விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-5 (Post13,334)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.334

Date uploaded in London – 13 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Aadi Sankara’s Vishnu Sahasranaama (VS) commentary continued

ஊர்ஜித சாசனஹ – நாம எண் 910

சுருதி -ஸ்ம்ருதி வடிவானவர்

உறுதியான கட்டளைகளைப் பிறப்பிப்பவர்.

ச்ருதி -ஸ்ம்ருதீ  மமை வாஜ்ஞே  யஸ்தே உல்லங்க்ய வர்த்ததே

ஆஜ்ஞா சேதீ மம த்வேஷீ ந மத்பக்தோ ந வைஷ்ணவஹ

பொருள்

சுருதியும் (வேதம்) ஸ்ம்ருதியும் (இந்துக்களின் சட்ட புஸ்தகம் ) என்னுடைய கட்டளைகள்.அவைகளை மீறுவோர் என் கட்டளைகளை மீறியவர்கள் ஆவர்.என் புகழுக்கு இழுக்கு கற்பித்தவர் ஆவர்.அவர்கள் என் பக்தர்களும் அல்லர்; வைஷ்ணவர்களும் அல்லர்.

XXXX

புண்ய-ச்ரவண கீர்த்தனஹ – நாம எண் 922

தம்மைப் பற்றிக் கேட்பவர்க்கும் கீர்த்தனம் செய்பவர்க்கும் புண்ணியத்தைக் கூட்டிவைப்பவர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாம (வி.ச.) பலச்ருதியில் வரும் ஸ்லோகம் இதை உறுதி செய்கிறது

ய இதம் ச்ருணுயான் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்

நாஸு பம் ப்ராப்னுயாத்  கிஞ்சித் ஸோ அ முத்ரேஹ  ச மானவஹ

பொருள்

இதை தினமும் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும்

இம்மையிலும் மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைய மாட்டான்

XXXX

ப்ரமாணம் — நாம எண் 959

தானே ஒளிர்வதான ஞான வடிவினர்

வேதங்களின் ரஹஸ்ய அர்த்தங்களை  ஐயந்திரிபின்றி அறிவிப்பவர்

தைத்ரீய உபநிஷத் 1-2-1 சொல்கிறது :

ஞான ஸ்வரூபம்  அத்யந்த நிர்மலம் பரமார்த்ததஹ

தம் ஏவார்த்த  ஸ்வரூபேண ப்ராந்தி  தர்சனதஹ ஸ்திதம்

பொருள்

எது ஒன்று பரிபூரண தூய்மை உடையதோ ஞான ஸ்வரூபமாக உளதோ உன்னத நிலையில் உள்ளதோ மாயை என்னும் திரை வழியே பார்க்கையில் உலகத்திலுள்ள ஒரு பொருள் போல தோற்றமளிக்கிறது.

xxxx

ப்ராண ஜீவனஹ – நாம எண் 962

பிராணிகளை ஜீவிக்கச் செய்பவர் .

கடோபநிஷத் 4-5 சொல்வதாவது

ந ப்ராணேன நாபானேன மர்த்யோ ஜீவதி கஸ்சன

இதரேண  து ஜீவந்தி யஸ்மின் நேதா வுபாஸ்ரிதெள

பொருள்

எவரும் பிராணன் , அபானன்  போன்றவற்றால் வாழ்வதில்லை.அவர்களுக்கு எல்லாம் சக்தியூட்டும் ஒன்றால்தான் வாழ்கிறோம்.

xxxx

ஏகாத்மா — நாம்  எண் -965

ஒன்றேயாகிய ஆத்ம  அல்லது எங்கும் வியாபித்திருப்பவர்..

