பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 9 (Post.13,226)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,226

Date uploaded in London – –   10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART-9

F35. Family: Lauraceae 

126. Litsea ligustrina Hook. f.

126.லிஸ்டியா லீகுஸ்ட்ரீனா / காட்டு செண்பகம்

திருநெல்வேலி மலைவாழ் மக்கள், பாம்பு கடித்தால்  இதன் இலை, பட்டை, பூ  ஆகியவற்றைப் பொடி செய்து வெந்நீரில் கலக்கி மேலும் 3 தாவரங்களுடன் குடிக்கின்றனர் .

Powder of leaf, stem bark and flower along with leaves of Vitex altissima, Hygrophylla auriculata and Pavetta indica is mixed and heated with water and taken internally by the tribals of Tirunelveli hills, Tamil Nadu, India (Ayyanar and Ignacimuthu, 2005).

XXXX

F36. Family: Lecythidaceae 

127. Barringtonia racemosa (L.) Spreng.

குடும்பம் லெசிதிடேசி

பாரிங்டோ னியா ரேசிமோசா

வங்க தேச மக்கள் இதன்  இலைகளை பயன்படுத்துகின்றனர்.

XXXX

F37. Family: Loganiaceae 

128. Strychnos nux-vomica L.

குடும்பம்- லோகனியேசி

ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ் வாமிகா

ஒரிஸ்ஸா மக்கள் விதைகளை நசுக்கி சாறாக்கி பயன்படுத்துகிறார்கள். வேரின் மசியலையும் பயன்படுத்துகிறார்கள்

XXXX

F38. Family: Malvaceae 

129. Althaea officinalis L.

குடும்பம் மால்வேசி

129.ஆல் தேயியா அஃபிசினாலிஸ்

பாகிஸ்தானில் விஷக்கடி சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள்

XXXX

130. Bombax ceiba L.

130.பாம்பக்ஸ் செய்பா / இலவு

கேரளத்தில் வயநாடு பழங்குடி மக்களும், மிஜோரம், உத்தரபிரதேச  மக்களும் இலவ மரத்தின் இலைகளையும் பழங்களையும் பயன்படுத்துகிறார்கள்

XXXX

131. Grewia gamblei J.R. Drumm.

131.கிரிவியா காம்பலை / கரடி கசவு

திருநெல்வேலி ஜில்லா மலைவாழ் மக்கள் இல்லை மரப்பட்டை சாற்றை வேறு சில தாவரங்களுடன் சேர்த்து 5 நாட்களுக்கு கொடுக்கிறார்கள் (பாம்பு கடித்தால்).

XXXX

132. Helicteres isora L.

132.ஹெலிக்ட்டரிஸ் ஐஸோரா

வேரின் கஷாயத்தை உத்தர பிரதேச சோன்பஹ்ரா வட்டார மக்கள் குடிக்கிறார்கள்.

XXXX

133. Malva sylvestris L.

மால்வா  சில்வெஸ்டரிஸ்

மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட்  வாட்டர் மக்கள், இதன் இலையின் சாற்றை எலுமிச்சம் பழம் சாற்றுடன் கலந்து கொடுக்கிறார்கள்.

XXXX

134. Sida acuta Burm. f.

சிடா அக்யூடா

ரேவா ஜில்லா பழங்குடி மக்கள் இலைகளை உபயோகிக்கிறார்கள்.

XXXX

135. Sida cordifolia L.

135.சிடா கார்டிபோலியா

நிலத்துத்தி .சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி (Sida cordifolia)

கன்யாகுமரி ஜில்லா மக்களும் ராஜஸ்தான் ஆள்வார் ஜில்லா மக்களும் இலையின் சாற்றை பாம்பு கடித்த இடத்தில் தட வுகிறார்கள்

XXXX

136. Sida rhombifolia L.

136.சிடா ராம்பிபோலியா

மேகாலயா காசி, ஜயந்தியா பழங்குடி மக்கள் இலைகளையம் வேரையும் அரைத்து மிளகுடன் சேர்த்து  உபயோகிக்கிறார்கள் .

XXXXX

137. Urena lobata L. subsp. lobata (L.) Bross. Wal.

137.யுரீனா லோபாட்டா / கொடி துத்தி

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் வேரின் கஷாயத்தை வேறு இரண்டு தாவரங்களுடன் சேர்த்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

XXXX

F39. Family: Meliaceae 

138. Aglaia roxburghiana var. courtallensis Gamble

குடும்பம் – மெலியேசி

அக்லையா  ராக்ஸ்பார்கை யானா / சொக்கலை

நெல்லை  ஜில்லா மக்கள் இல்லை, விதைகளின் கஷாயத்தை வேறு சில தாவரங்களுடன் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

XXXX

.

139. Cipadessa baccifera (Roth.) Miq.

139.சிபடெக்ஸா பாக்சிபெரா / மரமல்லி

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இலையின் கஷாயத்தை வேறு சில மூலிகைகளுடன் சேர்த்து 41  நாட்களுக்கு குடிக்கிறார்கள்

XXXX

.140. Melia azadirach L. (Azadirachta indica A. Juss.)

140.மெலியா அசாதிராக்

மத்திய பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது

XXXXX

TO BE CONTINUED………………………………..

tags-  பாம்புக் கடி , 200  மூலிகை மருந்துகள் , பகுதி 9

ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்! (Post No.13,225)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.225

Date uploaded in London – — 10 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் மே மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்!

ச. நாகராஜன் 

    நைமிசாரண்யத்தில் குழுமும் ரிஷிகளும் மகான்களும் தங்களை விட மூத்த ரிஷிகளை  அணுகி, “எங்கள் முன்னோர்களின் சரித்திரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று பயபக்தியுடன் பவ்யமாகக் கேட்பது வழக்கம்.

அவர்களது சிரத்தையினால் மகிழும் மாபெரும் ரிஷிகள் அற்புதமான முன்னோர்களின் வரலாறுகளைக் கூறுவர்.

அதைக் கேட்கும் ரிஷிகள், எப்படிப்பட்ட உன்னதமான பரம்பரையில் வந்தவர்கள் நாம் என்று மனம் மகிழ்து உத்வேகம் பெற்று இன்னும் அதிகமதிகம் முன்னேறத் துடிப்பார்கள்.

ஆனால் இன்றைய கால கட்டத்திலோ நம் முன்னோர்கள் சரித்திரத்தைக் கேட்பாரும் இல்லை; அதைச் சொல்வாரும் இல்லை; ஏன், அதை அறிந்து சொல்லக் கூடியவரும் அவ்வளவாக இல்லை.

இதனால் தான் நமது சரித்திரம் சிதைந்து சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது.

உலகிற்கே ஆயுர்வேதம் என்ற அற்புத சிகிச்சை முறையை அளித்தவர்கள் நாம்.

அதற்கு ஆசாரியராக சரகர், சுஸ்ருதர் போன்ற மாபெரும் மேதைகள் இருந்தனர்.

இவர்களைப் பற்றி முழுவதுமாக யாருக்குத் தெரியும்? அவர்களின் சிறப்புகள் பற்றி யார் அறிவர்? அறிவதற்கு ஆசையுடன் இருப்பவர்கள் யார்?

சுஸ்ருதர் 122 (சிலர் 125 என்று  குற்ப்பிடுகின்றனர்) சஸ்த்ர சிகிச்சைக் கருவிகளை உருவாக்கி அனாயாசமாக உடலை பதமாக அறுத்து சிகிச்சை செய்ய வேண்டிய அங்கங்களுக்கு உரிய சிகிச்சை அளித்தவர் என்றால் நம்ப முடிகிறதா?

மூளை அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வெற்றிகரமாக ஏராளமானோரின் உயிரைக் காத்த மாபெரும் வைத்தியர் அவர் என்பதை நமது வரலாறை சரியான முறையில் அணுகிப் பார்த்தால் தெரியவரும்.

இப்போது ஒரு கேள்வி எழும்?

அப்படியானால் அவர் கண்டுபிடித்த கருவிகள் எங்கே? அநத சிகிச்சை முறைகளை ஏன் யாரும் மேற்கொண்டு பின்பற்றவில்லை?

சரியான கேள்வி.

விடை  காண சரித்திரத்தை நாட வேண்டும். 

