முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-39 (Post No.13,281)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,281

Date uploaded in London – –   28 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

XXXXX

பெ

472. திரிதோஷத்திற்கு

பெருங்குமி மூலத்தை பாலிற் கொள்ள மேக எரிவு சுக்கிலக்கடுப்பு பித்த சுரம் வாத சுரம் திமிரதோஷம் தீரும்

XXXX

பிடிப்புக்கு

பெருவாக்கை மூலத்தைப் பாலில் உட் கொண்டுவந்தாலும் கிஷாயம் செய்து உண்டுவந்தாலும் சூலை- பிடிப்பு-வீக்கம் இவை தீரும்; சில்லறை விஷங்கள் சாந்தியாகும்.

XXXX

ஆறாத மேகரிணத்திற்கு 

பெண்கள் மாதவிடாயாகும்போது அந்த உதிரச் சேலை கொண்டுவந்து  நெருப்பிலிட்டுக் கருக்கி ஆறாத புண் பேரில் தூவினால் ஆறிப்போகும் .

XXXX

பே

நெஞ்செரிவுக்கு

பேரீச்சம் பழம் அதாவது உலர்ந்த காய்களை பாலில் உபயோகித்து வந்தால் நெஞ்செரிவு- தாகம்- பித்தம்- மேகம்- வாந்தி- இவை சாந்தியாகும்.

XXXX

சிரங்குகளுக்கு

பேன் கொட்டை பருப்பு ஒரு பலம் இராச கற்பூரம் அரைப் பலம் ஏலரிசி கால் பலம் இந்தப்படி நிறுத்தெடுத்து தேங்காயெண்ணை விட்டரைத்து சிரங்குகளுக்குத் தடவி வந்தால் ஈ எறும்பு இவைகள் சேராது ஆறிப்போகும் .

XXXX

பித்த சுரத்திற்கு

பேய்ப்புடலும் விஷ்ணுக்கிராந்தியும் கிஷாயம் வைத்து துளி தேன், முலைப்பால் விட்டுக்கொடுக்கவும். இப்படி ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும்.

XXXX

வாத சுரத்திற்கு

பேரரத்தையென்னும் துப்பராஷ்டகமும் தூதுவளை கண்டங்கத்திரி கோரைக்கிழங்கு செஞ்சந்தனம் இதுகளுடன் கிஷாயமிட்டு 5, 6 வேளை கொடுக்க  சாந்தியாகும்.

XXXX

பொது

பேய்விரட்டி என்னும் மூலிகையை இன்னும் சில மூலிகையும் சரக்கும் கூட்டி மாந்த கிஷாயமிடுவதுண்டு .

XXXX

பொ

இருமல் சாந்தி

பொற்றலைக்கையான் சமூலத்தை பாலில் அரைத்து உண்டுவந்தால் இருமல் சாந்தியாகும். காசம்- சோகை – பாண்டு இவைகளும் குணமாகும்.

XXXX

பகலில் நட்சத்திரம் தெரிய

பொன்னாங்காணி சமூலத்தை ஒருவர் முகம் காணாமல் அதிகாலையில் எழுந்து வாய்கொண்ட மட்டும்  தின்றுவரவும். இப்படி மண்டலக் கணக்காய் அருந்தினால் உடல் குளிர்ச்சியுண்டாம் . கண் குளிர்ச்சியுண்டாம் .பகலில் நட்சத்திரம்  தெரியும்.

XXXX

காமாலைக்கும்  பாண்டுசோகைக்கும்

பொற்றலைக்கையான் சமூலம் அயக்கிட்டம், கடுக்காய் இவைகள் சமனிடை சேர்த்து கிஷாயம் வைத்து சாப்பிட்டு வந்தால் சோகை காமாலை பாண்டு இவை தீரும்.

xxxx

அதிமூத்திரத்திற்கு

பொன்முசட்டை  சமூலத்தை பாலில் அரைத்து உண்டுவந்தால் கடிவிஷம் விக்கல் நீங்கும். அதிமூத்திரத்தை நிவர்த்தியாக்கும் .

xxxx

மேகப்புண்ணுக்கு

பொடுதலைக்காயும் மஞ்சளும் சமன் கூட்டி மை போல் உரைத்து புண்ணின்மேல் வைத்துக்கட்ட 4,5 வேளையில் ஆறிப்போகும்.

xxxx

பாம்புக்கடிக்கு

பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி  அரைத்து விழுங்கினால்  பாம்புக்கடி விஷம் உடனே  தீரும் .

xxxx

படைகளுக்கு

பொன்னாவாரை வேருடன் சந்தனம்  கூட்டி  அரைத்து படைகளில்  தடவிவந்தால் உதிர்ந்து மறைந்து போகும்.

xxxx

கருந்தேமலுக்கு 

மரு தோன்றி இலையுடன் படிகாரம் சேர்த்து அரைத்துப்  பூசி வந்தால்  கருந்தேமல்  படைகள் நரம்பிழுப்பு  கால்நோய் இதுகள்  தீரும் .

xxxx

488. பித்த நீர் வாந்தியாக

மரக்காளான் சதையை இரண்டு விராகனிடை எடுத்து இராத்திரியில்  வெந்நீரில் ஊறவைத்துக் காலையில் தெளிவாக இறுத்து சாப்பிட வாந்தியாகும் .

xxxx

489.வாய்வு சீதளத்திற்கு

மலைத்  தேன்  8 பலத்தை முறித்து நீர் சுண்டியபின் அபினி அ ரைக்கால் தோலா இழைத்து ஓமம் 3 பலம் ஜாதிக்காய் ஜாதிபத்திரி பவளம் வகைக்கு அரை ப் பலம் பொடித்துப்   போட்டுக் கிளறி புளியங்கொட்டை அளவு கொடுத்து வரவும்  தீரும்.

xxxx

வாய்வேக்காட்டிற்கு

மருதணையிலையை ஒன்றிரண்டாயிடித்து இரண்டு குத்து போட்டு அரைப்படி ஜலம் விட்டு நாலுக்கொன்றாய் கிஷாயம் வைத்து, இருவேளையும் வாய் கொப்பளிக்க வாய் வேக்காடு சாந்தியாகும்..

xxxx

490. சகல கட்டியும் கரைய

மஞ்சள் மெழுகு ஒரு பலம் வெள்ளை பாஷாணம் அரைக் கால் பலம் மெழுகை சட்டியிலிட்டு உருக்கியவுடன் பாஷாணத்தைப் பொடித்துப்போட்டு கிளறி  இறக்கவும். ஆறிய பிறகு பில்லை தட்டி கட்டியின் மேல் கச்சையினால் கட்டவும். இப்படி மூன்று கட்டில் கரையும்

—subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 39, மலைத் தேன்,  மரு தோன்றி இலை,  

Leave a comment

Leave a comment