பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? -1 (Post No. 13,337)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,337

Date uploaded in London – 14 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நம் எல்லோருக்கும் தெரியும் பாலில் எல்லாவித சத்துக்களும் இருப்பதால் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பால் சாப்பிடுகிறார்கள் ; இது என்ன அசட்டுப்பிசட்டான கேள்வி ? பால் சாப்பிடுவது நல்லது என்றல்லவா கட்டுரைத் தலைப்பு இருக்கவேண்டும் என்று உடனே ஒரு சிலர் போர்க்கொடி தூக்கி விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அது இந்தியாவில்தான். மேலை நாடுகளில் இல்லை. ஒரு வேளை கட்டுரையைப் படித்து முடித்தவுடன் நீங்களே பால் சாப்பிடுவதை நிறுத்தினாலும் ஆச்  சரியப்படமாட்டேன் . ஒரு வேளை ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள்!

மேலை நாடுகளில் பசு மாடுகளை எப்படி வளர்க்கிறார்கள் ?

கொடுமையிலும் கொடுமை !

கன்று பிறந்தால்தான் மாடு பால் சுரக்கும் . இதற்காக முதல் கன்று போட்ட மூன்றாம் மாதத்தில் அதை செயற்கை முறையில் மீண்டும் மீண்டும் கருத்தரிக்க வைக்கிறார்கள்.

கன்று போட்டவுடன் அந்தக் கன்றினை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.

அது ஆண் கன்றாக இருந்தால் மாட்டு மாமிசத்துக்கு BEEF வளர்த்து பலி இடுகிறார்கள். பெண் கன்றாக இருந்தால் அதை வளர்த்து (தாயைப் பார்க்காமலேயே) மீண்டும் மீண்டும் கர்ப்பமாக்கி வதைக்கிறார்கள் .

பண்ணையின் கொள்ளளவுக்கு மேல் கன்றுகள் இருந்தால் கூசாமல் சுட்டுக் கொல் கிறார்கள்.

பசுக்களை வெளியே மேய விடாமல் கூண்டுக்குள் அடைக்கிறார்கள் .

ஒவ்வொரு நாளும் மிஷின் மூலம் ஓட்ட ஓட்ட பால் கறக் கிறார்கள் ; அப்படி கறக்கும் போது பசுவின் முடி, நிணம் எல்லாம் வந்து விடும்.  

ஆண்  கன்றாக இருந்தால் அதை கொழுக்க வைக்க கண்ட கண்ட உணவுகளைக் கொடுத்து மேயவிட்டு, கொன்று மாட்டு மாமிசமமாக விற்கிறார்கள்.

தாய்ப்பசு பால் கறக்காது போனால் கொன்று குவித்து குப்பைத் தொட்டியில் எறிகிறார்கள்  பால் கற்கும் எந்திரம் ஒரு வட்டச் சக்கரம் போல இருக்கும். ஒவ்வொன்றாக பால் கறக்கும் இடத்திற்கு வந்தவுடன் பாலைக்  கறக்கும். இதுதான் அவர்களின் சிறை வாழ்வு . இவ்வளவையும் நமது சகோதரிக்கோ அம்மாவுக்கோ வருவதாக நினைத்துப் பாருங்கள் ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள். இது தொடர்பான படங்களைப் பார்த்தால் பால் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள். மாட்டைக் கொன்று தின்னும் மனிதமிருகங்களுக்கு மனிதாபிமானம் இருக்குமா ?

xxxxx

மஹாத்மா காந்தி பசும்பால் சாப்பிடுவதை ஏன் நிறுத்தினார் ?

பசும் பாலில் இருக்கும் ப்ரோட்டீன் Proteinசத்து அசைவ சத்து என்பது அவரது நம்பிக்கை. மேலும் கன்றுக்குப் பால் கொடுக்காமல் பசுவை வாட்டுவது பாவம் என்று கருதினார்.

இன்று மேலை நாட்டில் நடக்கும் கொடுமைகள் காந்திஜிக்குத் தெரிந்திருந்தால் அவர் உடனே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்திருப்பார்.

