
Date uploaded in London – – 26 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 38
xxxx
பி
449. மேகவெட்டைக்கு
பிரமிசை மூலத்தைப் பாலில் உபயோகித்து வந்தால் கிரந்தி- சூலை- மேகவெட்டை- இவை தீரும். நீடித்து உண்டு வந்தால் சுயம்பாக வல்லமையுண்டாகும்.
xxxx
கார்வாய் ஜன்னிக்கு
பிரமி இலையை துளி விளக்கெண்ணெய் குத்தி வதக்கி பெண்களின் கால் பாதத்திலிருந்து கணுக்கால் வரையிலும் கன மாய் வைத்துக்கட்டினால் கார்வாய் ஜன்னி நிவர்த்தியாகும்.
xxxx
பதினெட்டு வண்டு கடிக்கும்
பிராயான் சமூலத்தைப் பாலில் உட் கொண்டு வந்தால் பதினெட்டு வண்டு கடி, எலி கடி உடம்பில் உண்டாகும் சுரசுரப்பு இவை தீரும்.
xxxx
வாதக் குடைச்சல் மந்தத்திற்கு
பிண்ணாக்குப் பூண்டைக் கொண்டுவந்து கடுக்காய் தோல்- மிளகு- சுக்கு இதுகள் கால் பங்கு கூட்டி கிஷாயமியட்டு 4, 5 வேளை கொடுக்க சதக் குடைச்சல் தீரும். இதைத் தனியாக கிஷாயமிட்டுக் கொடுக்க மேக அனல் தணியும்.
xxxx
பீ
வெள்ளைக்கு
பீச்சங்கன் இலையை அரைத்துப் புன்னைக்காயளவு எடுத்து புளித்தயிர் அரைக்கால் படியில் கலக்கி காலையில் சாப்பிடவும். இப்படி 3 நாள் சாப்பிடவும். உப்பில்லாத பத்தியம் இருக்கவும்.
இதுவுமது
பீச்சங்கன் இலை, பழம் பாசிலை கீழா நெல்லியிலை இவை மூன்றும் சமனாய் எடுத்து முன்மாதிரி சாப்பிட்டாலும் வெள்ளை விழுகிற வியாதி தீரும்.
xxxxx
வயிற்றுப் பிடுங்கலுக்கு
பீத ரோகணியை கிஷயத்தை குடிக்க வயிற்றுப் பிடுங்கல் நிவர்த்தியாகும். . சிலது நாள் விடாமல் சாப்பிட்டால் காமாலை ரோகத்தைச் சாந்தியாக்கும் .
xxxx
படர் தேமல் நீங்க
பீத ரோகணியை தேனில் உரைத்துப் பூசிவந்தால் படர்தாமரை முதலிய தேமல்களை நிவர்த்தியாக்கும். .
xxxx
வாய்வுகளுக்கு
பீநாரிப் பூண்டு என்னும் மூலிகையை சுக்கு மிளகு கூட்டி கிஷாயமிட்டு உட்கொள்ள வாய்வுகளைக் கண்டிக்கும்.
xxxx
பு
சுக்கிலமேகம் அதிசாரத்திற்கு
புளியம் வித்தின் மேற்றோலை பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் சுக்கிலமேகம் அதிசாரம் இவை தீரும். . உந்திப்புண் சவுக்கியமாகும்.
xxxx
எலி விஷத்திற்கு
புரசு மூலத்தை பாலில் உட் கொண்டுவந்தால் எலி விஷம், குன்மம், வாய்வு வாதம் இவை தீரும்.
xxxx
வயிற்றுப் பூச்சிக்கு
புரசு வித்தை எருமைச்சாணிக்குள் பொதிந்து காலையில் எடுத்து சுமார் இரண்டு விதையைத் தோல் நீக்கி அரைத்துப் பாலில் கலந்து கொடுக்க வயிற்றிலுள்ள பெருங் கிருமிகள் வந்துவிடும்; வயிற்றுவலியும் தீரும்.
xxxx
புண் புரை அரையாப்புக்கு
புங்க மரத்தின் மூலத்தைப் பாலில் அரைத்து உட் கொண்டுவந்தால் புண் புரை நோய் சூலை அரையாப்புக்கட்டி இவை கரையும் .
xxxx
மேகத்திற்கு அல்லது வெள்ளைக்கு
புங்கன் கொழுந்து கொண்டுவந்து நெகிழ அரைத்து நல்லெண்ணெயில் கூட்டிக்கொடுக்க வெள்ளை தீரும்; கடும் பத்தியம்.
xxxx
குழந்தைகட்கு பேதி கண்டால்
புளியாரை வாழைப்பூ சமன் கூட்டி பிட்டலத்து தேன் குத்திக் பிசைந்து கொடுக்க சாந்தியாகும்.
xxxx
பசி தீபனத்திற்கு
புதினா ரசம் ஒரு பலம் எலுமிச்சம்பழ ரசம் 2 பலம் கொஞ்சம் சக்கரை கூட்டிக் கொடுக்க தீபனமுண்டாகும்.’
xxxx
பூ
உடல் புஷ்டியாக
பூசணி வித்தை பருப்பையெடுத்து பொடித்துக் காய்ச்சி பாலில் கலந்து உட் கொண்டுவந்தால் உடம்பு புஷ்டியாகும் .
xxxx
இரத்தக் கழிச்சலுக்கு

பூனைக்காலி விரையை பாலில் காய்ச்சிஉண்டுவந்தால் இரத்தக் கழிச்சல் நிவர்த்தியாகும்; விந்து கட்டுப்படும் .
xxxx
வாத நோய்களுக்கு
பூத விருட்ச மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கியு ண்டுவந்தால் வாத நோய்கள் நிவர்த்தியாகும்; பல விஷக்கடிகளும் தீரும்.
xxxx
சொறி கிரந்தி கரப்பானுக்கு
பூவரசு மூலத்தைப் பாலிற் கொள்ள சொறி கிரந்தி கரப்பான் வீக்கம் இவை தீரும்.. சில்லறை விஷம் சாந்தியாகும்
xxxx
கை கால் குடைச்சலுக்கு

பூமி சக்கரைக் கிழங்கை தண்ணீர் விட்டரைத்து கை கால் குடைச்சலுக்குப் பூசிவரவும். சில தடவைகள் பூசிவந்தால் சவுக்கியமாகும்.
xxxxx
மூச்சு அடைப்புக்கு
பூமி சக்கரைக் கிழங்கை தேனில் உரைத்து உள்ளுக்குக் கொடுக்க மூச்சு அடைப்பு தீரும். நாட்பட்ட இருமல் சாந்தியாகும்.
xxxx
வீரிய விருத்திக்கு
பூனைக்காலி வித்து கட்டு விரை வெங்காய விரை இது சமனிடை கூட்டி ஆலம்பால் அல்லது அத்திப்பாலில் அரைத்து ஒருவேளைக்கு இரண்டு விராகன் எடையாகப் பசும்பாலில் குழைத்துச் சாப்பிடவும். இப்படி ஏழுநாள் இருவேளையும் தின்றால் தாது விருத்தியாகும். இடுப்புவலிவுண்டாகும் .
xxxx
471. காது நோய்க்கு
பூண்டு திரிகளை பஞ்சுபோல் நசுக்கி துணியில் முடிந்து விளக்கில் வாட்டி 2,3, துளி காதில் பிழிய காது நோய் தீரும் .
தொடரும் ……
Tags- முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள் 38 , பூண்டு, பூனைக்காலி, பூமி சக்கரைக் கிழங்கு