ஆயிரக்கணக்கான பேர்களை கலிங்கப் போரில் கொன்று குவித்த அசோக சக்கரவர்த்தி மனம் மாறி புத்த மதத்தை ஏற்றான். அஹிம்சையே பரம தர்மம் என்பதை உணர்ந்தான். கொலைகாரக் கருவிகளை அவன் தடை செய்தான். ஆனால் சுஸ்ருதர் மருத்துவத்திற்காகக் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சை கருவிகளையும் சேர்த்து அவன் தடை செய்தான்.

அதைப் பின்பற்றுபவரையும் அவன் தடுத்து நிறுத்தினான்.

உயிர் காக்க உதவிய சஸ்த்ர சிகிச்சை கருவிகள் முற்றிலுமாக ஒழிந்து போயின.

பின்னால் ஏற்பட்ட முகலாய மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் கொஞ்ச நஞ்சமிருந்த மீதிக் கலைகள் பற்றிய  அறிவை  முற்றிலுமாக ஒழித்தன. அது இன்றைய நிலையில் கொண்டு விட்டிருக்கிறது!

மிஸௌரி கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள் 2003-ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஒரு அபூர்வ உண்மையைக் கண்டறிந்தனர்.

8000 வருடங்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் பல்லைக் குடைந்து பல் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்தனர் என்பதே அந்த உண்மை. படிமப் பாறைகளை ஆராய்ந்த அவர்கள் இதைக் கண்டுபிடித்துக் கூறினர்.

இப்படி மருத்துவத் துறையில் சிகரம் ஏறிய ஒரு நாடு இந்தியா என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சுஸ்ருத சம்ஹிதா 

சுஸ்ருதர் கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 

அவர் எழுதிய நூல் : சுஸ்ருத சம்ஹிதா. 

இதில் 186 அத்தியாயங்கள் உள்ளன.

1120 வியாதிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.

700 மூலிகைகள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தாது வகைகளில் 64  தயாரிப்புகளும் மிருகங்களின் அடிப்படையில் 57 தயாரிப்புகளும் விளக்கப்படுகின்றன.

வியாதி வந்து சிகிச்சை தருவதை விட வியாதி வராமல் இருக்க வழி வகைகளைக் கூறுவதே முக்கியம் என்பது சுஸ்ருதர் கருத்து.

1.சூத்ர ஸ்தானம் 2. நிதான ஸ்தானம் 3. சரீர ஸ்தானம் 4. சிகித்ஸா ஸ்தானம் 5. கல்ப ஸ்தானம் 6. உத்தர ஸ்தானம்

என்று இப்படி ஆறு பிரிவுகளைக் கொண்டது இந்த நூல் 

ஆஹர்யம் – உடலிலிருந்து அழுகிய பகுதிகளைப் பிரித்தெடுத்தல், பேத்யம் – துண்டித்தல், சேத்யம் – ஆழமாகக் கிழித்தல், எஸ்யம் – கண்டறிதல், லெக்ய – சுரண்டுதல், சிவ்யம் – தையல் போடுதல், வேத்யம் – சிறு துவாரம் இடுதல், விஷ்ரவனியம் – திரவங்களைப் பிரித்தெடுத்தல், என இப்படி பல்வேறு சிகிச்சை முறைகளை சுஸ்ருதர் நுட்பமாகக் குறிப்பிடுகிறார்.

அகுப்ரஷர்

சுஸ்ருதர் அகுப்ரஷர் பற்றியும் குறிப்பிடுகிறார்.

சூஸோ வேத சிகித்ஸா என்று இது குறிப்பிடப்படுகிறது.

சரீர ஸ்தானம் பிரிவில் 6 மற்றும் 8-ம் அத்தியாயங்களில் இது விவரிக்கப்படுகிறது.

ஆறாவது அத்தியாயத்தில் நாளங்கள் மற்றும் அது இருக்கும் இடங்கள் பற்றி நுட்பமாக விளக்கப்படுகிறது. இதை நன்கு அறிந்தால் தான் சிகிச்சை வெற்றிகரமாக இருக்கும் என்பதால் இதில் உள்ள 34 அத்தியாயங்களையும் ஒருவர் முறைப்படி படித்து அனுபவபூர்வமாக தேர்ந்தால் தான் சிறந்த வைத்தியராக ஆக முடியும்.

7வது அத்தியாயத்தில் 12 பகுதிகள் உள்ளன.  இதில் நாளங்கள் உள்ள இடங்கள் கூறப்படுகின்றன. தமனிகள் எந்த நாளங்கள் வழியே செல்கின்றன என்பது உள்ளிட்ட நுண்ணிய விவரங்கள் தரப்படுவதோடு எந்த நாளங்கள்  வாயு, பித்தம், கபம் ஆகியவற்றை ஏந்திச் செல்கின்றன என்பதும் விளக்கப்படுகிறது!

எட்டாவது அத்தியாயத்தில் இப்படிப்பட்ட சிகிச்சைமுறையில் தேர்ச்சியைச் சிலரே பெறமுடியும் என்பதும் எல்லோரும் சகட்டுமேனிக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியாது என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.

எந்த பருவத்தில் எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

45 விதமான வியாதிகளுக்கு ஊசியின் அளவும் வடிவமும் தனித்தனியே இருக்க வேண்டும்.

இவர்களுக்கான பத்திய உணவு தனி.

சீனாவில்  அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாக அகு ப்ரஷர் ஆனதும் அது பிரபலமாக ஆரம்பித்தது.

ஆனால் அதன் ஆரம்பம் பாரதமே என்பது சுஸ்ருத ஸம்ஹிதையால் தெரிய வருகிறது.

பழைய கலைகளை அதன் ,மகோன்னதமான ஸ்தானத்திற்கு மீண்டும் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து முயற்சி செய்தால் அதற்கு ஆதாரமாக அமைவது ஆயுர்வேதமாகும்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் எல்லாக் கலைகளும் தானே வரும் இல்லையா, சிந்திப்போம், செயல்படுவோம்!

***

https://archive.org/details/sushruta-samhita

என்ற தளத்திலிருந்து இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்ஸ்கிருத நூல் இது. மொத்த பக்கங்கள் 500.

https://indianculture.gov.in/rarebooks/english-translation-sushruta-samhita-based-original-sanskrit-text-vol-i-sutrasthanam

என்ற தளத்திலிருந்து இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் தொகுதி இது..

Kaviraj Kunja Lal அவர்களால் எடிட் செய்யப்பட்ட நூல் இது. 332 பக்கங்கள் கொண்ட நூல் இது. இதில் சுஸ்ருதரின் அறுவை சிகிச்சை கருவிகளின் படங்களையும் பார்த்து பிரமிக்கலாம்.

***

More ( History ) Secrets from Vishnu Sahasranama -9 (Post No.13,224)

Mitanni/ Vedic Civilization in Middle East in 1600 BCE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,224

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

The biggest blow to Max Muller (1823-1900) gang and Dravidian gang came from the discovery of Sanskrit words, names of Vedic Gods and Vishnu Sahsranama name in Turkey. They were dated 1400 to 1600 BCE. Since they were archaeological objects (cuneiform tablets) no one in the world denied them; but they completely hid them. No white skinned fellow mentioned it in any Vedic article. Only Kanchi Paramacharya (1894-1994) mentioned it in his 1950 Madras lectures as soon as the German discovery appeared in News Papers. The Germans discovered it only after many famous Indologists death.

Since this blog has full details in several articles about Mitannian (Turkey-Syria) civilization, I will briefly mention it.

1.Bogazkoy inscription in Turkey

2.Kikkuli’s horse manual in Turkey

3.Tushrata Letters ( Amarna Letters) in Egypt

Vedic Gods are mentioned in the inscription in the same order as we see it in Rig Veda. Asko Parpola, top most Indus Valley researcher, has pointed it out. His book Deciphering the Indus Script is the best book on the subject ( I have almost memorised the book by reading it many times).

The reason for mentioning it here is the following word in Vishnu Sahasranama (VS)

xxxx

Pratardanah- Word No.59 in VS

Shankara says, destroyer of all at the time of cosmic dissolution.

My comments

This is one of the names in Mitannian civilization along with Dasaratha.

