வியப்பூட்டும் தவளைச் சிகிச்சை: மன நோய்க்கு மருந்து! (Post No.13,304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,304

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

லண்டனிலிருந்து வெளியாகும் மெட்ரோ Metro பத்திரிகையில் நேற்று (3-6-2024) ஒரு வியப்பான செய்தி வெளியாகியுள்ளது. தவளை , தேரை எல்லாம் ஒரே வகைப் பிராணிகள். ஒரு வாரத்திற்கு முன்னர் முனிசாமி முதலியார் 1899-ம் ஆண்டில் வெளியிட்ட மூலிகை மர்ம நூலில் வந்த தவளைச்  சிகிச்சை பற்றி வெளியிட்டேன். அதில் பச்சைத் தவளை மாமிசம் சாப்பிட்டு பாம்பு விஷத்தைக் குணப்படுத்துவது, அஸ்தி சுரத்தைத் தீர்ப்பது, உயிருள்ள தவளையைக் கட்டிவைத்து பிளவைக் கட்டிகளை குணப்படுத்துவது முதலிய செய்திகளை வெளியிட்டேன். இப்பொழுது அமெரிக்க பாலைவனத்துத்  தேரை (Toad) யைப் பிடித்து அதன் விஷம் மூலம் மன நோயைத் தீர்க்கலாம் என்ற செய்தி  வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா- மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள பாலை வனத்துக்குப் பெயர் சொனோரன் பாலை வனம் Sonoran Desert (California,USA and  Mexico). அங்கு வசிக்கும்  ஒரு தேரையின் தோல் விஷத்தைச் சுரக்கிறது. அதை நாக்கினால் நக்கினால் போதை ஏற்படும். அப்போது மாயாஜால உலகிற்குள் போவது போல இன்ப உணர்ச்சி ஏற்படும். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் செய்தி அமெரிக்க பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அந்தத் தேரை வசிக்கும் பகுதிகளில் யாரும் தவளையை நக்காதீர்கள் அது விஷம் என்று பெரிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. ஆயினும் ஆயிரக்கணக்கானோர்  ஏராளமான பணம் கொடுத்து போதை இன்பம் அனுபவிக்கச் சென்றனர்.

இப்பொழுது வெளியாகும் செய்திகள் இது போதை இன்பத்தைத் தரும் கெடுதியான பொருள் என்றாலும் இதன் மூலம் மன நோய்களைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறது

லண்டனில் ஆராய்ச்சி

லண்டனில் புகழ்பெற்ற கல்லூரி  இம்பீரியல் காலேஜ் Imperial College

ஆகும். அங்கு மருத்துவப் படிப்புடன் மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் இருக்கிறது. அதில்  ஒருவருக்கு இந்த விஷத் தேரையின் விஷத்தை ஏற்றி மூளையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்தத் தேரையின் தோலில் சுரக்கும் பொருளை5-MeO- DMT என்பார்கள். பெக்லி சைடெக் Beckley Psytech  என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தப் பொருளை செயற்கையாகத் தயாரித்து BPL-003 என்று பெயரிட்டுள்ளனர்

இந்த ஆராய்ச்சி பற்றி அறிவித்தவுடன் 20 தொண்டர்கள் Volunteers

முன் வந்தனர். அதில் முதல் ஆளுக்கு மருந்து ஏற்றப்பட்டது அப்போது மூளையை ஸ்கேன் Scan கருவியில் கண்டு என்னே மின்சார அதிர்வுகள் ஏற்படுகிறது என்பதை வெளியிட்டுள்ளனர் . இதை மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கலாமா என்பதே ஆராய்ச்சியின் நோக்கம். 20 தொண்டர்களுக்கும் ஏற்றப்பட்டு முடிவுகள் 2026ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்பீரியல் கல்லூரியில் மாயத்தோற்ற மருந்துகளை Psychedelic

