Date uploaded in London – 7 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண் -20
திருமூலர் பெரிய விஞ்ஞானிதான். திருமந்திரத்தில் நிறைய பூதக்கண்ணாடி /லென்ஸ்( MAGNIFYING GLASS) சூரியகாந்தக் கல்,கண்ணாடி/ MIRROR பாடல்கள் வருகின்றன. இதிலிருந்து தமிழ்நாட்டில் பல வீடுகளில் முகம் பார்க்கும் கண்ணாடி, லென்ஸ்/ LENS முதலியன இருந்தது தெரிகிறது. . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆண்டாளும் திருப்பாவையில் தட்டொளி என்று முகம் பார்க்கும் கண்ணாடியை வருணிக்கிறார்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் MIRROR தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்–திருப்பாவை
XXXX
இனி திருமந்திரப் பாடல்களைக் காண்போம்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.–திருமந்திரப் பாடல்
117: At His Glance, Impurities Vanish
The sunstone sleeps in cotton enclosed,
The sunstone burns not the fragile stuff;
Let but the sun’s rays fall! How it shrivels and flames!
Even so the impure wilts before the Lord’s cathartic glance.
சூரியன் எனும் கதிரவனின் கதிர் ஒளியை ஏற்று வெளியிடும் கல் சூரிய காந்தக் கல். இக்கல் தான் ஈர்க்கும் கதிரொளியை வெளிப்படுத்தி எதிரே உள்ள பொருளை எரிக்கும் ஆற்றல் உடையது. கதிரவன் இதன் முன்னே இல்லாவிட்டால் தானாகவே இக்கல் எதனையும் சுட்டெரிக்க இயலாது. கதிரவன் இல்லாவிட்டால் தன்னைச் சுற்றியுள்ள பஞ்சு போன்ற எளிய பொருளையும் இதனால் சுட இயலாது. இதற்குச் சுடும் ஆற்றலை வழங்குவது கதிரவனே. சூரியனும் பஞ்சு போன்ற எளிய பொருளையும் நேரடியாகச் சுட்டு எரிக்காது.சூரிய காந்தக் கல் அக்கதிரவனின் ஒளியை உள்வாங்கி ஒருமுகப் படுத்தவே அச்சூரிய காந்தக் கல்லின் வழியாகச் சூரியன் பஞ்சினை எரிக்க இயலுகின்றது. இது போன்றே உயிர்களையும் அவற்றைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் இறைவனையும் திருமூலர் உருவகப் படுத்துகின்றார்.
பசுக்கள் எனப்படும் உயிர்களைச் சூரிய காந்தக் கல்லுக்கும் உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைப் பஞ்சிற்கும் சூரியனை இறைவனுக்கும் ஒப்புமை காட்டுகின்றார்
xxxx
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.
Hara Stands Revealed to Truly Learned
To them that search the Holy Books, Hara stands revealed;
Out of the sublimed Fire, sparks of pure knowledge fly;
Those who, thus, the Samadhi’s Moon can reach,
To them it’ll be a ladder leading to Wisdom high.
அகத்தே ஆராய்வார்க்கு அரனாகிய சிவபெருமான் அங்கு அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அது கதிர்க்கல்லானது (சூரிய காந்தக்கல்)கதிரோன் முன்னிலையில் அக்கதிரை வெளியில் வரச் செய்யும் தன்மையினை யொக்கும். திங்கள் (இளமதி) புருவநடுவிற் காணப்படும் மதிமண்டலமாகும். அம்மண்டலத்தை அங்கண் நின்று கூடற்குரிய பயிற்சி வல்லார்க்கு அந்த மனமே மேலே செல்வதற்குரிய ஏணி ஆகும்.
xxxx

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
603: Look Within in Dhyana
Well may they practise Yoga eight-thousand year
Still they see not Lord,
Sweet as ambrosia
And dear unto apple of eye;
But if within you seek Him enlightened
He within you is,
Even unto reflection in the mirror.
8000 ஆண்டுகள் தவம் இருந்தாலும் கண்ணுள் மணியும், அம் மணியுணர் அமிழ்தும் போன்ற சிவபெருமானைக் கண்டறியவொண்ணாது. அகத்தே நாடி அருள் ஒளிபெற்று நோக்கினால் சிவபெருமான் தோன்றுவான். கண்ணாடியைப் பார்க்குங்கால் நாம், நம்மையும் கண்ணை யும் காணலாம் . அதுபோல் ஆருயிர் பேருயிராகிய சிவபெருமானைக் காணும் வாயிலாகவே தன்னையும் காணும். எண்ணாயிரத்தாண்டு என்பது யோக உ றுப்புகள் எட்டினைக் குறிக்கும் .
கண்ணாடிபோல – கண்ணாடியில் தோன்றும் பாவைபோல (ஆடிப்பாவை – நிழலுரு) நெஞ்சத்தில் சிவனை நினைந்தால் சிவன் விளங்குவன்.
xxxxxx
கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.
