Mrs Vimala Suryanarayanan trying to lift the gold bar.
Date uploaded in London – 1 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
லண்டன் பார்க்க வாறீங்களா ? சிட்னி பார்க்க வாறீங்களா? என்று நான் எழுதிய புஸ்தகத்தை உங்களில் பலரும் படித்திருப்பீர்கள் . இதோ லண்டன் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்:
இந்தியாவில் ரிசர்வ் பாங்கு உள்ளது போல் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்க வங்கி இருக்கும். அப்படி பிரிட்டனில் உள்ள பாங்குக்கு பேங்க் ஆப் இங்லண்ட் Bank of England என்று பெயர். இது லண்டனில் உள்ள ஸ்டேஷனுக்கு பெயர் பாங்க் ஸ்டேஷன் ! ஏனெனில் அங்கு இந்திய வங்கிகள் உள்பட உலகத்தின் முக்கியமான பாங்குகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. இந்த வட்டாரத்தில் 500 இன்டர்நஷனல் வங்கிகள் இருக்கின்றன. பேங்க் ஆப் இங்லண்ட் அருகிலேயே அவர்கள் ஒரு மியூசியமும் Bank of England Museum வைத்துள்ளனர்.. அண்டர்கிரவுண்ட் என்றும் ட்யூப் என்றும் அழைக்கப்படும் ரயிலில் ஏறி பாங்க் / பேங்க் Bank ஸ்டேஷன் சென்றால், வெளியே செல்ல 16 பாதைகள் (16 Exits) இருக்கும். அங்குள்ள போர்டுகளைப் படித்தால் நாம் காண வேண்டிய மியூசியம் உள்ள வீதியின் பெயரும் இருக்கும் . சில நிமிடங்களில் பேங்க் ஆப் இங்லண்ட் அல்லது அருகிலுள்ள மியூசியத்தை அடையலாம் .
இந்த மியூசியத்தைப் பார்க்க அதிகம் பேர் வருவதில்லை. ஏனெனில் வணிக விஷயங்களில் ஆர்வம் உடையோருக்கு மட்டுமே பயன்படும் தகவல்கள் அதிகம் உள. ஆயினும் நாம் தினமும் பயன்படுத்தும் நாணயங்கள், கரன்ஸி நோட்டுக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதை அவசியம் பார்க்க வேண்டும். இந்தியாவில் ரூபாய் , அமெரிக்காவில் டாலர், ஐரோப்பிய நாடுகளில் யூரோ நோட்டுகள் உள்ளதைப் போல பிரிட்டனில் பவுண்ட் ஸ்டெர்லிங் நோட்டுகள் உள்ளன.
பிரிட்டனில் பாங்கு தோன்றி வளர்ந்த வரலாறு, நாணயங்கள் தோன்றி அச்சிடப்படும் வரலாறு இருக்கும். மேலும் பல வகை கரன்ஸி நோட்டுகளையும் விலையுயந்த நாணயங்களையும் காணலாம். நாணயங்கள் , கரன்ஸி நோட்டுக்களை சேகரிப்போருக்கு இவை முக்கியமானவை. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு படங்களுடன் இவை வெளியாகும். சர்ச்சில்,ஜேன் ஆஸ்டின், சார்ல்ஸ் டார்வின், ஆடம் ஸ்மித் முதலிய பல பிரமுகர்களின் படங்களுடன் கரன்ஸி நோட்டுகள் வெளிவந்துள்ளன.
