Queen in Bank of England Gold storage.
Date uploaded in London – 2 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
இரும்பு, ஈயம், தாமிரம், பாதரசம் போன்ற உலோகங்களை தங்கம் ஆக்கலாம் என்று இந்து மத யோகிகளும், சித்தர்களும் ஞானிகளும் பாடியுள்ளனர் . இந்தக் கலைக்கு ரசவாதம் என்று பெயர் பரிசனவேதி அல்லது ‘ரசமணி’யால் விலை குறைந்த உலோகங்களைத் தொட்டால் அவை தங்கம் ஆகிவிடும் என்பது அவர்கள் கூற்று. ஆயினும் விஞ்ஞானிகள் இதை நம்புவதில்லை. புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் கூட இப்படி ஒரு ரசமணி உண்டு என்று நம்பி தீவிர ஆராய்ச்சிகளை செய்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்து மத சித்தர்களும் கவிஞர்களும் இது பற்றிப் பாடிய போதும் இந்த ரசவாத வித்தையை உவமையாகவே பயன்படுத்தியுள்ளார்கள். நேரில் தங்கமாக மாற்றி யாருக்கும் கொடுத்ததாக பாடவில்லை. மராத்தி மஹான் ஞானேஸ்வர் போன்றோரும் இந்த பரிசனவேதி பற்றிப் பாடியுள்ளனர்.
பரிசனவேதியை ஆங்கிலத்தில் ‘பிலாசபர்’ஸ் ஸ்டோன்’ என்பர் .
philosopher’s stone stone or substance thought by alchemists to be capable of transmuting base metals into gold.
திருமந்திரத்தில் இது பற்றிப் பல பாடல்கள் கிடைக்கின்றன. ஆயினும் அப்படித் தங்கம் செய்து யாருக்கும் கொடுக்கவில்லை. ஆன்மீக விஷயங்களை விளக்கவே அதை உவமையாக பயன்படுத்தியுள்ளார். இருந்தபோதிலும் இது இருந்ததாகவே இயம்புகிறார். .இதை ஆங்கிலத்தில் ALCHEMY என்று சொல்வார்கள்.
தாயுமானவர் பாடல் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்:
தாயுமானவர் பாடல் இதோ:–
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்தைந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலத்துலாவரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;
சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

இரசவாதம் –
சம்ஸ்க்ருதத்தில் யோகரத்ன மாலா என்று நூலை இயற்றிய நாகார்ஜுனர் ஏராளமான அதிசய விஷயங்கள், வித்தைகள் பாற்றி எழுதியுள்ளார் அவர் ரசவாதம் மூலம் தங்கத்தை உண்டாக்கி ஏழைகளுக்கு கொடுத்ததாக அவருக்குப்பின் வந்தவர்கள் அவரது புகழை எடுத்துரைத்துள்ளார்கள் .
போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவர் ஒரு சீனர்; .ஒருவேளை அவர் , நாகார்ஜுனாவிடம் பாடம் கற்றிருக்கலாம் அல்லது அவரது நூல்களைப் பயின்றிருக்கலாம். ஏனெனில் நாகார்ஜுனா எழுதி நூல்கள் அனைத்தும் நாளந்தா பல்கலைக்கழக நூலகத்துக்கு முஸ்லீம்கள் வைத்த தீயில் அழிந்துவிட்டன; . நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு அவர் துணைவேந்தராக இருந்தார். நல்ல வேளையாக அங்கு படிக்க வந்த சீன அறிஞர்கள் அவரது நூல்களை எல்லாம் மொழிபெயர்த்து சீனாவுக்கு எடுத்துச் சென்றனர். இப்பொழுது நாகார்ஜுனாவின் புஸ்தகம் எல்லாம் சீன மொழியிலிருந்து மொழிபெயர்த்து நாம் அறிந்து வருகிறோம்.
இரும்பு , ஈயம் போன்ற விலை குறைந்த மூலகங்களை வெள்ளி, தங்கமாக மாற்றும் வித்தை (Alchemy) ரசவாதம் எனப்படும் . அவர் இது போன்ற அதிசய விஷயம் பற்றி மட்டும் பேசாமல் அடிப்படை ரசாயன (வேதியியல்) விஷயங்களையும் எழுதியுள்ளதால் அவர் பெரிய ரசாயன நிபுணர் என்றும் தெரிகிறது. அவர்தான் உலக வேதியியலின் தந்தை.
சித்தர்களைப் பற்றி இன்று பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காரணங்களில் ஒன்று இந்த இரசவாதம். ஆகும்.
இனி திருமூலர் சொன்ன ரசவாத – பரிசன வேதி பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே
2054 By His Alchemic Touch Jiva Becomes Siva
All that the alchemist touches
Turns into gold;
Even, unto it,
The Jivas blessed by Guru
Siva become,
Freed from Malas Triple.
xxxx
திருமூலர் இப்பாடலில் குருவின் மகிமையைப் பற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்குகின்றார்.
