ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது! (Post13,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.303

Date uploaded in London – 4 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (20)

ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

ச.நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் உள்ள 5 சாபங்களில் இரண்டாவதாக வரும் சாபம் பற்றி இனி பார்க்கலாம்.

அயோத்யா காண்டத்தில் 42-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதவிலாபம்’

சோகத்தின் உக்கிரம் தாக்க, படுத்துக் கொண்டிருந்த படுக்கையை விட்டு தசரதர் எழுந்திருக்கவே இல்லை.

மன வேதனை அதிகரிக்க சோர்வடைந்தவராய் அவர் பூமியில் விழுந்து விட்டார்.

அப்போது கோசலை அவரது வலது பக்கத்தில் வந்து நிற்க கைகேயி இடது பக்கத்தில் வந்து நின்றாள்.

கைகேயியைப் பார்த்த தசரதர் பின்வருமாறு உரைக்கலானார்:

கைகேயி ,மா மமாங்கானி ஸ்ப்ராக்ஷீஸ்த்வம் துஷ்டசாரிணீ |

ந ஹி த்வாம் த்ருஷ்டமிச்சாமி ந பார்யா ந ச பாந்தவி ||

கைகேயி – கைகேயி

துஷ்டசாரிணீ – பாபத்திற்குத் துணிந்து விட்டவளே

த்வம் – நீ

பாந்தவி – இதத்தைச் செய்கின்றவளாய்

ந – இல்லை

ஹி – என்கின்றபடியால்

பார்யா – என் மனைவியாக

ந – இருக்க வேண்டாம்

மம – எனது

அங்கானி – அங்கங்களை

மா ஸ்ப்ராக்ஷீ – நீ இனி தொடாதே

த்வாம் – உன்னை

த்ருஷ்டம் ச – கண்ணெடுத்துப் பார்க்கவும்

இச்சாமி ந – விரும்பவில்லை

யே ச த்வாமனுஜீவந்தி நாஹம் தேஷாம் ந தே மம |

கேவலார்தபராம் ஹி த்வாம் த்யக்ததர்மாம் த்யஜாம்யஹம் ||

த்வாம் ச – உன்னையும்

யே – எவர்கள்

அனுஜீவந்தி – பொறாமை இன்றிப் பார்க்கிறார்களோ

தேஷாம் – அவர்களுக்கு

அஹம் – நான்

ந – வேண்டாம்

தே – அவர்கள்

மம – எனக்கு

ந – வேண்டாம்

கேவலார்தபராம் – அற்பமாகிய பொருள் ஒன்றையே சர்வமுமாய்க் கொண்டு விட்டவளாய்

த்யக்த தர்மாம் – தர்மத்தை முற்றிலும் துறந்து விட்டொழித்தவளாய்

ஹி – இருப்பதால்

த்வாம் – உன்னை

அஹம் – நான்

த்யஜாமி – விவாஹ பந்தன நிவிர்த்தி செய்து விலக்கி இது முதல் வைத்திருக்கிறேன்.

அக்ருஹாம் யச்ச தே பாணிமக்னே பர்யாயம் ச யத் |

அனுஜானாமி தத்ஸர்வமஸ்மின்லோகே பரத்ர ச ||

அஸ்மின் – இந்த

லோகே – உலகிலும்

பரத்ர ச – மறு பிறப்பிலும் (அல்லது இதர லோகத்திலும்)

தே – உனது

பாணி – கையை

அக்ருஹாம் – பற்றியதாகியது

யத் ச – எதுவோ

அக்னி – அக்னியை

பர்யாயம் – வலம் வந்து விவாஹம் செய்து கொண்டது

யச் ச – எதுவோ

தத்ஸர்வம் – அந்த சம்பந்தத்தால் உண்டான எல்லாவற்றையும்

அனுஜானாமி – நான் துறந்து விடுகிறேன்.

