விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 4 (Post.13,329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,329

Date uploaded in London – 11 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆதி சங்கரர் அவருடைய விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)பாஷ்யத்தில் மேலும் பல அற்புத மேற்கோள்களை அளிக்கிறார்.

குந்த – வி.ச. நாமம் 809

குந்த மலர் / மல்லிகைப்பூப்  போல மென்மையான அங்கங்களை உடையவர். அல்லது தூய்மையில் பளிங்கு போல சுத்தமானவர்.அல்லது ‘கு’ என்னும் பூமியை காஸ்யப ரிஷிக்கு அளித்தவர் .

ஹரிவம்சம் (மகாபாரதத்தின் பிற்சேர்க்கை) சொல்கிறது

சர்வ பாப விசுத்யர்த்தம் வாஜி-மேதேன சேஸ்தவான்

தஸ்மின் யக்ஞே மஹா  தானே தக்ஷிணாம் ப்ருகு நந்தனஹ

மாரீசாய ததெளபிரிதஹ கஸ்யபாய வசுந்தராம்

பொருள்

    பிருகுவின் மகனாகிய பரசுராமன் பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக அஸ்வமேத யாகம் செய்தார் அந்த யக்ஞத்தில் பெரிய பரிசுகள் தரப்பட்டன. மரிசியின் புதல்வனான காஸ்யபருக்கு பரசுராமர் தான் வென்ற பூமி (நாடுகள்) அனைத்தையும் தானமாக அளித்தார்.

XXXX

ஸப்த ஜிஹ்வா – நாம எண் 827

இறைவன் அக்கினி ரூபத்தில் தோன்றியபோது அவருடைய சுவாலையில் ஏழு நாக்குகள் /  பிழம்புகள் இருந்தன.

முண்டகோபநிஷத் 1-2-4 சொல்கிறது,

காலீ கராலீ ச மனோஜவா ச ஸு லோ ஹிதாயா ச தூம்ரவர்ணா

ஸ்புலிங்கிநீ  விஸ்வருசீ  ச தேவி லோலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா.

பொருள்

தீக்கு ஏழு நாக்குகள்; அவை- காலீ , கராலீ, மனோஜவா ,  சுலோஹிதா,  ஸு தூம்ரவர்ணா , ஸ்புலிங்கினீ, விஸ்வருசீ ஆகியவை .

XXXX

கதிதஹ – நாம எண் 848

பரம்பொருள் என்று மறைகளால் போற்றப்பட்டவர் நம்முடைய சமய நூல் சொல்வதாவது ,

வேதே ராமாயணே புண்யே  பாரதே பரதர் ஷப

ஆதெள மத்யே ததாசந்தே விஷ்ணுஹூ  ஸர்வத்ர கீயதே

பொருள்

வேதம், ராமாயணம்,மஹாபாரதம் முதலியவற்றின் துவக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவ்வாறே புராணங்களிலும் விஷ்ணுவே போற்றப்படுகிறார்.

பாகவதம் சொல்கிறது

வாஸூ தேவ பராவேதா வாஸூ தேவ பரா மகாஹா 

வாஸூ தேவ பராயோகா வாஸூ தேவ பராக்ரியாஹா

வாஸூ தேவ பரம் ஞானம் வாஸூ தேவ பரம் தபஹ

வாஸூ தேவ பரோ தர்மஹ  வாஸூ தேவ பரா கதிஹி

பாகவதம் 1-2-28/29

கடோபநிஷத் 3-11சொல்வதாவது

புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா

XXXX

ப்ரியார்ஹ — நாம எண் 872

பிரியமான வஸ்துக்களை அர்ப்பணம் செய்தற்குரியவர்.

ஸ்ம்ருதி சொல்கிறது,

யத்யதிஷ்டதமாம் லோகே யச்சாஸ்ய தயிதம் க்ருஹே

தத்தத் குணவதே தேயம் ததோ வாக்ஷய -மிச்சதா

பொருள்

வாழ்க்கையில் எது முக்கியனானதென்று ஒருவர் கருதுகிறாரோ, வீட்டில் எது பிரியமானது என்று கருதுகிறாரோ, அதைப்பாதுக்காகவும் வளர்க்கவும் அதை பாத்திரம் அறிந்து தானம் செய்யவேண்டும்.