MaittaEponymous founder, maybe mythical
Kirtac. 1540 BCFirst known king, may be also legendary
Shuttarna ISon of Kirta based on Alalakh seal[89]
Parattarna Ic. 1500 BCSon of Kirta, contemporary of Idrimi of Alalakh, Pilliya of Kizzuwatna, Zidanta II of Hatti
Parshatatarc. 1485 BCSon of Parattarna I
Shaushtatarc. 1465 BCContemporary of Sinia and Qis-Addu in Terqa; Tudhaliya I of Hatti; Niqmepa of Alalakh, sacks Ashur
Parattarna IIc. 1435 BCContemporary of Qis-Addu in Terqa
Shaitarnac. 1425 BCContemporay of Qis-Addu in Terqa
Artatama Ic. 1400 BCTreaty with pharaoh Thutmose IV, contemporary of pharaoh Amenhotep II
Shuttarna IIc. 1380 BCDaughter marries pharaoh Amenhotep III in his year 10
Artashumarac. 1360 BCSon of Shutarna II, brief reign
Tushrattac. 1358 BCContemporary of Suppiluliuma I of the Hittites, and pharaohs Amenhotep III and Amenhotep IVAmarna letters
Artatama IIc. 1335 BCTreaty with Suppiluliuma I of the Hittites, contemporary of Ashur-uballit I in Assyria
Shuttarna IIIc. 1330 BCContemporary of Suppiluliuma I of the Hittites
Shattiwazac. 1330 BCVassal of the Hittite Empire, also known as Kurtiwaza or Mattiwaza
Shattuarac. 1305 BCVassal of Assyria under Adad-nirari I
Wasashattac. 1285 BCSon of Shattuara
Shattuara IIc. 1265 BCLast king of Mitanni before Assyrian conquest

All Sanskrit names!! Pratardana is written as Parattarna 1500 BCE and Dasaratha is written as Tushratta 1358 BCE.

Sri Lankan, Malaysian and Mauritius people spell their names only like the above list. My friends in these countries write Puvana (Bhuvana), Tamayanti (Damayanti), Tasrata (Dasarathan), Rasendran (Rajendran), Kiruttinan (Krisna). Even today millions of Sanskrit names are written this way. In South East Asian countries we need dictionary to identify even Ramayana, Mahabharata characters. They distorted Hindu names beyond recognition.

In Tamil we have inscriptions staring from 3rd century BCE only. That too one line or two line inscriptions with Prakrit names

Cyliner Seal from Vedic Civilization in Iraq, Syria, Turkey etc.

xxxx

Vardhamaanah- 262

one who multiplies in the form of the universe, according to Shankara.

My comments

Jain Tirtankara Vartamana Mahavira lived around 600 BCE and the most revered of all the 24 Tirtankaras. He was the 24th one. In India only two people are called Mahavir in religion- Anjaneya and Mahavira.

xxxx

Viirah – 643

One who is courageous. Tamils use it very often.

Many South Indian kings used this word in their names.

e.g, Veera Pandya Kattabomman, Veera Pandyan, Veera Vallalan and many more.

xxxx

Aadityah- 563

One who was born of Aditi in His incarnation as Vaamana, according to Shankara.

My comments

Aaditya means sun. Many Choza kings had this name. (E.g. Aditya Karikalan)

xxxx

Sumukah- 456

One with a pleasant face. Shankara gives three quotes from Vishnu Purana, Valmiki Ramayana and Svatesvatara Upanishad.

My comments

We know this is one of the 16 popular names of Lord Ganesh as well. But Manu Smritis gives us a list of bad kings and Sumuka is one of them. Other bad kings’ names are identifiable in our Puranas, but Sumuka remains a mystery till this day. Neither history books nor Puranas have this king!

So there is lot of work for Indiana Jones!

xxxxx

Still we have more words from History  :  Manetho, Sammata, Samitnjayah, Purandarah ,Abu , Chaturdharmstraya , Sargon , Sri Vijaya . Solar- Lunar Dynasty, Manu , Madhwaya ,Garuddwaja

TO BE CONTINUED…………………….

Tags- More History Secrets , Vishnu Sahasranama- 9 , Mitanni, Dasaratha, Pratardana

சூ மந்திரக் காளி வசியம்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 6 (Post No.13,223)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,223

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பதினெட்டு  சித்தர்கள் பட்டியலில் திருமூலரின் பெயரையும் காணலாம். ஆனால் ஏனைய 17 சித்தர்களுக்கும் திருமூலருக்கும் பெருத்தவேறுபாடு இருப்பதை சித்தர் பாடல்களைப் படித்தோர் அறிவர். கிரியைகளை, சடங்குகளை உடைத்தெறிவது சித்தர்களின் பொதுவான போக்கு .

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்ற சிவவாக்கியர் பாடலைக் காட்டி பல அரைவேக்காடுகள் கோவில் வேண்டாம், குளம் வேண்டாம் என்பர்; திருமூலரோ ஏராளமான சடங்குகளை ஆதரிக்கிறார். அதில் ஒன்று மந்திர தந்திர சக்கரங்கள். அவற்றின் மூலம் கிடைக்கும் பலன்களையும் சொல்கிறார். ஏனைய சித்தர்கள் ஒரு சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்டினால் இவரோ ஒரு ‘என்சைக்ளோப்பீடியா’வையே நம் கையில் கொடுத்து இருக்கிறார்.

ஒவ்வொரு பாட்டையும் எடுத்துக்கொண்டு ‘வெப்சைட்’டுக்குப் போனால் பழைய உரைகாரர்களுக்கும் புதிய உரைகாரர்களுக்கும் வித்தியாசம் – பெருத்த வேறுபாடு — இருப்பதைக் காணலாம்.

நான் சுலபமாக எட்டு கோடு போடு; குறுக்கே எட்டு கோடு போடு; அதை எழுது இதை எழுது ; அப்போது என்ன நடக்கிறது பார் என்று எழுதிக்கொண்டே போகலாம்.; இப்படித்தான் லண்டன் சாமிநாதன் உள்பட அனைவரும் எழுதுகின்றனர். அவை ஏட்டுச் சுரைக்காய்கள். யார் ஒருவர் அதை பின்பற்றி சித்தி அடைந்திருக்கிறார்களோ அவர்கள் சொல்லுவதைத்தான்  நம்பவேண்டும் . தற்காலத்தில் , திருமந்திர உரைகாரர்கள் யாரும்,  அப்படி பக்குவ நிலை எய்தியதாக நான் நம்பவில்லை; ஆயினும் திருமந்திரத்தில் பல ரகசியங்கள் இருக்கின்றன; படியுங்கள், பாதுகாருங்கள் என்று சொல்லுவதில் தவறில்லை .

ஆதி சங்கரர் போல சகல கலா வல்லவர் ஒருவர் அவதரிக்கையில், அற்புதங்கள் நிகழும்போது, இந்தப்பாடல்களின் பொருள் நமக்கு விளங்கும் ; அவர் நாடெங்கும் சென்றதும் உக்கிர தேவதைகளின் சக்தியைக் குறைக்க தாடங்கம் பிரதிஷ்டை செய்ததும் காசியில் மக்களை ஈர்க்க ஜன ஆகர்ஷண சக்கரத்தையும் திருப்பதியில் பணத்தை ஈர்க்க  தன ஆகர்ஷண சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்ததையும் நாம் அறிவோம் ; திருமூலரும் அதிசய சித்திகளை அடைய சில வழிமுறைகளை சொல்கிறார். இவைகளை யாராவது செயல் முறையில் செய்து காட்டும்வரை பாடல்களுக்கு ஓரளவு தான்மதிப்பு ; அது பாடல்களின் குறை இல்லை ; அதை பயிலுவோரின் குறைபாடே.

இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்

தம்பனம்

எந்த ஒரு பொருளையும் , ஆளையும் ஸ்தம்பிக்கச் செய்தல்; அதாவது இயங்க முடியாமல்  செய்யும் வித்தை
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையுள் புசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. 997.

997: Sthambana Chakra

On fresh plank of a peepul tree wood

Figure out Five Letter Mantra with “Ma” to begin–Ma, Si, Va, Ya, Na

In similar fashion inscribe it on leaf of palm

Smear it with wax

And warm it gently over fire,

Center thy meditation on it,

Strong the concentration thou attain

Thine enemies rendered actionless, sure (Sthambana*).

பொருள் : நிலையான அரசம் பலகைமேல் நேராகப் பொருத்த மகரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையில் அவ்வாறே அடைத்து சாதகன் பொருந்தும் தேன் மெழுகை ஓலையுள் பூசிச் சுடரில் சிறிது வெதுப்பத் தம்பன கன்மமாகும். (தம்பனம் – கட்டுதல் அரசமரம் மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாகும்.)

xxxxx

மோகனம்

mōkaṉam  .Bewildering; confusing; மயக்கமுண்டாக்குகை. Magic art of fascinating aperson, one of aṣṭa-karumam, q.v., also one ofaṟupattu-nālu-kalai, q.v.; அஷ்டகருமத்துள் ஒன்றும் அறுபத்துநாலு  கலையுள் ஒன்றுமான பிறரை  மயங்கச்செய்யும் வித்தை.; ஒருவரை வசப்படுத்தும் வித்தை
கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே. 998.

