Date uploaded in London – – 19 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நிறைய விலங்குகளைப் பயன்படுத்தி புதிய புதிய செய்திகளை அளிக்கிறார். அவர் அதிகம் பயன்படுத்தும் மிருகங்கள் பசுவும் யானையும்தான் . இன்று யானையை எடுத்துக்கொள்வோம் . அவர் எழுதிய யானைப்பாடல்களில் மிகவும் பிரசித்தமானது மரத்தை மறைத்தது மாமத யானை என்னும் பாடலாகும்; எல்லா ஆன்மீகச் சொற்பொழிவாளர்களும் எடுத்துக்காட்டும் பாட்டு அது.
காஞ்சி சுவாமிகள் (1894-1994) விளக்கியது மிகவும் எளிய தமிழில் இருப்பதால் அதைக் காண்போம்
“ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், “இது மரப் பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் சமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.-2251
குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.
திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.
யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.”

Sublimation of Thought
Think of wood
Image of toy-elephant recedes;
Think of toy-elephant
Image of wood recedes;
Think of elements five
Thought of Param recedes
Think of Param,
Thought of elements recedes.
xxxx
என் கருத்துக்கள்

தமிழில் சம்ஸ்க்ருத சொற்கள் இல்லாத நூல் எதுவுமே இல்லை . சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று சொல்லுவோர் திருமந்திரம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு சமம். எல்லா பொழிப்புரைகளும் ஸம்ஸ்க்ருதத்திலுள்ள ஆன்மீக விஷயங்களை எடுத்துரைக்கின்றன.
இரண்டாவது விஷயம் ரிக் வேதம் போல , பல சொற்களைப் பரிபாஷையில் பிரயோகிக்கிறார் திருமூலர். பசு என்றாலோ யானை என்றாலோ அவர் கூறுவது விலங்கு அல்ல. அதை வைத்து அவர் வேறு விஷயங்களைச் சொல்கிறார்.
மூன்றாவது, யானை, பசு என்பதெல்லாம் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பொருளில் வரும். வேதங்களை மொழிபெயர்த்த, வெள்ளைதோல் வெளிநாட்டுக்காரர்களுக்கு இது தெரியாது ஆகையால் இந்திரன் என்பதை ராஜா என்ற பொதுச் சொல்லால் மொழிபெயர்க்காமல் ஒரே இந்திரன் 4 வேதங்களில் உள்ள எல்லா இடத்திலும் வருவதாக “முழி” / மொழி பெயர்த்துவிட்டனர்.
காஞ்சி பரமாசார்யார் (1894-1994) போன்றோர் இந்திரன் ஒரு ஆள் அல்ல என்பதை உபன்யாசங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள் .
பசு என்பதும் பசுமாடு அல்ல என்பதை அரவிந்த மகரிஷி தெளிவுபடுத்துயுள்ளார். மாக்ஸ் முல்லர் கும்பலுக்கு இது தெரியாது. சர்வ முட்டாள்கள் அவர்கள்.
XXXX
3 சிங்கம், 4 நரி, 5 யானை

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.
Enemies of Thought For God
In their bewildered thoughts
Are the lions three (lust, anger and ignorance);
In their bouncing thoughts
Are the jackals four (mind, intellect, will and egoity)
In their sensory thoughts
Are the elephants five (taste, sight, touch, sound, smell)
These the foes (internal and external)
Of the contending mind.
(சிங்கங்கள் மூன்று – காமம், வெகுளி, மயக்கம். நரிக்குட்டி- அந்தக்கரணங்கள். ஆனைக்கன்று – 5 பொறிகள். பால் இரண்டு – பிரவிர்த்தி, நிவிர்த்தி.
(ப. இ.) நம் எண்ணத்தில் காமம் வெகுளி மயக்கங்கள் என்னும் அரிமா/சிங்கங்கள் மூன்றுள்ளன. நெஞ்சினுள் எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் நரிக் குட்டிகள் நான்குள்ளன. அதுபோல் நெஞ்சினுள் செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் யானைகள் அஞ்சுள்ளன. இப் பகைப்பொருளாகிய அரிமா நரிமா கரிமா என்னும் பன்னிரண்டுடன் துன்னிநிற்கும். அந் நெஞ்சினுக்கு ஆடுதலும் அடங்குதலும் ஆகிய இருவகைத் தொழில்கள் உள்ளன.
ஆடுதல் – பிரவிர்த்தி. அடங்குதல் – நிவிர்த்தி. இவற்றை முறையே ஓடுதல், ஒடுங்குதல் எனவும் கூறலாம்.
xxxx

