முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-33 (Post 13,246) 

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,246

Date uploaded in London – –   16 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 33

xxxx

362. பல் நோய்க்கு

தாளிசப் பாத்திரியைப் பொடிசெய்து  பல்லுதேய்த்துக்கொண்டுவந்தால்  பல்வலி தீரும் .

xxxx

சர்பத்து

தாழம்பூவின் விறைக்க கிஷயம் வைத்து சக்கரை சேர்த்தது சர்பத்து போல் பாகுபதமாய் காய்ச்சி சாப்பிட்டுவந்தால் சொறி சிரங்கு தினவு இதுகள் தீரும்.

xxxx

கலிதமாகாதிருக்க

தாழம்பூவின் உள்ளேயிருக்கும் விபூதியை எடுத்து கோழிமுட்டை வெள்ளைக்கருவால் ஈழத்து ஆண்குறியில் தடவிப் புணர்ந்தால் விந்து சீக்கிரம் கலிதமாகாது .

xxxx

குளிர்ச்சிக்கு

தாமரைக்கிழங்கைப் பாலில் அரைத்தது பாலில் உட்கொண்டுவந்தால் மேகம் வேட்டை கிரி ச்சினம் இவை தீரும். தேக சாந்தியும் கண் பிரகாசமும் உடம்பு குளிர்ச்சியும் உண்டா கும்

.xxxx 

தி

சிறு விஷங்களுக்கு

தில்லை வித்தை பாலில் அரைத்து உண்டுவந்தால் சில்லறை விஷங்கள் பெரு விஷங்கள் திமிர் வாய்வு கபம் கோழை   கு ட்டம் இவை சாந்தியாகும்.

xxxxx

இந்திரியம் கட்ட

திசை கருடன் என்னும் காட்டுக்கொடி மூலத்தைப் பாலில் உட் கொண்டுவந்தால் மலக்கழிச்சல்  பேதி  இவை தீரும். நீற்ற இந்திரியத்தைக் காட்டும்.  இதன் இலை தண்ணீரைக் கட்டும்.

xxxx

அறிவுண்டாக

திருநீற்றுப் பச்சிலையைப் பாலில் அரைத்துக்கலந்து  உட்கொண்டால் கப வாந்தியை நிவர்த்தியாக்கும். அறிவு துலங்கும்.

xxxx

து

கருமேக சாந்தி

துத்தி விரையைப் பசும்பாலில் அரைத்துப் பாலில் கலக் கி நீடித்து உண்டுவந்தால் கை காலில் படருகிற  கருமேகம் கு ட்டம்  வெப்பு இவை தீரும்

xxxx

மேக சூட்டுக்கு

துத்தி  இலையைக் கஷாயம் வைத்து  பாலும் சக்கரையும் கூட்டி காப்பிபோல் சாப்பிட்டு வரவும். தணியும் .

xxxx

மலச்சிக்கலுக்கு

துத்தியிலையில் வெங்கயம் சிறு பயறு போட்டு  கிரமப்படி சமைத்து  தின்று வந்தால் மலச்சிக்கல் தீரும் மூல ச் சூடு தணியும் .

xxxx 

நீர் சுருக்கு

துத்தி வேர் 3 பலம் திராட்ச்சிப்பழம்  ஒன்னரைப்பலம் இரண்டும் கிஷாயம் வைத்து கொஞ்சம் நெய்விட்டுச் சாப்பிடவும்.  நீர் சுருக்கு தீரும்.

xxxx

பருவுகள் உடைய

துத்தியிலையை அரைத்து பருவுகள் மேல் தடவி வந்தாலும் அல்லது துத்தியிலையில் காட்டி வார் த்துக்கு கிளறி கட்டி வந்தாலும் பருவுகள் உடையும்.

xxxxx

தூ

கபரோகத்திற்கு

தூதுளங்காயை  துவரம் பருப்பிட்டுக் கிரமப்படி சமைத்து தின்றுவந்தால் கபரோகம் பயித்திய தோஷம் பித்த வாய்வு இவைகள் சாந்தியாகும் .

xxxx

மந்த வாய்வுக்கு

தூதுவேளை இலையை குறுக அரிந்து துவரம்பருப்பு மிளகு இவைகளைக்கூட்டி கிரமப்படி குழம்பு செய்து இரண்டொ ரு  வேளை சாதத்துடன் சாப்பிட்டால் உடம்பு ஆதி யந்தமும் குத்தல் – குடைச்சல் – திரேகபாரம்- வயறு மந்தம் – மலச்சிக்கல் யாவும் தீரும் .

xxxx

தெ

நாதவிருத்தி

தென்னம்பாளை மிகவும் இளசியாகக் கொண்டுவந்து அதன் அரிசிகளை எடுத்து பால் விட்டரைத்து எலுமிச்சங்காயளவு சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும் தின்று வந்தால் நாதம் விருத்தியாகும் . இடுப்பு வலிவு உண்டாகும் .

xxxx

தே

ஈளை இருமலுக்கு

தேத்தான் வித்தை ஊறவைத்துப் பாலில் அரைத்து கலக்கியுண்டுவந்தால் பித்தகாசம், க்ஷ்யம், ஈளை, இருமல்- மேகம்- பிரமியம்-  உந்திப்புண் – கிருச்சிரம் – கண்ணெரிவு – தேகக்கடுப்பு  இவை தீரும் . தீபனமுண்டாகும்

 .—subham–

Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-33  

ராமாயணத்தில் சாபங்கள் (3), (4), (5)- (Post No.13,245)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.245

Date uploaded in London – — 16 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (3), (4), (5)

ராமாயணத்தில் சாபங்கள் (3) – தாடகைக்கு வந்த சாபம்!

ச.நாகராஜன்

விஸ்வாமித்திரருடன் ராமரும் லக்ஷ்மணரும் அயோத்தியை விட்டுப் புறப்பட்டு திரிபதகை என்ற நதிக்கரையோரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள காமாஸ்ரமஸ்தானத்தில் சுகமாக இருந்த போது அதன் சரித்திரத்தையும் கேட்டு உணர்ந்தார்கள்.

அடுத்து அவர்கள் புகுந்த இடம் ஒரு அடர்ந்த காடு. அதைப் பற்றி ராமர் கேட்க விஸ்வாமித்திரர், “மலத நாடு என்றும் கரூச நாடு என்றும் வழங்கப்பட்ட இரு நாடுகள் இங்கு செழிப்புடன் இருந்தன.

ஒரு சமயம் ஸுந்தன் என்பவனது மனைவியான தாடகை இந்த இடத்தை நாசம் செய்ய ஆரம்பித்தாள்.  இந்த துர்நடத்தை உள்ளவளை எனது கட்டளையினால் நீ வென்று விடு” என்றார்.

தாடகையைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்ற ராமர், ‘ஒரு பெண்ணுக்கு ஆயிரம் யானைகளின் பலம் வந்தது எப்படி?’ என்று வினவினார்.

விஸ்வாமித்திரர் அவர் கோர ரூபம் கொண்டு ராக்ஷஸியாக ஆன

கதையைக் கூறலானார்: “முன் காலத்தில் ஸுகேது என்ற பெரிய ஒரு யக்ஷன் இருந்தான். அவன் மகப்பேறு இல்லாமையால் கடும் தவம் புரிந்தான். அதனால் சந்தோஷமடைந்த பிரம்மா அவனுக்கு தாடகை என்ற பெண்ணை வரமாகக் கொடுத்தார்.

அவள் வளர்ந்த காலத்தில் ஜர்ஜ புத்திரனான ஸுந்தனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். சில காலத்திற்குப் பின்னர் அவள் மாரீசன் என்ற புத்திரனைப் பெற்றாள். அவன் சாபத்தினால் ராக்ஷஸனாக ஆனான்.