998: Mohana Chakra

On a plank of Konrai tree wood

At the lower end

Inscribe “Na” and “Si”

And on palm leaf write letter “Ma”

Smear it with ingredients five,

(Ginger, Pepper, mustard, garlic and asofetida)

Bury it head downward in the hearth’s fire

You shall attain powers of Mohana* (Fascination).

பொருள் : கொன்றை மரப் பலகையைக் கருவியாகக் கொண்டு யமன் திசையாகிய தெற்குத் திசையில் அப் பலகையை அமைத்துத் தீமையாகிய பகையை ஒழித்தற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் மகாரம் மட்டும் இட்டு மறைப்பற்ற ஐங்காயத்தைப் பூசி அடுப்பில் தலை கீழாகப் புதைத்தால் மோகன சத்தியுண்டாம். (நசி என்றது மரண மந்திரம். ஐங்காயம் – சுக்கு, மிளகு, கடுகு, உள்ளி, காயம் ஆகிய ஐந்து. மோகனம் – மயங்க வைத்தல்)

xxxxx

உச்சாடனம்

இருப்பிடத்தைவிட்டு விரட்டும்  தொழில்.2. Expelling an evil spirit from a person orplace, exorcism, one of aṟupattu-nālu-kalai;  பேயோட்டுகை. 3. Incitement by magical incantation of an evil spirit to cause injury ; பேய்  முதலியவற்றை ஏவுகை
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. 999.

999: Uchchadana Chakra

On a plank of portia tree wood

At the north-west corner

Where Aiyanar his temple has,

And on a dark leaden-plate smear poison,

Inscribe mark of Bindu. (dot)

And surround it by “Om”

Then concentrate on the Mantra,

Uchchadana* (the Science of Exorcism) will be yours.

பொருள் : அவ்விடம் வடமேற்குப் புலமாகிய வாயுதிக்கில் ஐயனார் கோயிலில் தொழும் படியாகப் புரசப் பலகையில் காரீயத் தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் சூழ உச்சாடனத்திற்கு இடவும். (உச்சாடனம் – ஏவுதல்; பேயோட்டுதல்.)

xxxxx

ஒருவனை மந்திரத்தாலிறக்கச்செய்யும் வித்தை;  மரணம்
மாரணம்
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே. 1000

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 1001.

1000: Marana Chakra

Smear a green palm leaf with ingredients five stated

In a triangle Chakra in the cremation ground

Bury it at noon in southeast corner,

Where God Agni stands,

That the Mantric device for Marana*,

(Death) spell for enemies to destroy.

***********

1001 : Vasiya* Chakra

Smear palm leaf with yellow arsenic

Inscribe on it letters “A” and “U”

Place it on a bilva plank,

For a receptacle to serve,

And chant the Mantra eighty thousand times.

பொருள் : நண்பகற் போதில் ஒளி உடைத்தாகிய தென் கிழக்கு மூலையில் பச்சையான பனைஓலையில் ஐங்காயத்தைத் தடவி முச்சந்தியிலோ சுடுகாட்டிலோ புதைத்து வைத்திட பகையை அழிக்கும் மாரணமாக. அஃது அமையும் (மாரணம் – ஏவலால் செய்யும் கொலை, வசியம்)

973ல் ஓதியபடி மகர முதலாக வரைந்த ஐந்தெ ழுத்து ஏட்டின் மேல் அரிதாரமாகிய மருந்து பூசி , அதன்மேல் அகார உகாரங்களை எழுதி, வில்வப் பலகையின் மேலும்  மகர முறையாக வரைந்து முன்னெழுத்திய ஏட்டையும் அதன் மேல் வைத்து வசியமென்னும் கவர்ச்சி அமைத்தற்பொருட்டு, அம்மந்திரத்தினை எண்பதாயிரம் திருவுரு ஏற்றல் வேண்டும் ஜெபம் செய்தல் = திருவுரு ஏற்றல்

xxxxx

ஆகர்ஷணம்- தன முன் நில்லாதவரை தனக்கு முன்னே கொண்டுவரச் செய்யும் வித்தை  magic art of summoning an absent person into one’s presence, one of aṣṭa-karumam,

ஆகர்ஷணம்
எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொனefனாளிf எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 1002.

1002: Akarshana Chakra

Smear palm leaf with silver powder on a Thursday

Inscribe letter “U”,

Place it on the plank of white Jamun tree

Face Westward,

And Chant Pranava mantra (“Aum”) eight thousand times;

This the way to attain

Power of bringing things and people unto you–Akarshana*.

ஓலையில் யகார முதலாக மாறி அமைத்து , ஐந்தெழுத்தினையும் எழுதி , வியாழக் கிழமையில் அவ்வோலையில் வெண்ணிறமான பொடியைப் பூசி வெண் நாவல் மரப் பலகையில் அதை வைத்து மேற்கு பார்த்து அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி 8000 தடவை உரு ஏற்றல் வேண்டும்.

To be continued………………………….

xxxxx

Tags-திருமந்திரம், திருமூலர் , சூ மந்திரக் காளி வசியம் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 6

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 30 (Post No.13,222)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,222

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 29

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 30

xxxx

சீ

326. வெட்டுக் காயத்திற்கு

சீதா செங்கழுநீர் இலையை அரைத்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டினால் இரண்டு மூன்று கட்டில் ஆறிவிடும்.

XXXXX

மேக ரோகிகளுக்கு உண்டாகும்

தாக ரோகத்தத்திற்கு

சீந்தில் தண்டும் நெற்பொரியும் சமனாய்ப் போட்டு தண்ணீரில் காய்ச்சி,  வேண்டிய போது தாகத்திற்கு கொடுத்துவர வேண்டியது.

XXXX

பித்தத்திற்கு

சீரகம்- சுக்கு- நெல்லி வற்றல் -ஏலம் – இவை சமன் கொண்டிடித்து இதற்குப் பாதி சீனி கலந்து திருகடிப் பிரமாணம் இருவேளையும் தின்றுவர   நிவர்த்தியாகும்

xxxx

மந்த வாய்வுக்கு

சீரகம்-ஏலம் –  பச்சைக் கற்பூரம் — ஓர் நிறையாய்  சூரணித்து சரி பங்கு சீனி சக்கரை கூட்டி திருகடியளவு அந்திசந்தி கொடுத்துவரத்  தீரும் .

xxxx

குளிர் சுரத்திற்கு கிஷாயம்

சீந்தில் — நிலவேம்பு – சிறு காஞ்சொரி – மல்லி – வட்டத்திருப்பி- விலா மிச்சம் வேர் — வேலிப்பருத்தி  பற்பாடகம் – சுக்கு – வகைக்கு  ஒரு பலம் இடித்துப் போட்டு  தண்ணீர் விட்டு அரைப்படியாகக் காய்ச்சி  ஆறு வேளை கொடுக்கச் சாந்தியாகும்.

இதுவுமது

சீரகமும் குருந்தொட்டி வேரும் ஓர் நிறையாய் எடுத்து கிஷாயம் செய்து ஆறு வேளை கொடுக்கச் சாந்தியாகும்.

xxxx 

உடம்பு நோயும் காய்ச்சலுக்கும்

சீதேவிப் பூண்டை இடித்துப் புட்டவித்து சாறு பிழிந்து கடுகு ரோகணியை அரைத்துக் கலக்கி வெள்ளாட்டுப் பாலுடன் கலந்து கொடுக்க நிவர்த்தியாகும்.

xxxx

படர்தாமரைக்கு

சீமை அகத்தியிலையை அரைத்து தேங்காயெண்ணெயில் குழைத்து படர்தாமரை — இடுப்பரணை  முதலிய படைகளுக்குத் தேய்த்தால் நிவர்த்தியாகும்.

xxxx

சு

மூல வாய்வுக்கு சாந்தி

சுக்கையிடித்து வஸ்திரகாயம் செய்து, அப்போது கறந்த பால் அரைக்கால் படியில் திருகடிப்பிரமாணம்  சுக்குத் தூள் போட்டு சாப்பிடவும். இப்படி சில நாள் சாப்பிட்டால் மூல வாய்வு உருத்தி வாய்வு தீரும்  பசியுண்டாம் .