ஆனால் இவைகளில் ஆர்வம் இல்லாதோருக்கும் கூட ஆர்வம் ஊட்டும் ஒரு காட்சி இங்கே இருக்கிறது. ஒவ்வொரு நாடும் எமர்ஜென்சி செலவுகளுக்காக டன் கணக்கில் தங்கக்கட்டிகளைச் சேர்த்து வைக்கும். அதைப்பார்க்க நமக்கு அனுமதி இல்லாவிடினும் ஒரு சாம்பிள் தங்கள் கட்டியைக் கண்ணாடி அறைக்குள் வைத்து, அதன் கீழ் ஒரு நெம்புகோலையயும் சொருகி வைத்துள்ளனர் ; காட்சியைப் பார்க்க வருவோர் அந்த நெம்புகோல் மூலமாக தங்கள் கட்டியை தூக்கிப் பார்க்கலாம். அதன் எடை 13 கிலோ. அது 400 ட்ராய் அவுன்ஸ் தங்கம் ! அதன் அருகிலேயே ஒரு அதிகாரியும் நிற்பார். கையைக் கிருமி நீக்கும் திரவித்தால் சுத்தம் செய்யவும் அருகிலேயே சானிடைசர் வைத்துள்ளனர். நானும் தூக்கிப் பார்த்தேன் ; இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் தூக்கிய அளவை விட குறைவாகவே தூக்க முடிந்தது. ஏன் 400 ட்ராய் அவு ன்ஸ் என்பதற்கு விளக்கம் எல்லாம் அருகிலேயே ஆங்கிலத்தில் உளது. ஒவ்வொரு நாடும் அவர்களின் தங்கக்கட்டிக்கு ஒரு அளவு வைத்துள்ளது. அதன்படி இவை தயாரிக்கப்படுகின்றன.
கண்காட்சியில் பல துண்டுப் பிரசுரங்கள் உள்ளன. அதில் முக்கிய விஷயங்கள் அனைத்தும் உள்ளன. அவை அனைத்தும் இலவசம்.
மியூசியத்தைப் பார்க்க நுழைவுக்கட்டணம் கிடையாது
London Swaminathan lifting 13 kilo gold bar.
மேலை நாடுகளில் ஒவ்வொரு மியூசியத்துக்கு வெளியே வரும் பாதையில் ஒரு கடை இருக்கும். அங்கு நினைவுப் பொருட்கள், பொம்மைகள், பேனாக்கள், புஸ்தகங்களை விலைக்கு வாங்கலாம் . அவைகளில் உள்ள படங்களுடன் பேனாக்களோ, பிரிட்ஜ் மாக்னெட்டுகளோ (காந்தம்) வேறு எங்கும் கிடைக்காது. பலரும் அவைகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள். நான் என்னுடைய சகோதரன் மற்றும் அவருடைய மனைவியுடன் இரண்டாவது முறையாக இந்த மியூசியத் துக்கு 17-5-2024 அன்று சென்றேன்.
இத்துடன் உள்ள படங்களைப் பார்த்தால் மேல் விவரம் கிடைக்கும் .XXXX
A troy ounce is a system of weights used for precious metals and gems, based on a pound of 12 ounces as opposed to the traditional 16. A troy ounce is 31.1034768 grams or 0.0311034768 kilograms.
டிராய் அவுன்ஸ் என்பது தங்கம், வெள்ளி போன்ற விலை அதிக முள்ள உலோகங்களையும் ரத்தினைக் கற்களையும் நிறுப்பதற்கு பயன்படுத்தும் எடை ஆகும் இதில் ஒரு பவுண்டு எடைக்கு 12 அவுன்ஸ். (கிராம் கணக்கில் 31.10 கிராம்.)
XXXX
மியூசியத்தின் முகவரி
Open Monday to Friday, 10am to 5pm (last entry 4.30pm)
Free, no booking needed
Open late every third Thursday of the month, until 8pm (last entry 7.30pm).
Closed Bank Holidays and weekends.
Bank of England
Threadneedle Street, London, EC2R 8AH
Switchboard: +44(0)20 3461 4444Opens in a new window
Enquiries: +44(0)20 3461 4878Opens in a new window
Bank of England Museum
Bartholomew Lane, London, EC2R 8AH
(Browse topics- Banknotes, Careers, Digital pound, Education, Financial stability, Gold, Markets, Monetary policy, Payment and settlement, Prudential regulation, Research, Statistics)
XXXXX
TROY OUNCE
A troy ounce is a system of weights used for precious metals and gems, based on a pound of 12 ounces as opposed to the traditional 16. A troy ounce is 31.1034768 grams or 0.0311034768 kilograms.
பாம்பன் பாலம் போல , டவர் பிரிட் ஜ் திறப்பதைப் பார்க்க வாறீங்களா ?
தொடரும்……………………………………..
–SUBHAM–
TAGS- தங்கக் கட்டி, பாங்க் ஆப் இங்கிலாண்ட் மியூசியம் , இங்கிலாந்து, லண்டன், பவுண்ட், 13 கிலோ, டிராய் அவுன்ஸ்