
Date uploaded in London – 5 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
xxxxx
மி
505. மிளகு வைத்தியம்

மிளகை சூரணித்து அப்போது கறந்த பசும்பாலில் போட்டு அருந்தி வந்தால் குளிர் சுரம்- பாண்டு- கபம்- கிராணி -குன்மம்- வாய்வு- மூலம் – பித்தம்- இருமல்- பிரமேகம் இவை தீரும் .
xxxxx
அஸ்தி சூட்டுக்கு
மின்னைக் கீரையை மிளகு தூளிட்டு கிரமப்படி குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் அஸ்தி சூடு- வேட்டை- இதுகள் சாந்தியாகும் – கண் குளிர்ச்சியுண்டாம் .
xxxxx
குளிர் சுரத்திற்கு
மிளகை கஷாயம் வைத்து எட்டுக்குக்கொரு பா கமாய் இறக்கி வடிகட்டிக்கொடுத்து சக்திக்கிசைந்தபடி லங்கணம் போட சாந்தியாகும் .
xxxxx
இருமல் சாந்தி

மிளகரணையை சூரணித்து இந்த சூரணத்திற்கு அரை பாகம் (திப்பிலி- கடுக்காய் தோல் – சுக்கு) இம்மூன்றும் சேர்த்து இடித்த சூரணம் கூட்டிக் கலந்து திருகடிப்பிரமாணம் சாப்பிட்டு வர இருமல்- ஈளை – கபம்- பித்தம் சாந்தியாகும் .
மு
ரத்த கிராணிக்கு
முள்ளிலவம் பிசினியை தயிரில் அரைத்து மூன்று நாள் காலையில் கொட்டடைப்பாக்களவு கொடுத்து வரத் தீரும் .
xxxxx

நீர்ச்சுருக்குக்கு
முள்ளங்கிக் கிழங்கை இடித்து சாறு பிழிந்து வெள்ளைச் சக்கரை கலந்து சாப்பிடத் தீரும். மூன்று வேளை சாப்பிடவும் .
xxxxx
அரையாப்புக்கட்டி கரைய
முருங்கை வேர்ப்பட்டையும் புழுங்கலரிசியும் உப்பும் சமன் கூட்டி அரைத்து கட்டி மேல் வைத்துக்கட்ட கரையும் ; மூன்று நாள் கட்டவும்.
xxxxx
காது செவுட்டுக்கு
முருங்கைவேரும் கொன்னை வேரும் சமன் கொண்டுஇடித்து சாறு பிழிந்து காதில் ஒரு துளி விடவும். இப்படி மூன்று நாள் விடத் தீரும்.
xxxxx
தாது புஷ்டிக்கு
முருங்கை வித்தைப் பாலில் போட்டுக் காய்ச் சியுண்டுவந்தால் இந்திரியம் கட்டுப்படும். தாது புஷ்டியுண்டாம் .
xxxxx
ஸ்தனமில்லாதவர்க்கு
முத்தெருக்கன் செவி மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டு வந்தால் சிறிதாயுள்ள ஸ்தனங்கள் பெருத்து விம்மும் .கரப்பான் புருவு பிளவை தீரும் .
xxxxx
உமிழ்நீர் சுரப்புக்கு
முசுமுசுக்கையைக் கஷாயம் வைத்து நாலுக்கொன்றாய் இறக்கி குடி நீராகக்கொடுத்து வந்தால் பித்தவுபரி உமிழ்நீர் சுரப்பு இவை தீரும்.
xxxxx
மூ
அரையாப்புக்கு
மூக்குரட்டை வேரை அரைத்து புன்னைக்காயளவு எடுத்து காலாழாக்கு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும். மீன் கருவாடு புளி புகை லாகிரி ஆகாது .இப்படி மூன்று நாள் கொள்ளத் தீரும்.
xxxxx
இரத்த பித்தத்திற்கு
மூங்கில் வித்தைப் பாலில் கொள்ள இரத்த பித்தம் கண்ணோய் இவைகள் தீரும் .
xxxxx
எட்டு வகைக் குன்மம் நரை திரை மாற
மூக்கரணைச் சாரணை வேரை ஆவின் பாலில் அரைத்துக் கலந்துண்டு வந்தால் ஒரு மண்டலத்தில் நரை திரை மாறும் . உடல் இருகும் . பகலில் நட்சத்திரம் தெரியும் .எட்டு வகைக் குன்மம் சாந்தியாகும் .
xxxxx
to be continued………………………………
tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், Part 41