பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் – Part 12 (Last Part) Post No.13,252


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,252

Date uploaded in London – –   18 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

last part………

F62. Family: Sapotaceae 

181. Isonandra lanceolata Wight

குடும்பம்- சப்போடேஸி

181ஐஸோ நன்ட்ரா லான்சியோலாடா

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இதை சிறுமொட்டை  என்றழைக்கின்றனர். காய் , வேர் பட்டை , ஆகியவற்றை வேறு சில மூலிகைகளுடன் தண்ணீரில் காய்ச்சி அந்தக் கஷாயத்தை 30 நாட்களுக்கு கு டிக்கின்றனர்

xxxx

F63. Family: Solanaceae 

182. Capsicum annuum L. மிளகாய் வகைகள்

குடும்பம் – சோலனேசி

182-கேப்ஸிகம் அன்னம் மிளகாய் வகைகள்

பாம்புக்கடிக்கு மத்திய இந்திய பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

183. Datura metel L.

183.டாதுரா மெடல் / கரு ஊமத்தை

மத்திய இந்திய பழங்குடி மக்கள் விதை களையு ம்,  உத்தர பிரதேச மக்கள் இலைகளையும் நிகோபார் தீவு மக்கள்  இலைமசியலையும் பயன்படுத்தி பாம்புக்கு கடிக்கு சிகிச்சை தருகின்றனர் .

xxxx

184. Solanum capsicoides All.

சொலானம் கேப்ஸிகாய்டஸ்

வங்க தேச மக்கள் இந்த மூலிகையின் எட்டு விதைகளை சாப்பிடக்கொடுத்து வாந்தி வரும்படி செய்கின்றனர். ஒரு நாளில் இவ்வாறு மூன்று முறை கொடுக்கினறனர்

xxxx

185. Solanum torvum Sw.

சொலானம் டோர்வம்

வங்க தேச மக்கள் இதன் இலை , வேர் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாந்தி வருமாறு செய்கின்றனர்.

xxxx

186. Withania somnifera (L.) Dunal

186.விதானியா சோம்னிபெரா

கர்நாடக மக்கள் இதை அசுவகந்தி என்று சொல்லுவார்கள். சிக்மகளூர் வட்டார மக்கள் வேரினை மசித்து பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.

xxxx

F64. Family: Staphyleaceae 

187. Staphylea emodi Wall.

குடும்பம்– ஸ்டாபைலியேசி

187.ஸ்டாபைலியா எமோடி

பாகிஸ்தான் மக்கள் இதை சித்ரா என்பர். இஸ்லாமாபாத் வட்டார மக்கள் இதன் மூலம் சிகிச்சை தருகின்றனர்.

xxxx

F65. Family: Theaceae 

188. Schima wallichii Choisy

குடும்பம்- தியேஸி

188. ஸ்கீமா வல்லிச்சி சோய்சி

மேற்கு மிஜோராம் மக்கள் , இதன் பழத்தின் சாற் றை அளிக்கின்றனர்.

xxxxx

F66. Family: Vitaceae 

189. Leea compactiflora Kurz

குடும்பம் – வைடெஸி

189.லீயா காம்பேக்ட்டி ப்ளோரா

பழத்தை இடித்து அதை பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர். இதை அருணாசல பிரதேச மக்கள் பயன்படுத்துகிறார்கள்..

xxxx

F67. Family: Verbanaceae 

குடும்பம் – வெர் பனேஸி

190-லான்டனா கேமரா

மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் வேர், பூ, தண்டு ஆகியவற்றைக் காய்ச்சி கஷாயம் வைத்துக் கொடுக்கிறார்கள்.

xxxx

191. Lantana indica Roxb.

191. லாண்டனா  இண்டிகா

பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் மூலிகை  இது

xxxxx

192. Vitex negundo L.

192.வைடெக்ஸ் நெகுண்டோ / கருநொச்சி

கர்நாடக, கேரள , ஹிமாசல பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை . இலையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.

xxxx

F68. Family: Zingiberaceae 

193. Hedychium spicatum Buch.-Ham. ex Sm.

குடும்பம்- ஜிஞ்சிபரேசி

ஹெடிசியம் ஸ்பைகேடம் –பூலாங்கிழங்கு,  கிச்சிலி கிழங்கு

மேற்கு மிஜோரம் மாநில மக்கள் இதன் கிழங்கைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள்.

xxxx

69. Family: Zygophyllaceae 

194. Fagonia bruguieri DC.

குடும்பம்- சைகோ பில்லேசி

194.பகோனியா ப்ரு கையெரி

பாகிஸ்தானியர் பயன்படுத்தும் தாவரம்

xxxx

F70. Family: Adiantaceae 

195. Adiantum philippense L.

குடும்பம்- அடியாண்டேசி

195. அடியாண்டம் பிலிபென்ஸ்

xxxx

F71. Family: Dryopteridaceae 

196. Dryopteris cochleata (D.Don) C. Chr

குடும்பம் – ட்ரையோப் டெரிடேசி

196.ட்ரையோப் டெரிஸ் கோச் லியாடா

மத்திய பிரதேச அமரகண்டக் குன்று மக்கள், இதன் கிழங்கைப் பொடிசெய்து களிம்பு போல வெளியே தடவுகின்றனர்.

xxxx

F72. Family: Polypodiaceae 

197. Microsorium punctatum L.

குடும்பம்- பாலிபோடியேசி

197.மைக்ரோஸொரியம் பங்டாட்டம்

கிகோப்பார் தீவு மக்கள் இளம் தளிர்களை மசித்து, அதை பாம்புக்கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள் .

Xxxx

F73. Family: Thelypteridaceae

198. Christella parasitica (L.) H. Lev.

குடும்பம் – தெலிப் டெரிடெஸி

198. க்ரைஸ்டெல்லா பாரஸிட்டிகா

அஸ்ஸாம் மலைஜாதி மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

Gynandropsis gynandra (CAPPARACEAE) :

குடும்பம்- கப்பரேசி

199.கைனான் ட்ரோப் சிஸ்  கைநான்ட்ரா

மலையாள மக்கள் இதை கரவெலா வெள்ள வேலா பட்டிவேலா  என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இதனை  பாம்பு கடித்தால் பயன்படுத்துகிறார்கள்

xxxx

200.Buchanania lanzan

200.பூச்சனானியா லான்சென் / சாரம்

மலையாள மக்கள் இதை முரல், நூரமரம் என்று சொல்லுவார்கள். இதையும்  பாம்புக்கடித்தால் பயன்படுத்துவார்கள்.

xxxx

பலன் தரும் மூலிகைகள்

அறிவியல்ரீதியில் ஆராய்ந்ததில் பாம்பு விஷத்தை தடுக்கும் சக்தி கீழ் கண்ட மூலிகைகளுக்கு  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

 Strychnos nux-vomica seed extract. எட்டி மரத்தின் விதைகள்

Costus speciosus roots  வெண் கோட்டம்

Ipomoea digitata நிலப்பூசணி

Acorus calamus,வசம்பு

Buchanania lanzan (stem bark),சாரம்

Moringa oleifera (stem, leaves), முருங்கை மரம்

Achyranthes aspera, நாயுருவி

Gynandropsis gynandra, நிலவேளை

Bombax ceiba, முள்ளிலவ மரம்

–subham—

Tags- பாம்புக் கடி ,  200  மூலிகை மருந்துகள், last part,Snake bite, cure, 200 herbs

Leave a comment

Leave a comment