ஸுந்தன் அழிந்த அளவில் தாடகை புத்திரனோடு கூட அகஸ்திய முனிவரை உபத்திரவம் செய்ய ஆரம்பித்தாள்.

காமபாணத்தினால் பீடிக்கப்பட்ட தாடகை அகத்தியரை நோக்கி ஓட கோபம் கொண்ட அகத்தியர், “ இந்த ரூபத்தை விட்டு கோரமான உருவம் உனக்கு உண்டாகக் கடவது” என்று சாபமிட்டார்.

அகஸ்த்ய: பரம க்ரூதஸ்தாடகாமபி சபதவான் |

புருஷாதீ மஹாயக்ஷீ விரூபா விக்ருதானனா!

இதம் ரூபமாஹாய தாருணம் ரூபமஸ்து ||

(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 14,15)

இதன் பொருள் :

அகஸ்த்ய: அகஸ்தியர்

பரம க்ரூதத்ஸ – பரம கோபம் கொண்டவராய்

தாடகாம் அபி – தாடகையைப் பார்த்து

புருஷாதீ – ‘மனிதர்களைக் கொல்லுகின்ற நீ

விரூபா – விகார ரூபமுடைய

விக்ருதானனா – விகாரமான முகத்தை உடைய

மஹா யக்ஷீ – மஹா யக்ஷிணியான நீ

இதம் ரூபம் – இந்த ரூபத்தை

அபஹாய – விட்டு விட்டு

தாருணம் – அதி வேதனையை விளைவிக்கும் கோரமான

ரூபம் தே – உருவமானது உனக்கு

அஸ்து – உண்டாகட்டும் (என்று கூறி)

சபதவான் – சபித்தார்.

அந்தக் கணமே அவள் கோர ரூபத்தை அடைந்தாள். அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தாள்.

தாடகை பற்றிக் கூறிய விஸ்வாமித்திரர் ராமரிடம், “இவளை வதம் புரிய மூன்று லோகங்களிலும் உன்னைத் தவிர வேறு எந்த மானிடனாலும் முடியாது பெண்ணைக் கொலை செய்ய வேண்டி இருக்கிறதே என்ற அருவருப்பு உனக்குத் தேவையில்லை. அனைத்து பிரஜைகளின் நன்மைக்காக இதை நீ செய்ய வேண்டியது உனது கடமை. நீ இவளை வதம் செய்” என்றார்.

ராமரும் முனிவரின் ஆணையை சிரம் மேற்கொண்டு தாடகையை வதம் செய்தார். 

ராமாயணத்தில் சாபங்கள் (4) – மாரீசனுக்கு வந்த சாபம்!

இதே தருணத்தில் அகஸ்தியர் மாரீசனை நோக்கி ராக்ஷஸனாய் இருத்தலை அடை என்று சபித்தார்.

ராக்ஷஸத்வம் பஜஸ்வேதி மாரீசம் வ்யஜஹார: |

(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 13)

ச மாரீசம் – அவர் (அகஸ்தியரானவர்) மாரீசனை நோக்கி

ராக்ஷஸத்வம் – ராக்ஷஸனாய் இருத்தலை

பஜஸ்வ – நீ அடைவாயாக

இதி – என்று

வ்யாஜஹார – சபித்தார்.

இதனால், மாரீசன் ராக்ஷஸன் ஆனான்.

ராமாயணத்தில் சாபங்கள் (5) – ஸுந்தனுக்கு வந்த சாபம்!

தாடகையின் கணவனான ஸுந்தனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி பால காண்டத்தில் இதே ஸர்க்கத்தில் ஒரு ஸ்லோகத்தைக் காண்கிறோம்.

ஸுந்தே து நிஹதே ராம சாகஸ்த்யம்ருஷிஸத்தமம் |

தாடகா சஹ புத்ரேண ப்ரதர்ஷயிதுமிச்சதி ||

(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 10)

ராம – ராமா!

ஸுந்தே – ஸுந்தன்

நிஹதே து – அழிந்த அளவில்

சா – அந்த

தாடகா – தாடகையானவள்

புத்ரேண சஹ –  புத்திரனோடு கூட

ருஷிசத்தமம் – முனி ச்ரேஷ்டரான

அகஸ்த்யம் – அகத்தியரை

ப்ரதர்ஷயிதும் – உபத்திரவம் செய்ய

இச்சதி – யத்தனித்தாள்

இங்கு ஸுந்தனுடைய சாபம் பற்றிய முழு விவரங்கள் தரப்படவில்லை.

அவன் யாருக்கு என்ன தீங்கு செய்தான். யார் அவனுக்கு என்ன சாபம் தந்தார்கள் என்பது விளக்கப்படவில்லை.

ஆனால் ஸுந்தனின் அழிவு தரப்படுகிறது.

***

தினையும் பனையும்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-11 (Post.13,244)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,244

Date uploaded in London – –   15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரத்தில் வரும் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியை இன்று நிறைவு செய்வோம். தொடர்ந்து பிராணிகள் பற்றிய அதிசயச் செய்திகளைக் காண்போம்

திருமந்திரத்தில் திருக்குறளின் தாக்கத்தை நிறைய பாடல்களில் காண முடியும். அதைத் தனியே காண்போம்

இப்போது தினைபனை இரண்டையும் காண்போம் ; தினை, பனை என்றவுடன் திருவள்ளுவர்தான் நம் நினைவுக்கு வரும்.தினையை 4 இடங்களிலும் பனையை 3 இடங்களிலும் திருக்குறளில் காணலாம் .

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்

திணைத்துணை நன்றி செயினும்-தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்-அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார் என்று பரி மேல் அழகர் உரை சொல்லுவார்.

xxxxx

திருமந்திரத்தில் தினை

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்

சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்

தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்

கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.

(ப. இ.) பேரன்புவாய்ந்த மெய்யடியார்கள் காதலுடன் தன்னை நினைப்பார்களானால் அங்ஙனம் நினைப்பவரைச் சிவபெருமானும் திருவருளால் நினைந்தருள்வன். புருவநடுவாகிய சுனையின்கண் திருவாணையாக விளங்கும் அறிவுப் பேரொளியானை நெஞ்சத்தாமரையினிடத்து விளைந்து மலரும் உள்ளொளியாக வுறையும் சிவபெருமானைத் தினையைப் பிளந்தாலொத்த சிறுமையராயுள்ளாரும் திருவைந்தெழுத்தினையே எண்ணி அவ்வெண்ணத்தால் உறுதி எய்தியவுள்ளத்தின்கண் நினைப்பாராயின் அவ்வுள்ளம் உரனுடைய வுள்ளமாகும்.

xxxx

உறைபதி தோறும் முறைமுறை மேவி

நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி

மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்

இறைதினைப் போதினில் எய்திட லாமே.

(ப. இ.) திருவருளம்மை உயிர்கள் உய்தற்பொருட்டு, அகத்துப்போல் புறத்தும் திருக்கோவில் கொண்டெழுந்தருளியுள்ளாள். அத் திருக்கோவில் தோறும் முறைமுறையாகச் சென்று மணம் கமழ்கின்ற பூச்சூடியுள்ள அம்மையை நாடொறும் கும்பிட்டு ‘நமசிவய’ என்னும் தமிழ்மந்திரம் மறவாநினைவுடன் ஓதிக்கொண்டிருக்கும் மெய்யடியார்கட்குத் தூமாயையின் கண்ணுள்ள ஏனைய அத்தன், அருளோன், ஆண்டான், ஆசான் ஆகிய நான்குமெய்களின்கண் உறையும் இறைவன் திருவருளும் தினைப்பொழுதினுள் எளிதின் எய்தும்.

xxxxx

திருமந்திரத்தில் பனை

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்து போல

நினையாத வர்க்கில்லை நின் இன்பந்தானே..

இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர்.நம்முள்ளேயே அறிவாய் இயங்கும் இறைவனை எம்பெருமானை உணர்ந்தவர்கள் அன்பும் கருணையுமாக இருப்பார்கள்.தம் உள்ளத்தில் அப்பெருமான் எழுந்தருளியிருப்தை உணர்ந்திருப்பவர் அன்புடையவராக இருப்பர்.

 நம்முள்ளேயே கொட்டிக்  கிடக்கும் இறையின் கருணையை உணர முடியாமல், அதை வெளியே தேடுவது அறிவுடமை ஆகாது. பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப்பற்றி நினையாமல் உணவுக்காக கிழிறங்கி வரும்.

தன்னுள்ளே இருக்கும் ஈசனை உணராமல், ஞானத்தை வெளியில் தேடி, வாழ்வை வீணடிக்கிறார்கள். அதுபோல சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனை பற்றி நினைவேயில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.

xxxx

ஆலைக் கரும்பும் சோலைத் தண்ணீரும்

ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்

சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்

பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு

கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.—2919

வெல்லக்கட்டியும்,அமுதமான்  பாலும்  போன்று  இனிமையானது அன்னையின் திருவருள் . மயிற் பீலியில் எவ்வளவு வண்ணங்கள உளவோ அவ்வளவு வடிவங்களை எடுப்பவள் நம் அன்னை. . அவளுடைய அருள் பெற்றோருக்கு ஒரு குறையுமில்லை.

XXXXX

உள்ளங்கை நெல்லிக்கனி

மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு

கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்

சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே-2949

உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தமிழ்ப் பழமொழி. இதைப்  பயன்படுத்தி திருமூலர் நமக்கு ஒரு செய்தியை அளிக்கிறார். சிவ பெருமானை நாடுவோர்க்கு அவன் உள்ளங்கை நெல்லிக்கனி போல அகப்படுவான். தூயநெறி யுடன் வாழும் தேவற்கு அவன் அப்பன். அவனை நானும் தொழுதேன்.அவனுக்கே அடிமையானேன்.

(நெல்லிக்கனி பற்றி இன்னும் ஒரு பொருளும் சொல்லலாம். அதைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும். அதுபோல சிவனும் இனிமை தருவான் ).

xxxxx

கரும்பும் தேனும்

 கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.—- 2935

(
ப. இ.) கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சரக்குநிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முளையும் கிழங்கும்போன்று தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ்வின்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக் கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டுகொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.

Bodily Pleasures Ceased to Interest

In this body of pleasures

Unto sugarcane and honey mixed,

Sprouted the Fragrance of Siva Bliss;

In eagerness my heart sought it

And I visioned the Void;

Then did the cane taste bitter

And honey sour.

XXXX


(
அ. சி.) கரும்பும் தேனும் – உண்டலும் உறங்கலும்.அரும்பும் கந்தமும் – தோன்றுதலும் நிலைத்தலும்.வெளியுறக் கண்டபின்- நன்றாய் அனுபவித்த பின். கரும். . . . . . . . புளித்ததே – உண்டலும் உறங்கலும் ஒழிந்தன.

xxxxx

புளியம்பழம்

அளிஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி

புளிஉறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்

தெளிஉறு வித்துச் சிவகதி காட்டி

ஒளிஉற வைத்துஎன்னை உய்யஉண் டாளே-1040

புளி தன் இளமையில் தோலை விட்டுவிடாமல் ஒட்ட ஒட்டப் பற்றிக்கொண்டிருக்கிறது; பக்குவமாகிப் பழுக்கும்போது, தோலைத் தோடாக்கிப் பற்றை விட்டுப் பற்றிக்கொண்டிருக்கிறது. உயிரும் அப்படித்தான். பழுக்கும்வரை ஒட்ட ஒட்டப் பற்றிக்கொள்கிறது. பழுத்தபிறகு பற்றுவிட்டுப் பற்றி இருக்கிறது. புளியங்காயாகத் தோலைப் பற்றிக்கொண்டு இருந்தவரையில் பேசாமல் இருந்தவர்கள், புளியம்பழமாகித் தோடு விட்டபிறகு, புளியை எடுத்து உண்ணத் தலைப்படுகிறார்கள். பழுத்துப் பற்றுவிட்ட உயிரை இறைமை தன்னோடு சேர்த்துக்கொள்ளும்.

xxxxx

ஆத்தியும் மூங்கிலும்

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி

முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்

கொடியும் படையும் கோட்சரண் ஐஐந்து

மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.     2876

  • அடிமுடி அமைந்த ஆத்தி மரம். அதன் தலைமுடி போல் தோன்றும் மூங்கில் மரம். அது இருக்கும் ஆற்றில் 25 சங்குகள் (தத்துவங்கள்) 

xxxxx

எள்ளும் தங்கமும்

திலமத்தனையே சிவஞானிக் கீந்தால்

திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்

பல முத்தி சித்தி பரபோக மும் தரும்

நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்

பலமும்அற்றே பரபோகமும் குன்றுமே     484

எள் அளவு பொன் சிவ ஞானிக்குத் தந்தால் அவர் முத்தி, சித்தி, பரபோகம் முதலானவற்றைத் தருவார்

உலக அளவு பொன்னை மூடர்க்குத் தந்தால் அவர்கள் நம்மிடம் இருக்கும் வலிமையையும், பரபோகத்தையும் குன்றச் செய்வர்

xxxx

2858. இலையில்லை பூவுண் டினவண் டிங்கில்லை

தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின்

குலையில்லை கொய்யும் மலருண்டு சூடுந்

தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

(ப. இ.) இலையாகிய இறைநூற் பயிற்சி யில்லை. பூவாகிய நோக்கமுண்டு. நோக்கம் – பிரவிருத்தி. வண்டின் கூட்டம் என்று சொல்லப்படுகிற தொண்ணூற்றாறு (2139) மெய்களின் ஆராய்வு இங்கில்லை. தலையாகிய பயிற்சிப் பயனாம் பேறு இல்லை. வேராகிய காரணப் பயிற்சியுண்டு. தாளாகிய முயற்சியில்லை. பூங்கொத்தாகிய புலப்பொருட்சுவைச் சேர்க்கை இங்கில்லை. ஆனால் உடலூழாம் கொய்யும் மலருண்டு. அம் மலர் உடலூழாகக் கழிதலின் அம் மலரினைச் சூடும் தலையாகிய ஆருயிர் முனைப்பு இங்கில்லை. அம் முனைப்பு கிளைத்துத் தோன்றுதலுமின்று. புலர்தல் – தோன்றுதல். நான்முகன் தலைகிள்ளப்பட்டதென்பது முனைப்பதற்றப்பட்டதென்னு மெய்ம்மையினை ஈண்டுன்னுக.

(அ. சி.) இலை – நூற்பயிற்சி. பூ – பிரவிருத்தி. வண்டு – தத்துவ ஆராய்ச்சி. தலை – சாத்தியம். வேர் – சாதகம். தான் – சாதக முயற்சி. பூவின் குலை – சவை முதலிய விசயக் கூட்டம். கொய்யும் மலர் – சுகதுக்க அனுபவம். கொய்யும் தலை – ஆன்ம அனுபவம். கிளை – சீவபோதம்.

(33)

2859. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்

மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த்

தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறன்றே.

