Post No. 13.257
Date uploaded in London – —20 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு அதிசய பிரதம மந்திரி; ஒரு அதிசய முதல் மந்திரி!
ச. நாகராஜன்
இன்றைய அரசியல் உலக அளவில் எப்படி இருக்கிறது, இந்திய அளவில் எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்..
ஜனநாயகத்தில் நல்ல அம்சங்கள் எப்படி கேவலமாக நாள்தோறும் சிதைந்து கொண்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வருத்தமே மேலிடும்.
இந்த நிலையில் இரு செய்திகள் நம் முன் வருகின்றன.
அவற்றைப் பார்ப்போம்:
ஒரு அதிசய பிரதம மந்திரி
நியூஸ்வீக் (NEWSWEEK) என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்திய பிரதம மந்திரிகளுள் இரண்டாவதாக அமைபவர் திரு நரேந்திர மோடி.
இதனுடைய எடிடோரியல் டைரக்டர் திரு தனிஷ் மஞ்சூர் பட் (Danish Manzoor Bhat) என்பவர் ஆவார்.
மோடியுடனான தனது பேட்டியின் அனுபவத்தை அவர் தனது டிவிட்டர் பக்கங்களில் இப்படி பதிவு செய்துள்ளார் :
“மீடியாக்களில் படிக்காத ஒரு நரேந்திர மோடியின் ஒரு பக்கத்தை நான் பார்க்க நேர்ந்தது.
அவருடனான பேட்டி ஒரு புதிய உள்ளுணர்வை எங்களுக்கு அளித்தது.
20 நிமிடம் என்று நிர்ணயிக்கப்பட்ட பேட்டியானது சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.
மிகவும் சவாலான கேள்விகளுக்குக் கூட அவர் பதில் அளித்தார். அவர் எங்களுக்குப் பேட்டி அளித்த போது ஒரு விதமான இடையூறும் இல்லை. குறுக்கீடும் இல்லை. ஒருமுனைப்புடன் எங்களுக்கு அவர் பதில் அளித்துக் கொண்டே இருந்தார். ஒருவிதமான போன் குறுக்கீடும் இல்லை. ஒரு குறிப்பேடையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.
இந்தியாவை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய தீர்க்கமான ஒரு பார்வையும் தெளிவும் அவரிடம் இருந்தது.
இந்தியாவின் பயணம் என்பது ஒரு சிக்கலான பயணம் – அதில் சவால்களும் அதே அளவில் வாய்ப்புகளும் உண்டு. இந்த நிலையில் பயணத்தை நடத்த ஒரு வலுவான தலைமை வேண்டும் என்பது விவாதத்தில் முக்கியமான விஷயமாக இருந்தது.
மூன்றாவது முறையாக பிரதம மந்திரி ஆவது என்பது, இந்தியாவின் முக்கியமான பயணத்திற்கும் சவால்களுக்கும் மிக முக்கியமானது.
எனது வாழ்த்துக்கள், பிரதம மந்திரி அவர்களே”
இப்படி முடிகிறது அவரது டிவிட்டர் பதிவு.
இந்தப் பத்திரிகையின் அட்டைப்படத்தில் முதலில் இடம் பெற்ற பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி. அவர்கள். அடுத்து இப்போது திரு நரேந்திர மோடி அவர்கள்!
ஒரு அதிசய முதல் மந்திரி!
அவர் பெயர் மோஹன்லால் கட்டர் (Mohanlal Khattar). ஹரியானாவின் முதல் மந்திரியாக இருந்தவர். சில நாட்களுக்கு முன்னரே தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
முதல்மந்திரிக்கான அதிகார பூர்வமான பங்களாவிலிருந்து மிகக் குறைந்த அளவே இருந்த தனது உடமைகளுடன் அவர் ஒரு சிறிய குடியிருப்பிற்கு இடம் பெயர்ந்தார்.
அவர் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்த போது தனது எல்லா உடமைகளையும் சேமிப்புகளையும் நன்கொடைகளாக அளித்து விட்டார்.
இப்போது அவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ இருப்பது அவரது பென்ஷன் மட்டுமே தான்!
இதுவரை நாம் பார்த்த முதல்மந்திரிகள் தங்கள் பதவிகளை விட்டுப் போகும் போது விலை உயர்ந்த சாமான்கள், பரிசுப் பொருள்கள் ஏன் பாத்ரூமில் உள்ள நல்ல குழாய்களைக் கூட எடுத்துச் செல்வதைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த மனிதரோ தனது இரண்டு பழைய பைகளில் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்!
இவருக்கு நமது வணக்கங்கள்.
இந்த நாட்டில் இவரைப் போல அரசியல்வாதிகள் ஒன்றிரண்டு பேர்கள் இன்னமும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இவர் ஒரு அதிசய (முன்னாள்) முதன்மந்திரி தானே!
**