ராமாயணத்தில் சாபங்கள் (9,10) – உமா தேவியின் சரித்திரம் (Post No.13,263)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.263

Date uploaded in London – 22 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (9,10)

ராமாயணத்தில் சாபங்கள் (9,10) – உமா தேவியின் சரித்திரம்

ச.நாகராஜன்

உமா தேவியின் சரித்திரம்

தேவர்களுக்கு சாபம் (சாபம் 9)

வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் 36வது ஸர்க்கத்தில் 28 ஸ்லோகங்கள் உள்ளன.

இதில் உமா தேவியின் சரித்திரம் விரிவாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஸர்க்கத்தில் இரு சாபங்கள் பற்றிய விவரத்தைக் காணலாம்.

விஸ்வாமித்திரரிடம் ராமர் மிக்க ஆவலுடன் கேட்க அவர் உமா தேவியின் சரிதத்தை விரிவாகச் சொல்லலானார்.

“முன்னொரு காலத்தில் சிவபிரான் உமா தேவியை மணந்து கொண்டார். அவருடன் நூறு வருட காலம் கிரீடித்தும் கூட உமா தேவி கர்ப்பம் தரிக்கவில்லை.

நூறு வருடம் ஆகியும் சிவபிரானின் தேஜஸை ஏற்க உமா தேவியால் முடியவில்லையே என்று எண்ணிய அனைத்து தேவர்களும் சிவபிரானிடம் சென்றனர்.

அவரை தேவர்கள் சென்று வேண்டவே, அவர், “நான் உமையோடு கூட தேஜஸ்ஸை தேஜோமயமான சரீரத்திலேயே தரித்துக் கொள்கிறேன். இந்த தேஜஸ் எந்த இடத்தில் விழுகிறதோ அதை யார் தரிப்பார்கள், சொல்லுங்கள்” என்றார்.

“இந்த பூமி தரிப்பள்” என்றனர் அவர்கள்.

சிவபிரானின் தேஜஸ் பூமியில் விடப்படவே அது பூமி எங்கும் வியாபிக்கப்பட்டது.

தேவர்கள் அக்னியை வேண்டவே அது அக்னியால் வியாபிக்கப்பட்டதாய் வெண்மலையாக ஆயிற்று. அந்த அக்னியில் கிருத்திகைகளுக்கு புத்திரராக சுப்ரமணியர் பிறந்தார். அப்போது சந்தோஷமடைந்த தேவர்கள் சிவனையும் பார்வதியையும் பூஜித்தார்கள்.

ஆனால் கோபம் கொண்ட பார்வதி தேவர்களைப் பார்த்து பின் வருமாறு கூறினாள்:

இத்யுக்த்வா சலிலம் க்ருஹ்ய பார்வதீ பாஸ்கரப்ரபா|

சமன்யுரசபத் சர்வான் க்ரோதசம்ரக்தலோசனா ||

யஸ்மான்னிவாரிதா சாஹம் சங்கதா புலகாம்யயா |

அபத்யை ஸ்வேஷு தாரேஷு நோத்பாதயிதும்ர்ஹத ||

அத்யப்ரம்ருதி யுஷ்மாகமக்ரப்ரஜா: சந்து பத்னய: |

ஏவமுக்தவா சுரான் சர்வாஞ்ஸச்சாப ப்ருவிதிவீமபி ||

இதி – இவ்வாறு

உக்த்வா – சொல்லி

பாஸ்கரப்ரபா – சூரியன் போன்ற ஒளியை உடைய

பார்வதி – பார்வதி தேவியானவள்

சலிலம் – ஜலத்தை

க்ருஹ்ய – எடுத்து

சமன்யு – கோபத்தை உடையவளாய்

க்ரோத சம்ரக்த லோசனா – கோபத்தால் சிவந்த கண்களை உடையவளாய்

சர்வான் அனைவரையும்

அசபத் – பின் வருமாறு சபித்தாள்

புத்ரகாம்யயா – புத்திரனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தாலோ

சங்கதா – சம்போகம் செய்த

அர்ஹ – நான்

நிவாரிதா ச – விலக்கப்பட்டது

யஸ்மான் – எதனாலோ அதனால்

ஸ்வேஷு – தாங்கள்

தாரேஷு – பத்தினிகளிடத்தில்

அபத்யை – புத்திரனை

ஏவ – நிச்சயமாக

உத்பாதயிதும் – உண்டு பண்ண

ந அஹர்த – கடவீர் இல்லை

அத்யப்ரம்ருதி – இது முதல்

யுஸ்மாகம் – உங்களுடைய

பத்னய: – பத்தினிகள்

அப்ரஜா – புத்திரனில்லாதவர்களாக

சந்து – ஆகட்டும்.

ஏவம் – மேற்கூறிய படி

சுரான் – தேவர்கள்

சர்வான் – எல்லோருக்கும்

உக்த்வா – சொல்லி

அபி – இன்னும்

ப்ருத்வீம் – பூமியை

சச்சாப – சபித்தாள்

பூமிக்கு சாபம் (சாபம் 10)

பாலகாண்டம் 36-வது ஸர்க்கம் – ஸ்லோகம் 25,26

பூமியை நோக்கி உமா தேவி இப்படி சபித்தாள்:

அவனே நைகரூபா த்வம் பஹுபார்யா பவிஷ்யஸி |

ந ச புத்ரக்ருதாம் ப்ரீதி மத்கொர்ர்தகலுபீக்ருதா ||

ப்ராப்யஸி த்வம் சுதுர்மேதே மம புத்ரமனிச்சதீ ||

அவனே – பூமியே

த்வம் – நீ

நைகரூபா – அநேக ரூபம் உடையவளாய்

பஹூ பார்யா – நிறைய பேர்களுக்கு மனைவியாக

பவிஷ்யஸி – ஆகப்பட்டவளாய்

சுதுர்மேதே – துஷ்ட புத்தி உடையவளே!

மம – எனக்கு

புத்ரே – புத்திரனை

அநிச்சதி – விரும்பாத

மத் க்ரோத கலுஷீகருதா – என் கோபத்தால் கலங்கச் செய்யப்பட்டவளாய்

புத்ர க்ருதாம் – புத்திரனால் உண்டாகிய

ப்ரீதிம்  ச – ஆனந்தத்தையே

ப்ராப்யஸி ந – அடைய மாட்டாய்

இப்படி இரு சாபங்களை உமா தேவி தேவர்கள் மீதும் பூமி மீதும் கோபம் கொண்டு சபித்தாள்!

***

Leave a comment

Leave a comment