xxxx

வாய்வு முதலிய சில்லறை விடம் தீர

சுடுதுரட்டி மூலத்தை பாலில் அரைத்து  அருந்தி வந்தால் சில்லறை விடங்கள் புடை கிரந்தி  கரப்பான் இவை தீரும் .

xxxx

336. நீர்க்கட்டு உடைக்க

சுறா மீன் தலையிருக்கிற இரண்டு கல்லையெடுத்து உலர்த்தி இளம் வெந்நீரில் உரைத்துக்கொடுக்க உடனே நீர் கட்டு உடையும்.

xxxxx

பிரமியத்திற்குப் பொதுப்பிரயோகம்

சுண்ணாம்பு தெளிவு , தண்ணீர் , நல்லெண்ணெய் — வகைக்குப்படி மாகாணி ஒன்றாய்க் கலந்துகொடுக்கத் தீரும் .

xxxxx

இரத்த மூலத்திற்கு

சுருள் பட்டையைச் சூரணித்து தேனில் குழைத்து இருபோது தின்று வந்தால் இரத்த மூலம் சாந்தியாகும் .

xxxx

சுண்டைக்காய் குணம்

வெண்பா

நெஞ்சிற் கபம் போம் நிரை கிருமி நோயும் போம்

விஞ்சுவாதத்தின் விளைவும் போம் – வஞ்சியரே

வாயைக் கசப்பிக்கும் மாமலையிலுள்ள சுண்டைக்காய்

காயைச் சுவைய்ப்பவர்க்கு காண் .

*************

சுண்டைக்காய்வற்றல் உபயோகம்

வெண்பா

பித்தவரோசகம் போம் பேராப்புழுச்சாகும்

உற்ற கிறாணியும் போம் — உட்பசியாம்

பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்

சுண்டைக்காய்  வற்றலுண்ணச் சொல்

தொடரும் ………………………………….

Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள் 30, சுண்டைக்காய், சீந்தில் கொடி

கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்! (Post No13,221)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.221

Date uploaded in London – — 9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 10-5-2024  அக்ஷய த்ரிதியை 

அக்ஷய த்ரிதியை – சிறப்புக் கட்டுரை

கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்!

ச.நாகராஜன்

கிருஷ்ண ரகசியம்!

கிருஷ்ணர் தனக்குப் பிடித்தமான பல இரகசிய விஷயங்களை தகுதி உள்ளவர்களிடம் அவ்வப்பொழுது கூறியுள்ளார். இந்த ரகசியங்கள்.

நம் வாழ்வில் முன்னேறுவதற்கான ரகசியங்கள்.

இதில் கிருஷ்ண பஞ்சமி என்பது கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களாகும்.

கிருஷ்ண பஞ்சமி

கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!

 மஹாபாரதத்தில் ஆஸ்வமேதிக பர்வத்தில் (அத் 92) வரும் ஒரு விஷயம் கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களைப் பற்றிக் கூறுகிறது.

அமாவாசை, பௌர்ணமி தினங்களும் அவற்றை அடுத்து வரும் த்வாதசி தினங்களும் ச்ரவண நக்ஷத்திர தினங்களும் ஆக இந்த ஐந்து தினங்களும் கிருஷ்ண பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து தினங்களும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான தினங்களாகும்.

பர்வத்வயம் சா த்வாச்யௌ ச்ரவணம் ச நராதிப |

மத்பஞ்சமீதி விக்யாதா மதிப்ரியா ச விசேஷத: ||

அக்ஷய த்ருதியை

அடுத்து மிக முக்கியமான விஷயங்கள் நடந்தது அக்ஷய த்ரிதியை தினத்திலே தான்.

அவற்றில் மூன்று பிரதான விஷயங்களை இங்கு பார்ப்போம்.

மஹாபாரதம் இயற்ற ஆரம்பித்த தினம்

மஹாபாரதத்தை இயற்றுமாறும் அதற்காக கணபதியை த்யானம் செய்யுமாறும் பிரம்மா வியாஸரிடம் கூற அவர் விநாயகரை தியானித்தார்.

விநாயகர் அவர் முன் தோன்றி மஹாபாரதத்தை எழுதுவதாகவும் ஆனால் தனது எழுதுகோல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்குமாறு அவர் ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும் என்றும் வியாஸரிடம் நிபந்தனை விதித்தார். வியாஸர் யோசித்தார். ‘சரி’ என்று அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்ட வியாஸர், விநாயகரை நோக்கி, “ஆனால் பொருளைப் புரிந்து கொண்ட பின்னரே எழுத வேண்டும்” என்று எதிர் நிபந்தனை விதித்தார்.

விநாயகர் புரிந்து கொள்ளக் கஷ்டமான ‘கூட ஸ்லோகங்கள்’ என்று கூறப்படும் புதிர் ஸ்லோகங்கள் 8800-ஐ வியாஸர் அவ்வப்பொழுது இயற்றவே அவற்றின் பொருள் இன்னதென விநாயகர் யோசிக்கலானார். அப்போது வியாஸர் இன்னும் பல்லாயிரம் ஸ்லோகங்களை மனதில் கவனப்படுத்திக் கொண்டார்.

இப்படியாக இயற்றப்பட்ட மஹாபாரதத்தின் மொத்த ஸ்லோகங்கள் அறுபது லக்ஷம் ஸ்லோகங்கள். அவற்றில் முப்பது லக்ஷம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் நின்றன. பதினைந்து லக்ஷம் ஸ்லோகங்கள் பிதுர்லோகத்திலும் பதினான்கு லக்ஷம் ராட்சஸர்கள், யக்ஷர்களிடத்திலும் மீதி ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் மனிதர் வாழும் பூமியிலும் நின்றன.

இந்த மஹாபாரதம் இயற்ற ஆரம்பிக்கப்பட்ட தினம் அக்ஷய த்ருதியை தினம்.

செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கும் தினமான இதில் ஆரம்பித்த எதுவும் அழியாது. காலம் செல்லச் செல்ல புகழைப் பெறும்.

மஹாபாரதமே இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

சூரிய அனுக்ரஹமும் ஶ்ரீ கிருஷ்ணரின் அனுக்ரஹமும்

வனவாசத்தின் போது தன் நிலையை எண்ணி வருந்திய திரௌபதி சூரிய பகவானை நோக்கி வேண்ட சூரியன் அக்ஷய பாத்திரத்தை அவளிடம் தந்து அழியாத உணவைத் தரும் பாத்திரமாக அதை அளித்தான்.

துரியோதனனால் தூண்டப்பட்ட துர்வாச முனிவர் திடீரென்று ஒரு நாள் பாண்டவர் இருக்குமிடம் வந்து தான் அதிதியாக வந்திருப்பதைத் தெரிவித்து உணவருந்த ஸ்நானம் செய்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

உணவு நேரம் முடிந்து அக்ஷய பாத்திரத்தை சுத்தப்படுத்தி வைத்த திரௌபதி திகைத்தாள். கண்ணனை வேண்ட அவர் முன் தோன்றிய கண்ணபிரான அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வருமாறு திரௌபதியிடம் கூறினார்.

திரௌபதி கொண்டு வந்த அக்ஷய பாத்திரத்தில் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு அரிசி மணி இருக்க அதை உண்டார் கிருஷ்ணன். அனைவரது வயிறும் நிரம்பியது அந்தக் கணத்திலேயே. திருப்தியுடன் துர்வாசர் சென்றார்.

சூரியன் அக்ஷய பாத்திரத்தை திரௌபதியிடம் அளித்த தினம் அக்ஷய த்ருதியை தினம். ஶ்ரீ கிருஷ்ணர் அக்ஷய பாத்திரத்திலிருந்து ஒரு மணி அரிசியை உண்டு அனைவரையும் திருப்திப் படுத்தியதும் அக்ஷய த்ருதியை தினம் தான்.

குசேலரின் ஏழ்மை நீங்கிய தினம்

பால்ய சிநேகிதனான குசேலர் கிருஷ்ணன் அரசனாக அரசாள்வதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்து அவனைப் பார்க்கக் கிளம்புகிறார். அவரது மனைவி வெறும் கையுடன் அவரைப் பார்க்கப் போகலாமா என்று கேட்டு சிறிது அவல் கொண்ட மூட்டையை அவரிடம் தருகிறாள்.