God is Beauty
Form within Sun-Stone is red hot ember,
Form within Moon-Stone is pearly drop of water,
Form within Fire-Stone is crackling fire,
Form of Lord that holds fire aloft
Is Beauty Surpassing.
ஞாயிற்றின் கதிர்கண்டு அக் கதிரொளியை ஏற்று வெளிப்படுத்துங் கல் சூரியகாந்தக் கல், திங்களின் ககிரையேற்றுக் குளிர்நீரை வெளிப்படுத்துங் கல் சந்திரகாத்தக் எல் எனவும் அறிவோம்., தீயினைக் காண அதன் சதிரை வெளிப்படுத்துங் கல் தீக் கல் எனவும் அறிவோம்.,. இக் கல்லைச் சக்கிமுக்கிக் கல் என்பர், கதிர் கண்டவுடன் கதிர்க்கல் கனலைக் கக்கும் மதி கண்ட வுடன் நிலாக் கல் குளிர்ச்சியைக் கக்கும். தீத்தட்டுங் கருவியாகிய சதியினைக்கொண்ட சக்கி.சாக்கி என்னும் தீக்கல் தீயினைக் கக்கும். மழுவாகிய தீயினை இடத்திருக்கையில் கொண்டருளிய சிவபெருமானை அருள் துணையால் அவன் இயற்கை எழில்வடிவில் காணலாம்.
xxxxxx

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
They seek Worldly Pleasures
From out of mind, mirror of illusion rises
Think of it, even its shadows they see not
And nothing they do for the fruits of Karma to drop;
The temptations of the backyard drain, they go after.
இறைவன் அருளால்தான் உண்மையான குருவைப் பெற இயலும். நம்முடைய மனப்பக்குவமே இறைவனுடைய அருளுக்கு எடுத்துக்காட்டாகும். நமது மனமானது மாயையாகிய கண்ணாடி போன்றது. பக்குவம் பெறாதபோது அந்தக் கண்ணாடியானது ஆணவ மலத்தால் பொருள்களைப் பெரிதாகக் காட்டி நம்மை ஏமாற்றும் வஞ்சனை கண்ணாடியாக உள்ளது. கல்வி, கேள்வி இவற்றால் நமது அறிவை வளர்த்துக்கொண்டு இந்த வஞ்சனையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பக்குவ உள்ளங்கள் இதை உணர்ந்து கொள்ளும். பக்குவமில்லாத உள்ளங்கள் பிறர் விளக்கிச் சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ளா. அந்த நிலையில் உண்மைக் குரு இவர்களுடைய வாழ்வில் திருவடி எடுத்து வைக்க மாட்டார். இவர்கள் இன்னும் வினைப்பயனை அனுபவிக்க வேண்டி உள்ளது.
xxx
உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய
விண்நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்
கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே
God is Inward Where the Five Sense Controlled Meet
If you ask,
How the Heavenly Space within the cranium is,
Where the inward looking Five abide,
Verily it is,
Unto gazing upward into a mirror
(Seeing the self-reflected in crystal purity)
At a junction
Where the Five, in control, meet.
ஐம்புலன்களும் உள்நோக்கி சிந்திக்கும்போது,உச்சிவரை செல்லும்.அவ்வாறு நாடும் இடம் அருள்வெளி எனப்படும்.அதை அண்ணாந்து பார்த்தால் மனம் கடந்த ஆனந்த நிலை தோன்றும். அப்பொழுது ஆன்மா, தூய கண்ணாடியில் பார்ப்பது போலத் தெரியும்.
xxxx
2944. பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனன்றே.
He is Seen in the Mind-Mirror
He appears not in the glasses of the fleshly eye;
He is in the Lotus of the Heart;
He appears in the glass of Vedic Jnana;
He is in the mind-glass of the righteous that think of Him,
Him I saw in the glass of songs
Listening to that Divine Music,
I enraptured stand.
சிவனை நாம் பார்க்கும் கண்ணாடியில் உருப்பெருக்கி காண முடியாது. மனக் கண்ணாடியில் காணலாம்.ஞானம் என்னும் வேதக் கண்ணாடியிலும் , அவனை உள்ளத்தே உருகி நாடும் மனக் கண்ணாடியிலும், தத்துவஞானம். என்னும் நீதிக்கண்ணாடியிலும் , இசையால் துதிபாடும் கீதக் கண்ணாடியிலும் , இருதயத் தாமரையிலும் காணலாம்..
பூதக்கண்ணாடி – தூலக்கண் ,
வேதக்கண்ணாடி – ஞானக்கண்.
நீதிக்கண்ணாடி – தத்துவஞானம்.
கீதக்கண்ணாடி – இசை.
–subham—
Tags- பூதக் கண்ணாடி , முகம் பார்க்கும், கண்ணாடி, மாய , திருமந்திரத்தில் லென்ஸூம் கண்ணாடியும், ஆராய்ச்சிக் கட்டுரை- 20