தைத்ரீய உபநிஷத் 1-1 சொல்லுவதாவது :

ஆத்மா வா இதம் ஏக ஏவாக்ர  ஆஸீத்

ஆரம்பத்தில்  ஆத்மா மட்டுமே இருந்தது

ஸ்ம்ருதி சொல்கிறது:

யச்சாப்னோதி யத் ஆததே விஷயான்  த

யத் சஸ்ய சந்ததோ பாவஸ்  தஸ்மாத் ஆத்மே தி கீயதே

பொருள்

எல்லோரிடத்திலும் இருப்பதே ஆத்மா. எல்லோரையும் உயிர்வாழ வைக்கிறது . அது எப்போதும் மாறுபடாமலிருக்கிறது . எல்லோரையும் அனுபவத்தில் உணர வைக்கிறது.

xxxx

பூர் -புவஹ -ஸ்வஸ்தரஹ — நாம எண் 967-

பூலோகம், புவர் லோகம், ஸு வர் லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார விருக்ஷ வடிவினர்.  அல்லது பூஹு , புவஹ,ஸு வஹ என்ற வியாஹ் ருதி மந்திரங்களால்  உலகை வழிநடத்துபவர் .

மனு சொல்கிறார் :

அக்னவ் ப்ரஸ்தா ஹதிஹி சம்யக் ஆதித்யம் உபதிஷ்டதே

ஆதித்யாத் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர்  அன்னம் ததா ப்ரஜாஹா

பொருள்

அக்கினியில் போடப்படும் ஆஹுதி / பொருட்கள் சூரியனை அடைகின்றன . சூரியன் மூலமாக மழை உண்டாகின்றது மழையிலிருந்து உணவு கிடைக்கிறது. உணவு மூலமாக மனிதர்கள் வாழ்கிறார்கள்.

अग्नौ प्रास्ताऽहुतिः सम्यगादित्यमुपतिष्ठते ।
आदित्याज् जायते वृष्तिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥3- ७६ ॥

agnau prāstā’hutiḥ samyagādityamupatiṣṭhate |
ādityāj jāyate vṛṣtirvṛṣṭerannaṃ tataḥ prajāḥ || 3-76 || MANU

An oblation duly thrown into the fire reaches the sun; from the sun proceeds rain from, rain food, and from food, the creatures.—(3-76) MANU SMRITI

இதை பகவத் கீதையிலும் காணலாம்

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

அன்னாத்3ப4வந்தி1 பூ4தா1 னி ப1ர்ஜன்யாத3ன்னஸம்ப4வ: |

யஞ்ஞாத்3ப4வதி1 ப1ர்ஜன்யோ யஞ்ஞ: க1ர்மஸமுத்3ப4வ: || 3- 14 ||

அன்னாத்—–உணவிலிருந்து; பவந்தி–—பிழைக்கின்றன; பூதானி—–உயிரினங்கள்; பர்ஜன்யாத்–—மழையிலிருந்து; அன்ன—–உணவு தானியங்களின்; ஸம்பவஹ—–உற்பத்தி; யஞ்ஞாத்—–யாகம் செய்வதிலிருந்து; பவதி—–சாத்தியமாகிறது; பர்ஜன்யஹ—–மழை; யஞ்ஞஹ—-தியாகம் செய்தல்; கர்ம-—-வகுக்கப்பட்ட கடமைகள்; சமுத்பவஹ—-பிறந்தது

BG 3.14: அனைத்து உயிரினங்களும் உணவின் மூலம் வாழ்கின்றன, மழையால் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. தியாகம் செய்வதால் மழை பெய்யும், விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது தியாகம் ஆகிறது.

XXXX

யக்ஞாங்கஹ – நாம் எண் 974

யாகங்களைத் தன் உறுப்புகளாகக் கொண்ட யக்ஞ வராஹ வடிவினர்.

வே தங்களைப் பாதங்களாகவும் யூபங்களைப் பற்களாகவும் அக்கினியை நாக்காகவும் பிரம்மத்தை தலையாகவும் தர்மங்களைக் கேசமாகவும், சோமரசத்தை இரத்தமாகவும் உடையவர் . இது ஹரிவம்ச நூலில் 7 ஸ்லோகங்களில் விரிவாக உள்ளது 3-34- 34 -41

என் கருத்து

சோமா ரசத்தைப் பற்றித் தப்பும் தவறுமாக வியாக்கியானம் செய்த மாக்ஸ் முல்லர் கும்பலுக்கு மரண அடி கொடுக்கும் விஷயம் இது . சோமரசத்தை கடவுளின் ரத்தமாக வருணிக்கிறது  ஹரிவம்சம்.

