முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-34 (Post No.13,253)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,253

Date uploaded in London – –   18 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 34

xxxx

378.பழஞ்சுரத்திற்கு

தேவதாரு மூலத்தை பாலில் அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் பழஞ்சுரம்- பீனிசம்-நீரேற்றம் – இவை தீரும்.

XXXX

தேள் கொட்டின விஷத்திற்கு

தேள் கொட்டினவுடனே தேங்காயை உடைத்து நசுக்கியாவது திருகியாவது , பால்  பிழிந்து  கொஞ்சம் குடித்தால் உடனே ஜில்லென்றிருக்கும்

XXXX

மூலச் சூட்டுக்கு

தேங்காயின் வழுக்கையுடன் கற்கண்டு தூள் சேர்த்து தின்றுவந்தால் மூலச்சூட்டை கண்டிக்கும். இந்திரியம் விருத்தியாகும் .

XXXX

வயிற்று பூச்சிகளுக்கு

தேங்காயை நெல்லுடன் போட்டு வேகித்து யெடுத்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் வந்துவிடும்.

XXXX

தலைச் சுண்டுக்கு

தேள் கொடுக்கிலையை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து சூரியபுடம் வைத்து தலைக்குத் தடவி ஊறவைத்து முழுகவும் . இப்படி செய்வதினால்  தலைச்சுண்டு சிரங்கு மாறும்.

XXXX

தை

காதிரைச்சலுக்கு

தைவேளை இலையை இடித்துப்  பிழிந்த சாறும் நல்லெண்ணெயும் சமன் கூட்டிக் காய்ச்சி தயிலபதமாயிறக்கி  காதில் விட்டுவரவும்.

XXXX

தொ

மகா ரோகங்களுக்கு

தொட்டால் சுருங்கி இருக்கும் இடத்தைப் பார்த்துக்குறித்துக்கொண்டு  சூரியன் கடக்க ராசியிலிருக்கும்போது , ஸ்நான  பானம் செய்து பரிசுத்தனாக மேற்படி மூலிகை இருக்குமிடத்திற்குச் சென்று மதுரமான வஸ்துக்களை நிவேதனம் செய்து பரங்கி சாம்பிரா ணியை ஒத்த (சனிக்கிரகம்) சம்பந்தமான வஸ்துக்களை தூபதீபங்கொடுத்து  தன்னுடைய நிழல் செடியின்  பேரில் படாமல் வேரோடு பிடுங்கிவந்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சூரியன் கடக்க ராசியில் வரும்போது இடித்து வஸ்திரகாயம் செய்து ஒரு மிளகளவு சூரணத்தை அப்போது கறந்த பசுவின் பாலில் கலந்து துலா- அமுர்த- தூலா சணலாத  நமோநமோ நம சுவா) என்ற மந்திரத்தை ஏழுதரம் ஜெபித்துக் குடிக்கவும் . இப்படி ஒருவாரம் விடாமல் குடித்தால் வயிற்றிலுள்ள வண்டலைப்  பற்றிய ரோகங்கள்  யாவும் நிவர் த் தியாகும் . சகல சளி சுரங்களும்  தொந்த ரோகங்களும் தீரும்

385.குறுக்குவலி வாய்வுக்கு

நருக்குமூல மென்கிற  கண்ட திப்பிலியை அரைத்து பாலிற் கொள்ள குறுக்குவலி  வாய்வு தோஷம் – வாத தோஷம்- நாவறட்சி இவை தீரும்.

XXXXX

திரேகபலமுண்டாக

நத்தைச்சூரி வித்தை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டுவந்தால் திரேகம் பலமுண்டாகும்; விந்து அதிகரிக்கும்.

XXXX

யானை சொறிக்கு

நரிக்கொண்ணை  மூலத்தைப் பாலில் உபயோகித்து வந்தால் , யானை சொறி- கிருமிப்புடை — அரிப்புடை – இவை தீரும்.

XXXX

பல ரோகங்களுக்கு

நன்னாரி வேர் பச்சையாகக்கொண்டுவந்து கொட்டைப்பாக்களவு எடுத்து அரைக்கால்படி  பசும்பாலில் கலக்கி சாப்பிடவும்.இப்படி 20 நாள் சாப்பிட்டால் மூ லக்கொதிப்பு — அஸ்திகா ங்கை – மேகச்சூடு – மேகவெட்டை – நீர்க்கடுப்பு-  நீர் இத்து விழுதல்  முதல் மூத்திரக் கிருச்சினம் – உள் வறட்சியினால் காணும்  இருமல் இவை தீரும். இந்த வஸ்துவை நாட்பட சாப்பிட்டு  வந்தால்  நரை திரை மாறும் .

XXXX

புரயிசிவு தலைவலிக்கு

நஞ்சசுறுப்பான் பூண்டு கொஞ்சம் எடுத்து  ஓன்றிரண்டாய் தட்டி நல்லெண்ணெயில் போட்டுக்காய்ச்சி தலை முழுகி வந்தால் மேற்படி ரோகம் தீரும் .

XXXX

390. படைகளுக்கு

நத்தையை சுட்ட சாம்பலில் தேன் விட்டரைத்து  படைகள் ஓரத்தில்  வரும் புண்களின் மேல் தடவினால் குணப்படும் .

தொடரும்

—subham—

Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-34

Leave a comment

Leave a comment