Date uploaded in London – 7 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
முதல் பகுதி நேற்று 6-4-2024 வெளியாகியது.
விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)த்திலுள்ள அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்களை தொடர்ந்து காண்போம்.
அத்புத -நாமத்தின் எண் 895
அற்புதமாய்த் திகழ்பவர் .
கேனோபநிஷத்திலிருந்து 1-2-7 சங்கரர் மேற்கோள் காட்டுகிறார்
ஸ்ரவணாயாபி பஹுபிர் யோ ந லப்யஹ
ஸ்ரவந்தோபி பஹவோ யம் ந வியூஹ்
ஆச்சர்யோ வக்தா குசலாஸ்ய லப்தா
ஆச்சர்யோ ஞாதா குசலானுஸிஸ்தஹ
பொருள்
பலர் இதைப் பற்றி கேட்டதே இல்லை;
பலர் இதைப் பற்றிக் கேட்டும் புரிந்துகொண்டதில்லை ;
இதைப் பற்றி ஒருவர் பேசுவதே ஆஸ்ச்சர்யமானது ;
உயர்ந்த மனிதன் ஒருவனே இதை அடையமுடிகிறது .
என் கருத்து
பகவத் கீதையும் இதை இன்னும் எளிய நடையில் உரைக்கிறது.
आश्चर्यवत्पश्यति कश्चिदेन
माश्चर्यवद्वदति तथैव चान्य: |
आश्चर्यवच्चैनमन्य: शृ्णोति
श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ||2- 29||
āśhcharya-vat paśhyati kaśhchid enan
āśhcharya-vad vadati tathaiva chānyaḥ
āśhcharya-vach chainam anyaḥ śhṛiṇoti
śhrutvāpyenaṁ veda na chaiva kaśhchit B.G.2-29
ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||
கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்
ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = ஆச்சர்யத்துடன் காண்கிறான்
ஆஸ்²சர்யவத் வத³தி = ஆச்சர்யத்துடன் ஒருவன் சொல்கிறான்
ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = ஆச்சர்யமாக ஒருவன் கேட்கிறான்
கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்
இந்த ஆத்மாவை, ஒருவன் காண்தே , வியப்பானது ; இதைப்பற்றி ஒருவன் சொல்லுவதும் ,ஆச்சர்யமானதே ஆச்சர்யமாக எவனோ ஒருவன் கேட்கிறான், கேட்கினும், ஆயினும் இதனை அறிவான் எவனுமிலன்.”
ஆதிசங்கரர் எழுதிய விவேக சூடாமணியிலும் இதை வலியுறுத்துகிறார்
ஜந்தூனாம் நரஜன்ம துர்லபம் அதஹ பும்ஸ்த்வம் ததோ விப்ரா
தஸ்மாத் வைதி கதர்மமார்க்கபரதா வித்வத்வம் அஸ்மாத் பரம்
ஆத்மாநாத்ம விவேசனம் ஸ்வனு பவோ ப்ரஹமாத்மனா ஸம்ஸ்திர்
முக்திர் னோ சத கோடி ஜன்ம ஷு க்ருதைஹி புண்யைர் வினா லப்யதே
–விவேக சூடாமணி, ஸ்லோகம் 2
जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम्।
आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थिति- र्मुक्तिर्नो शतकोटिजन्मसु कृतैः पुण्यैर्विना लभ्यते।। VIVEKA CHUDAMANI -2 ।
jantUnAm narajanma durlabham atah pumstvam tato vipratA
tasmad vaidikadharmamArgaparatA vidvatvam asmAt param|
AtmAnAtmavivecanam svanubhavo brahmAtmanA samstitih
muktirno satakotijanmasu krtaih: punyairvinA labhyate||
பொருள்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதிலும் ஆண்மகனாகப் பிறத்தல் அரிது;
அதிலும் பிரம்மத்தையே நாடும் பிராமணனாகப் பிறத்தல் அரிது;
அதிலும் வேதம் சொல்லும் தர்மத்தைப் பின்பற்றுதல் அரிது;
அந்த தர்மத்தைப் புரிந்துகொண்டு ஆத்மா எது அதற்குப் புறம்பானது எது என்ற விவேகத்தை அடைவது அரிது.