(ப. இ.) திருவடிப் பேறாகிய அக்கரைக்கண் சீர்மிகு சிறப்பினனாகிய சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற் பொருட்டு நெறி நூலும் துறை நூலும் (தமிழ் வேதாகமங்கள்) ஆக்கவிக்கத் திருவுள்ளங்கொண்டருளினன். அதன்பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகச் செல்வராய் வீற்றிருந்தருளினன். நூலும் தோற்றுவித்தருளினன். அக் குறிப்பே ஆல் + அமர் + அம் = ஆலமரம் கண்டு என ஓதப்பட்டது. உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்துணர்ந்து அப்பொழுதே தோன்றும் அருளாளர் நக்கர். நக்கர் – தோன்றுபவர். அவர் சிவபெருமானாவர். அவரைத் திருமுறை வாயிலாக வழிபட்டு அடியார் நடுவே யிருக்கும் பயன் கொள்வார் மிக்கவராவர். ஐவகைத்துன்பமாவன: தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. இவை காரியத்தைக் காரணமாக மொழியப்பெற்றன. இவ்ஐவகைத் துன்பத்தினுக்கே தக்கவராய் அவற்றுள் ஆழ்ந்து கண்டதே கண்டு கொண்டதே கொண்டு செல்வார் பிறப்புச் சூழலில் தாழ்ந்து கிடக்கும். முறையினராவர்.

(அ. சி.) அக்கணம் நின்றதோர் – ஆன்மாவிற் பொருந்தியதோர். ஆலமரம் கண்டு – ஆல் அமர் அம் கண்டு – சிவத்தைக் கண்டு. நக்கண – வெளிப்படையாக. நடுவே – நடுநிலையுடன். அஞ்சு துயரம் – அஞ்சு துன்பம்: (அவித்தை, அஸ்மிதை, இராகம், துவேஷம், அபினிவேசம..

xxxxx

—subham—

Tags- தினையும் பனையும் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-11, திருமந்திரம்

More (Atomic Science) Secrets from Vishnu Sahasranama -14 (Post No.13,243)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,243

Date uploaded in London – –   15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In one of the articles already posted here we saw what is big and small in Hindu scriptures . When the world was talking about earth appearing around 4000 BCE, Hindus sang about God who is Sahsra Koti Yugadhaarine i.e.ten thousand million Yugas(multiplied by 4,32,000 years). We know the famous quotation,

In the Katha Upanishad (1.2.20) it is said:

anor aniyan mahato mahiyan

atmasya jantor nihitah guhayam

tam akratuh pasyati vita-soko

dhatuh prasadan mahimanam atmanah.

Aṇor aṇīyān mahato mahīyān: “The Lord is smaller than the smallest and greater than the greatest.

Tamil Saint Manikkavasagar also sang about million galaxies in his Tamil Hymn Tiruvasagam. He used the Upanishad style and said

God (Shiva) is

Older than the oldest and newer than the newest.

He lived 1500 years ago.

(About the age of Manikkavasagar, Kalidasa, Adi Sankara and Rig Veda, please read my research articles).

xxxx

Where is the Anu (atom) in Vishnu Sahasranama (VS)?

Anuh- Word or Naamaa No.835

One who is extremely subtle.

Mundaka Upanishad says,

Esonur aatmaa cetasaa veditavyah – this subtle Atmn is to be comprehended by the mind.

This shows the word ANU is used from Vedic days.

xxxx

suukshma- word number 457

One who is subtle because He is without any gross causes like sound etc. The causes of the grossness of the succeeding elements from Aakaasa downwords is sound and other objects.

Then again Adi Shankara quotes Mundakopanishad 1-1-6

Sarvagatam susuukhmam – He who is very subtle and has entered into everything.

xxxx

But the Big Question is whether the Hindus ever understood the meaning of ATOM as we understand it today?

Yes, they did understand and even sang about splitting of atom; they used it as a simile.

According to Hindu linguistics, a simile must be used only if  it can be understood by the common man. No ancient Sanskrit or Tamil poet would have used biblical phrases David and Goliath or Doubting Thomas.

Anu is used by all Sanskrit and later Tamil poets.

Tirumular, who lived around 8th century CE used the word and sang about splitting it in his work Tirumanthiram,

.

“The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom”

Spiritual Meaning:

 The inner core energy of the primordial atom exists within every individual atom. A yogi with true wisdom approaches the primordial atom through splitting the individual atom in to one thousand atoms. Thus a Kundalini Yogi merges his soul energy with the cosmic energy by realizing that universe is a conglomeration of individual atomic particles.

xxxx

There is an appendix to the Tamil Veda Tirukkural and it is called Tiruvalluva Maalai. There Tamil Poetess Avvaiyaar , while praising the greatness of Valluvar said,

He has put so much into this book as if one splits an atom and places seven oceans into it.

Another poet by name Idaikkadar replaced the word atom with mustard seed.

In short, splitting something and placing or creating a lot of energy is known to Hindus for thousands of years.

Tirumular in his hymns also speaks about splitting a cow’s hair into many thousand parts.

“Take one piece of cow’s hair and cut it into 100

Parts, then take one part of it and again cut it into

1000 parts, then take one part from that and again

cut it into another 10000 parts. The remaining 1 part

from those 10000 parts will resemble the size of the

Atom (Anu in Tamil)”.

This may not be exactly same in today’s Nuclear science book. But Tirumular did not write a science book or article. He wanted to explain something spiritual. But the simile he used shows what can be done with the smallest particle — ANU in Sanskrit, atom in English. Even the Greeks who gave us the word atom did not use the word with the meaning we use it today in science books.

Lord is Atom-Within-Atom

The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom.– Tirumanthiram

xxxx

Aprameyah – word No.46

All the above examples such as mustard seeds, cow’s hair are only for laymen. The word Aprameyah is explained by Shankara as follows,

One who is not measurable or understandable by any of the accepted means of knowledge like sense perception, inference etc. even the scriptures cannot reveal Him directly.

xxxx

Tvastaa – word No.52

He who makes all beings shrunken at the time of cosmic dissolution. This explains the Big Crunch theory.

xxxx

Mahaadyudtih – word No.176

When we read books on astronomy, we see everything is explained as light or light emitting sources; in the pictures also, we see them as brilliant shining objects.

Shankara says in his commentary,

One who is intensely brilliant both within and without.

Brhad Aranyaka Upanishad says  4-3-9,

Svayam jyotih one who is self illumined

Jyotishaam jyotih- one who illumines the brilliance of all brilliant entities.

—- subham—-

Tags- Vishnu Sahsranama, Atom, Anu, Tirumular, Atomic science,  Tirumanthiram, splitting hair

ராமாயணத்தில் சாபங்கள் (2) (Post No.13,242)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.242

Date uploaded in London – — 15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (2) – மாரீசன்சுபாகுவுக்கு ஏன் சாபம் கொடுக்கப்படவில்லை? 

ச.நாகராஜன் 

ஒரு சமயம் விஸ்வாமித்திர மஹரிஷி சித்தியின் பொருட்டு ஒரு தீக்ஷையை ஆரம்பித்தார். அப்போது வேண்டிய வடிவத்தை எடுத்துக் கொள்ளும் இரு ராக்ஷஸர்கள் அந்த யக்ஞ தீக்ஷைக்கு இடையூறு செய்ய வந்தனர். அந்த இரு ராக்ஷஸர்கள் மாரீசன் மற்றும் சுபாகு ஆவர்.

யக்ஞ தீக்ஷையின் போது திடீரென்று தோன்றிய அந்த இரு ராக்ஷஸர்களும் மேடையில் மாமிசத்துடன் கூடிய ரத்தத்தைச் சொரிந்தார்கள்.

யாகம் நின்றது.

