
Post No. 13.322
Date uploaded in London – —10 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (21)
ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது!
ச.நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் 63-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதன் தான் முனிகுமாரனைக் கொன்றதைச் சொல்வது.
சோகத்தால் புண்பட்ட மனதுடன் கவலையில் மூழ்கி இருந்த தசரதர் சிறிது கண் விழித்தார்.
அருகில் இருந்த கோசலையை நோக்கி முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலானார்.
‘”சப்தத்தைக் கொண்டே இலக்கை வீழ்த்துவார்’ என்று என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லப்பட்டது.
ஒரு சமயம் விலங்குகள் நீர் அருந்த வரும் சரயு நதியின் துறையில் எழுந்த ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது யானையுடையது என்று நினைத்து என் அம்பை விடுத்தேன். ஆனால் ‘ஹா, ஹா’ என்று நீரில் விழும் ஒரு மனிதன் எழுப்பும் சப்தத்தைக் கேட்டு அங்கு விரைந்தேன்.
அங்கு ஒரு ரிஷி குமாரன் என் அம்பால் அடிபட்டு ரத்த,ம் ஒழுக வீழ்ந்திருந்ததைக் கண்டேன்.
அவன் புலம்பியவாறே தன் தந்தை, தாய் இருக்குமிடத்தைச் செல்லும் வழியைக் காட்டி அவர்களிடம் நடந்ததைக் கூறுமாறு சொன்னான்.”
இயமேகபதி ராஜன்யதோ பிதுராஸ்ரம: |
தம் ப்ரஸாதய கத்வா த்வம் ந த்வாம் சங்குபித சபேத் ||
அயோத்யா காண்டம் 63-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 45
ராஜன் – அரசே!
மே – எனது
பிது: – தந்தையாருடைய
ஆஸ்ரம: – ஆசிரமமானது
யத: – எவ்விடத்தில் இருக்கிறதோ அதற்கு
இயம் – இதோ இருக்கும்
ஏகபதீ – ஒற்றையடிப்பாதை தான் வழி.
த்வம் – நீர்
தம் கத்வா – அங்கு சென்று
ப்ரஸாதய – அவரைச் சமாதானப்படுத்துவீராக.
சங்குபித: – பூரண கோபம் கொண்டவராய
த்வாம் – உம்மை
சபேத் ந – சபியாது இருப்பார்.
தன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னால் அவர் சபிக்காமல் இருப்பார் என்று முனி குமாரன் கூறுகிறான்.
சாபம் தரப்படவில்லை என்றாலும் சாபம் தரப்படக் கூடும் என்ற சந்தர்ப்பத்தை இந்த இடம் விளக்குகிறது.
செய்வதறியாது திகைத்த தசரதன் அவனது தந்தையைச் சந்தித்தான்.
முனி குமாரன் ஊகித்தபடி வருத்தப்பட்ட அவனது தந்தையார் சாபம் கொடுக்கத்தான் செய்தார்.
அதை அடுத்துப் பார்க்கலாம்.
**