ராமாயணத்தில் சாபங்கள் (19) கோசலை சாபத்திற்கு நிகர் வார்த்தை கூறியது! (Post.13,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.299

Date uploaded in London – 3 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (19) 

ராமாயணத்தில் சாபங்கள் (19) கோசலை ராமனைப் பிரிய முடியாமல் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

ச.நாகராஜன் 

இது வரை வால்மீகி ராமாயணத்தில் உள்ள 61 சாபங்களில் பால காண்டத்தில் உள்ள 18 சாபங்களின் விவரங்களைப் பார்த்தோம்.

அடுத்து அயோத்யா காண்டத்தில் உள்ள 5 சாபங்கள் பற்றி இனி பார்க்கலாம்.

 கைகேயி தான் பெற்ற இரு வரத்தால் ராமனைக் காட்டிற்கு அனுப்பவும் பரதனுக்கு முடி சூட்டவும் தசரதனிடம் கோர அவரும் வரம் கொடுத்ததைக் காக்க வேண்டிய கட்டாயத்தினால் அப்படியே வரம் ஈந்தார். தன் உயிரையும் விட்டார்.

ராமர் காட்டிற்குப் புறப்படத் தயாராகி அன்னை கோசலையிடம் விடை பெற அவரது இருப்பிடத்திற்கு வந்தார் – லக்ஷ்மணனுடன்.

அயோத்யா காண்டம் இந்த உருக்கமான நிகழ்ச்சியை, ‘தந்தையின் சொல்லை ரக்ஷிக்க பிரதிக்ஞை செய்வது’ என்ற 21-ம் ஸர்க்கத்தில் விவரிக்கிறது.

ராமனைக் காட்டுக்கு அனுப்ப கோசலை உடன்படவில்லை.

லக்ஷ்மணனோ, ‘தகாது சொன்ன தசரதனைக் கொல்லலாமே’ என்று சொல்லி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

கோசலை ராமனை நோக்கி, “நீ கடுந்துயரத்தால் மனம் நொந்து பரிதவிக்கும் என்னை விட்டு காட்டிற்குப் போய் விடுவேன் என்றால் நான் இந்த இடத்திலேயே இப்படியே உட்கார்ந்த வண்ணமே பட்டினி இருந்து என் உயிரை  மாய்த்துக் கொள்ளும் விரதத்தை அனுஷ்டிப்பேன். பிழைத்திருக்க மாட்டேன். இது நிச்சயம்” என்கிறாள்.

அடுத்து அவள் கூறுகிறாள்:

ததஸ்தம் ப்ராப்யஸ்யஸே புத்ர நிரயம் லோகவிஸ்ருதம் |

ப்ரஹ்மஹத்யாமிவாதர்மாத்ஸமுத்ரஸ்மரிதாம் பதி: ||

–    அயோத்யா காண்டம், 21-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 28

புத்ர – குழந்தாய்

தத: ஸ்வம் – அப்படியாகில் நீ

சரிதாம் பதி: – நதிகளின் கணவனாகிய

ஸமுத்ர: – ஸமுத்திர ராஜன்

அதர்மாத் – ஈன்ற மாதாவுக்கு மன வருத்தத்தை உண்டாக்குகிறதால் விளையும் அதர்மத்திற்கு பாத்திரமாய் விட்டான் என்னும் காரணத்தால் ப்ரஹ்மஹத்தி தோஷம் எவ்வளவோ அவ்வளவை அடைந்தது எப்படியோ அப்படியே மூவுலகத்தார்களுக்குத் தெரிகின்றதாகிய நரகத்தை நீ அடைவாய்”

இங்கு கோசலை ஶ்ரீ ராமருக்கு சாபத்தைத் தரவில்லை. ஆனால் தன் துயரமுற்ற மனம் எப்படி வாடுகின்றது என்பதை எடுத்துக் கூறுகிறாள்.

சாபத்தைத் தராமல் அப்படி ஒரு வருத்தம் அடையத்தக்க நடந்த ஒரு நிகழ்ச்சியை அவள் ராமருக்குச் சுட்டிக் காட்டுகிறாள்.

உடனே ராமர், “தந்தை சொன்ன வாக்கை மீறும் அதிகாரம் தனக்கு இல்லை என்பதையும் தான் காட்டிற்குப் போக சித்தமாகி விட்டதையும் தெரிவிக்கிறார்.

விதியின் வசத்தால் இப்படி நேர்ந்து விட்டது என்பதை ஶ்ரீ ராமர் சுட்டிக் காட்டுகிறார்.

தாயையும் லக்ஷ்மணனையும் அவர் தக்க வார்த்தைகளைக் கூறி சமாதானப்படுத்துகிறார்.**

Leave a comment

Leave a comment