WRITTEN BY LONDON SWAMINATHAN
Date uploaded in London – 10 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
அனந்தஹ – 659
அளவிடப்படாதவர் – வியாபித்து இருப்பதாலும் எக்காலத்திலும் அழியாது இருப்பதாலும், எல்லாவற்றி ற்கும் ஆத்மாவாய் இருப்பதாலும்இடம் பொருள் காலம் மூன்றிலும் அளவுபடாதவர் .
தைத்ரீய உபநிஷத் சொல்கிறது ,
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம .
பிரம்மமே சத்யம் , அறிவு, எல்லையற்றது
, விஷ்ணு புராணமும் சொல்கிறது 2-5-24
கந்தர்வா’ப்’ சராஸஹ சித்தாஹா கின்னரோ’ராரக சாரணஹா
நான்தான் குணானாம் கச்சந்தி தேன அனந்தோ யாம் அவ்யயஹ
பொருள்
கடவுள் அனந்தன் ;ஏனென்றால் கந்தர்வர்கள், அப்சரஸ்கள், சித்தர்கள், கின்னரர்கள் சர்ப்பங்கள் , சாரணர் ஆகியோர் இறைவனின் எல்லையைக் காணமுடியாது
பாகவதம் 12-13-1 சொல்கிறது ,
யஸ் யாந்தம் ந விதுஹு ஸுரா – ஸுரகணா தேவாய தஸ்மை நமஹ.
xxxx
பிரம்ம -664
பிரம்மம் எனப்படும் பரம்பொருளாகியவர்.
ப்ருஹத்வாத் ப்ருஹ்மணத்வாத் ஸத்யாதி லக்ஷணம் ப்ரஹ்ம
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம இதி ஸ்ருதே – பிரம்மமே சத்யம் , அறிவு, எல்லையற்றது
ப்ரத்யஸ்தமித- பேதம் யத் ஸத்தா மாத்ர – மகோ சரம்
வசஸா – மாத்மஸம் – வேத்யம் தஜ் ஜானம் ப்ரஹ்ம ஸம்ஞிதம்
— விஷ்ணு புராணம் 6-7-53
பொருள்
வேறுபாடில்லாத, , பெரிய, விரிவடையும் ஸத்யமானது பிரம்மம் ஆகும்.
வார்த்தைகளின் வருணனைக்கு அப்பாற்பட்ட தானே அறியவல்லதே பிரம்மம் (பரம்பொருள் ).
xxxx
வசுரேதஹ – 692
பொன்மயமான வீரியத்தை உடையவர்.
தேவஹ பூர்வ-மபஹ ஸ்ருஷ்ட்வா தாஸு வீர்ய- மபாஸ்ருஜத்
ததண்ட மபவத் -தைமம் ப்ராஹ்மணக காரணம் பரம்
பொருள்
இறைவன் முதலில் தண்ணீரைப் படைத்தான் ; அதில் தனது வீரியத்தை விட்டான். அது போன் முட்டையாக மாறியது . அதிலிருந்து பிரம்மா உருவானார் .
(குறிப்பு – பிரம்மம் என்பது பரம்பொருள்;பிரம்மா என்பவர் த்ரி மூர்த்திகளின் ஒருவர்; பிராஹ்மண என்பது நான்கு வர்ணங்களில் முதல் வர்ணம்; பிராஹ்மணம் என்பது ஆரண்யகம், உபநிஷத் ஆகியவற்றுக்கு முந்திய நூல் ).
xxxx
நைக ச்ருங்கஹ – 763
அநேக கொம்புகளை உடையவர்.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பவை கொம்புகள்
அ ல்லது நான்கு வேதங்களைக் கொம்பாக உடையவர்.
தைரிய ஆரண்யகம் 1-10-17 சொல்கிறது,
சத்வாரி ச்ருங்கா த்ரயோஸ்ய பாதா
த்வே சீர்ஸே சப்த ஹஸ்தாஸோஸ்ய
த் ரிதா பத்தோ வ்ருஷபோ ரோரவீதி
மகாதேவோ மார்த்யான் ஆவிவேச
பொருள்
காளை வடிவத்திலுள்ள மகாதேவனுக்கு நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள், இரண்டு தலைகள், ஏழு கைகள் மூன்று இடங்களில் கட்டப்பட்டுள்ளது ; அது மனிதர்களில் நுழைந்து சப்தத்தை உண்டாக்குகிறது
(இது சிந்து வெளியிலுள்ள பசுபதி முத்திரையைக் குறிக்கிறது என்று ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன். இந்த வருணனை ரிக்வேதத்திலும் உளது RV 4-58-3)
xxxx
துரதிக்ரமஹ – 776
எவரும் தம் கட்டளையைத் தாண்ட முடியாதபடி இருப்பவர்.
பயாதஸ்யாக்னிஸ் தபதி பயாத் தபதி சூர்யஹ
பயாத் இந்த்ரஸ் ச வாயுஸ் ச ம்ருத்யுர் தாவதி பஞ்சமஹ
கடோபநிஷத் 6-3
பொருள்
அவனுக்கு பயந்தே தீ எரிகிறது; சூரியன் ஒளி தருகிறான்; அவனுக்குப் பயந்துதான் இந்திரன், வாயு, மரண தேவன் ஆகியோர் செயல்படுகின்றனர் என்று கடோபநிஷத் 6-3 கூறுகிறது.
கடோபநிஷத் 2-3-2 லும்
மஹத் பயம் வஜ்ரம் உத்யதம் — பயங்கரத்தை உண்டாக்கும் வஜ்ராயுதம் உயரே நிற்கிறது
xxxx
துர்லபஹ — 777
பக்தியாலன்றி அடைவதற்கு அரியவர் .
பக்தி ஒன்றினால்தான் அவனை அடைய முடியும் என்பது வியாசரின் வாக்கு.
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபிஹி
நராணாம் க்ஷிண பாபானாம் கிருஷ்ணே பக்திஹி ப்ரஜாயதே .
பொருள்
ஆயிரம் ஜன்மங்களில் செய்த தவம், ஞானம், சமாதி மூலமே மனிதர்களின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. அதற்குப்பின்னர்தான் அவர்களுக்கு கிருஷ்ணன் மீது பக்தி ஏற்படுகிறது.
பகவத் கீதையிலும் கண்ணன் இதைச் சொல்கிறான்
பு1ருஷ: ஸ ப1ர: பா1ர்த1 ப4க்1த்1யா லப்4யஸ்த்1வனன்யயா |
யஸ்யான்த1:ஸ்தா2னி பூ4தா1னி யேன ஸர்வமித3ம் த1த1ம் ||8-22||
ஒப்புயர்வற்ற எல்லோரிலும் மேலான தெய்வீக புருஷர் இருப்பில் உள்ள அனைத்தையும் விட மேலானவர். அவர் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லா உயிர்களும் அவரில் அமைந்திருந்தாலும், பக்தியின் மூலம் மட்டுமே அவரை அறிய முடியும்.
தொடரும்……….
—subham—
tags-விஷ்ணு சஹஸ்ரநாம,அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-3