
Date uploaded in London – 12 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Last Part
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
முடிவுரை
நான் ஏன் இதை வெளியிட்டேன் ?
ஏற்கனவே லண்டனில் லாட்டரி துறை பணத்தை நிதியுதவியாகப் பெற்று , பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள பத்து பழைய நூல்களை காப்பி எடுத்து தமிழ் மரபு அறக்க்கட்டளை வெப்சைட்டில் ஏற்றிவிட்டோம் ; எல்லோருக்கும் அது இலவசம். எல்லோரும் எப்போதும் அந்தப் பத்து நூல்களையும் இலவசமாகப் படிக்கலாம்.. அதில் ஒன்றுதான் இந்த மூலிகை மர்மம் எனும் நூல்.
ஆயினும் நான் இதை வெளியிட்ட காரணங்கள் :
1.பலரும் சம்ஸ்ருதக் கலப்பில்லாமல் பேசவும் எழுதவும் ஆசைப் படுகின்றனர் ; அது இயலாது . இந்த நூலைப் படித்தால் பல மூலிகையின் பெயர்கள், செயல் முறைகள் ஆகியன சம்ஸ்க்ருதத்தில் உள்ளன. பெரும்பாலான தமிழ் மருத்துவ நூல்கள் இதைப்போல ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையே பயிலுகின்றன.
2.அப்படியே ஸம்ஸ்க்ருதத்தை ஒழித்துக்கட்டி விட்டாலும் இந்த வகைத் தமிழ் நூல்களின் அர்த்தம் புரியாமல் மொழிபெயர்க்க ஆட்களை நியமிக்க வேண்டிவரும்.
3. மூலிகையை அகர வரிசையில் கொடுத்திருப்பது ஒரு மூலிகையின் பலனை உடனே அறிய உதவும். இது மூலிகை அகராதி போல உதவிக்கு வருகிறது. பல மூலிகைகளின், வியாதிகளின் பெயர்களை அறிய முடிகிறது.
4.பழங்காலத்தில் நாட்டு வைத்தியர்கள் பேசிய பரிபாஷை இந்த நூலில் அப்படியே உள்ளது. ஆகையால் மொழி வளர்ச்சி பற்றி ஆராய்வோருக்குப் பயனுல்லா நூல்.
5. இதிலுள்ள பல விஷயங்கள் தற்கால செயல் முறைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் விஷக்கடி மருத்துவம், ‘செக்ஸ்’ சம்பந்தமான மூலிகை ‘வயாக்ரா’ குளிகைகள் , காய கற்ப மூலிகைகளை சோதித்து பார்த்து உண்மையென்று கண்டால் குறைந்த செலவில் நிறைய பலன் கிடைக்கும். மேல் நாட்டு மருந்துகளில் காசு செலவழிக்கவே வேண்டாம்; வீட்டுக் கொல்லைப் புறங்களிலேயே முக்கிய மூலிகைகள் கிடைத்து விடும். காயகற்பம் உண்மையாயென்றால் 100 ஆண்டுக்கு காலம் நோய் இல்லாமல் வாழலாம்.
xxxx

வி
532.காச சுவாசத்திற்கு
விளா மரத்து வேரின் பட்டையை அரைத்துக் கலக்கி உண்டுவந்தால் காச சுவாசம், அரோசகம், தாக்கம் பித்தம் இவை தீரும் .
xxx
வெ
வெள்ளைப் புண்ணுக்கு
வெள்ளைக் குங்கிலியத்தைப் பொடித்து வஸ்திரகாயம் செய்து திருகடி அளவு பாலில் கலந்து உண்டுவந்தால் வெள்ளை , புண் , பிரமேகம் , வெட்டை இவை தீரும் .
xxxx
உதர நோய் மூலத்திற்கு
வெள்ளைப் பூண்டை பாலில் வேகித்து வெந்த பிறகு அந்தப் பூண்டைத் தின்று பாலக் குடிக்கவும். வாய்வு உத்தர ரோகம் மூல ரோகம் நெஞ்சடைப்பு இவைகள் தீரும்.
xxx
நீரடைப்புக்கு