கஷ்டப்பட்டு நண்பனின் அரண்மனையை அடைந்த குசேலர் கிருஷ்ணரைப் பார்த்து நலம் விசாரிக்க குசேலரைக் கட்டி அணைத்த கிருஷ்ணர் எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ என்று ஆவலுடன் கேட்டார்.

அவல் மூட்டையை சற்று வெட்கத்துடன் தந்தார் குசேலர். ஆவலுடன் அதைப் பிரித்த கிருஷ்ணர் ஒரு பிடி அவலை வாயில் போட்டுக் கொண்டார்.

ஏழை குசேலரின் சிறு குடில் அந்தக் கணமே மாட மாளிகை ஆனது. அவரது மனைவி குழந்தைகள் பட்டாடை மினுமினுக்க செல்வச் செழிப்புடன் ஆனார்கள்.

இப்படி குசேலருக்கு கிருஷ்ணன் அனைத்தும் அருளிய தினம் அக்ஷய த்ருதியை தினம் தான்.

இந்த தினத்தின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு.

அழியாத செல்வத்திற்கும் நீடித்த புகழிற்கும் காலத்தை வென்ற வெற்றிக்கும் நாம் எதையும் ஆரம்பிக்க வேண்டிய தினம் அக்ஷய த்ருதியை தினமே!

***

More ( History ) Secrets from Vishnu Sahasranama -8 (Post No.13,220)


nara INDRA modi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,220

Date uploaded in London – –   8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART 8

History facts in Vishnu Sahasranama (VS) continued…..

Upendrah – Word No. in VS 151

Mahendrah – – Word No. in VS 268

Adi Shankara says ,

Upendra : One born as the younger brother of Indra Or one who is greater than Indra. Harivamsa 2-19-46 says

Mam’opari yathendras tvam sthaapito gobhir isvarah

Upendra iti Krsna tvaam gaasyanti bhuvi devataah

The cows have established Thee superior to me as my master. Therefore, O Krishna, the Devas will sing about Thee, addressing Thee as Upendra.

Mahendra – the Great Lord

My comments

Indra is in the names of millions of Indians. My friends’ names are Rajendran, Nagendran, Gagendran (My BBC Nepali colleague) etc. From Rajendra Prasad, First President of India to Narendra Modi, current PM of India, we have Indra in their names. Most famous Hindu speaker Swami Vivekananda’s birth name is Narendra. We find this name in several kings’ names including Mahendra Pallava (600 CE).

We find the word Indra throughout South East Asia. This is more common in Tamil speaking countries.

xxxx

Dhananjayah -– Word No. in VS 660

Arjuna is called so because by his conquest of the kingdoms in the four quarters he acquired great wealth/Dhanam. Arjuna is a Vibhuuti, a glorious manifestation of the Lord, according to the statement in Giitaa 10-57

Paandavaanaam Dhananjayah- among the Pandavas, I am Dhananjaya .

My comments

It is a common name among Chettiyaars (Vaisyas/ business men ) in Tamil Nadu. Puranas about Madurai say that a Chettiyaar by name Dhananjayan  travelling in night saw a mysterious light in the Kadamba Tree forest. When he watched secretly, he saw Devas under the leadership of Indra were worshipping a Shiva Linga. Very next day he reported to Pandya king and then he built a temple over the Linga and shifted his capital from nearby Manalur to Madurai. There came the world-famous Madurai Meenakshi Sundareswar Temple.

40 years ago, AA book of London , listed it among 100 wonders of the world. In 1987, I was walking along Tottenham Court Road in London and entered a book shop. When I browsed through the Automobile Association (AA) of Britain book, I was surprised to see my home town’s temple. Even today Dhanajaya’s statue can be seen in Madurai Temple. People mistook him for Arjuna. Actually, he was the Chettiyaar who discovered Madurai.

xxxx

Guptah – Word No. in VS 545

One who is not an object of words, thought etc. katha Upanishad says 1-3-132

Esa sarvesu bhuutesu gudhotmaa na prakaasate—being hidden in all objects, this Atman does not shine.

My comments

Appar and other great saints also said it in Tamil hymns. He is like fire in the wood, butter in the milk etc.

Chitra gupta , Yama’s accountant, is not a man. It is the computer account of our thoughts and deeds ; Chitra= picture, Gupta= hidden. Whatever we do in our life time is recorded around us like Super computer which can do billion calculations every minute. So, when our soul appears before Yama, it shows our account. Depending upon our bank balance of Punya and Paapa, he sends us to heaven or Hell. Egyptians showed it in a different way. God takes one’s heart and weighs and decides.

But in Indian History Gupta dynasty is praised sky high as Golden Age of Indian History. Those Hindu kings ruled like Rama . Fa-hein , Chinese traveller, said no one locks the door in India during night time; there were no thieves. He visited India during Gupta rule. Gold coins were minted in lakhs. Now as soon as one enters British Museum in London (Numismatics Section), one can see beautiful gold coins of Guptas. They were great rulers and took Indian culture to distant  lands. From 320 CE they ruled for 400 years.

xxxx

Damodarah – Daman – – Word No. in VS 367

Dhaama- – Word No. in VS 211

One who has very benevolent – Udaara—mind because of disciplines like self control (Dama).

Then Shankara quotes from Udyoga Parva of Mahabharat with long explanation.

Dhaama- brilliance; Gita says ,

Param brahma param dhaama – the Brahman is the ultimate support.

My comments

Rudra daaman was a great king who ruled vast areas from Gujarat to Afghanistan. His Sanskrit inscription of 150 CE is very famous .

Daaman also means rope, conquering, taming.

2000 year old Sangam book Purananuru has a poet with this name (Damodara).

xxx

Still we have more words : Pratardana,Varthamana, Manetho, Sumuka, Sammata, Samitnjayah, Purandarah ,Abu , Chaturdhamstraya , Sargon , Sri Vijaya .

TO BE CONTINUED…………………….

Tags- More History Secrets , Vishnu Sahasranama- 8 , Gupta, Daman, Dhananjaaya,  Damodara

மூத்திரம் குடிப்பது நல்லது! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 5 (Post No.13,219)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,219

Date uploaded in London – –   8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மூத்திர சிகிச்சை/  Urine Therapy

இந்தியப் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் 99 வரை வாழ்ந்தார். அவர் தினமும் தன்னுடைய சிறு நீரைப் பருகியதை பட்டவர்த்தனமாக சொல்லியதோடு மருந்து வாங்க முடியாத பல லட்சக் கணக்கான மக்களுக்கு சிறுநீர் மருத்துவம் சிறந்த மருந்து என்றும் சொன்னார். உடனே உலகமெங்கும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.

உலகின் பல பகுதிகளிலும் மக்கள் தன்னுடைய சிறுநீரை குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்துவதும் வெளியானது . புற்றுநோய் கண்ட இரண்டு பெண்மணிகள் தன்னுடைய சிறுநீரைக் குடித்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும் மருத்துவ சஞ்சிகைகளில் உள்ளது.

ஆயுர்வேத நூல்களிலும் இது இருக்கிறது. ஆனால் அவை காலத்தால் பிற்பட்ட சம்ஸ்க்ருத நூல்கள் . சிறுநீரை அமுரி என்றும் சிவாம்பு (சிவனுடைய நீர்) என்றும் சொல்லுவார்கள் . சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திருமூலரும் சிறுநீர் மருத்துவத்தை புகழ்ந்து பாடியிருப்பது இது உண்மைதான் என்று காட்டுகிறது

1971ம் ஆண்டில் நிலவுக்குச் செல்லும் மனிதர்களுக்காக மனித சிறுநீரை விரிவாக ஆராய்ந்ததில் அதன் ரசாயனத் தண்மை  தெரிந்தது.அதில் விஷம் எதுவும் இல்லை. ஆயினும் அதிக அளவு உள்ளே செல்லக்கூடாது என்பது தெளிவு.

சிறுநீரில் முதலில் வரும் நீரை விட்டுவிட்டு மத்தியில்/ நடுவில் வெளியேறும் நீரை மிகச் சிறிதளவு குடிக்கலாம் என்று திருமூலரும் சொல்கிறார். இதனால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம். நரை, திரை, மூப்பு வருவதற்கும் தடை போடலாம். மொரார்ஜி தேசாய் தினமும் யூரின்  (Urine) குடித்து, 99 வயது வரை நோய் நொடியின்றி வாழ்ந்தது இதற்குச் சான்று பகரும்.

முதலில் திருமந்திரம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பின்னர் திருமூலர் பாடல்களையும் அவற்றின் விளக்கத்தையும் காண்போம் .

