
Date uploaded in London – – 25 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

கூகை, பாம்பு, கிளி, பூனை
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 2851
ஆங்கிலத்தில் உள்ள விஷயம்
உடலில் வாழும் 6 தீய சக்திகளுக்கு ஆண்டவன் எச்சரிக்கை !
ஆந்தை/கூகை , பாம்பு, கிளி, பூனை, மைனா, காடை ஆகியன வாழ்கின்றன.மைனாவை ஆந்தை நெருங்கும்போது எலியானது கீச்சிட்டு மைனாவை எச்சரிக்கிறது.
xxx
.கூகையாகிய அறியாமையும், பாம்பாகிய சுட்டறிவும், கிளியாகிய அறமும், பூஞையாகிய பாவமும், நாகையாகிய சிற்றறிவும், பூழாகிய அறுபகையும், உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின்கண் உறைவன. நாகையாகிய சிற்றறி வினைக் கூகையாகிய அறியாமை நணுகமுயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருளவன்.
கூகை – அஞ்ஞானம். பாம்பு – காமம். கிளி – அறம். பூஞை – மறம். நாகை – சிற்றறிவு. ;. எலி – சீவன்.
XXXX
ஒன்றுக்கொன்று ஒவ்வாத சேர்ந்து இருக்கமுடியாத ஜீவன்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. எல்லாம் இறைவன் சித்தம். உதாரணமாக ஒரு கோட்டானும், அதை விழுங்கும் பாம்பும், அழகிய பச்சைக் கிளியும் அதைக் கொல்லும் பூனையும், நாகணவாய் பறவையும், காடையும் ஒன்றால் ஒன்று பாதிக்காமல் மொத்தத்தில் உயிர் வாழ்கின்றன. உடலிலும் இப்படி ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வாழ்கின்றன. அறியாமை என்பது கோட்டான் ;காமம் என்பது ஒரு பாம்பு. ; தர்மம் சாத்வீகம் கிளி என்றால், அதர்மம் என்பது பூனை. அதிகம் வளராத, சிற்றறிவுதான் நம்மில் நாகணவாய் பறவை. அதை அறியாமை எனும் கோட்டான் அணுகும். அந்த நேரத்தில் தான் அறியாமையாகிய கோட்டானை, ஞானம் ஆகிய எலி ஓங்கார நாதமாகிய ஒலியை எழுப்பி, சிற்றறிவை சிதறாமல் பாதுகாக்கும்.
The Six Evils Dwell Within and God’s Warning to Them
The Owl, the Snake, the Parrot and the Cat,
The Mynah and the Quail
They, all, within dwell;
As the Owl nears the Mynah
The Mouse warns Mynah, screeching loud.
xxxx
கூகை- நாகம்
கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 2880
XXX
ஆங்கிலத்தில் உள்ள விஷயம்
ஜீவன் சிவன் ஆகலாம்; குண்டலினி யோகத்தால் இது நிகழும் .ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஆந்தை குருந்த மரம் ஏறியபோது புரியும். அப்போது நடுவில் நிற்கும் பாம்பு ஞானத்தை கற்பிக்கும் . ஜீவன் சிவனாகி விடும்
XXX
இருளில் மூழ்கி இருக்கும் கோட்டானைப் போலச் சீவன் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடைக்கும். குருவின் உபதேசத்தால் உண்மையை உணர்ந்து கொண்ட சீவன் ஒளிமயமான குருந்தின் மீது ஏறும்.
இந்த உலகத்துக்குக் காரணம் முக்குணங்கள் கொண்ட மாயை என்ற உண்மையைச் சீவன் அறிந்து கொள்ளும். மண்டலமிட்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி உடலின் ஆதாரங்களின் வழியே மேலே ஏறிச் செல்லும்.
அது சென்னியில் உள்ள மேல் நோக்கிய சகசிரதளத்தில் சென்று பொருந்தும். அங்கு நாதத்தை எழுப்பும்! அதனால் பொறிகளின் வசப்பட்டுப் பிறந்து இறந்து கொண்டிருந்த சீவன், பிறவிப் பிணியைத் துறந்துவிட்டுத் தானும் சிவம் ஆகிவிடும்.
XXXX
அருட்கண்ணாகிய அகக்கண் திறக்கும் வரை ஆருயிர்க்கிழவர் ‘பொருட் கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த’ பகல் குருடராவர். அதனால் அவர் கூகை என உருவகிக்கப்பட்டனர்.
சிவகுரு வீற்றிருக்கும் தவநிறை திருமரம் குருந்தம் என்பது பொருந்தும்.அதனால் சிவகுருவின் திருவடியிணையினைச் சேர்வதைக் ‘குருந்தம தேறி’ என உருவகித்தனர். அஃது மாணிக்கவாசகருக்கு ‘திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்த மேவி’ ஆட்கொண்டருளினமையான் உணரலாம்.
சிவகுருவின் திருவருளால் சுட்டியுணரப்படும் உடலும், உலகும், உலகியற் பொருள்களும் முக்குண விரிவாயுள்ளன; மயக்கும் தன்மையன என்னும் உண்மையினை உணர்தல் வேண்டும். உணரவே நாகமாகிய மனக்குரங்கு பாகம் எய்தி அடங்கும்.
‘காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட’ எனத் தாயுமானவர் (30 – 1) அருளியவாற்றான் உணர்க. மனமடங்கவே திருவைந்தெழுத்தைச் ஓதிவரும் தாவாச் செவ்வியராவர். எண்குணம் நிறைந்த சிவப் பண்பருமாவர்.
Jiva Becomes Siva by Kundalini Yoga
When the Owl gets to the top of Kurunda tree
And realizes desire is the source of world
Then the Snake standing in the Center teaches (Jnana)
And Jiva, Siva becomes.
XXXX