விஸ்வாமித்திரர் தடைப்பட்ட யாகத்தால் மிகவும் வருத்தமுற்றார்.

நேராக மஹாராஜா தசரதனின் அரண்மனைக்கு வந்தார். மஹரிஷியைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட தசரதன் அவரைத் தக்க முறைப்படி வரவேற்று மரியாதை செய்து உபசரித்தான்.

விஸ்வாமித்திரர் நடந்ததைச் சொல்லி ராமரை தனது யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார்.

தசரதனுக்கு தூக்கி வாரிப்போட்டது. சிறுவர்களான அவர்களை எப்படி அனுப்புவது? யோசிக்கலானான். ஆனால் குலகுருவான வசிஷ்ட மஹரிஷி குறுக்கிட்டு ராமரை அனுப்பலாம் என்று கூறி, தசரதனை சம்மதிக்கச் செய்தார்.

ராமருடன் கூடவே லக்ஷ்மணரும் விஸ்வாமித்திரருடன் சென்றார்.

யாகத்திற்கு இடையூறு விளைவிக்க வந்த மாரீசனின் மார்பில் அதிக கம்பீரமும் அதிக பிரகாசமும் உள்ள மானவ அஸ்திரத்தை ராமர் விடுத்தார். (பால காண்டம் 30-ம் அத்தியாயத்தில் விவரங்களைக் காணலாம்)

பின்னர் ஆக்கினேய அஸ்திரத்தை எடுத்து அரக்கர்களின் மீது விடுத்தார். அந்த அஸ்திரம் சுபாகுவின் மார்பைத் தாக்க அவன் பூமியில் விழுந்தான்.

பின்னர் வாயவாஸ்திரத்தை விடுத்து அனைத்து அரக்கர்களையும் ராமர் கொன்றார்.

யாகம் இனிதே நிறைவேறியது!

இந்தச் சம்பவத்தில் அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.

மஹரிஷி விஸ்வாமித்திரர் மிகுந்த தபோபலம் கொண்டவர்.

அவர் மிக சுலபமாக அரக்கர்களை ஒரு நொடியில் இல்லாமல் செய்து விடலாம்.

சாபம் இட்டால் போதும், அவர்கள் ஓடி விடுவர்.

ஏன் விஸ்வாமித்திரர் சாபம் இடவில்லை?

இதற்கான பதிலை விஸ்வாமித்திரரிடமிருந்தே நாம் பெறுகிறோம்.

பால காண்டம் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் தசரதனிடம் விஸ்வாமித்திர கூறுகிறார் : (ஸ்லோகம் 7,8)

ந ச மே க்ரோதமுத்சஸ்ருஷ்ட புத்திர்பவதி  பார்த்திவ |

ததாம்ருதா ஹி சா சர்யா ந சாபஸ்தன்ன முச்யதே ||

இதன் பொருள்:

பார்த்திவ – மன்னரே

க்ரோத – கோபத்தை

உத்சஸ்த்ருஷ்ட – பிரயோகிக்க

மே – எனக்கு

புத்தி ச – மனதில் எண்ணமே

பவதி ந – உண்டாகிறதில்லை

ஹி – ஏனென்றால்

சா – அந்த

சர்யா – அனுஷ்டானம்

ததா பூதா – அப்படிப்பட்ட ஒன்று.

தத்ர – அந்த விஷயம் அப்படி இருப்பதால்

சாப: – சாபம்

முச்யதே ச – இடலாகாது.

ஆக அந்த குறிப்பிட்ட யாகத்தின் அனுஷ்டானத்தில் கோபம் கொள்ளவும் கூடாது; சாபம் இடவும் கூடாது.

ஆகவே தான் மிக பிரம்மாண்டமான தபோ மஹிமை கொண்ட விஸ்வாமித்திரர் தசரதரிடம் வந்தார்.

சாபத்தால் மாரிசனையும், சுபாகுவையும் அழிக்க வல்ல மஹரிஷி சாபம் இடாததற்கான காரணம் அந்த யாகத்திற்கான குறிப்பிட்ட அனுஷ்டான முறையே.

இதை பால காண்டம் 19-ம் அத்தியாயம் விளக்குகிறது.

***

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-32 (Post No.13,241)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,241

Date uploaded in London – –   14 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 32

xxxx

354.படைகளுக்கு

தகரை என்னும் சிறிய தாவரத்தின் சமூலத்தைக் கொண்டுவந்து சிதைத்து அத்துடன் கொஞ்சம்  கற்பூரம் சாம்பிராணி இவைகள் சேர்த்து குழித்தயிலமிறக்கி படர் தாமரை இடுப்புக் கடுவன் முதலிய படைகளுக்குத் தடவினால் உதிர்ந்துவிடும்.

XXXX

குழந்தை வியாதிக்கு

தழுதாழை என்னும் மூலிகை தனியாயாவது – செருப்படை – கற்பூரவள்ளி – கைம்மாறு வெற்றிலை இவை சமன் சேர்த்து பிட்டவித்துப் பிழி ந்த ரசத்தில்  கார மாத்திரை- லிங்க மாத்திரை – பேதி மாத்திரை-  இதுகளில் ஏதேனும் இழைத்து வார்த்தால் மாந்தங்கள் முதலிய குழந்தை வியாதிகள் தீரும்

XXXX

இந்திரகோப  உபயோகம்

தம்பலப் பூச்சி என்னும் இந்திரகோபப் பூச்சியை உலர்த்திப் பொடித்துத் தேனில் இழைத்து ஒரு வாரம் தின்றால் பெரும்பாடு வியாதியை நிவர்த்தியாக்கும்

XXXX

இதுவுமது

தம்பலப்  பூச்சியைப் பொடித்து மூல ரினத்தின் மேல் தூவிவந்தால் மூலம் ஆறிப்போகும் .

இதுவுமது

தம்பலப்  பூச்சியை சிகப்பு பட்டுத்துணியில் முடித்து கட்டியிருந்தால் தீராத சுர ம் தீரும்

XXXX

இதுவுமது

தம்பலப்  பூச்சியை உயிருடன் பிடித்து  நல்ல வெல்லத்தில் வைத்து உருண்டை செய்து வாயிற்போட்டு விழுங்கவேண் டியது . இப்படி ஒரு வருஷத்திற்கு  ஒரு வாரம் தினம் விழுங்கி வந்தால்  மறு வருஷம் வரையில் தாது விருத்தியதிகரிக்கும்.

XXXX

தாது புஷ்டிக்கு

தண்ணிவிட்டான்கிழங்கை இடித்துப் பாலில் போட்டுக் காய்ச்சி யுண்டுவந்தால் தாது புஷ்டியுண்டாகும் ; சிலநாள் விடாமல் சாப்பிடவும்.

XXXX

இதுவுமது

தண்ணிவிட்டான்கிழங்கை பாலில் உபயோகித்துவந்தால் விந்து கட்டுப்படும் . சுக்கில பிரமியம் – நீர் எரிவு-காந்தல் – கரப்பான் — இவை தீரும்.

XXXX

சூலை சொறி சிரங்குக்கு

தலைச் சுருளி என்னும் மூலிகையை பாலில் உண்டு வந்தால் அரவுக்கடி முதலிய பழைய விஷம்

சூலை சொறி  சிரங்கு  தீரும். தேகத்தில் பலமுண்டாகும் .

XXXX

பல்லு நோய்க்கு

தக்காளி அல்லது மணித்தக்காளி சமூலம் கொண்டுவந்து கிஷாயம் வைத்து நாலு க்கொரு பங்காய் இறக்கி வாய் கொப்பளித்து வந்தால் , பல்லு நோய்- உண்ணா க்கு வளர்ச்சி  தொண்டை நோய் இவை தீரும்.

