
Date uploaded in London – – 24 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 37

Snake Skin
xxxx
எச்சரிக்கை
எங்கள் பிளாக்கில் வரும் கட்டுரைத் தொடர்களில் காணும் மருத்துவ சிகிச்சை முறைகளை அனுபவம் வாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள், டாக்டர்களின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது ஆபத்தானது. ஆகையால் மருத்துவர்களைக் கேட்காமல் எதையும் செய்யக்கூடாது.
xxxx
ப
432. சொற்ப வாய்வுக்கு
பரங்கிப் பட்டையை அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சொற்ப வாய்வு-சூலை-கரப்பான்-கூட்டம்-கிரந்தி இவை தீரும்.
xxxx
அஸ்தி காங்கைக்கு
பற்பாடகத்தை அரைத்து பாலில் உ,ண்டுவந்தால் அஸ்தி காங்கை- வேட்டை- மேகம் -எரிவு- காந்தள்- இவை தீரும்
xxxx
சரஸ்வதி கடாட்சமுண்டாக
பனங்கோரை – பெருங்கோரை என்கிற குறட்டை மூலிகையைப் பாலில் அரைத்து உபயோகித்து வந்தால் லட்சுமி கடாக்ஷமுண்டாகும்.நரை திரை மாறும் .
xxxx
என் குறிப்பு – தலைப்பில் சரஸ்வதியும் உள்ளே லட்சுமியும் இருப்பது என் பிழை அல்ல. புஸ்தகத்தில் அவ்வாறே உள்ளது
xxxx
தழுதணைக்கு
பழுபாகல் சமூலத்தைப் பாலில் பிரயோகித்து உண்டு வந்தால் , தழுதணை ,- தொழுதணை கிருமி இவை தீரும். மேற்படி மூலிகையின் கிழங்கை பத்திய பாகமாய் நாட்பட தின்று வந்தால் தேகம் பலக்கும் .
xxxx
சகல விஷத்திற்கும்
பங்கம் பாளை என்னும் ஆடு தீண்டா மூலிகையை அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கியுண்டுவந்தால் புண் புளவை சகல விஷங்களும் தீரும் .
இதுவுமது
பழுபாகல் என்னும் ஆடு தீண்டா மூலிகையை கருங்குறுவை நெல்லுடன் விக்கித்து அவள் இடித்து அந்த அவலை தினமும் அரைக்கால்படி ஒரு மண்டலம் தின்றால் சொறி -சிரங்கு -வங்கு- தழுதணை – வண்டு கடி- அரணை கடி- செய்யான் கடி- பூரான் கடி- பேய் சொறி – வெள்ளைப் புள்ளி கரப்பான் இவை தீரும் . மூன்று இரண்டு மாதம் வரை நல்லெண்ணை புணர்ச்சி ஆகாது .
xxxx
பேன் சாக
படிகாரத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒரு ஜாமம் சென்று ஸ்நானம் செய்யவும் .பேன் – ஈறு முதலானதும் சாகும்.
xxxx
பல்லு நோய்க்கு
படிகாரமும் கொட்டைப்பாக்கும் சமனிடை கொண்டுஇடித்து வஸ்திர காயம் செய்து பல் தேய்த்து வெந்நீரில் வாய் கொப்பளித்து வரவும். சவுக்கியமாகும்.
xxxx
பாம்பு விஷத்திற்கு

பச்சைத் தவளை மாமிசத்தை உப்பு-நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து தின்றால் சகல பாம்பு விஷமும் தீரும். மறு தினம் வரை நித்திரை கூடாது.
xxxx
அஸ்தி சுரத்திற்கு
பச்சைத் தவளையை கிரமப்படி சாறு காய்ச்சிக்குடிக்க அஸ்திசுரம் – நாட்பட்ட ரோகம் தீராத இருமல் இவைகள் தீரும். தேக புஷ்டியுண்டாகும் . உடம்பு குளிர்ச்சியுண்டாம் .
xxxx
பிளவை கட்டிகட்கு
பச்சைத் தவளையை உயிருடன் கொண்டுவந்து பிளவை மேல் கட்டி வைக்கவும் அது இறந்த பிறகு எடுத்துவிட்டு வேறே கட்டவும். இப்படிச் செய்வதினால் கட்டிகள் விஷம் நீங்கும். நோய் தீரும்- பிடிப்புகள் நீங்கும்.
xxxx
பா
அரையாப்புக்கட்டிக்கு
பாவட்டம் வேரும் பூலாப்பூவும் சமன்கூட்டி அரைத்து கனமாய்ப் பூச கட்டி கரையும் .
xxxx
பல் நோய்க்கு
பாக்கு அதாவது கொட்டைப்பாக்கை துண்டு துண்டாய்க் கருக்கி சட்டியிலிட்டு கருக வறுத்து கற்பூரம் சமன் கூட்டி நசுக்கி பல் துலக்கி வரவும் .
xxxx

சீக்கிரத்தில் பிரசவமாக
பாம்பு தானாயுரித்த தோலைக்கொண்டுவந்து இடுப்பிலாவது வயிற்றிலாவது கட்டிவைக்க உடனே பிரசவமாகும் .
xxxx
தினவு நீங்க
பாம்புத் தோலை போடி செய்து அல்லது சாம்பலாக்கி உடம்பில் தேய்க்க தினவு தீரும்.. மயிரற்ற இடத்தில் மயிர் முளைக்கும் .
xxxx
நீர்க்கோவை தீர
பாம்புத் தோலை அங்கவஸ்திரம் போல மேலுக்காவது கச்சையைப்போல இடுப்பிலாவது கட்டியிருந்தால் பாண்டு – நீர்க்கோவை இவைகள் தீரும் .
xxxx
448. அறுபட்ட நரம்புக்கு

பாம்புத் தோலின் பொடியும் வயல் நண்டு உலர்த்திய பொடியும் சமன் கூட்டி அறுபட்ட நரம்பின்மேல் தூவி வந்தால் அறுபட்ட நரம்பு கூடி, மூன்று தினத்தில் குணப்படும் .
தொடரும்……………………………………..
Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 37, பாம்புத் தோல், தவளை, பாக்கு, படிகாரம், பேன் , ஈறு, Snake treatment