இந்துக்கள் பசுமாட்டின் மூத்திரத்தை ஒரு கையில் ஏந்தி குடிப்பதைக் காணலாம். அரேபியா பாலைவனங்களில் மக்கள் ஒட்டக மூத்திரத்தையும் பாட்டில்களில் அடைத்து விலைக்கு விற்கின்றனர். அமெரிக்கப் பழங்குடி மக்களில் ஒரு சாரார் தினமும் மூத்திரத்தில் குளிப்பதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளனர் . ஆகவே மூத்திரம் என்றவுடன் அருவருப்பு வேண்டாம். முடிந்தால் குடியுங்கள்.

திருமூலர் அருமையான உவமையுடன் துவங்குகிறார். கடல் நீர் உப்பு நீர் கடலுக்குப் பக்கத்தில் எவ்வளவோ (திருச்செந்தூர் நாழிக்கிணறு) நன்னீர் ஊற்றுகள் உள்ளன.. இது போலத்தான் சிறுநீரும் என்கிறார் மூலர். அதாவது சிறுநீர் உப்புக்கரிக்கும்; ஆயினும் அதில் அமுத நீர் உள்ளது. கடலுக்குப் பக்கத்தில் ஊற்று  தோண்டி நல்ல நீர் எடுப்பது போல இதை எடுத்துக் குடியுங்கள் என்கிறார்.

அவர் மேலும் சொல்கிறார்; ஒரு நாளைக்கு ஒருமுறை சரியான விதத்தில் உட்கொண்டால், வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது.

இதை ஓராண்டு உட்கொண்டால் உடம்பில் தேஜஸ் /ஆன்மீக ஒளி பிரகாசிக்கும். தீங்கு எதுவும் வராது; பிராணாயாமப் (சுவாச) பயிற்சிகள் சித்தியாகும். பிராணவாகரத்தில் மனது ஒருமுகப்படும். மேனியோ பொன்மேனியாகும்  ஒருநாளைக்கு 100 மிளகு அளவு மட்டுமே பருக வேண்டும். வியாதி என்பதே வராது .

மருந்தே என்ற தேவையே எழாது.

இதைத் தலையில் தேய்த்துக்கொண்டால் நரைதிரை நீங்கும். கரு மயிர் தலைக்கும். விஷயம் தெரியாதவர்கள் சீ  சீ மூத்திரம் என்பர்.

நடுவில் வரும் சிறுநீரிக் குடிப்போர் சாகா  வரம் பெறுவார். உடலிலுள்ள சுருக்கங்களும் நரைத்த முடியும் நீங்கும்.

ஓ, நீண்ட குருந்தால் உடைய அழகிய பெண்ணே ! ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் !!

இந்த சிறுநீரில் மஞ்சள் , மிளகு, வேம்பு, நெல்லிக்கனி சேர்த்து பயன்படுத்து. கூந்தல் கரு கரு என்று வளரும்; பள பள என்று பிரகாசிக்கும்

இது சக்தி  மருந்து.சொர்க்கலோக டானிக்;சிலருக்கு இது தெரியும். இதன் மஹிமையை வார்த்தைகளில் வருணிக்க மு டியாது

I THINK AMURI BECAME URINE IN ENGLISH.

திருமந்திரம்

அமுரிதாரணை – சிறுநீர் சிகிச்சை

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்

கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்

உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்

நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.

AMURI DHARANA = URINE THERAPY

845: Effect of Urine Therapy in Yoga

The urinary liquid within the body

Is unto a picot of small well;

Dipped into sea vast

If that is fed once a day

In way appropriate,

Life will know distress none;

Well may you seek it.

பொருள் : சிறுநீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம்.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்

ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்

களிதரும் காயம் கனகமது ஆமே.

846: Goodly Effects of Amuri Dharana

If this divine water clear is inside taken

The body glows in a year;

No harm befalls it;

Prana control will realised be;

The mind will center in Letter “A” (Pranava)

And will uplifted be

And the body into gold will turned be.

A IN TAMIL IS NUMBER 8; SOME PEOPLE TAKE IT AS PRANAVA –OM

பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது ; எட்டு ஆண்டுகளில் மனம் மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் – அமுரி.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்

தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்

மாறும் இதற்கு மறுமயி ராமே.

847: Consume 100–Pepper Measure (drops) a Day

Drink of this divine-water

A hundred pepper measure

No medicine beyond this, know men;

But rub it clear on crest of head

Your greying vanishes away

And fresh black hair shoots forth.

பொருள் : உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த ரோமம் கறுப்பாகும் நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி

வரைவரை என்பர் மதியிலா மாந்தர்

நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு

நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.

848: Only the Ignorant Dissuade the Practice

The water on the banks of body

Is unto a mirage on the sea

Away, Away, from it-thus they say

The men who know not truth;

They who can drink the midstream

Rid of foam and wave

That arises first and last,

Will immortal be;

And all greying and wrinkling disappears.

பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம்.

849. அளக நன்னுத லாய்! ஓர் அதிசயம்!

களவு காயம் கலந்த இந்நீரில்

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்

இளகும் மேனி இருளும் கபாலமே.

849: Effect of Mixing Ingredients

Oh! damsel of flowing tresses and slender forehead!

Hear you a miracle this!

In this Water hidden in the body

Mix pepper, amla, turmeric, and neem

Soft will your body be;

And dark thine hair on head.

பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு அதிசயம்!! இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும்.

XXXXXX

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்

நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்

ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்

சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.

850: Greatness of Amuri Dharana

He the Nandi called it: the Hero’s recipe, Heaven’s exlixir, and Sakti’s potion

Some know it as the Medicament Primus

It is specific that is of radiant light

Hard to describe to world at large.

XXXXX

பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது.

—SUBHAM—

TAGS- மூத்திரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை  5, மூத்திர சிகிச்சை, Urine Therapy, சிறுநீர், அருந்தலாமா, அமுரி, சிவ நீர்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 8 (Post No.13,218)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,218

Date uploaded in London – –   8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxxPART 8

111. Mucuna pruriens (L.) DC.

111.முசுனா ப்ரூரியன்ஸ்

உத்தரபிரதேச மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மருந்து .

XXXX

112. Tamarindus indica L.

டாமரின்டஸ் இண்டிகா/ புளிய மரம் 

மஹாராஷ்டிரா ஜல்காவன் வட்டார மக்கள் பா ம்புக்கடிக்கு புளிய மர பொடியை உபயோகிக்கின்றனர். (இல்லையா விதையா என்று சொல்லப்படவில்லை).

பொடியைத் தேனில் குழைத்து ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடுகின்றனர்.

XXXX

113. Uraria picta (Jacq.) Desv. ex DC.

113. யூராரியா பிக்ட்டா

மேற்கு வங்க புரூலியா வட்டார பழங்குடி மக்கள் இலையின் மசியலை ஒரு நாளைக்கு 2 முறை வீதம் தருகிறார்கள் .அவர்கள் இந்த மூலிகையை மஹாதேவ ஜடா அல்லது ஈஸ்வர ஜடா என்று அழைக்கின்றனர்.

Malayalam: Muvila • Marathi: Pitvan, Prisniparni, Ranganja • Oriya: Isworojota • Sanskrit: Andhriparni, Chitraparni, Sinhapuchchi • Tamil: Sittirappaladai, Chittirappalatai • Telugu: Kolkuponna

சித்திர பாலாடை

(தமிழில் சித்திர பாலாடை என்றால் வேறு தாவரத்தைக் காட்டுகிறா ர்கள் . இப்படி பெயர்க்க குழப்பம் நிறைய மூலிகை விஷயத்தில் இருப்பதால் கவனம் தேவை )

XXXX

F32. Family: Gentianaceae 

114. Enicostemma axillare (Lam.) Raynal.

குடும்பம்- ஜென்டியானேசி

114.எனிகாஸ்டெம்மா ஆக்சிலாரி / வெள்ளறுகு

கன்யாகுமரி ஜில்லா மக்கள் தவற மசியலை பாம்புக்கடித்த இடத்தில் வைத்துக் காட்டுகிறார்கள்

XXXXX

F33. Family: Hypoxidaceae 

115. Curculigo orchioides Gaertn.

குடும்பம் ஹைபோக்சிடேசி

கார்குலீகோ ஆர்க்கியோ ஐடெஸ்

வங்கதேச , உத்தர பிரதேச மக்கள் தண்டு  அல்லது வேரைப் பயன்படுத்துகின்றனர்.