XXXX

பொடியிருமலுக்கு

தவசுமுருங்கை சமூலம் சூரணம் செய்து சமன் சக்கரை கூட்டி வேளைக்கு திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் குழைத்து தின்று  வரவும் . பொடியிருமல்  கபம் கோழை  தொந்த ரோகம் தீரும்

XXX

தா

வாயில் நீர் ஒழுக்கலுக்கு

தாணிக்காயை சுட்டு சூரணம் செய்து சமனிடை சக்கரை கூட்டி நித்தம் ஒரு விராகநிடையெடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால்  வாயில் அதிக நீர் ஒழுக்கல்  கட்டுப்படும்; கண் குளிர்ச்சியுண்டாகும் .

To be continued……………………..

Tags- தம்பலப் பூச்சி , இந்திர கோபம், தகரை, தழுதாழை ,தவசுமுருங்கை ,முனிசாமி , ,மூலிகை அதிசயங்கள் 32

ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை! (Post No.13,240)

Ram Temple, Ayodhya

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.240

Date uploaded in London – — 14 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை! 

ச.நாகராஜன் 

உலகின் ஆதி கவியான வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணம் சூரிய சந்திரர் உள்ளவரை பூமியில் அனைவருக்கும் வழிகாட்டும் காவியமாக அமையும்.

ராமாயணத்தில் 61 சாபங்கள் வருகின்றன. இவற்றை முழுவதுமாக இந்தத் தொடரில் பார்க்கலாம்.

 ஆனால் ராமாயணம் எழுந்ததே ஒரு சாபத்தினால் தான்!

அதை முதலில் பார்ப்போம்.

 ஒரு முறை தமஸா நதி தீரத்தில் ஸ்நானம் செய்யச் சென்ற வால்மீகி முனிவர் தனது சிஷ்யரான பரத்வாஜரை நோக்கி, “எனது உதக பாத்திரம் கீழே வைக்கப்படட்டும். எனது மரவுரி என்னிடம் கொடுக்கப்படட்டும். சிரேஷ்டமான தமஸா நதியில் ஸ்நானம் செய்யப் போகிறேன்” என்றார்.

மரவுரி தரப்பட்டது. அதை கையில் எடுத்துக் கொண்ட வால்மீகி முனிவர் நாற்புறமும் பார்த்தவாறே சஞ்சரித்தார்.

அப்போது அவர் ஒரு அற்புதமான இணைபிரியாத இரு க்ரௌஞ்ச பக்ஷிகளைக் கண்டார். அந்த ஆண்- பெண் ஜோடியை அவர் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு குரூரமான வேடன் அந்த ஜோடியில் ஆணைக் குறி பார்த்து அடித்துக் கீழே தள்ளினான். பெண் பறவை ரத்த வெள்ளத்தில் மிதக்கும் தன் ஜோடிப் பறவையைப் பார்த்து கதறிற்று.

இதைப் பார்த்த முனிவர் திடுக்கிட்டார். அவர் இதயத்தில் கருணை பொங்கியது.

அவர் வாயிலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாஸ்வதீ: சமா: |

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காம மோஹிதம் ||

–    பாலகாண்டம் இரண்டாம் ஸர்க்கம் – பிரம்மாவின் வருகை -ஸ்லோக எண் 13

இதன் பொருள் :

நிஷாத – ஓ, வேடனே!

க்ரௌஞ்சமிதுனாத் – கிரௌஞ்ச பக்ஷிகள் இணைபிரியாது இருக்கும் தருணத்தில்

காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த

ஏகம் – ஒன்றை

அவதீ: – கொன்றாய்

யத் த்வம் – அதனால் நீ

சாஸ்வதீ:  – நீடித்த

சமா: – ஆண்டுகளீல்

ப்ரதிஷ்டாம் – இருப்பை

மா அகம: – அடைய மாட்டாய்!

இப்படி ஒரு சாபத்தை வேடனுக்குக் கொடுத்தார் வால்மீகி.

இந்த பக்ஷியின் நிமித்தமாக சோகத்தினால் பீடிக்கப்பட்ட என்னால் சொல்லப்பட்ட இது என்ன? என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அந்த ஸ்லோகத்தின் நிஜமான அர்த்தம் அவர் மனதில் எழுந்தது.

மாநிஷாத – ஶ்ரீனிவாஸ!

க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில்                           காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட

ஏகம் – ஒருவனை

அவதீ: – கொன்றீர்

யத் – அதனால்

த்வம் – நீர்

சாஸ்வதீ: – நீடித்த

சமா: -ஆண்டுகளில்

ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை

அகம: – அடைவீராக

இப்படி ஒரு அர்த்தம் அவர் மனதில் உதிக்க அவர் வியந்து போனார்.

“இது பாதங்களுடன் அமைந்த எழுத்தொத்த வீணைத் தந்தியில் தாளத்தோடு கூடியது போன்று அமைந்த்ருக்கும் இது, ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே இருக்கட்டும்; வேறு விதமாக இல்லை” என்று அவர் கூறிய போதே பிரம்மா தானாகவே அவர் முன் தோன்றி, “. உம்முடைய வாக்கியமானது எனது அபிப்ராயத்தினாலேயே உண்டானது, நீங்கள் ராமாயண மகா காவியத்தை இயற்ற வேண்டும்” என்று சொல்லியதோடு “ஶ்ரீ ராமரின் சரித்திரமானது உலகத்தில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரை நிலைபெற்றிருக்கும். மேலும் ராமாயணம் எது வரை இருக்குமோ அதுவரை எனது உலகங்களில் நீர் ஸ்திரமாக இருக்கப் போகிறீர்” என்று கூறி அருளினார்.

 இப்படியாக பிரம்மா வால்மீகி முனிவருக்குக் கூற, அற்புதமான ராமாயண மகா காவியம் உருவானது.

 ஒரு சாபம் முனிவரது வாயிலிருந்து வர, அதுவே ராமாயண சரித்திரத்தின் ஆரம்பமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது.

 இன்னும் 60 சாபங்கள் ராமாயணத்தில் உள்ளன.

அவற்றையும் பார்ப்போம்!

***

More (Forests,Hills, Sea) Secrets from Vishnu Sahasranama -13 (Post No.13,239)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,239

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

We have already seen the wonder of grouping all the three holy Ficus plants in one sloka of Vishnu Sahasranama (VS)

Three Holy Ficus Trees (Banyan, Pepul, Udumbara) of Family Moraceae.

Plant Soma is also explained already.

xxxx

Here more plant names who are considered Gods in VS.

Vrksah – Word number 555

One who is unshakable like a tree. Svatesvatara Upanishad

3-9 says,

Vrksa iva stabhdo divi tisthatyekah – in the spiritual dimension the Paramatma stands alone, unmoving like tree.

xxxxx

Mahidharah – Word number 369

One who props up the earth in the form of mountain.

Vishnu Purana says 2-12-38

Vanaani vishnur girayo disas ca- forests , mountains, quarters, all these are Vishnu Himself.

My comments

Vishnu purana is the oldest purana. V.S. is the oldest sahasranama. Both praise nature as God. We cant see such a thing anywhere in the old.

xxxx

jagatah Setuh – Word number 288

People’s Bridge or World Bridge

One who is the bridge to go across the ocean of Samsara.

Or one who like a setuh or a bund preserves the social order.

Says Brhadaranya Upanishad 4-4-22

Eas settur vidharana esaam lokaanaam asambhedaaya-

He is verily the Setu, the bund, that saves the worlds from the chaos of intermingling.

xxxx

Sea in VS

Apaam nidih- Word number 323

The word means water source or the ocean. the Gita 10-24 says Sarasaam asmi saagarah- among all the pools of water, I am Samudra or ocean. the Lord is called by that name because the ocean is one of His special manifestations.

