அன்னம், ஆமை, குயில், காகம் – திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 12 (Post No.13,249)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,249

Date uploaded in London – –   17 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் அன்னப்பறவை குடிக்கும் என்ற ஒரு விநோதச் செய்தியும், ஆமை தனது  உடலுறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் இழுத்து பாதுகாத்துக் கொள்ளுவது போல புலனடக்கம் தேவை என்றும் காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டு தன்  குஞ்சுகளை வளர்த்துக் கொள்ளும் என்றும் சம்ஸ்க்ருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் எல்லாப் புலவர்களும் பாடி  வைத்துள்ளனர். திருமூலரும் இந்த மூன்று செய்திகளையும் தனது பாடலில் சொல்கிறார்.

xxxx

குயில் காகம்

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை

மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.-      — திருமந்திரம்

குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால், காக்கை சிறிதும் சந்தேகம் கொள்ளாது அம் முட்டையினை அடைகாத்துத் தன் குஞ்சைப்போலவே வளர்க்கும். அதுபோல் தாயும் போக மயக்கத்தால் இயங்காமலும், ஏன் என்று கேட்காமலும், கருவில் உள்ள சரீரத்தைக் காக்கின்றாள். இறைவனின் அருளும் தாயின் தன்னலமற்ற கருணை போன்றதே என்பதே செய்தி.

How Maya Fosters Babe

The koel bird leaves its egg in the crow’s nest;

The crow hatches it, nurses it, suspecting nothing;

It does not move it, does not reject it,

Does not ask why,

So does Maya the young one foster.

xxxx

அன்னம்/ பால்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்

தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்

தீமேவு பல்கர ணங்களுள் உற்றன

தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

பொழிப்புரை : தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் தீயில் விழுந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!

உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன. 

He Roasted the Seeds of Recurring Births

Like unto the swan that from milk the water parts,

So the Lord, Himself, alone, in this Sabha unique,

Grasped the senses many that scorch like fire,

And thus the Seven Births unto roasted seeds rendered.

xxxx

தமிழர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

இந்த ஆமை உதாரணத்தை பகவத்கீதை (2-58), மனு ஸ்மிருதி (VII-105), திவ்வியப் பிரபந்தம் (2360), திருமந்திரம் (2264, 2304), மகாபாரதம் ஆகிய எல்லா
நூல்களும் கூறுகின்றன. அதாவது இமயம் முதல் குமரி வரை இந்த உண்மை
தெரிந்திருந்தது. ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள்
நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

யதா சம்ஹரதே சாயம் கூர் மோங்கானிவ ஸர்வச:
இந்த்ரியாணி இந்த்ரியார்த் தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞாபிரதிஷ்டித
(கீதை 2-58)

”ஆமையானது தன் அங்கங்களை ஓட்டினுள் இழுத்துக் கொள்வது போல எப்போது இந்த யோகி புலன்களை, எல்லா இந்திரிய விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கின்றானோ அப்போது அவனுடய ஞானம் உறுதியாக நிலை பெற்றதாகும்.”

இன்றைய உயிரியல் BIOLOGY படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும்
பிராணி ஆமை தான் என்று தெரியும்.

இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

(திருமந்திரம் 2264, 2304)

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் – ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் – என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் நின்மல சக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில்
நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.

xxxx

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த
முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும்
பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600
ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.

“யதா சம்ஹரதே சாயம் கூர்ம அங்கானீவ ஸர்வச:

இந்த்ரீயாணி இந்த்ரியார்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா” (கீதை 2-58)

பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.

இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்

அருமை எளிமை அறிந்தறி வாரார்

ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி

இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

பொழிப்புரை :  பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.

 Senses Controlled, They Saw This World and Next

Who there be who, like our Lord, distinct know

The great and the small, the difficult and the facile?

They, unto tortoise, drawing in senses five under the shell,

They heard and saw This and Next, all impurities dispelled.

xxxx

Silentness of Waveless Thought

Like the ghee subtly latent in purest milk,

Into the waveless Thought the Lord in silentness speaks;

They who, in silentness realise, this mortal coil shuffled,

Purity they become, in Limitless Light mingling.

—-subham—-

Tags- ஆமை, குயில், காகம், அன்னம், பால், தண்ணீர், திருமூலர், திருமந்திரம், ஆராய்ச்சிக் கட்டுரை 12

Leave a comment

Leave a comment