கருட மந்திரம் செய்யும் அதிசயம்
கருடன் உருவங் கருதும் அளவிற்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவாங் குறித்தஅப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.2611
பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப் பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள் கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும். அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.
At the Thought of Guru’s Form Impurities Vanish
At the thought of Garuda’s form
The serpent’s poison leaves
Its terrors lose;
Unto it,
At the thought of Guru’s form
The triple Malas leave instant;
The Jiva then Siva becomes.
கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)

xxxx
சிவன் ஒரு கருடன்!
நோக்குங் கருடன் நொடியேழு லகையும்
காக்கும வனித் தலைவனுமங்குள
நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணர வல்லானன்றே 2989
எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்கும் கருடன் அவன்
; விண்ணிலிருந்துகொண்டே மண்ணுலகில் உள்ள எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்க வல்லது கருடன் ;சிவபெருமான் கருடனுக்கு ஒப்பானவர்.ஏழு உலகங்களையும் பார்த்து பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் உதவுவான்.பாசங்களிலிருந்து நீங்கியவன் ஆதலால் நிர்மலன்; போக்கும் வரவும் இல்லாத பிறப்பற்றவன் (சிவனுக்கு திருமால் போல அவதாரங்கள் இல்லை; ஆகையால் பிறப்பிலி)
He Has No Entry, Exit and Stay
He is unto the Garuda Bird, that in an instant sees all;
He protects the seven worlds entire,
He removes my Karmas,
He, the Pure One, the Birthless One,
xxxxx
பன்றியும் பாம்பும்
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 2877
மனித மனம் பன்றியைப் போலத் தூய்மை இன்மையில் விருப்பம் கொண்டது. பாம்பு போலப் பகைமையில் சீற்றம் கொண்டது. பசு போலத் தீமையில் அடக்கம் கொண்டது. வானரம் போல அடங்காமல் திரிவது. இத்தகைய உள்ளத்துடன் பொருந்தாமல் மனிதன் சிவத்துடன் பொருந்த வேண்டும். தராசுத் தட்டுக்கள் போல இவை இரண்டும் சமம் ஆனால் அந்த சீவனின் குறைவுகள் குறைந்து அதன் நிறைவுகள் வளரும்.
XXXX
துங்கிக் கிடக்கும் பன்றியனைய தோல்வியும், பாம்பின் சீற்றமனைய வெற்றியும், பசுவாகிய ஆடனைய அடக்கமும், முசுவானர மனைய அடங்காமையும் எங்கணும் விரவிக்கிடந்தன. சிறுநரிக் கூட்டமாகிய பயனில்லாத நினைப்புகளுள், ஒருவன் சோர்வடையாது திருவடி நினைப்பிற் கூடித், தராசின் நாநுனிபோன்று எண்ணத்தால் உணரும் உணர்ச்சியினைச் சிவபெருமான் மாட்டு மாறின்றி நிறுத்தினால் பன்றியனைய இருள்மலமிகுதியை நாளும் ஒளிவரக் குன்றிமணியொப்பச் சிறிது சிறிதாகக் குன்றவைத்தல் கூடும்.
இருண்மலம் பன்றி; மருண்மலம் அன்னம்;
பன்றியும் பாம்பும் – தோல்வியும் வெற்றியும். பசு – முசுவானரம்; அடக்கமும் அடங்காமையும்.
Conquer Indriyas and Reach Iruvinai-Oppu and Nalapari
Pakam
Pig and Snake, Cow and Monkey
Together were in the lowly Jackal herd;
Joining them not and debasing himself not,
When, in balance, deeds good and bad are equal weighed
The Jiva, tinier than crab’s-eye berry,
Its ego’s diminution saw.
–subham—
Tags- கருட மந்திரம், ,அதிசயம், கூகை , கிளி, பூனை, எலி, ,பன்றி , திருமந்திரம், ஆராய்ச்சி, கட்டுரை



