Ambhonidhih – Word number 517

It can mean what is said in the Gita 10-24

Sarasaam asmi saagarah- among all the pools of water, I am Samudra or ocean. or one in whom the Ambas or all beings from Devas down dwell.

Ratnagarbah – Word number 473

The ocean is so called because gems are found in its depths. As the Lord has taken the form of the ocean, He is called by this name.

Srutissaagarah- Word number 264

Vedic Ocean. one to whom all the Sruti or Vedic words and sentences flow (that is, have as their purport just as all water flows to the ocean)

–Subham—

Tags- Plants, Hills, sea, Vishnu Sahasranama

நெல் உவமையும் பயிர் உருவகமும்  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-10 (Post.13,238)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,238

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் நெல் முதலிய பயிர்களை பயன்படுத்தி என்ன செய்திகளைத் தருகிறார் என்று காண்போம்.

பயிர் உருவகம்

Kundalini Yoga

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே

In the Triangular Field,

Are the Ploughs Three;

Yoke the bulls tight with rope;

Drive the ploughshare deep

They who held not their tongue,

Ploughed not in the Center

Closing their legs together,

They plough the waste in vain.

இதில் பிராணாயாமப் பயிற்சி மூலம் முன்னேற்றம் காணுவதை விளக்குகிறார். மூவணை ஏர் = இடகலை, பிங்களை , சுழுமுனை என்னும் மூன்று நாடி களுக்குரிய வாயு;

முக்காணி=மூலாதாரத்திலுள்ள முக்கோணம்; தறி = வீணாத்தண்டு ; அணிகோலி = வாயுவை முறையாகச் செலுத்தி; நாவணை கோலி = நாவால் அணைபோட்டு; நடுவிற் செறு = யோக வயல் ;

முறையாக யோகம்/ மூச்சுப் பயிற்சி செய்வோர்  மூச்சினை முறையாக வழிப்படுத்தி ஆறு பகைளை வெல்வர் ; அதைச் செய்யாதோர் பிறப்பு இறப்பு என்னும் விலங்குகளை காலில் மாட்டிக்கொண்டு பிறவி நிலத்தை உழுது மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்  இங்கு பயிர் செய்தலை உருவகமாகப் பயன்படுத்தியுள்ளார்.

xxxxxxx

பனை மரம் , 7 கடல்


ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு பனை
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே

 Kundalini Yoga

Six are the streets

In their junction are juicy palm trees four;

With ladder difficult to climb,

I ascended the palm’s heights;

And there I saw the seas seven.

ஆறு தெரு= உடம்பிலுள்ள 6 ஆதாரங்கள் ; அகப்பட்ட சந்தி= மூலாதாரம்; சாறுபடுவன= இனிமை தருவன; நான்கு பனை = 4 இதழ்களையுடைய ப னை போன்ற மலர்;  ஏணி = சுழுமுனை; கடல் ஏழ் = 7 பிறப்பு.

மூலாதாரத்தில் தேன் போல இனிமை தரும் 4 பனைகள் உள்ளன. நாம் காணும் ஏணியால் அடைய முடியாது. ஆனால் சுழுமுனை மூலம் அடையலாம்.அதன் மூலம் அடைந்தபோது இறைவனைக் கண்டேன்; ஏழு பிறவியிலிருந்து மீண்டேன் .

xxxxx

நெல் உவமை 

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி

உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்

தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி

இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து

புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன

பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்

உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

They Care Not for Soul’s Well-Being

They borrow grain;

They pound it hard,

Feed the base (senses),

And nourish the body;

Thus they wander

Their lives to live;

But in the valley broad

A prey to raging flames

The body finally lies;

This they realize not.

xxxxxxx

In days of yore, the Sages Four

Sought the Holy One in Kailas;

There, under the wild banyan tree

The Supreme One His teachings imparted;

They are of evil speech

Who think not of Him;

Ready to march to the burial heap

They stand in wait.

நெல்லைக் கடன் வாங்கி சோறு சமைத்து உண்டு உடம்பை வள ர்க்கின்றனர்; அதுவோ முடிவு காலத்தில் தகனம் செய்யப்படும்; இதை அறிந்தும் உடம்புதான் உயிர் என்று எண்ணித் திரிகின்றனர். அதுவே கரும்பு என்று எண்ணுகின்றனர்.

முன்னொரு காலத்தில் ஆல மரத்துக்கு அடியில் தட்சிணாமூர்த்தியிடம் நால்வர் மெய்ப்பொருளைக் கேட்டறிந்தனர் அதை உணராதோர் பழி மொழிகள் பேசி காலம்தள்ளி இறுதி நாளுக்காக காத்திருக்கின்றனர்.

xxxx


ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

If you in ardour pursue

The search for power to acquire Kaya Siddhi,

You shall flourish far and wide

Like a seed of paddy planted

In a million, million fields;

Do you therefore meditate single-minded

On the mantra that conquers Fate.

ஒரு நெல் விதை, பல்லாயிரம் நெல் விதைகளைத்தருகிறது .அதுபோல காயசித்தி பெற விரும்புவோருக்கு பலன் கிடைக்க வேண்டுமானால் , விதியை வெல்லும் மந்திரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு தியானிக்கவேண்டும் .

xxxxx

வில்வமும் தருப்பையும்

மீது சொரிந்திடும் வெண்ணீறுஞ் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத வதகத்தான் மஞ்சனஞ் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலஞ் செய்யுமே.

Then pour the ashes white and powdered incense,

Shower flowers diverse, Kusha grass and Bilva leaves,

Sprinkle water holy,

And raise a platform three feet by three.

சமாதிக் கிரியை என்ற தலைப்பின் கீழ் திருமூலர் இதைச் சொல்கிறார்; சிவபெருமானை நீரால் அபிஷேகம் செய்யுங்கள் திருநீறு , மணம் மிகுந்த பொடிகள், தருப்பை, வில்வத்தால் அர்ச்சியுங்கள்; இப்படி வழிபாடு செய்ய, மூன்று மூன்று தேவை ;மூன்று காலம்- காலை மதியம், மாலை.மூன்று கருவி- உள்ளம், உரை, உடல்; மூன்று பணி – அன்பு, அறிவு, ஆற்றல்;

xxxx

நெருஞ்சி முள் உருவகம்

The Renunciate Shall Walk in the Straight Path

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்

நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்

நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு

நெறியின் நெருஞ்சில் முள் பாய கிலாவே.

உரை

(ப. இ.) அன்புநெறியாகிய இல்லறமும் அதன் முதிர்வாம் அருள் நெறியாகிய துறவறமும் இருகால்போல் அகம் புறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நெறியாகும். அந்நெறியினைப் படைத்தவன் சிவனே. அந்நெறி நில்லாது தீநெறி நிற்பார் துன்புற்று அந் நெறிக்கு வருமாறு செய்ய நெருஞ்சில் முள் போன்ற துன்ப நெறிகளையும் படைத்தளித்தனன். மெய்ந் நெறிக்கண் வழுவாது ஒழுகவல்லார்க்குப் பிறவித்துன்ப முதலிய எத்துன்பங்களும் எய்தா. அத்துன்பங்கள் நெருஞ்சிலாக உருவகப்படுத்தப்பட்டன.

(அ. சி.) நெறி – வழி. இம் மந்திரம் அறவழியிற் செல்லாதவர்களைத் துன்பம் சுடும் என்பதை உவமான முகத்தால் உணரவைத்தது.