வானகம் செல்ல சுருக்கு வழி
ஆனைகள் ஐந்தும் அடக்கி, அறிவு என்னும்
ஞானத்திரியைக் கொளுவி அதனுள் புக்கு
ஊனை இருள் அற நோக்கும் ஒருவர்க்கு
வானகம் ஏற வழி எளிதாமே —திருமந்திரம் 2277
ஐம்புலன்களையும் ( ஆனைகள் ஐந்தும் ) கட்டப் படுத்துவது சாதாரண மனிதருக்கு எளிது அல்ல .இருப்பினும் முறையான யோகப் பயிற்சியின் மூலம் தவம் இயற்றுவோர் பொறிகள் ஐந்தினை முறைப்படுத்தி அறிவு என்னும் ஞானத்திரியால் விளக்கை ஏற்றி அதனுள் புகுந்து தமது உடம்பினுள் ஊடுருவி உள் ஒளி பெருக்கி பாச இருளை அகற்று வோர்க்கு வானகம் செல்ல வழியுண்டாகும் என்கிறார் திருமூலர்
Attain Jnana and Enter Heavenly Home
He who, the elephants of senses five subdues,
Lights the lamp of Jnana
And entering its radiance,
Drives the darkness within;
For him It is easy
To ascend the Heavenly Home (Siva Loka).
திருவள்ளுவரும் ஐம்புலன்களை 5 யானைகள் என்று கூறியிருப்பதை ஒப்புநோக்குதல் அவசியம்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.–திருக்குறள் 24
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.”
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.
பரிமேலழகர் உரை:
இதன் பொருள்:
உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால், (பொறிகளாகிய யானை) ஐந்தனையும் (தத்தம் புலன்கள்மேற் செல்லாமற்) காப்பான்;
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = (எல்லா நிலத்தினும்) மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம்.
xxxx
10 புலிகள், 15 யானைகள்,
பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரன்றே.
How the Body is
Ten the tigers big,
Ten and Five the elephants,
Five the learned
Ten the jesters,
Three that are upright
Six the physicians,
Five the lordly ones,
There they all stand.
பத்துநாடிகளும் பத்துப் பெரும்புலி எனப்பட்டன. பூதம் ஐந்து, பூதமுதலைந்து, புலனைந்து ஆகிய பதினைந்தும் யானை என்று உருவகிக்கப்பட்டன. பூதமுதல் – தன்மாத்திரை. புலன் – ஓசை முதலிய நுகரப்படும் பொருள்கள். அறிதற்கருவி ஐந்தும் வித்தகர் எனப்பட்டன. காற்றுக்கள் பத்தும் வினோதகர் எனப்பட்டன. ஈரெண்மர்: இரண்டு + எட்டு – இருவர் எண்மர் = பதின்மர். அமைதி, ஆற்றல், அபந்தல் என்னும் குணம் மூன்றும் மூவர் எனக் கூறப்பட்டது. பிறத்தல், கற்றல், தேடல், கூடல், வாழ்வு, தாழ்வு என்னும் அறுவகை நிலையினையும் மருத்துவராகக் கூறினர். அவ்விடத்து ஐம்பாடுகள் உண்டு. அவை நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன. பத்துநாடிகள்: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடுநரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச் செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு, என்பன. இவற்றை முறையே இடைகலை. பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு எனவும் கூறுப. காற்றுக்கள் பத்து: உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்ப. இவற்றை முறையே, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவும் கூறுப.
(அ. சி.) பத்துப் பெரும்புலி – தசநாடி. யானை பதினைந்து – மண் முதலைந்து, சுவை முதலைந்து, வாக்காதி – ஐந்து. வித்தகர் ஐவர் – ஞானேந்திரியங்கள். வினோதகர் – உடலின்கண் ஊழியம் செய்பவர். ஈரெண்மர் – பத்து வாயுக்கள். மூவர் – முக்குணம். அறுவர் – பிறத்தல் முதலிய விகாரங்கள். அத்தலை – அவ் வுடம்பில். ஐவர் – ஐந்து அவஸ்தைகள்.
—SUBHAM—-
tags- யானை, திருமந்திரம், விலங்குகள், புலி, பரிபாஷை, திருமூலர்