பரதஸ்சேத்ப்ரதீத: ஸ்யாத்ராஜ்யம் ப்ராப்யேதமவ்யயம் |

யன்மே ச த்தாத்ப்ரீதீத்யர்தம் மாம் மா ததத்தமாகமத் ||

ப்ரதீத: – பெரியோர்களிடத்தில் அசைக்க முடியா பக்தியை உடைய

பரத: – பரதன்

இதம் – இந்த

ராஜ்யம் – ராஜ்யத்தை

அவ்யயம் – அழிவில்லாத பலனை அளிக்க வல்லதாய்

ப்ராப்த – ஏற்றுக் கொண்டு

ச்யாத் சேத் – விடுகின்றான் என்ற பக்ஷத்தில்

ச: – அவன்

மே – எனது

ப்ரீத்யர்தம் – ஹிதத்தின் காரணமாய்

யத் தத்தாத் – எந்த சரம கைங்கரியத்தைச் செய்கின்றானோ

தத் தத்தம் – அந்தை கைங்கரியம்

மாம் – என்னை

மா ஆகமத் – சேராது ஒழியக் கடவது

அயோத்யா காண்டம் 42-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 6,7,8)

இவ்வாறு தசரதர் மொழிந்தார்.

இங்கு தசரதர் கைகேயியைப் பார்த்துக் கூறியவற்றில் சாபம் இடுகிறேன் என்ற வார்த்தை வரவில்லை. என்றாலும் கூட அவர் மனம் வருந்திக் கூறியதைப் பின்னால் சாபம் என்று ஶ்ரீ ராமர் கூறுவதை யுத்த காண்டத்தில் பார்க்க முடிகிறது.

மஹாதேவரின் ஆக்ஞையால் ஸ்வர்க்கத்தில் இருந்த ராஜா தசரதர் விமானத்தில் வந்து ராமரையும் லக்ஷ்மணரையும்  பார்த்து அவர்களைத் தன் மடியில் அமர வைத்துக் கொள்வதை யுத்த காண்டம் 119-ம் ஸர்க்கத்தில் பார்க்கிறோம்.

ராமரை நோக்கி, “நீண்ட ஆயுளுடன் தம்பிமார்களுடன் கூட அரசாள்வாயாக” என்று கூறி ஆசீர்வதிக்கிறார் தசரதர்

அப்போது ராமர் கூறுவது இது :

குரு ப்ரஸாதம் தர்மக்ஞ கைகேய்யா பரதஸ்ய ச |

சபுத்ராம் த்வாம் த்யஜாமீதி யத்யுக்த்வா கைகேயீ த்வயா ||

தர்மக்ஞ – தர்மத்தின் வழியை உணர்ந்தவரே

ச புத்ராம் – ‘புத்திரனுள்ள

த்வாம் – உன்னை

த்யஜாமி – தள்ளி வைக்கின்றேன்’

இதி – என்று

த்வயா – தேவரீரால்

கைகேயீ – கைகேயி தேவியார்

உக்தா – சபிக்கப்பட்டாளோ

யத் – அக்காரணத்தால்

கைகேய்யா: -கைகேயி தேவியிடமும்

பரதஸ்ய ச – பரதனிடமும்

ப்ரஸாதம் –  மனச்சாந்தியை

குரு – கொண்டருள்வீராக

ச சாப: கைகேயீம் கோர: சபுத்ராம் ந ஸ்ப்ருஷேத்ப்ரபோ |

ப்ரபோ -பிரபுவே

ச: – அந்த

கோர: – பயங்கரமான

சாப: – சாபமானது

சபுத்ராம் – புத்திரனுள்ள

கைகேயீம் – கைகேயீயை

ஸ்ப்ருஷேத் ச – பற்ற வேண்டாம்

யுத்த காண்டம், ஸர்க்கம் 122,, ஸ்லோகங்கள் 25, 26

தசரதரை நோக்கி ராமர் இவ்வாறு அந்த சாபம் அவர்களைப் பற்ற வேண்டாம் என்று கூறுகிறார். அவர் தசரதரின் கூற்றை சாபம் என்று இங்கு கூறுகிறார்.

ஆகவே தசரதர் கூறியதை சாபம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

உடனே தசரதர், “ததா இதி” அப்படியே ஆகட்டும் என்று தனது முந்தைய கூற்றை விலக்கிக் கொள்கிறார். சாபம் விலகி விடுகிறது!

***

Leave a comment

Leave a comment