He laid the path, and planted the thorns along;

When you from the path deviate

The thorns of temptation shall prick you;

They that deviate not,

Them the thorns prick not.

—subham—-

Tags- நெருஞ்சில் முள் உருவகம், பயிர் உருவகம் ,நெல் உவமை,  வில்வம், தரப்பை, 4 பனை மரம் , 7 கடல்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 10 (Post No.13,237)

சைஸிஜியம் க்யூமினி / நாவல் மரம்நவாப்பழ மரம்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,237

Date uploaded in London – –   13 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Part 10 

F40. Family: Menispermaceae 

141. Cissampelos pareira L.

குடும்பம் – மெனி ஸ்பெர்மேசி

சிஸ்ஸம்பெலோஸ் பரெய்ரா

வட்டத்திருப்பிபொன்முசுட்டை

தமிழ்நாட்டில் விழுப்புரம் வட்டாரம், மற்றும் ராஜஸ் தான் , மேற்குவங்கம், பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மாளிகை இது வேரை இடித்துப்பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கிறார்கள் .

xxxx

142. Parabaena sagittata Miers

142.பாரபீனா சஜிட்டாடா

நிகோபார் தீவு மக்கள் இதன் இலையை தேங்காயெண்ணெயில் பொறித்து காயத்தின் மீது தடவுகிறார்கள் .

xxxx

143. Stephania hernandiifolia (Willd.) Walp.

ஸ்டெபானியா ஹெரென்டிபோலியா

வங்க தேசத்தில் சிட்டகாங் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை .

xxxxxx

144. Tinospora cordifolia (Willd.) Miers

டினோஸ்போரா கார்டி போலியா /சீந்தில் கொடி / Seenthil Kodi.

அமிர்தவல்லி /அம்ருதம் என்ற பெயரில் சேர்வராயன் கல்ராயன் மக்களும், மத்திய பிரதேச, உத்தர பிரதேச மக்களும் இதன் தண்டை சாறு பிழிந்து பயன்படுத்துவர். பில் பழங்குடி மக்கள் இதன் வேரினை கழுத்தில் சுற்றிக்கொள்கிறார்கள்.

xxxx

F41. Family: Moraceae 

145. Artocarpus hirsutus Lam.

குடும்பம் – மோரேசி

ஆர்டோகார்பஸ் ஹிஸ்ருடஸ் /அயனி (மரம்)

மேற்குத் தொடர்ச்சி மலை மலண்ட் வட்டாரமக்கள் பட்டையை தேங்காயெண்ணெயுடன் பயன்படுத்துகிறார்கள் .

அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதனுடைய பழமானது சிறிய பலா பழத்தைப் ஒத்திருக்கும். இது நேராக வளரும் தன்மையுடையது. இது கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது.

.xxxx

.146. Ficus hirta Vahl

பைகஸ் ஹிர்ட்டா

வங்க தேச மக்கள் இதன் வேர் மற்றும் பழங்களை நசுக்கி பாம்பு கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.

xxxx

147. Ficus prostrata (Wall. ex Miq.) Miq.

பைகஸ் ப்ரோஸ்ட்ரேட்டா

மேற்கு மிஜோரம் மக்கள் வேரின் சாற்றைப் பயன்படுத்தி பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

xxxx

148. Ficus racemosa L.

148.பைகஸ் ரேசிமோசா

மத்தியப் பிரதேச மக்கள் இதன் விதைகளை பயன்படுத்துகிறார்கள் இதன் கஷாயத்தை மூக்கில் விட்டு விஷத்தை வாந்தி எடுக்க வைக்கிறார்கள். ராஜஸ்தான் உதய்ப்பூர் மக்கள் பட்டையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைக்கிறார்கள்.

xxxxx

F42. Family: Moringaceae 

149. Moringa oleifera Lam.

குடும்பம் – மோரிங்கேசி

149.மொரிங்கா ஒலிபெரா

அஸ்ஸாம் மக்கள் வேரினை மசித்துப் பயன்படுத்துகிறார்கள்

xxxx

F43. Family: Myrtaceae 

150. Syzygium cumini (L.) Skeels

குடும்பம்- மிர்ட்டேசி

சைஸிஜியம் க்யூமினி / நாவல் மரம்நவாப்பழ மரம்

ஒரிஸ்ஸா மக்கள் மரப்பட்டையை மசித்து உபயோகிக்கிறார்கள் .

xxxx

F44. Family: Nyctaginaceae 

151. Boerhaavia diffusa L.

குடும்பம் – நிக்ட்டா ஜினேசி

போராவியா டிப்யுஸா

ஒரிஸ்ஸா, மத்திய பிரதேச, உத்தர பிரதிசெம்மா மக்கள் செடியை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைக்கின்றனர்

xxxx

152. Boerhaavia repens L.

போராவியா ரெபென்ஸ்

அஸ்ஸாம் மக்கள் இதன் வேரை உபயோகிக்கிறார்கள்

xxxx

F45. Family: Onagraceae 

153. Ludwigia adscendens (L.) H. Hara

குடும்பம்- ஓனக்ரேஸி (Water Primrose)

லுட் விகா அட் சென்டென்ஸ்/ நீர்த்தண்டு கீரை, சதுப்பு மல்லிகை

கன்யாகுமரி வட்டார மக்கள் செடியை நசுக்கி பாம்புக்கடித்த இடங்களில் அப்புகின்றனர்.

xxxx

F46. Family: Orchidaceae 

154. Eulophia nuda Lindl.

குடும்பம் – ஆர்க்கிடேசி

யூலோபியா நூடா

மத்திய பிரதேச சித்திர கூட மக்கள் வேரின் சாற்றினைப் பயன்படுத்துகிறார்கள்

 xxxx

 F47. Family: Orobanchaceae 

155. Lindenbergia muraria (Roxburg ex D. Don) Brühl

குடும்பம்- ஒரோ பஞ்சேஸி

155.லிண்டேன்பேர்ஜியா முராரியா

ராஜஸ்தான் மாநில ஆள் வார் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

F48. Family: Oxalidaceae 

156. Biophytum candolleanum Wight

குடும்பம்- ஆக்சாலிடேசி 

பயோ பைடம் சண்டோல்லேனம்

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் வேறு நான்கு மூலிகைகளுடன் இதையும் சேர்த்தது நீரில் காய்ச்சி 14 நாட்களுக்கு குடிக்கச் சொல்கிறார்கள்

xxxxx

157. Oxalis corniculata L.

157. Oxalis corniculata L.

ஆக் சாலிஸ் கார்னிகுலேடா

மேகாலயா மற்றும் பாகிஸ்தான் பழங்குடி மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள் .

xxxxx

158. Oxalis debilis var. corymbosa (DC.) Lour.

ஆக்சாலிஸ்  டெபிளிஸ்

உத்தர பிரதேச மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.

xxxxx

F49. Family: Papaveraceae 

159. Argemone mexicana L.

குடும்பம் பாபாவேரேசி

ஆர்ஜிமோன் மெக்சிகானா

ராஜஸ்தான் ஆள்வார் வட்டார மக்கள் இதை பயன்படுத்துகிறார்கள்

xxxxx

 F50. Family: Phyllanthaceae  

160. Antidesma alexiteria L.

குடும்பம்- பில்லாந்தேசி

160.ஆன்டி டெஸ்மா அலெக்சிடேரியா

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள்

இலங்கையில்  “Heen embilla – හීන් ඇඹිල්‍ල”; கேரளத்தில் Thathalamaram என்று பெயர்கள்.

To be continued…………………………………………..

பாம்புக் கடி,   200  மூலிகை மருந்துகள் ,  Part 10, நாவல் மரம்,