வெள்ளைக்காரர் கூற்றுப்படி இது போதைப் பொருள். உலகில் எந் மதமாவது கடவுளின் ரத்தத்தை கஞ்சாஅபினிவிஸ்கிபிராந்தி என்று வருணிக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் சோம ரசம் என்பது அற்புதமான உயிர் காக்கும் உற்சாக சக்தியூட்டும் ஒரு டானிக். துரதிருஷ்டவசமாக அந்த தாவரம் அழிந்துவிட்டது. வெள்ளைக்காரர் சொல்லும் இரண்டு தாவரங்களாக இது இருந்திருந்தால் அவைகளை வளர்த்து கோகோ கோலா போல விற்றிருப்பார்கள் வெள்ளைக்காரர்கள்.

கிரிஃபித் என்பவர் தனது ரிக்வேத மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழிபெயப்பில் முதல் பக்கத்திலேயே தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்து மதத்தை  அபினி- கஞ்சா ஆட்கள் என்று தாக்குகிறார்.

XXXX

தேவகீ  -நந்தனஹ – நாம எண் 989

தேவகியின் மகனாக கிருஷ்ண  அவதாரம் எடுத்தவர். மஹாபாரதம்- அனுசாசன பர்வம் – 158-31 சொல்வதாவது:

ஜ்யோதீம்ஷி சுக்ராணி ச யானி லோகே த்ரயா லோகோ  லோகபாலாஸ்  த்ரயீ ச

த்ரயோ க்ன யஸ்   சாஹூ தயஸ் ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ பு த்ர ஏவ

வானத்தில் ஒளிவீசும் கிரகங்களும் நட்சத்திரங்களும் மூன்று உலகங்களும், அங்குள்ள தேவர்களும் மூன்று வேதங்களும் மூன்று யாகத் தீக்களும் ஐந்து ஆஹுதிக்களும் தேவர்களும் அவதாரமாக உதித்தே கிருஷ்ண பரமாத்மா.

இங்கே புத்திரப் பேற்றை அளிக்கும் ஒரு மந்திரமும் கூறப்பட்டுள்ளது :

தேவகீ நந்தனஹ ஸ்ரேஷ்டேதி  சக்திஹி

 தேவகீ ஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே

தேஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கதஹ

XXXX

பாபநாசனஹ —  நாம எண் —992

பாவங்களை அகற்றுபவர் — விருத்த சாதாபா ஸ்லோகம் சொல்கிறது:

பக்ஷோ பவாஸத்  யத் பாபம் புருஷஸ்ய ப்ரணஸ்யதி

ப்ராணாயாம சதேன இவ தத் பாபம் நஸ்யதே ந்ருநாம்

ப்ராணாயாம சஹஸ்ரேன யத் பாபம் நஸ்யதே ந்ருநாம்

க்ஷண மாத்ரேன தத் பாபம் ஹரேர்  த்யானாத் ப்ரணஸ்யதி

பொருள்

ஒரு மனிதன் செய்த பாவங்களை ஒரு வார உண்ணாவிரதமிருந்து அழிக்கலாம் அதை நூறு தடவை ப்ராணாயாமம் செ.ய்தும் அகற்றலாம்  . ஆயிரம் ப்ராணாயாமம் செ.ய்து அகற்றக்கூடிய பாவங்களை ஒரு க்ஷண நேரம் ஹரி தியானத்தின் மூலம்நீக்கலாம் .

(ஒப்பிடுக – ஆண்டாள் இயற்றிய திருப்பாவை : வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்).

–subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்-5

Leave a comment

Leave a comment