தியானம் செய்து சொந்த அனுபவத்தினால் பிரம்மா நிலையை அடைந்து முக்தியை அடைவது என்பது
நூறு கோடி ஜன்மத்தில் அடைந்த புண்ணியத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது.
XXXXX
சநாத் – நாமத்தின் எண் 896
அநாதியான கால ரூபியாக இருப்பவர் . விஷ்ணு புராணம் 1-2-15 சொல்கிறது,
பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் புருஷஹ பிரமம் த்விஜ
வ்யக்தாவ்யக்தே தாதிவானியே ரூபே காலஸ்ததா பரம்
விஷ்ணு புராணம் – 1-2-15
பொருள்
புண்யவான்களே ! பரம்பொருளின் முதல் தோற்றம் புருஷன் ; பின்னர் அது விவேகமானது விவே கமற்றது என்று பிரிந்தது .மஹாதத்வம் முதலியன இவற்றின் வே றுபாடுகளே ; காலம் என்பதும் அவன் தோற்றுவித்ததே .
காலம் என்பது நம்முடைய நாலாவது பரிமாணம்; அது இல்லாமல் எதையும் பிரித்துப் பேசமுடியாது என்பதை சமீப காலத்தில்தான் ஐன்ஸ்ட்டின் சொன்னார்.அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களுக்கு அது தெரியும்.
XXXX
பணஹ — நாமத்தின் எண் 958
பண என்றால் வணிக பரிமாற்றம் .
தைத்ரீய ஆரண்யகம் தரும் ஸ்லோகம் 1-2-7; புருஷ சூக்தத்திலும் உளது
சர்வாணி ரூபாணி விசித்ய தீரஹ
நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே –
எல்லா புண்ணிய கர்மங்களையும் பணமாக ஏற்றுக்கொண்டு அவற்றைச் செய்தற்கு உரிய பலனைத் தருபவர்
எல்லாவற்றையும் சிந்தித்த இறைவன் அவைகளுக்குப் பெயர் சூட்டினான்.அதே பெயர்களால் அவை அழைக்கப்டுகின்றன
என் கருத்து
பணம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் வணிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது (ப= வ இடமாற்றம்)
ஆங்கிலத்திலுள்ள மணி (பணம்) என்ற சொல்லும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததே (ப-ம, ப-வ இடமாற்றம் மொழியியலில் உண்டு)
xxxx
ஸமஹ – நாமத்தின் எண் 581
அனைத்தையும் அடக்குபவர் அல்லது அடக்கத்தை உபதேசிப்பவர் .
யதீநாம் ப்ரஸமோ தர்மோ நியமோ வன வாஸினாம்
தானமேவ க்ருஹஸ்தானாம் ஸுஸ்ருஷா பிரம்மசாரினாம்
பொருள்
சன்யாசிகளுக்கு தர்மம் (கடைபிடிக்கவேண்டிய குணம்)- மன அடக்கம்;
வானப்ரஸ்தம் கடைப்பிடிப்போருக்கு தர்மம் தவம்;
இல்லறத்தாருக்கு தர்மம் தான தர்மம் செய்வதாகும்;
பிரம்மசாரிகளுக்கு தர்மம் பணிவிடை செய்வதே என்று ஸ்ம்ருதி (சட்ட நூல்) சொல்கிறது.
xxxx
விஷ்ணு – 657
எங்கும் வியாபித்து இருப்பவர்
மஹாபாரதம் சாந்தி பர்வம் 350-40-49 சொல்வதாவது,
வியாப்ய மே ரோதசி பார்த்த காந்திர் அப்யதிகா ஸ்திதா
க்ரமனாத் வ்யாபியஹம் பார்த்த விஷ்ணு இதி அபிசம்ஞிதஹ
பொருள்
குந்தீ புத்திரனே ! என்னுடைய ஒளி ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து இருப்பதனாலும் என்னுடைய பாதத்தினால் உலகத்தை ஆக்ரமிப்பதனாலும் நான் விஷ்ணுவென்று அழைக்கப்படுகிறேன்.
(விஷ்ணு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தில் விண்ணன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ;
விண்ணந்தாயன் = விஷ்ணு தாசன்; கண்ணந்தாயன் = கண்ணதாசன் )
To be continued……………………………….
Tags-விஷ்ணு சஹஸ்ரநாம ,அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part-2, விஷ்ணு