வியட்நாமில் புதிய சிவலிங்கம் கண்டுபிடிப்பு (Post No.13,327)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,327

Date uploaded in London – 11 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வியட்நாமில் புதிய சிவலிங்கம் கண்டுபிடிப்பு

வியட்நாம் என்னும் நாட்டுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பா என்று பெயர். அங்குதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பழைய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு கிடைத்தது. அதிலுள்ள ஸ்ரீ மாறன் என்ற பெயர்   திருமாறன் என்ற பாண்டியனாக இருக்கலாம். வியட்நாமில் பல இந்தக் கடவுளர்கள் வழிபடப்பட்டனர். இப்பொழுது அதை நிரூபிக்கும் வகையில் மேலும் ஒரு சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

ஹோசிமின் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கேடியன் என்னுமிடத்தில் அகழ்வாராய்ச்சி நடந்த இடத்தில் இந்த சிவலிங்கம் கிடைத்தது. 1985-ம் ஆண்டு முதல்,  கட்டம் கட்டமாக  இங்கே ஆய்வுப்பணிகள்  நடந்து வருகிறது. நாலாம்  நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு  வரை சுமார் 600 ஆண்டுகளுக்கு இங்கு இந்து நாகரீகம் செழித்து வளர்ந்தது; அதை ஆராயவே இந்தப் பணிகள் துவங்கின.

இங்கு கிடைத்த சிவலிங்கம் நல்ல உயரமானது. 2-27 மீட்டர் உயரம். சுமார் 8 அடி உயரம். இந்த வட்டார மக்கள் இதை பிராமண பூமி என்று அழைத்துவந்தார்கள்

2012ம் ஆண்டு முதல் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்படும் இடம் இது. இதுவரை ஆயிரக் கணக்கான தங்கம் வெள்ளி,  வெண் கலம், இரும்புப் பொருட்களும் , ரத்தினைக் கற்களும் , கற்சிலைகளும் கிடைத்ததுள்ளன .

 XXXXX

2020ஆம் ஆண்டு கண்டுபிடிப்பு

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஒற்றை மணற்கல் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளது.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சாம் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டட பணியின்போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிவலிங்கத்தை கொண்ட கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகவும் திகழ்கிறது.

அந்த கோயில் கெமர் பேரரசின் இரண்டாம் மன்னர் இந்திரவர்மன் ஆட்சியின் போது கட்டப்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு, இக்கோயில் வளாகத்தில் ஆறு சிவலிங்கங்கள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இந்த சிவலிங்கமானது மிகவும் அற்புதமானது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

xxxx

ஹரியானாவில் மஹாவீரர் சிலை கண்டெடுப்பு

ஹரியானா- ராஜஸ்தான் மாநில எல்லையில் தில்கி  கிராமம்  உள்ளது. அங்கு நடத்திய அகழ்வாராய்ச்சியி; எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் கற்சிலை கிடைத்தது  கிராமத்தில் நிலத்தை சீர்படுத்தும்போது சிலையை கண்டனர். இந்த வட்டாரம் சமண  மத மக்கள் வசித்த இடம் ஆகும்.

நிலத்தை டிராக்டர் கொண்டு சமப்படுத்துகையில் ஒரு பெரிய கல்லில் மோதிய சப்தம் கேட்டது. டிராக்டரை  நிறுத்திய  டிரைவர் சிறிதும் பெரிதுமாக இரண்டு சிலைகளைக் கண்டார் .

கிராம மக்கள் மேலும் சில தகவல்களை அளித்தனர் . 15 ஆண்டுகளுக்கு முன்னர் செங்கல் சுவருடன் கூடிய ஒரு கிணறும் நிறைய பானைகளும் கிடைத்தன. சமண மத தீர்த்தங்கரர் வர்த்தமான மஹாவீரர் மார்பில் பொறிக்கப்பட்ட முத்திரையை வைத்து இது எட்டாம் நூற்றாண்டுச் சிலை என்று அறிந்தோம் என்று தொல்பொருட் துறை அதிகாரி சொன்னார். இந்த வட்டார கிராமங்களில் சமண மதச் சின்னங்கள் நிறைய கிடைத்து வருகின்றன என்றார் .

–SUBHAM–

TAGS- வியட்நாம், சிவலிங்கம், ஹரியானா, மஹாவீரர் சிலைகள், அகழ்வாராய்ச்சி,

Leave a comment

Leave a comment