இந்தியாவில் பால் பண்ணைகளில் மாடுகள் நடத்தப்படும் முறை குறித்து காந்திஜி தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்ததை அவரது சுயசரிதையில் காண முடிகிறது . குழந்தைகளாக இருக்கும்போது சாப்பிட்ட தாயப் பாலே போதும் என்பது அவரது நம்பிக்கை.  இனி பசும் பால் சாப்பிடுவதில்லை என்று 1912ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவிலுள்ள டால்ஸ்டாய் Tolstoy farm பண்ணையில் அவரும் நண்பர் ஹெர்மன் கல்லென்பாக்கும் Hermann Kallenbach உறுதிமொழி எடுத்தனர்

பிற்காலத்தில் காந்திஜி கடும் நோய்வாய்ப்பட்டார் . அப்போது டாக்டர்கள் அவரை மாமிச சத்து அல்லது முட்டை அல்லது பசும்பால் சாப்பிடச் சொன்னார்கள்; காந்திஜி மறுத்துவிட்டார். அவரது மனைவி சொன்ன படி ஆட்டுப் பால் சாப்பிட்டார். அதிலும் அவருக்கு மன வருத்தமே ஏற்பட்டது.

xxxx

லாக்டோஸ் ரெசிஸ்டன்ஸ் Lactose Intolerance or Resistance என்றால் என்ன ? வேகன் VEGAN என்றால் என்ன?

லாக்டொஸ் என்பது பாலில் உள்ள சர்க்கரைச் சத்து ஆகும். சிலருக்கு இது எளிதில் ஜீரணம் ஆகாது அப்படிவரும் அஜீரணக் கோளாறுகள் அவர்களை வயிற்றில் பொருமலையும் வாயுவையும், வயிற்றுப்  போக்கையும், எளிதில்   உணவு செ மிக்காமையும் உண்டாக்கும். இது வியாதி அல்ல; ஆனால் தாங்க முடியாத அசெளகாரியத்தைத் தரும். ஏனிந்த லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படுகிறது?  சிலருக்கு அந்த வகை மரபணு (ஜீன்) LCT gene  பிறக்கையிலேயே இருக்கிறது மற்றும் சிலர் நோய்வாய்ப்பட்ட காலத்தில் குடல் பாதிக்கப்பட்டாலும் திடீரென்று லாக்டோஸ் ஒவ்வாமை வந்துவிடும். இதனால் அவர்கள் பால் மட்டுமின்றி தயிர், மோர், சீஸ் , வெண்ணெய் என்ற பால் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் DAIRY PRODUCTS தவிர்க்கிறார்கள் இவர்களை  வேகன் என்று அழைக்கிறார்கள்

வேகன் என்ற கொள்கை பரவவே பலரும் மேலை நாடுகளில் ஓட்ஸ் மில்க்/பால் , வாதாம்பருப்பு பால் , சோயா மில்க் , கோட் மில்க் (Oats, Almond, Soya Milk, Goat’s Milk)  என்ற வகை பால் பொருட்களை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனை வராது .

வேகன் என்பதும் வெஜிட்டேரியன் என்பதும் வேறு. இந்துக்கள் வேகன் இல்லை. இந்து மதத்தில் வேகன் பற்றிய குறிப்புகளும் இல்லை . பாலும் தெளி தேனும் கடவுளுக்கு தினமும் படைக்கப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு புது மண தம்பதிகளுக்கும் மது பர்க்க என்னும் பாலும் தெளி தேனும் அளிக்கப்படுகிறது . இது பெரும் மரியாதை ஆகும்

பாலாபிஷேகம் தேனாபிஷேகம் இல்லாத கோவில்கள் இல்லை.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா -ஒளவையார்

XXXXX

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ? மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி ஆகியவற்றை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருகிறேன்.

என்னுடைய 3 (வேகன் VEGAN) கசப்பான அனுபவங்கள்

பேரக் குழந்தையின் உதவி; மதுபர்க்கம் என்றால் என்ன?

இவைகளை ஆராய்வோம்

TO BE CONTINUED………………………………………

Tags- பால், கொடுமைகள், கறக்கும் மிஷின், சிறை வாழ்வு, பசுக்கள் பலி , லாக்டோஸ் , காந்தி, ஆட்டுப்பால், ஓட்ஸ் மில்க், சோயா மில்க் , 

Leave a comment

Leave a comment