ராமாயணத்தில் சாபங்கள் (13) – கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்! (Post.13,280)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.280

Date uploaded in London – –28 MAY 2024             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (13)

ராமாயணத்தில் சாபங்கள் (13) – கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்!

ச.நாகராஜன்

இந்திரனைச் சபித்த கௌதம முனிவர் தன் மனைவியான அகல்யாவை நோக்கினார். அகல்யாவையும் சபித்தார்.

பாலகாண்டம் 48-ம் ஸர்க்கம் 32,33,34,35, 36 ஸ்லோகங்களில் இந்த சாபம் விரிவாகக் கூறப்படுகிறது.

அத சப்த்வா ச வை சக்ரம் பார்யாமபி ச சப்தவான் |

இஹ வர்ஷ சஹஸ்ராணி பஹூனி த்வம் நிவத்ஸ்யஸி ||

சக்ரம் – இந்திரனை

சப்த்வா ச – சபித்தவுடன்

அத வை – உடனேயே

பார்யா அபி ச – (கௌதமர்) தன் மனைவியையும் கூட

சப்தவான் – இவ்வாறு சபித்தார்.

த்வம் பஹூனி – “நீ நீண்ட

வர்ஷ சஹஸ்ராணி – ஆயிரம் வருஷங்கள்

இஹ – இங்கே

நிவஸ்யஸி – இருப்பாய்”

வாயுபக்ஷா சிலா பூத்வா தப்யந்தி  பஸ்மசாயினீ |

அத்ருஷ்யா சர்வபூதாநாமாஸ்ரமேஸ்மின் பவிஷ்யதி ||

சிலா – “கல்லாய்

பூத்வா – சமைந்து

வாயுபக்ஷா – காற்றையே ஆகாரமாய் உண்டு

தப்யந்தி – மனம் தவித்துக் கொண்டு

பஸ்மசாயினீ – புழுதியில் கிடப்பவளாய்

சர்வபூதானாம் – சகல பிராணிகளுக்கும்

அத்ருஷ்வா – கண்ணுக்குப் புலப்படாதவளாய்

அஸ்மின் – இந்த

ஆஸ்ரமே – ஆசிரமத்தில்

பவிஷ்யஸி – கிடப்பாயாக”

யதா சைதத்வனம் கோரம் ராமோ தசராத்மஜ: |

ஆகமிஷ்யதி துர்தர்ஷஸ்ததா பூதா பவிஷ்யஸி ||

யதா – “எக்காலத்தில்

துர்தர்ஷ” – எதிர்க்க முடியாத தனி வீரனாக

தசராத்மஜ: – தசரதபுத்திரனான

ராம: – ஶ்ரீ ராமன்

கோரம் – பாழான

ஏதத் வனம் – இந்தக் காட்டிற்கு

ஆகமிஷ்யதி – வருவாரோ

ததா ச – அப்போதே

பூதா – பரிசுத்தையாக

பவிஷ்யஸி – ஆவாய்”

தஸ்யாதித்யேன துர்விருத்தே லோபமோஹவிவர்ஜிதா |
மத்சகாஷம் முதா யுக்தா ஸ்வம் வபுர்தாரயிஷ்யஸி ||

துர்விருத்தே – நடத்தை கெட்டவளே!

தஸ்ய – அவருக்கு

ஆதித்யேன –  அதிதி பூஜை செய்வதால்

லோபமோஹவிவர்ஜிதா – துராசையும் கண்மூடித்தனமும் நீங்கியவளாய்

மத்சகாஷம் – என்னருகில்

சுதா – சந்தோஷத்துடன்

யுக்தா – கூடியவளாய்

ஸ்வம் – உன் சொந்த

வபு: – வடிவை

தாரயிஷ்யஸி – வஹிப்பாய்!”

(பால காண்டம் 48-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 32 முதல் 36 முடிய)

கௌதமர் இவ்வாறு அகல்யையை சபித்து விட்டு அந்த ஆசிரமத்தை விட்டு  சித்தர்களும் சாரணர்களும் தங்கும் அழகிய ஹிமயமலை உச்சியில் பெரும் தவம் செய்யச் சென்றார்.

விஸ்வாமித்திரர் இப்படி அகல்யை மீதான சாபத்தையும் ராமருக்கு எடுத்துரைத்தார்.

**

Leave a comment

Leave a comment