XXXX

F34. Family: Lamiaceae 

116. Anisomeles malabarica R. Br. பேய் விரட்டிபெருந்தும்பை பேய்மிரட்டி

குடும்பம் லாமியேசி

116.அனிசோமேலிஸ் மலபாரிகா

கன்யாகுமரி, சேலம் ஜில்லா குமரகிரி மக்கள் இலை மசியலையோ சாற்றையோ பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர்.

XXXXX

117. Clerodendrum serratum (L.) Moon

க்ளியோடென்ரம் செர்ராடம்

மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் இலையை எண்ணெய் அல்லது வெண்ணெயில் கொதிக்கவைத்து களிம்பு செய்து தடவுகின்றனர்.

XXXX

118. Hyptis suaveolens (L.) Poit.

ஹிப்டிஸ் சுவாவியோலென்ஸ்

உத்தர பிரதேச மக்கள் வன துளசி என்ற பெயரில் இந்த மூலிகையைப் பயன்படுத்துகின்றனர்.

XXXX

119. Leucas aspera (Willd.) Link

லூகஸ் ஆஸ்பெரா

ஆடு மாடுகளைப் பாம்பு கடித்தால் கர்நாடக சிருங்கேரி ஒரிஸ்ஸா, ஆந்திர மக்கள் மிளகு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து இலை மசியலை ஆடு மாடுகளின் மூக்கில் துப்புகின்றனர். கட்டே தும்பே என்று கன்னடத்தில் பெயர்.

XXXX

120. Leucas capitata Desf.

லூகஸ் கேபிடேடா

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

XXXX

121. Leucas cephalotes (Roth) Spreng.

லூகஸ் செபலோடஸ்

உத்தராஞ்சலில் இமயமலை வட்டார மக்களும், உத்தரபிரதேச மக்களும் தாவரத்தை கஷாயம் வைத்து பயன்படுத்துகிறார்கள்

XXXX

122. Leucas linifolia (Roth) Spreng.

லூகஸ் லீனிபோலியா

அசாம் சிவசாகர் வட்டார மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.

XXXX

123. Ocimum adscendens Willd.

ஆசிமம் அட்ஜெண்டென்ஸ்

மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் மக்கள் இந்த மூலிகையின் வேர், பட்டை ஆகியவற்றைக் கஷாயம் வாய்த்து பால், வெண்ணெயுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள் .

ஆசிமம் என்பது துளசி வகைச் செடியாகும்

XXXX

124. Ocimum basilicum L.

ஆசிமம் பெசிலிகம்

காளி துளசி என்ற பெயரில் உத்தர பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்.

XXXX

125. Plectranthus rugosus Wall. ex Benth.

பிளெக்ட்ராந்தஸ்  ருகோஸஸ்

காஷ்மீர் மக்கள் இலையின் சாற்றை வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கின்றனர்.

TO BE CONTINUED……………………………

TAGS- பாம்புக் கடி,  200  மூலிகை மருந்துகள் , Part 8, snake bites, cure, herbs

‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு- 2 (Post No.13,217)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.217

Date uploaded in London – — 8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 2

 ச .நாகராஜன்

144 வயது

ஒவ்வொரு மனிதரும் நீண்ட ஆயுளைக் கொண்டு வாழ முடியும் என்பது இவரது கொள்கை. தான் 144 வயது வாழப் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் ‘ப்ரொஸ்டேட் கான்ஸரால்’ பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதை 2013-ல் க் கண்டறிந்த தனது டாக்டர்கள் 2015க்குள் தனக்கு மரணம் நிச்சயம் என்று சொல்வதாக 2014இல் இவர் கூறினார்.

ஆனால் அந்த புற்றுநோயிலிருந்து விடுபட ஒரு விசேஷ தயாரிப்பைக் கண்டுபிடித்து அருந்த ஆரம்பித்தார். இப்போது 95 வயதைக் கடந்து விட்ட இவர் தெம்பாகத் தான் இருக்கிறார்.

கண்டுபிடிப்பு இல்லம்

இவர் ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பார். தனது இன்னோவேஷன் ஹவுஸ் எனப்படும் கண்டுபிடிப்பு இல்லத்தில் வேலையை ஆரம்பிப்பார். மூன்று அடுக்கு மாடிக் கட்டிடமான இது டோக்கியோவில் இருக்கிறது. விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் கார்பன் நச்சுப்புகை அறவே கிடையாது.

அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை எனப்படும் காம் ரூம்  (Calm Room) அவருக்குப் பெரிதும் உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை  முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு  வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான் எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது” என்கிறார்.

கண்டுபிடிப்பு நேரம்

நள்ளிரவு 12 மணியிலிருந்து கால 4 மணி வரை மிக முக்கியமான கண்டுபிடிப்பு நேரம் என்கிறார் இவர். அப்போது தான் இவருக்குப் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய எண்ணங்கள் தோன்றுமாம்.

6000 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் இவர்!

காலை 4 மணி முதல் எட்டு மணி வரை உறங்குவது இவர் வழக்கம்.

மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் சிந்திக்கிறென் என்கிறார் இவர்.

மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேருக்கு படைப்பாற்றல் திறன் பற்றி இவர் சொல்லித் தருகிறார்.

சுஜி, பிகா, இகி 

தான் எப்படி இப்படி ஒரு மிகப் பெரும் கண்டுபிடிப்பாளராக ஆக முடிந்தது என்பதை சூத்திர பாணியில் இவர் கூறுகிறார்.

அது தான் – சுஜி, – பிகா – இகி!

சுஜி என்றால் தியரி அல்லது அடிப்படைக் கொள்கை

பிகா என்றால் ‘‘எ ஃப்ளாஷ் ஆஃப் இன்ஸ்பிரேஷன்’ – ஒரு கணத்தில் உள்ளத்தில் உத்வேகத்தால் எழும் ஒரு மின்னல் தோற்றம்

இகி என்றால் ப்ராக்டிகாலிடி – நடைமுறைக்கு இயல்பாக ஒத்து வர வேண்டும்.

இந்த மூன்றும் இணைந்தால் படைப்பு வெற்றி தான் என்பது இவரது கொள்கை.

அரசியல் ஆர்வம்

 அரசியலில் இவருக்கு அடங்காத ஆர்வம் உண்டு. கண்டுபிடிப்பில் ஒரு அங்கம் தான் அரசியல் என்பது இவரது கண்டுபிடிப்பு. ஆகவே 1995 முதல் டோக்கியோ மேயர் பதவியைக் குறி வைத்து இவர் போட்டியிடலானார். ஆனால் தோல்வியே கிட்டியது.

ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

 பாராட்டுகள் 

உலகெங்குமுள்ள அறிஞர்களும் பிரபலங்களும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

இவரது இன்னோவேஷன் ஹவுஸில் ஸ்வீடன் அரசருடன் இவர் எடுத்துக் கொண்ட படம், ஜப்பான் சக்கரவர்த்தியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒயிட் ஹவுஸில் எடுத்துக் கொண்ட போட்டோ உட்பட ஏராளமான புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

அங்கு பீத்தோவன் சிம்பனி – 5 ஐ கேட்பது இவரது வழக்கம். அந்த இசை இவருக்கு உத்வேகம் ஊட்டுகிறதாம்!

தனது கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை வென்றிருக்கும் இவரது வெற்றிப் புராணம் மிகப் பெரியது.

நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு ‘வாழ்நாள் தீர்க்கதரிசன விருது’ ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது

 சம்பாதித்த சொத்து 

தனது கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்றுள்ள இவரது சொத்தின் இன்றைய மதிப்பு 5 கோடி அமெரிக்க டாலராகும். ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய இந்திய மதிப்பு ரூபாய் 83.30

இவருக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. 

ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் இவர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தொடர்கள் உள்ளிட்ட பல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை போட்டி போட்டு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன.

ஜப்பானிய டாக் ஷோக்களில் மிக பிரபலமான இவர், தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

 ‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்சு” என்ற ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம் இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார். ஆனால் ஏராளமான ஜப்பானியர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு இவர் ஒரு படைப்புக் கடவுளே தான்!

 உலகின் அதிசயிக்க வைக்கும் கண்டுபிடிப்பாளராகத் திகழும் இவர் அனைவருக்கும் சொல்வது : “நீங்களும் கூட புதியனவற்றைக் கண்டுபிடிக்கலாம்” என்பதே!

***