வெள்ளரி வித்தை பாலில் அரைத்தாவது வஸ்திரகாயம் செய்து கலந்தாவது உண்டுவந்தால் நீரடைப்பு, கல்லடைப்பு , சதையடைப்பு நீர்த்தாரை எரிவு இவை நிவர்த்தியாகும்
xxx
கரப்பான் வண்டு கடிக்கு
வெட்பாலையை பாலில் பிரயோகித்து கலக்கி உண்டுவந்தால், கரப்பான் வண்டுகடி முதலிய வியாதிகள் நிவர்த்தியாகும் .
xxxx
ஆறுபுள்ளி வண்டு கடிக்கு
வெள்ளெருக்கு மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டுவந்தால் சில்லறை விடம், பிரமேகம், கிரந்தி , வண்டு கடி, செய்யான் கடி , ஆறுபுள்ளி வண்டு கடி மரவட்டைக் கடி நிவர்த்தியாகும் .
xxxx
உஷ்ண மேகத்திற்கு

வெள்ளருகு சமூலத்தை பாலிலாவது தயிரிலாவது அரைத்துக் கலக்கி உண்டுவந்தால் சொறி சிரங்கு கிரந்தி வெட்டை பிரமேகம் உஷ்ணமேகம் வெள்ளை நிவர்த்தியாகும்
xxxx
நீர்க்கட்டை உடைக்க
வெள்ளை சார்வேளை இலையின் சாறு 9 விராகன் எடை பசும்பால் 12 — விராகன் எடை இவ்விரண்டும் கலந்து குடிக்க நீர்க்கட்டை உடனே உடைக்கும்.
XXXX
வெண்குட்ட சாந்தி

வெள்ளைப் பூண்டு நவாச்சாரம் இரண்டும் சரியிடை கொண்டு அரைத்து வெண்குட்டத்தின் மேல் தடவி வந்தால் வெண்மை மாறும்.
XXXX
தாது புஷ்டிக்கு
வெங்காய விரை கால் பலம் எடுத்து கோழிமுட்டையின் வெண்கருவில் கலக்கிக் குடித்துவர வீரியம் அதிகரிக்கும் . மேற்படி விரையை தேனில் கலந்து குடித்தாலும் தாது புஷ்டியுண்டாம்
XXXX
தாது புஷ்டிக்கு
வெள்ளை வெங்காயத்தை அரிந்து நெய்யில் வறுத்து சாப்பிடவும். . இப்படி ஒரு வேளைக்கு ஒரு வெங்காயமாக இரு வேளையும் 20 நாள் சாப்பிடவும்
XXXX
543.புண்ணுக்கு கட்டு
வெள்ளாட்டுப் புழுக்கையை சிறு பிள்ளைகள் மூத்திரம் விட்ட ரைத்து ஆறாத புண்களின் மேல் வைத்துக் கட்ட ஆறிப் போகும்.
XXXX
வே
குத்திருமல் ஈளைக்கு
வேங்கை மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டுவந்தால் குத்திருமல் ஈளை, உள மாந்தை புண் சீழ் வடிதல் மலக்கட்டு நீங்கும்.
xxxx
பல் வகை கிரந்திக்கு

வேலிப்பருத்தி சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கி உண்டுவந்தால் பல்வகை கிரந்தி – மருந்தீடு- கைகால் பிடிப்பு – வாய்வு தீரும்.
xxxx
தீச்சுட்ட புண்ணுக்கு
வேப்பங் கொழுந்தை சிதைத்து ஆமணக்கு இலையில் பொதிந்து உமி காந்தலில் பொதிந்தது வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண் மேல் வைத்துக்கட்ட ஆறிவிடும்.
xxxx
547.கிருமிகள் விழ
வேப்பீர்க்கு பத்து விராகனிடை கடுக்காய்த் தோல் 4 விராகனிடைபிரண்டைச் சாற்றில் மை போல அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்துக் கொடுக்க கிருமிகள் வந்து விடும்.
xxxx
மூலிகை மர்மம்
பிரிட்டிஷ் லைப்ரரி சீல் 18 மே 1900
முற்றிற்று
இதில் விட்டவை முதலிய மற்றவைகளை இரண்டாம் பாகத்தில் காட்டப்படும் .
–சுபம்—
TAGS–மூலிகை மர்மம், முற்றும் , முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 43