.பகவத் கீதையில் 7-17 பகவான் சொல்கிறார்-  நான் ஞானிகளுக்குப் பிரியமானவன் ;ஞானியம் எனக்குப் பிரியமானவன்.

தமிழிலும் ஒரு பழமொழி உண்டு :

தனக்கு மிஞ்சியதே தான தர்மம் .

தனக்கு பயன்படுத்தியது போக  மிஞ்சி இருப்பதை தானம் செய்ய வேண்டும் என்று பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இதன் பொருள் தன் சக்திக்கும் அதிகமாகக் கொடுப்பதே தானதர்மம் ஆகும். ஒரு கோடீஸ்வரன் ஒரு பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தால் அது பெரிய தருமம் இல்லை. சில கோடீஸ்வரர்கள் தனக்கு வருவதை எல்லாம் ஏழைகளுக்கு ஒதுக்குவது அவரது சக்திக்கு   மிஞ்சியது ஆகும் .

இதை நிரூபிக்க இந்துக்களின் இன்னுமொரு வழக்கத்தைக் குறிப்பிடலாம். காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் மிகவும் பிரியமான ஒரு உணவுப்பொருளைக் கைவிட வேண்டும் என்பது இந்துக்களின் சம்பிரதாயம். ஏற்கனவே பிடிக்காத காய், பழத்தை விடுவது தியாகம் இல்லை ; தனக்கு மிகவும் பிரியமானதை விடவேண்டும் இதுதான் தனக்கும் மிஞ்சியது தானதர்மம் என்பதை நன்றாக விளக்கும்.

XXXX

ஸ்வஸ்தி தக்ஷிணா — நாம எண் 905

விரைவாக மங்களம் தருபவர் .

பிரம்மாண்ட புராணம் 83-17 சொல்கிறது,

ஸ்ம்ருதே ஸகல கல்யாண பாஜனம் யத்ர ஜாயதே

புருஷஸ் தம் அஜம் நித்யம் வ்ரஜாமி சரணம் ஹரிம்

பொருள்

நான் பிறப்பற்ற, என்றுமுள்ள ஹரியைச் சரண் அடைகிறேன் .யார் ஒருவரை நினைத்த மாத்திரத்தில் எல்லா

மங்களங்களையும் தருகிறாரரோ அப்படிப்பட்ட ஹரியைச் சரண் அடைகிறேன்.

இன்னுமொரு சுபாஷிதமும் உளது .

ஸ்மாரணாத் ஏவ க்ருஷ்ணஸ்ய பாப சங்காத பஞ்சரம்

சததா பேதம் ஆயாதி கிரிர் வஜ்ர அதோ யதா

பொருள்

வஜ்ராயுதத்தினால் தாக்கப்பட்ட மலை பிளந்தது போல கிருஷ்ணரை நினைத்த மாத்திரத்தில் குவித்து வைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியாகின்றன.

xxxxx

சக்ரி – நாம எண் 908

மனஸ் தத்துவமாகியசுதர்சனம் என்னும் சக்கரத்தைத் தரிப்பவர்.

ஸமஸ்த லோக ரக்ஷ்ஆர்த்தம்  மனஸ் தத்வாத்தமகம்

சுதர்சனாக்யம் சக்ரம் தத்த இதை சக்ரீ 

சக்ர ஸ்வரூபம் அத்யந்தம் ஜவேனாந்தரிதா நிலம் நயந்த

சக்ர ஸ்வரூபம் ச ஹத்தே விஷ்ணுஹு கரஸ்திதம்

பொருள்

மஹா விஷ்ணுவானவர் மனது என்னும் சக்கரத்தைக் கையில் வைத்திருக்கிறார். அது காற்றினும் கடுக்கிச் செல்ல வல்லது .

தொடரும் …………………….

Tags- தானம், தனக்கு மிஞ்சி, விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்– 4

Leave a comment

Leave a comment