ராமாயணத்தில் சாபங்கள் (24) குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்! (Post.13,333)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.333

Date uploaded in London – 13 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (24)

ராமாயணத்தில் சாபங்கள் (24) குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்! 

ச.நாகராஜன் 

அயோத்யா காண்டத்தை அடுத்து வரும் ஆரண்ய காண்டத்தில் 6 சாபங்களை நாம் காண்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் 4-வது ஸர்க்கமாக அமைவது ‘விராதனின் மோக்ஷம்’.

ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் தண்டகாரண்யத்தில் நுழைகின்றனர்.

அங்கே வந்த சதஹ்ரதை என்பவளின் புத்திரனான விராதன் என்னும் ராக்ஷஸன் சீதையை தூக்கிச் செல்ல முயலவே அவனை கடுமையாக எதிர்த்துப் போரிடுகிறர்கள் ராமரும் லக்ஷ்மணரும்.

ராமர் அவனது வலது கரத்தை வெட்ட லக்ஷ்மணர் அவனது இடது கரத்தை வெட்டினார். அவன் கீழே விழுந்தான். அவனை நையப்புடைத்து பூமியில் பிசைந்தார்கள். ஆனால் அவன் ஜீவனை விடவில்லை. இவனைப் பள்ளம் தோண்டிப் புதைத்து விடுவோம் என்று ஶ்ரீ ராமர் கூறுகிறார். உடனே விராதன் ஶ்ரீ ராமரைப் பார்த்து பின்வரும் சொற்களை வணக்கமாய்த் தெரிவிக்கிறான்:

ஹதோஸ்மி புருஷவ்யாக்ர சக்ருதுல்ய பலேன வை |

மயா து பூர்வம் த்வம் மோஹான்ன ஞாத: புருஷர்ஷப: ||

புருஷவ்யாக்ர – புருஷோத்தம

சக்ருதுல்ய பலேன – இந்திரனுக்குச் சமமான பலமுடைய தேவரீரால்

அஸ்மி – நான்

ஹத: – வீழ்த்தப்பட்டேன்

மயா து – என்னால் தான்

பூர்வம் – முதலில்

மோஹாத் – அஞ்ஞானத்தால்

த்வம் – தேவரீர்

புருஷர்ஷப: – புருஷோத்தமர் என

ஞாத: ந – அறியப்படவில்லை

கௌஸல்யாசுப்ரஜா ராம தாத த்வம் விதிதோ மயா |

வைதேஹீ ச மஹாபாகா: லக்ஷ்மணஸ்ச மஹாபல ||

தாத – லோகபிதாவான

ராம – ஶ்ரீ ராம!

மயா – அடியேனால்

த்வம் – தேவரீர்

கௌஸல்யா சுப்ரஜா – கோசலா தேவியாரின் திருக்குமாரரான

விதித: – அறியப்பட்டீர்

மஹாபாகா – மஹாபாக்யவதியான

வைதேஹீ – வைதேஹியானவன்

ச – அங்ஙனமே அறியப்பட்டார்

மஹாபல: – மஹாபலசாலியான

லக்ஷ்மண: ச – லக்ஷ்மணரும் அப்படியே அறியப்பட்டார்

அபி சாபாதஹம் கோராம் ப்ரவிஷ்டோ ராக்ஷஸீம் தனும் |

தும்புருர்நாம கந்தர்வஸ்சப்தோ வைஸ்ரவணேன ச |\

தும்புரு நாம – தும்புரு என்ற பெயருடைய

கந்தர்வ: – கந்தர்வனான

அஹம் – நான்

வைஸ்வணேன – குபேரனால்

சப்த: ஹ – சபிக்கப்பட்டேன்

சாபாத் அபி – சாபத்தாலேயே

கோராம் – பயங்கரமான

ராக்ஷஸீம் – ராக்ஷஸ

தனும் – உடலை

ப்ரவிஷ்ட – பெற்றேன்

ப்ரஸாதமானஸ்ச மயா சோப்ரவீன்மாம் மயாயஷா: |

யதா தாசரதி ராமஸ்த்வாம் வதின்யதி சம்யுகே ||

ததா ப்ரக்ருதிமாபன்னோ பவான் ஸ்வர்க கமிஷ்யதி ||

மயா – என்னால்

ப்ரஸாதமான: – மன்னிக்குமாறு வேண்டப்பட்ட

மஹாயஷா: – பெரும் புகழ் பெற்ற

ச: – அவர்

மாம் – என்னைப் பார்த்து

அப்ரவீத் – பின்வருமாறு அருளிச் செய்தார்

யதா – எப்போது

தாசரதி – தசரதரின் திருக்குமாரரான

ராம: – ஶ்ரீ ராமர்

சம்யுகே – போரில்

த்வாம் – உன்னை

வதிஷ்யதி – கொல்வாரோ

ததா – அப்பொது

பவான் – நீ

ப்ரக்ருதி – பிறவி உருவத்தை

ஆபன்ன: – அடைந்தவனாய்

ஸ்வர்க ச – ஸ்வர்க்கத்தையும்

கமிஷ்யதி – அடைவாய்

இதி வைஸ்ரவணோ ராஜா ரம்பாசக்தம் புராநக |

அனுபஸ்தீயமானோ மாம் சங்க்ருத்தோ வ்யாஜஹார ஹ ||

அனக – புண்யாத்மாவே

புரா – முன்பு

வைஸ்ரவண: – குபேர

ராஜா – மன்னர்

அனுபஸ்தீயமான: – காலத்தில் சென்று சேவிக்கப்படாதவராய்

ரம்பாசக்தம் – ரம்பையினிடத்தில் மோஹித்துக் கிடந்தவராய்

மாம் – என் மீது

சங்க்ருத: – மிகச் சினம் கொண்டவராய்

இதி – மேற்கண்டவாறு

வ்யாஜஹார ஹ – சபித்தார்.

ஆரண்ய காண்டம், 4-ம் ஸர்க்கம், 12 முதல் 16-ம் ஸ்லோகம் முடிய

 இவ்வாறு தான் பெற்ற சாபத்தை விவரித்த விராதன், “இன்று தேவரீரது அனுக்ரஹத்தால் நான் கொடிய சாபத்திலிருந்து விடுபட்டவனாய் எனது லோகத்திற்குச் செல்லப் போகிறேன்” என்று கூறி விட்டு சரபங்க ரிஷியைக் காணச் செல்லுமாறு வழியைக் காட்டிவிட்டு உயிரைத் துறக்கிறான்.

ஆரண்ய காண்டத்தில் நாம் காணும் முதல் சாபம் இது!

***

Leave a comment

Leave a comment