பரிசனவேதி என்ற மூலிகை மருந்து ஒன்றுளது. அது பட்ட உலோகம் எல்லாம் பொன்னாகிவிடும். அது போல குருவானவர் இந்த உலகத்தில் யாரை தொட்டாலும் அவர்கள் மும்மலம் நீங்கி சிவனுடன் ஐக்கியமாவார்கள்.
இன்னுமொரு விளக்கம்
இரும்பு, ஈயம், தாமிரம் முதலிய உலோகங்களை பொன்னாக்கும் மருந்து பரிசனவேதி எனப்படும். பண்டையோர் இதனைக் குளிகை என்றனர். அக் குளிகை பொருள்கள் மீது பட்டஉடனே அவை தங்கம் ஆ கிவிடும். அதுபோல் மெய்க்குரவனாகிய சிவகுரு தொட்ட இடமெல்லாம் மும்மலம் அகன்று சிவகதி எய்திச் சிவனாகிச் சிவனடிக்கீழிருப்பர்.
xxxxxx
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே. திருமந்திரம் 2051
2051 He Takes Them to the Bourne
From Which They Return Not
The black iron, transmuted into gold,
To black iron returns not;
Even unto it,
He who once the Guru’s grace received
Does not to birth return.
xxxx
ரசவாத வேதியியலின்படி கருமை நிறத்து இரும்பானது பொன்னிறமான தங்கமாகிவிடும். ஆனால் தங்கமானது மீண்டும் இரும்பாக மாறாது. அதுபோல ஆன்மாவானது குருவின் அருளினால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் இருந்தும் விடுவிக்கப் படும் அந்த ஆன்மாவுக்கு மறுபிறவி கிடையாது. ஆன்மாவின் மும்மலங்களையும் நீக்கக் கூடிய குரு இறைவனே ஆகும்.
xxxx
இதில் தாமிரத்தைத் தங்கமாக்கும் விஷயம் பற்றிப் பாடுகிறார்.
செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
செம்பு பொன்னான திருவம்பலவே.
Chant “Sivaya Nama;”
Copper turns into gold;
The Chit Para there exists,
Turns copper into gold
Chant “Srim” and “Krim;”
Copper turns into gold;
The Holy Temple alchemises
Copper into gold.
xxxx
பொன்னைச் சிவமாகவும் செம்பைச்
சீவனாகவும் களிம்பேறும் தனமையை
மலங்கள் பற்றும் நிலையாகவும்
சிலர் உருவகப்படுத்துவர்.
பாம்பாட்டி சித்தர்
“ செப்பரிய மூன்றுலகம் செம்பொன் ஆக்குவோம் “
என்று பாடியிருக்கிறார்
——————————————————–
அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் ‘திருவகுப்பு ‘ என்னும் தொகுப்பு நூலும் உண்டு. இந்நூலில்
‘சித்துவகுப்பு’ என்னும் பாடல் இருக்கிறது.
அதில் ரசவாத வித்தையை விவரித்திருக்கின்றார்.
ஆனால் அப்பாடலில் மறைபொருளாக விளங்குவது, ‘ஞானரசவாதம்’தான்.
——————————————————–
வள்ளலார் சொன்னார்:
“இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
ஆனால் ஒன்றே ஒன்று. பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும்.”.
xxxx
திருமந்திரத்தில் பரிசன வேதி பாடல்கள் – 688, 883, 887, 1983, 2013, 2016,
xxxxx
More Tirumanthiram Hymns on Alchemy, Transmutation of base Metals
ஆங்கிலத்தில் திருமந்திர ரசவாதப் பாடல்கள்
902: The Dance Transforms Jiva Into Siva
The Dance in Letters Two
It is the Dance joyous;
It is the Dance of dissolution;
It is the Dance that leads to bliss;
It is the Dance that is Siva Linga
It is the alchemy that transforms
The coppery Jiva into golden Siva.
xxxx
906: Chant Sivaya Nama in Silence
This mantra is golden;
Chant it not loud,
Just say it;
Your body glows red,
If you take it in slow,
As you breath in,
Your body becomes gold;
And in time,
Shall you behold the Golden Feet of Lord.
xxxx
952: Lord is in “Aum” Beyond Adharas
Where Adharas end,
“Aum” is;
There shall you see Lord
Who of Himself reveals;
He is Blemishless,
He is Light Divine,
He is Whole Truth,
He is the Alchemic pill,
XXXXXX
293: Learning Leads to Renunciation
Men of Learning abandon the fettering, worldly ways;
The firm of mind flourish high on coiling snake-like Kundalini
Night and day, unremitting, praise the Lord,
And so your body, as on herbs alchemised, with glow of youth will be.
xxxx
2709: Sivayanama is Alchemic
In slighting terms they speak of our Lord ;
With thoughts centering on the Light
And hearts melting in love
Let them chant His name;
With the alchemic pill of Sivaya Nama
He will turn thy body gold.
xxxx
tags- இரும்பைத் தங்கம் ஆக்கலாம் , திருமந்திர ஆராய்ச்சிக்கு கட்டுரை19 , திருமூலர் , திருமந்திரம், பரிசன வேதி , இரும்பு, தாமிரம், செம்பு, தங்கம்,alchemy, philosopher’s stone, Titumular, Tirumanthiram