம்புக் கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள் .
xxxx
174. Tarenna odorata Roxb.
174. டரென்னா ஒடோரேட்டா
மிஜோரம் மக்கள் வேரின் மசியலை கடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள் .
xxxx
F58. Family: Rutaceae
175. Aegle marmelos (L.) Corr.
குடும்பம் – ரூட்டேசி
ஏஜில் மார்மெலோஸ்
வங்கதேச மக்களும் இந்திய பெருங்கடல் தீவுவாசிகளும் இலை , வேர், பட்டை ஆகியவற்றை சிகிச்சையில் உபயோகப்படுத்துகிறார்கள் .
xxxx
176. Ruta graveolens L.
176.ரூட்டா க்ரவோலன்ஸ்
மேற்குத் தொடர்ச்சி மலை மலன்ட் வட்டார மக்கள் வேரின் மசியலை கடித்த இடத்தில் அப்புகிறார்கள்
xxxx
F59. Family: Salicaceae
குடும்பம்- சாலிகேசி
ப்ளகோர்ட்டியா இண்டிகா
தமிழ் நாட்டில் சேர்வராயன் மலைவாழ் மக்களும், இந்து மஹா சமுத்திர தீவுவாசிகளும் பயன்படுத்தும் மூலிகை இது .
xxxx
178. Casearia graveolens Dalz.
178.கேசரியா கிரேவியோலென்ஸ்
மஹாராஷ்டிரா நாசிக் வட்டார மக்கள், பாம்பு கடித்தால் , இதன் தண்டினை நாளைந்து நாட்களுக்குச் சுவைக்கிறார்கள்.
xxxx
F60. Family: Santalaceae
179. Viscum articulatum Burm. f.
குடும்பம்- சாண்டலேசி
விஸ்கம் ஆர்ட்டிகுலேட்டம்
மேகாலயா காசி- ஜயந்தியா குன்று மக்கள் இதை சிகிச்சைக்கு உபயோகிக்கிறார்கள்.
xxxx
F61. Family: Sapindaceae
180. Sapindus laurifolius Vahl
குடும்பம்- சபின்டேசி
சபிண்டஸ் லாரிபோலியஸ்
குஜராத் போர்பந்தர் வட்டார மக்கள் பழத்தை கடித்த இடத்திலும் பழரசத்தை உள்ளுக்கும் கொடுக்கிறார்கள் .
—subahm—
Tags- பாம்புக் கடி 200 மூலிகை மருந்துகள் ,Part 11, Snake bite, Cure