.jpg)
Post No. 13.278
Date uploaded in London – —27 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (12)
ராமாயணத்தில் சாபங்கள் (12) – கௌதமர் இந்திரனுக்கு தந்த சாபம்!
ச.நாகராஜன்
விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுடன் மிதிலையை நோக்கிப் பயணித்தார்.
அழகிய மிதிலை நகரை அடைந்த அவர்கள் ஒரு அழகிய ஆச்ரமத்தை அடைந்தனர். அந்த ஆசிரமத்தைப் பார்த்த ஶ்ரீ ராமர் மிகுந்த அழகுள்ளதாக விளங்கும் இது யாருடைய ஆசிரமம் என்று விஸ்வாமித்திரரை வினவினார்.
உடனே விஸ்வாமித்திரர் மறுமொழி அளித்தார்:
ஹந்த தே கதயிஷ்யாமி ச்ருணு தத்வேன ராகவ |
யஸ்யை ததாச் ரம பதம் சபதம் கோபான்மஹாத்மா ||
பாலகாண்டம் 49-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 12
ஹந்த – நல்லது!
ராகவ – ஓ ராகவா
ஏதத் – இந்த
ஆச்ரமபதம் – ஆசிரம ஸ்தானம்
யஸ்ய – எந்த
மஹாத்மா – எந்த மகாத்மாவால்
கோபாத் – கோபத்தினால்
சபதம் – சாபத்துக்குள்ளானது என்பதை
தே – உனக்கு
தத்வேன – நடந்தபடி
கதயிஷ்யாமி – சொல்கிறேன்
ச்ருணு – கேள்!
விஸ்வாமித்திரர் நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.
, “ஓ! ராமா! இது முன்னொரு காலத்தில் மகாத்மாவான கௌதமருடைய ஆசிரமமாக இருந்தது. அவர் தன் மனைவியான அகல்யையுடன் நெடுங்காலம் இங்கேயே இருந்து தவம் புரிந்தார்.
ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த போது இந்திரன் அவர் வேஷம் தரித்து அகல்யையைப் பார்த்து ஒரு மொழியைச் சொன்னான்.
ருதுகாலே ப்ரதிக்ஷந்தே நார்தின: சுசமாஹிதே|
சங்கமம் த்வஹமிச்சாமி த்வயா சஹ சுமத்யதே ||
சுசமாஹிதே – நன்றாய் அமைந்தவளே!
அர்தின – காமத்தால் கலவியில் ஆசையை உடையவர்கள்
ருது காலம் – ருது ஸ்நானமான சமயத்தை
ப்ரதீக்ஷந்தே – எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க
ந – மாட்டார்கள்
அஹம் து – நானோ
சுமத்யதே – இடையழகி!
த்வயா சஹ – உன்னுடன்
சங்கமம் – கலவியை
இச்சாமி – அடைய விரும்புகிறேன்.
.jpg)
முனிவேஷம் சஹஸ்ராக்ஷம் விஞ்ஞாய ரகுநந்தன |
மதிம் சகார துர்மேதா தேவராஜ குதூஹலாத் ||
ரகு நந்தன – ஓ! ரகு நந்தன
முனி வேஷம் – முனி வேஷம் பூண்டவனை
சஹஸ்ராக்ஷம் – இந்திரனென்று
விஞ்ஞாய – அறிந்தே
துர்மேதா – அந்த துர்புத்தி (கொண்ட அகல்யை)
தேவராஜ குதூஹலாத் – தேவர்களுக்கெல்லாம் ஆகும் என்ற உற்சாகத்தால்
மதி – மனம்
சகார – இசைந்தாள்
அதாப்ரவீத் சுரக்ஷ்ரேஷ்டம் க்ருதார்தேனாந்ந்தராத்மா |
க்ருதார்தாஸ்மி சுரச்ரேஷம் கச்ச சீக்ரமித: ப்ரபோ ||
அத – பிறகு
க்ருதார்தேன – சந்தோஷமடைந்த
அந்தராத்மனா – உள்ளத்துடன்
சுர ச்ரேஷ்டம் – தேவ ராஜனைப் பார்த்து (அகல்யை)
அப்ரவீத் – மொழிந்தாள்
சுர ச்ரேஷ்டம் – தேவராஜனே!
க்ருதார்தா – தன்யை
அஸ்மி – ஆகிறேன்
ப்ரபோ – பிரபோ!
இத – இங்கிருந்து
சீக்ரம் – சீக்கிரமாக
கச்ச – போய் விடுங்கள்
ஆத்மானம் மாம் ச தேவேஷ சர்வதா |
இந்த்ரஸ்து ப்ரஹஸன் வாக்யமஹஸ்யாமிதமப்ரவீத் ||
தேவேஷ – தேவராஜனே
ஆத்மானம் – உம்மையும்
மாம் ச – என்னையும்
சர்வதா – எப்போதும்
மானத — மானத்தைக் காப்பவரே!
ரக்ஷ – உள்ளது வெளிப்படாமல் காத்துக் கொள்வீராக!
இந்த்ர ச – இந்திரனும்
ப்ரஹஸன் – சிரித்துக் கொண்டே
அஹல்யாம் – அகல்யைப் பார்த்து
இதம் – இவ்வாறு
வாக்யம் – மறுமொழியை
அப்ரவீத் – சொன்னான்
பரிதுஷ்டோஸ்மி சுஸ்ரேணி கமிஷ்யாமி யதாகதம் |
சுஸ்ரேணி – அழகிய ஜகனம் உடையவளே
பரிதுஷ்ட – திருப்தி அடைந்தவனாய்’
அஸ்மி – ஆகிறேன்
யதாகதம் – வந்த வழியே
கமிஷ்யாமி – திரும்பி விடுவேன்
இப்படிச் சொல்லி விட்டு இந்திரன் கிளம்பிய சமயம் கௌதமர் அங்கு உள்ளே பிரவேசித்தார்.
நடந்த சகல உண்மைகளையும் புரிந்து கொண்ட அவர் கோபாவேசத்தால் இப்படி சபித்தார்:
மம ரூபம் சமாஸ்தாய க்ருதவானஸி துர்மதே |
அகர்தவ்யமிதம் தஸ்மாத்விபலஸ்தவம் பவிஷ்யாமி ||
துர்மதே – புத்தி கெட்டவனே
மம ரூபம் – எனது உருவத்தை
சமாஸ்தாய – எடுத்து
அகர்தவ்ய – செய்யக்கூடாத
இதம் க்ருதவான் – இதைச் செய்து
அஸ்மி – இருக்கிறாய்
தஸ்மாத் – ஆகையால்
த்வம் விபல: – நீ விருக்ஷணங்களை இழந்தவனாய்
பவிஷ்யஸி – ஆகக் கடவாய்
பாலகாண்டம் 49-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 18 முதல் 22 முடிய
இப்படி கௌதமர் சபித்தவுடன் இந்திரனின் இரு அண்ட பீஜங்களும் (பீஜ கோளம்) அகன்றன.
நடுநடுங்கிய இந்திரன் அக்னி உள்ளிட்ட தேவர்களை வேண்ட, அவர்கள் பித்ரு தேவதைகளை வேண்டினர்.
பித்ரு தேவதைகள் உடனே ஒரு ஆட்டுக்கடாவின் இரு பீஜங்களை எடுத்து அவற்றை இந்திரனுக்குத் தருமாறு சொன்னார்கள்.
அவற்றை இந்திரன் பெற்றான்.
அன்றிலிருந்து அவனுக்கு ‘மேஷ – வ்ருக்ஷண’ என்ற பெயர் உண்டானது!
**