ஆராயும் பிரிவு இருக்கிறது அதன்தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் திம்மர்மான் Dr . Christopher Timmermaan பேசுகையில் 20 மருத்துவ தொண்டர்களுக்கும் உண்மையான விஷத்தையும் பொய்/ போலி  மருந்தையும் (Placebo) ஒருமாத இடைவெளியில் கொடுத்து ஆராய்வோம் என்றார். (ஆராய்ச்சிக்கு வரும் தொண்டர்களுக்கு எது உண்மை , எது போலி மருந்து (Placebo ) என்று சொல்ல மாட்டார்கள். அது டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும்.  இந்த அராய்ச்சியில் மாயத் தோற்ற மருந்துகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதன் மூலம் மன நலத்தை உண்டாக்கலாமா என்று ஆராய்வார்கள்

வட அமெரிக்காவில் வசிக்கும் இந்த சோனோரன் பாலைவனத் Sonoran Desert (California, USA and  Mexico) தேரைகள் ஏழு அங்குலம் /18 செ .மீ வரை வளரக்கூடியவை.மதுபானத்துக்கு அடிமையானவர்கள், மனத் தொய்வுக்கு (Alcohol addiction ,Depression ) ஆளானவர்கள் ஆகியோருக்கு இத்தகைய சைக்கிடெலிக் மருந்துகளைக் கொடுத்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாயத்தோற்றம் உண்டாக்கும் மருந்து வகைகளை Psychedelic சைக்கிடெலிக் என்பார்கள்.

xxxx

Toad Ceremony in America

தவளையை நக்கினால் இளவரசன் தோன்றுவான்

நம் நாட்டில் பஞ்ச தந்திரக் கதைகள், கதா சரித் சாகரக் கதைகள் இருப்பது போல மேலை  நாட்டில்  ஜெர்மானிய கிரிம் பிரதர்ஸ் Grimm Brothers எழுதிய கதைகள் உண்டு. அதில் ஒரு கதை The Frog Prince தவளை இளவரசன் என்பதாகும். ஒரு இளவரசியின் தங்கப் பந்து  குளத்தில் விழுந்துவிடுகிறது. ஒரு தவளை நான் அதை எடுத்துத் தருவேன் ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று. நிபந்தனை விதிக்கிறது; பந்தையும் எடுத்துக் கொடுக்கிறது . ஆனால் இளவரசி முத்தம் கொடுக்க மறுக்கிறாள். தவளை,  நாட்டின் மன்னரிடம் முறையிட்டவுடன் முத்தம் கொடு என்று கட்டளை இடுகிறார். அவள் அப்படிச் செய்தவுடன் அந்தத் தவளை உன்னுடன் படுக்க ஆசை என்று சொல்கிறது. இளவரசி கோபத்தில் அதை சுவற்றின் மீது வீசி எறிகிறாள் ; உடனே அது இளவரசனாக மாறிவிடுகிறது .

இதை, ஜெர்மானியர்கள் மஹாபாரத தவளைக் கதையிலிருந்து திருடியுள்ளனர் மஹாபாரதத்தில் ஆயு என்ற தவளை அரசன், சுசோபனா என்ற ராணியின் கதை வருகிறது.

விஷத் தேரையின் தோலை நக்கி மாயாஜால உலக இன்பம் அனுபவிக்கும் அமெரிக்க முகாம்களில் இந்தக் கதையும் பெரிதாக அடிபடுகிறது. தேரையை நக்குங்கள் – இளவரசன் ஆகுங்கள் என்று.

இந்த முகாமில் பங்குகொண்டு மாயத் தோற்ற/ தற்காலிக இன்பம் அனுபவிக்க 250 டாலர் முதல் 8000 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது.

 –சுபம்—

வியப்பூட்டும், தவளைச் சிகிச்சை, மன நோய்க்கு மருந்து, தேரை , தோல்  விஷம் , மாயாஜால , போதை , Frog Prince

Leave a comment

Leave a comment