வசம்பு
Date uploaded in London – 9 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
வ
519.பிள்ளைகள் வயிற்று நோய்க்கு
வசம்பைச் சுட்டுக் கரியாக்கி முலைப்பாலில் இளைத்து நாவில் தடவினால் பிள்ளைகள் வயிற்று நோய் தீரும்.
xxxx
புண்களுக்கு
வல்லாரை இலையைப் பிடுங்கி வந்து பச்சையாகவே நன்றாய் அரைத்து அதை ஈரத்துடன் புண்களின்மேல் வைத்துக் கட்டினால் 2,3 கட்டுகளில் ஆறிப்போகும் .
xxxx
கண்டமாலை- நாள்பட்ட மேகவியாதி -உடம்பு முழுதும் புண் இதுகட்கு
வல்லாரை இலையை வேண்டிய மட்டில் பிடுங்கி வந்து கரணைகளைத் தள்ளி இலையை மாத்திரம் குருக அரிந்து ஒரு பயின்மேல் பரப்பி நிழலில் உலர்த்தி வைத்து முற்றும் நன்றாய் உலர்ந்த பிறகுஇடித்து துணியில் வடிகட்டி வஸ்திரகாயம் செய்து புது கலயத்தில் போட்டு மூடிவைத்துக்கொள்ள வேண்டும் . 5 கிரையன் முதல் 8 கிரையன் வரை கொஞ்சம் வென்னீரிலாவது பசும்பாலிலாவது கலந்து கொடுக்கவும். இப்படி ஒரு தினத்திற்கு மூன்று வேளை கொடுக்கவும். இப்படிக்கொடுத்து வரும்போது மேற்படி பொடியை புண்கள் பேரிலும் தூவிக்கொண்டு வரலாம். இப்படி ஒரே முறையாய் சில வாரங்கள் கொடுத்துவந்தால் வியாதிக்காரன் பல துன்பமும் நீங்கி விசேஷ சுகமடைவான். ஒரு சமயம் உடம்பில் சொரியாவது நமையாவது கானுமாகில் மருந்தை நிறுத்தி ஒரு பேதிக்கு கொடுத்து அதன் பிறகு ஒருவாரம் பொறுத்து மறுபடியும் மருந்து கொடுத்துவரவும். இப்படியே தொடர்ந்து கொடுத்துவந்தால் குறிப்பான குணத்தைக்காணலாம் . இச்சூரணம் செய்யும்போது வெய்யிலில் சூடுகாட்டி உணர்த்தினால் மூலிகையின் சத்து போய்விடும். . ஆகையால் நிழலில் உலர்த்தி சூரணிக்க வேண்டும்.
xxxx
காணாக்கடி சொறி
வன்னி மரத்தின் சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் வாதம் ஜன்னி தோஷம் காணாக்கடி விஷம் கபம் சொறி இவை தீரும்.
xxxx
மருந்தீடு – தேக ஊரலுக்கு
வல்லாரை சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் இருமல் ஈளை மருந்தீடு , கைகாலில் உண்டாகும் ஊரல் நீங்கும். நெடுநாள் உ ண்டுவந்தால் நரைதிரை மாறும்.
xxxx
கிறந்தி வண்டு கடிக்கு
வக்கணத்தி மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் கிறந்தி வண்டு கடி சிலவிடம் கரப்பான் இவை தீரும் .
xxxx
ஆண்மையுண்டாகவும் தேக பலத்திற்கும்
வராகி மூலமென்ற நிலப்பனை கிழங்கை சூரணித்து காய்ச்சிய பாலில் பிரயோகித்து உண்டுவந்தால் விந்து கட்டும் தாது உண்டாகும் ஆண்மை அதிகரிக்கும் தேகம் இருகும் .
xxxx
பல் வலிக்கு
வராகி மூலமென்ற நிலப்பனைக் கிழங்கை குப்பைமேனி சாற்றா ல் அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி பல் நோய்க்கு அந்தந்த பாகங்களில் துளித்துளியாய் விட்டால் பல் வலி தீரும் புழுக்கள் சாகும்.
xxxx
கோசம் பூரிக்க
வராகிக் கிழங்கும் பூமிசக்கரைக் கிழங்கும் பூனைக்காலி வித்தும் சமனிடை எடுத்து சூரணித்து பாலில் காய்ச்சியுண்டுவந்தால் கோசம் பூரித்து விம்மும். விந்து காட்டும்.
xxxx
வயிற்றில் மரித்த பிள்ளைக்கு
வசம்பும் பெருங்காயமும் முலைப்பால் விட்டரைத்து ஆதி வயிற்றில் தடவினால் வயிற்ரிம் மரித்த பிள்ளை கீழே விழும் .
xxxx
வா
மேனியுண்டாக
வாலுவை அரிசியை சூரணித்தாவது . பால்விட்டரைத்தாவது பாலில் கலந்து உட் கொண்டு வந்தால் மேனியழகு உண்டாகும். சகல நோயும் தீரும்.
xxxx
கபம் மூலச் சூட்டிற்கு
வால் மிளகைச் சூரணித்து .திருகடியளவு பாலில் கலந்துண்டு வந்தால் கபம்- மூலச்சூடு- வேட்டை நீங்கும்.
xxxx
531. போகம் அதிகரிக்க
வாதுமைப் பருப்பைப் பாலில் கலந்து உட் கொண்டு வந்தால் போகம் அதிகரிக்கும். விந்து காட்டும். மேற்படி தைலத்தினால் கண் படலம் தீரும்.
–சுபம்—
Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள் 42, வல்லாரை, மூலிகை மர்மம், வசம்பு, வக்கணத்தி, நிலப்பனை கிழங்கு